Type Here to Get Search Results !

DOWNLOAD JANUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF




TNPSC SHOUTERS  - JANUARY 2020
CURRENT AFFAIRS
S.NO
DAY & MONTH
DOWNLOAD LINK
1.
1st JANUARY 2020
2.
2nd JANUARY 2020
3.
3rd JANUARY 2020
4.
4th JANUARY 2020
5.
5th JANUARY 2020
6.
6th JANUARY 2020
7.
7th JANUARY 2020
8.
8th JANUARY 2020
9.
9th JANUARY 2020
10.
10th JANUARY 2020
11.
11th JANUARY 2020
12.
12th JANUARY 2020
13.
13th JANUARY 2020
14.
14th JANUARY 2020
15.
15th JANUARY 2020
16.
16th JANUARY 2020
17.
17th JANUARY 2020
18.
18th JANUARY 2020
19.
19th JANUARY 2020
20.
20th JANUARY 2020
21.
21st JANUARY 2020
22.
22nd JANUARY 2020
23.
23rd JANUARY 2020
24.
24th JANUARY 2020
25.
25th JANUARY 2020
26.
26th JANUARY 2020
27.
27th JANUARY 2020
28.
28th JANUARY 2020
29.
29th JANUARY 2020
30.
30th JANUARY 2020
31.
31st JANUARY 2020


டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது
  • கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி ₹1.03 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 2வது மாதமாக வசூல் ₹1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வசூல் ₹1 லட்சம் கோடியை தாண்ட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 
  • கடந்த ஆண்டு நவம்பரில் ஜிஎஸ்டி ₹1,03,492 கோடி வசூல் ஆனது. இதுபோல் கடந்த மாதம் ₹1,03,184 கோடி வசூல் ஆகியுள்ளது. அதாவது, தொடர்ந்து 2வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ₹1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
  • கடந்த மாத ₹1,03,184 கோடி வசூலில், மத்திய ஜிஎஸ்டி ₹19,962 கோடி, மாநில ஜிஎஸ்டி ₹26,792 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ₹48,099 கோடி செஸ் ₹8,331 கோடி அடங்கும். ஜிஎஸ்டி அமல் படுத்தியதில் இருந்து இதுவரை 9 மாதங்கள்தான் ₹1 லட்சம் கோடி இலக்கை தாண்டி வசூல் ஆகியுள்ளது.
டோர்னியர்-228" போர் விமானம் விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைப்பு
  • "டோர்னியர்-228" போர் விமானம், விமானப்படையின் 41-ஆவது பிரிவில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய டோர்னியர் ரக போர் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் கீழ் தயாரித்து வருகிறது.
  • அந்நிறுவனத்திடமிருந்து 14 போர் விமானங்களை ஆயிரத்து 90 கோடியில் வாங்க இந்திய விமானப்படை கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் முதலாவது "டோர்னியர்-228" போர் விமானம் கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.



பார்வை குறைபாடுள்ள நபர்களுக்கு உதவுவதற்காக MANI செயலி
  • ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சக்தி காந்தா தாஸ் புதன்கிழமை (ஜனவரி 1, 2020) நாணயத்தாள்களின் மதிப்பை அடையாளம் காண்பதில் பார்வை குறைபாடுள்ள நபர்களுக்கு உதவுவதற்காக MANI (Mobile Aided Note Identifier) என்ற மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார். 
  • "பார்வை குறைபாடுள்ள (வண்ண குருட்டு, ஓரளவு பார்வை மற்றும் பார்வையற்றோர்) இந்திய ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண உதவும் பல அம்சங்கள் உள்ளன. 
  • அதாவது, இன்டாக்லியோ அச்சிடுதல் மற்றும் தொட்டுணரக்கூடிய குறி, மாறி பணத்தாள் அளவு, பெரிய எண்கள், மாறி நிறம், ஒற்றை நிற சாயல்கள் மற்றும் வடிவங்கள் போன்றவை.
  • மகாத்மா காந்தி தொடர் மற்றும் மகாத்மா காந்தி (புதிய) தொடர் பணத்தாள்களை அடையாளம் காணும் திறன், குறிப்பின் முன் அல்லது தலைகீழ் பக்க / பகுதியை சரிபார்த்து, பல்வேறு பிடிப்பு கோணங்களில் அரை மடிந்த குறிப்புகள் மற்றும் பரந்த அளவிலான ஒளி நிலைகள் (சாதாரண ஒளி / பகல் / குறைந்த ஒளி / போன்றவை) கொண்டிருக்கும்.
  • இந்தி / ஆங்கிலத்தில் ஆடியோ அறிவிப்பு மற்றும் அதிர்வு போன்ற சோனிக் அல்லாத பயன்முறை (பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது) மூலம் வகுப்பை அடையாளம் காணும் திறன்.
12 மாநிலங்களில் அறிமுகமானது 'One Nation One Ration' திட்டம்
  • ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், கோவா, ஜார்க்கண்ட், மற்றும் திரிபுரா ஆகிய 12 மாநிலங்களில் 'ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை' திட்டத்தை மத்திய அரசு புதன்கிழமை (ஜனவரி 1, 2020) முதல் செயல்படுத்தியுள்ளது.
  • இந்த 12 மாநிலங்களின் பொது விநியோக முறையின் பயனாளிகள் இந்த மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் வசிக்கும் போது தங்களது தற்போதைய குடும்ப அட்டையில் இருந்து தங்களது பங்கைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 2020-க்குள், நாட்டின் அனைத்து மாநிலங்களும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
  • இந்த விதியின் கீழ், புதிய குடும் அட்டையின் நிலையான வடிவம் 2020 ஜூன் 1 முதல் தொடங்கப்படும் எனவும், புதிய வடிவமைப்பைப் பின்பற்றுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புதிய வடிவமைப்பானது யூனியன் பிரதேசங்களில் வழங்கப்படும் குடும்ப அட்டைகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக, எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆஃப் சேல் (electronic Point of Sale (ePoS)) சாதனங்களில் பயோமெட்ரிக் / ஆதார் அங்கீகாரத்திற்குப் பிறகு இந்த வசதி கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மக்களவையில் டிசம்பர் 3, 2019 அன்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. வளர்ச்சி இலக்குப் பட்டியல்: ஏழ்மை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்
  • உலகம் முழுவதும் நிலையான வளர்ச்சிக்கென சில பிரிவுகளைப் பட்டியலிட்டு, ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்கு மேம்படுகின்றன என்பதை கணக்கிட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை முடிவெடுத்தது. இதில் 193 நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த இலக்குகளை 2030ஆம் ஆண்டில் எட்ட வேண்டுமெனத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
  • இந்தியாவைப் பொறுத்தவரை நிடி ஆயோக், நிலையான வளர்ச்சி இலக்கைக் கணக்கிட 16 பிரிவுகளை வரையறுத்தது. ஒவ்வொரு பிரிவிற்கும் 100 புள்ளிகள் வழங்கப்படும். அந்தப் புள்ளிகளின் அடிப்படையில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் எந்த இடத்தில் இருக்கின்றன என்பது தரவரிசைப்படுத்தப்படும். இந்த தரவரிசைப் பட்டியல் 2018ல் முதன்முதலாக வெளியிடப்பட்டது.
  • 2018ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேசம், கேரளாவுக்கு அடுத்தபடியாக 66 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை தமிழ்நாடு பிடித்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு, 67 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் கேரளா, இமாச்சலப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்திற்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.
  • 2019ஆம் ஆண்டில் இந்தியா, 60 புள்ளிகளையே எடுத்திருக்கிறது. அந்த வகையில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்திய சராசரியைவிட மேம்பட்ட நிலையில் உள்ளன. 
  • 16 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்திய சராசரியைவிட கீழான நிலையில் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் 50 புள்ளிகளுடன் பிஹார் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், உத்தரப்பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி கண்டிருக்கின்றன.
  • ஏழ்மையை ஒழிப்பது, பசியை ஒழிப்பது, சமத்துவமின்மையைக் குறைப்பது, பாலின சமத்துவம், சுத்தமான நீர் கிடைக்கச் செய்வது ஆகிய 16 பிரிவுகளில் தமிழ்நாடு சில பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. குறிப்பாக, ஏழ்மையை ஒழிப்பது என்ற விஷயத்தில் 72 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
  • சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, 72 புள்ளிகளுடன் ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களுடன் சேர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. குறிப்பாக, பிரசவத்தின்போது தாய்மார்கள் இறக்கும் விகிதம் கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் தமிழ்நாட்டின் நிலை மேம்பட்டிருக்கிறது. சிறந்த கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு மணிப்பூருடன் இணைந்து நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
  • பாலின சமத்துவத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாடு மிகவும் பின்னால் இருக்கிறது. இந்தப் பிரிவில் இமாச்சலப் பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்கள் முன்னணியில் இருக்கின்றன. 
  • ஆனால், தமிழ்நாடு வெறும் 40 புள்ளிகளுடன் பிஹாருக்கு இணையாக 12வது இடத்தில்தான் இருக்கிறது. குடும்ப வன்முறை, பொதுத் தொகுதிகளில் பெண்கள் வெற்றிபெறும் விகிதம், பிறப்பின்போது ஆண் - பெண் விகிதாச்சாரம் ஆகியவற்றில் பின்தங்கியிருப்பதே, இந்தப் பிரிவில் தமிழ்நாடு பின்தங்கியிருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
  • தூய்மையான குடிநீரை வழங்குவதில் பெரும்பாலான மாநிலங்களின் நிலை மேம்பட்டிருக்கிறது. இலக்குகளை எட்டும் நிலையிலும் அவை இருக்கின்றன. இதில், தமிழ்நாடு 7வது இடத்தைப் பிடித்திருக்கிறது. நாட்டிலேயே தில்லி மட்டுமே இதில் பின்தங்கியிருக்கிறது.
  • எல்லோராலும் பெறத்தக்க தூய எரிசக்தியை அளிப்பதில் தமிழ்நாடு 90 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சிப் பிரிவில், 6வது இடத்தை தமிழ்நாடு பிடித்திருக்கிறது. வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பின்மை, வங்கிக் கணக்கு ஆகிய அம்சங்கள் இதில் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கின்றன.
  • ஆச்சரியகரமாக, தொழில்துறை - உள்கட்டமைப்பு என்ற பிரிவில் குஜராத் முதலிடத்தைப் பிடித்திருக்க தமிழ்நாடு 14வது இடத்தையே பிடித்திருக்கிறது. இந்தப் பிரிவைப் பொறுத்தவரை, 100 பேருக்கு எத்தனை பேர் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள், எவ்வளவு பேர் இணைய இணைப்பு வைத்திருக்கிறார்கள், உற்பத்தித் துறையில் எவ்வளவு பேர் பணியாற்றுகிறார்கள் உள்ளிட்ட பிரிவுகளில் மாநிலத்தின் நிலை கணக்கிடப்படுவதோடு, பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் எவ்வளவு சாலைகள் போடப்பட்டிருக்கின்றன என்பதும் கணக்கிடப்படும்.
  • சமத்துவமின்மையைக் குறைப்பதிலும் தமிழ்நாடு மிகவும் பின்தங்கி, 16வது இடத்தில்தான் இருக்கிறது. பெண் பஞ்சாயத்துத் தலைவர்களின் எண்ணிக்கை, கிராமப்புற, நகர்ப்புற மக்களில் கீழ் நிலையில் இருப்பவர்களின் மேம்பாடு, ஒடுக்கப்பட்டோருக்கான நிதியைச் செலவழிப்பது போன்றவற்றை வைத்து, இந்தப் பிரிவில் தர மதிப்பீடு தரப்படுகிறது.
  • பருவநிலை மாற்றத்திற்கான நடவடிக்கை என்ற பிரிவில், தமிழகம் வெறும் 45 புள்ளிகளுடன் மிகவும் பின்தங்கிய நிலையில் 17வது இடத்தையே பிடித்துள்ளது. 
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான இலக்கில் தமிழகம் நூறு சதவீத இலக்கை எட்டிவிட்டாலும் எல்இடி பல்புகளைப் பயன்படுத்துவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பிரிவில் சூரியசக்தியைப் பயன்படுத்துவது ஆகிவற்றில் பின்தங்கியிருப்பதாலேயே இந்தப் பிரிவில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது.



2020-ன் முதல் குழந்தை பிஜி தீவில்; உலகம் முழுவதும் 3,92,078' - யுனிசெஃப் தகவல்
  • உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள யுனிசெஃப் நிறுவனம் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளது. 
  • புத்தாண்டு தினமான 2020 ஜனவரி 1-ம் தேதி உலகம் முழுவதும் 3,92,078 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் பிஜி தீவில்தான் 2020-ம் ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளது. 1,98,722 குழந்தைகள் 8 நாடுகளில் பிறந்துள்ளன.
  • அதிகபட்சமாக இந்தியாவில் 67,385 குழந்தைகளும், சீனாவில் 46,299 குழந்தைகளும், நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும், பாகிஸ்தானில் 16,787 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13,020 குழந்தைகளும், அமெரிக்காவில் 10,452 குழந்தைகளும், காங்கோவில் 10,247, எத்தியோப்பியாவில் 8,493 குழந்தைகளும் பிறந்துள்ளன.
சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி
  • பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ISRO தலைவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மேலும் சந்திரயான் 2-ல் லேண்டர் நிலவின் பரப்பில் வேகமாக மோதியதால் லேண்டர் தரையிறக்க முடியவில்லை. விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டு பிடித்த தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியனை பாராட்டுகிறோம்.
  • சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்படவில்லை என்றாலும், அதன் ஆர்ப்பிட்டர் இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கிறது. அடுத்த 7 ஆண்டுகளுக்கு அது அறிவியல் தரவுகளை அனுப்பும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடியில் இரண்டாவது ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
  • அதேப்போல் க‌கன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப 4 வீர‌ர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனவும், தேர்வு செய்யப்பட்ட வீர‌ர்களுக்கான பயிற்சி ஜனவரி மூன்றாம் வாரம் தொடங்கும் எனவும் சிவன் தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ரஸ்யா செல்வர் என கூறப்படுகிறது.
  • ககன்யான் (Gaganyaan) என்பது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ஆகும். இந்த விண்கலத்தில் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த விண்கலமானது GSLV மார்க் III மூலம் 2021-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் தயாரித்துள்ள இந்த விண்கலத்தின் சோதனை ஓட்டமானது டிசம்பர் 18, 2014-ல் நடைபெற்றது குறிப்பிடத்தக்ககது.
  • முன்னதாக ககன்யான் திட்டம் குறித்து திருவனந்தபுரத்தில் பேசிய ISRO தலைவர் சிவன், ககன்யான் திட்டத்தில் மூன்று வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் அவர்களை பூமிக்கு பத்திரமாக கொண்டு வருவதே இலக்கு என்றார். இதற்கு முன்னோட்டமாக ரோபோ அனுப்பும் திட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Any Problem on Download : Call 9698694597 or Mail @ tnpscshouters@gmail.com

2020


S.NO
CA - MONTH
LANGUAGE
DOWNLOAD LINK
1.
JANUARY 2020
TAMIL
DOWNLOAD HERE
ENGLISH
DOWNLOAD HERE
2.
FEBRUARY 2020
TAMIL
DOWNLOAD HERE
ENGLISH
DOWNLOAD HERE
3.
MARCH 2020
TAMIL
DOWNLOAD HERE
ENGLISH
DOWNLOAD HERE
4.
APRIL 2020
TAMIL
DOWNLOAD HERE
ENGLISH
DOWNLOAD HERE
5.
MAY 2020
TAMIL
DOWNLOAD HERE
ENGLISH
DOWNLOAD HERE
6.
JUNE 2020
TAMIL
DOWNLOAD HERE
ENGLISH
DOWNLOAD HERE
7.
JULY 2020
TAMIL
DOWNLOAD HERE
ENGLISH
DOWNLOAD HERE
8.
AUGUST 2020
TAMIL
DOWNLOAD HERE
ENGLISH
DOWNLOAD HERE
9.
SEPTEMBER 2020
TAMIL
DOWNLOAD HERE
ENGLISH
DOWNLOAD HERE
10.
OCTOBER 2020
TAMIL
DOWNLOAD HERE
ENGLISH
DOWNLOAD HERE
11.
NOVEMBER 2020
TAMIL
DOWNLOAD HERE
ENGLISH
DOWNLOAD HERE
12.
DECEMBER 2020
TAMIL
DOWNLOAD HERE
ENGLISH
DOWNLOAD HERE
2019

S.NO
CA - MONTH
LANGUAGE
DOWNLOAD LINK
1.
JANUARY 2019
TAMIL
ENGLISH
2.
FEBRUARY 2019
TAMIL
ENGLISH
3.
MARCH 2019
TAMIL
ENGLISH
4.
APRIL 2019
TAMIL
ENGLISH
5.
MAY 2019
TAMIL
ENGLISH
6.
JUNE 2019
TAMIL
ENGLISH
7.
JULY 2019
TAMIL
ENGLISH
8.
AUGUST 2019
TAMIL
ENGLISH
9.
SEPTEMBER 2019
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
10.
OCTOBER 2019
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
11.
NOVEMBER 2019
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
12.
DECEMBER 2019
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
2018

S.NO
CA - MONTH
LANGUAGE
DOWNLOAD LINK
1.
JANUARY 2018
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
2.
FEBRUARY 2018
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
3.
MARCH 2018
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
4.
APRIL 2018
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
5.
MAY 2018
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
6.
JUNE 2018
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
7.
JULY 2018
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
8.
AUGUST 2018
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
9.
SEPTEMBER 2018
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
10.
OCTOBER 2018
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
11.
NOVEMBER 2018
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
12.
DECEMBER 2018
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE

2017

S.NO
CA - MONTH
LANGUAGE
DOWNLOAD LINK
1.
JANUARY 2017
TAMIL
2.
FEBRUARY 2017
TAMIL
3.
MARCH 2017
TAMIL
4.
APRIL 2017
TAMIL
5.
MAY 2017
TAMIL
6.
JUNE 2017
TAMIL
7.
JULY 2017
TAMIL
ENGLISH
8.
AUGUST 2017
TAMIL
ENGLISH
9.
SEPTEMBER 2017
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
10.
OCTOBER 2017
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
11.
NOVEMBER 2017
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE
12.
DECEMBER 2017
TAMIL
ENGLISH
DOWNLOAD HERE

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel