Type Here to Get Search Results !

கிராமப்புற வேலைவாய்ப்பு




பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம் (PMEGP)
  • பிரதமந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம், மத்திய அரசின் மான்யத்துடன் இணைந்த கடன் திட்டமானது. இத்திட்டமானது, பிரதம மந்திரி ரோஸ்கார் (வேலைவாய்ப்பு) யோஜனா (திட்டம்) (PMRY) மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் (REGP) ஆகிய இரண்டையும் இணைத்து, 2008 ஆகஸ்டு ஆண்டு 15ம் தேதியன்று உருவாக்கப்பட்டது.
  • நோக்கம்
  • சிறு தொழில் மூலம் சுய வேலை வாய்ப்பை கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் உருவாக்குதல்
  • பாரம்பரிய தொழில்முனைவோர், கிராமப்புற/ நகர்ப்புறங்களில் வசிக்கும் வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்து, முடிந்த வரை அவர்களது இடத்திலேயே சுய வேலைவாய்ப்பை உருவாக்கி தருதல்.
  • கிராமப்புற, நகர்ப்புற, பாரம்பரிய தொழில்முனைவோருக்கு தொடர்ந்து, நிரந்தரமாக வேலை வழங்குவதன் மூலம், வேலை இல்லா இளைஞர்கள் நகர்புறங்களுக்கு குடி பெயர்வதைத் தடுத்தல்.
  • பாரம்பரிய தொழில்முனைவோர்களின் வருமானம் ஈட்டும் திறமையை உயர்த்துவதன் மூலம், கிராமப்புற, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கச் செய்தல்.



மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம்
  • இந்த சட்டம், ஆகஸ்ட் 25, 2005 ல், நடைமுறைக்கு வந்தது (இது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் - NREGS, என்றும் அழைக்கப்படும்). இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். 
  • இந்திய அரசின், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசாங்கத்துடன் இணைந்து, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
  • கிராமப்புற இந்தியாவில், வறுமைக்கோட்டிற்கு கீழே வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் வாங்கும் திறனை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நாட்டிலுள்ள ஏழை மற்றும் பணக்கார மக்களியிடையே உள்ள இடைவெளியை குறைக்க இத்திட்டம் முயலும். 3-ல், ஒரு பங்கு, வாய்ப்பினை பெண்களுக்கு இத்திட்டம் அளிக்கும்.
  • வயது வந்த கிராமப்புற நபர்கள், தங்கள் பெயர், வயