Type Here to Get Search Results !

DOWNLOAD JANUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF



2019

S.NO
CURRENT AFFAIRS
DAY & MONTH
DOWNLOAD LINK
1.
1st JANUARY 2019
2.
2nd  JANUARY 2019
3.
3rd  JANUARY 2019
4.
4th JANUARY 2019
5.
5th  JANUARY 2019
6.
6th  JANUARY 2019
7.
7th  JANUARY 2019
8.
8th  JANUARY 2019
9.
9th  JANUARY 2019
10.
10th  JANUARY 2019
11.
11th  JANUARY 2019
12.
12th  JANUARY 2019
13.
13h  JANUARY 2019
14.
14th  JANUARY 2019
15.
15th  JANUARY 2019
16.
16th  JANUARY 2019
17.
17th  JANUARY 2019
18.
18th  JANUARY 2019
19.
19th  JANUARY 2019
20.
20th  JANUARY 2019
21.
21st   JANUARY 2019
22.
22nd   JANUARY 2019
23.
23rd  JANUARY 2019
24.
24th  JANUARY 2019
25.
25th  JANUARY 2019
26.
26th  JANUARY 2019
27.
27th  JANUARY 2019
28.
28th  JANUARY 2019
29.
29th  JANUARY 2019
30.
30th  JANUARY 2019
31.
31st   JANUARY 2019


மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம்
  • ஏற்கனவே இருந்த துணைவேந்தர் மீது புகார்கள் கூறப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் அவரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது புதிய துணைவேந்தரை ஆளுநர் பன்வாரிலால் நியமனம் செய்துள்ளார்.
  • 'தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிருஷ்ணனை நியமனம் செய்துள்ளார். அவர் பதவி ஏற்றதும் முதல் மூன்றாண்டுகள் அப்பதவியில் இருப்பார்.
தமிழகத்தில் இன்று முதல் நெகிழிக்கு தடை
  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களுக்கான தடை தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள், நெகிழிகளால் ஆன தெர்மாகோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளைகள், நெகிழி குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், நெகிழி பொட்டலங்கள், நெகிழி தூக்கு பைகள், நெகிழி கொடிகள், நெகிழி விரிப்புகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி தேநீர் குவளைகள், நெகிழி உறிஞ்சு குழல்கள், நெகிழி பூசப்பட்ட பைகள், நெய்யாத நெகிழி பைகள் போன்ற 14 வகையான நெகிழி பொருள்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் நிவாரண நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கியது மத்திய அரசு
  • கஜா புயலில் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு தொண்டு நிறுவங்களும் உதவி செய்தனர். மத்திய அரசிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.15000 கோடி நிவாரண உதவி கோரி இருந்தார். 
  • இதனையடுத்து மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு தமிழகத்திற்கு வந்து சேதப் பகுதிகளைப் பார்வையிட்டு மத்திய அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று கூடிய உயர்மட்ட குழு கூட்டத்தில் கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1,146.12 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
  • இந்த நிதி தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளதாகவும் தெரிகிறது. கஜாபுயல் பாதிப்பு ஏற்பட்ட சில நாளில் முதற்கட்டமாக ரூ. 353 கோடி மத்திய அரசு ஒதுக்கி இருந்த நிலையில் தற்போது கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 23, 24ம் தேதி: தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு
  • 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019ம் ஆண்டு ஜனவரி 23, 24-ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
  • இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து தொழிலதிபர்கள் சென்னை வர இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டின்போது, உலக முதலீட்டாளர்களை கவரும் வகையில், சுமார் 250 பொருட்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் 2ம் இடத்தை பிடித்தது தமிழகம்
  • நாடு முழுவதும் 56 கோடிக்கும் மேற்பட்ட இணையதள இணைப்புகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் 64 சதவீதம் நகர்புறங்களிலும் 36 சதவீதம் கிராமப்புறங்களிலும் உள்ளன. இந்தநிலையில் சதவீத அடிப்படையில் கிராமபுற இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. 
  • தமிழக கிராமப் புறங்களில் வசிப்போரில் 41 புள்ளி ஒன்பது, எட்டு சதவீதம் மக்கள் இணைய தள சேவையை பயன்படுத்துகின்றனர். இதேபோல் முதலாவது இடத்தில் இருக்கும் ஹிமாச்சல் பிரதேசத்தில் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 43 புள்ளி மூன்று, ஆறு சதவீத மக்கள் இணைய தள சேவையை பெற்றுள்ளனர்.
எம்ஜிஆர் மருத்துவ பல்கலை., துணைவேந்தரானார் சுதாசேஷையன்
  • எம்ஜிஆர் மருத்துவ பல்கலை., துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, கவர்னர் பன்வாரிலால் பிறப்பித்துள்ளார்.
  • அவர் பணி நியமன உத்தரவை, கவர்னர் பன்வாரிலாலை நேரில் சந்தித்து சுதா சேஷையன் பெற்று கொண்டார். 30 வயதில் டாக்டராக பணியை துவங்கிய இவர் எழுத்தாளர் ஆவார்.
அறநிலையத்துறை ஆணையராக பனீந்திர ரெட்டி நியமனம்
  • இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த ராமச்சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அண்ணா மேலான்மை நிறுவன இயக்குனராக உள்ள பனீந்திர ரெட்டி புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள ராமசந்திரன் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக பொறுப்புக்கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக லோக்ஆயுக்தா தேடுதல் கமிட்டி தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம்
  • தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் லோக்ஆயுக்தாவுக்கு தேடுதல் கமிட்டி தலைவராக முன்னாள் நிதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • உச்சநீதி மன்றம் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 9-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. 
  • இதன்படி அமைக்கப்பட உள்ள லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய 3 பேர் இடம்பெற்றிருப்பர். இந்த 3 பேர் குழு லோக் ஆயுக்தா வுக்கு தகுதி வாய்ந்த நபர்களை பரிந்துரை செய்வதற்காக தேடுதல் கமிட்டி எனப்படும் தேடுதல் குழுவை நியமிக்கும்.
  • நியமிக்கப்படும் தேடுதல் குழுவானது தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, தேர்வுக் குழுவிடம் வழங்கும். பின்னர் தேர்வுக் குழு பரிந்துரை யின் அடிப்படையில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்வார்.
  • மேலும் தேடுதல் குழு உறுப்பினர்களாக அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாரி ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.



4 ஆவது முறையாக பிரதமர் ஆகிறார் ஷேக் ஹசீனா
  • வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலி ஆளும் ஆவாமி லீக் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. வங்கதேசத்தைக் கடந்த மூன்று ஆட்சிக் காலமாக ஆவாமி லீக் கட்சி ஆண்டு வருகிறது. 
  • அதன் தலைவரான ஷேக் ஹசீனா மூன்று முறையும் பிரதமர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமரின் பதவிக்காலம் முடிவதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்ப்ட்டது.
  • ஆவாமி லீக் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக 266 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க உள்ளனர். அக்கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா மீண்டும் நான்காவது முறையாக பிரதமராகப் பதவியேற்க இருக்கிறார்.
ரூ.50 காேடியில் தடுப்பு சுவர் திட்டம்
  • அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று சுற்றுப்பயணம் செய்தபிரதமர் மோடி கார் நிக்கோபார் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க 50 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
நாட்டிலேயே கேரளாவில் முதல் பெண் இமாம்
  • இஸ்லாம் மதத்தின் வழிபாட்டுத்தளமான மசூதிகளில் இமாம்களாக ஆண்களே நியமிக்கப்படுவார்கள். அவ்வாறு நியமிக்கப்படும் இமாம்களே தொழுகைகளையும் வழிநடத்துவார்கள். 
  • இந்நிலையில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜமிதா என்ற பெண் தற்போது இமாமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் இந்தியாவிலேயே முதல் பெண் இமாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • புனித குர் ஆன் நூலை நன்கு கற்றுத் தேர்ந்துள்ள ஜமிதா குர் ஆன் சுன்னத் சமூகத்தின் மாநில பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.
ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி
  • ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் என்ற ஏவுகணையை சோதனையிட ரஷ்யா கடந்த சில ஆண்டுகளாக திட்டமிட்டிருந்தது
  • இந்த நிலையில் இந்த ஏவுகணை இறுதிகட்ட சோதனை வெற்றிகரமாக நடந்ததாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு அதிக வேகத்தில் பாய்ந்து செல்லும் ஹைப்பர்சோனிக் சோதனையின் வெற்றியால் ரஷ்யாவின் எதிரி நாடுகள் அச்சமடைந்துள்ளன.
ஆர்.டி.‌ஐ ஆணையத்தின் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா நியமனம்
  • பொதுவாக மத்திய தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் உள்பட 11 ஆணையர்கள்பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 3 தகவல் ஆணையர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
  • சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகளில், இந்த விவகாரம் சுட்டி காட்டப்பட்டதை அடுத்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும், இந்த நியமனங்களில் வெளிப்படைத்தன்மை கையாளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
  • இதனையடுத்து, புதிதாக மேலும் 4 தகவல் ஆணையர்களை நியமித்து மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து யாஷ்வர்தன் குமார் சின்கா, வனஜா என்.சர்னா, நீரஜ் குமார் குப்தா, சுரேஷ் சந்திரா ஆகிய 4 தகவல் ஆணையர்கள் நியமனத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.
  • இதற்கிடையில், மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூர் பணி ஓய்வு பெற்ற நிலையில், அந்த பதவிக்கான புதிய தலைமை ஆணையராக சுதிர் பார்கவா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.



சர்வதேச அரிசி ஆய்வு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
  • உத்திரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் தேசிய விதைகள் பரிசோதனை நிலைய வளாகத்தில் அரிசி ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது. இதனை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மையம் முழுவதையும் பார்வையிட்டார். 
  • மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி வகைகளை கேட்டறிந்ததுடன், அரிசி சோதனை செய்யப்படும் முறையையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். 
மத்திய அரசு திட்ட விளம்பர செலவு ரூ.5,245 கோடி
  • கடந்த நான்கு ஆண்டுகளில், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் திட்டங்கள் குறித்த பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு குறித்து, ஊடகங்களில் விளம்பரம் செய்ததற்கு, 5,245 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று பிரதமர் மோடி சுதந்திர தின உரை நிகழ்த்தி னார். அதில், 2022-ம் ஆண்டுக் குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
  • இந்நிலையில், இத்திட்டத்துக் கான மதிப்பீட்டினை மத்திய அரசிடம் இஸ்ரோ அண்மையில் சமர்ப்பித்தது. அதன்படி, இத்திட்டத்துக்கு ஆகும் மொத்த செலவான ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
  • ககன்யான் திட்டத்தின் கீழ், 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப் படவுள்ளனர். இதற்கு ஜிஎஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் பயன் படுத்தப்படவுள்ளது. ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, இரண்டு முறை ஆளில்லா விண்கலங்கள் பரிசோதனை முயற்சியாக விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

2018 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா


  • ஆண்டுதோறும் பெண்கள் கிரிக்கெட்டில் சாதித்த வீராங்கனைகளுக்கு விருது வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது. 2018-ம் ஆண்டில் சாதித்த வீராங்கனைகளுக்கான விருது பட்டியலை இன்று அறிவித்தது. ஐசிசி, ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட்டில் சாதனை செய்த வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. 
  • அதன்படி, 2018ம் ஆண்டில் சாதித்த வீராங்கனைகளுக்கான விருது பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஐசிசி-யின் இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கான சிறந்த வீராங்கனை ஆகிய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் 'சிறந்த கிரிக்கெட் வீராங்கனை' மற்றும் 'ஒருநாள் கிரிக்கெட்டிற்கான சிறந்த வீராங்கனை' ஆகிய இரண்டு விருதுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஆஸ்லே ஹீலி டி20 கிரிக்கெட் போட்டியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதை பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel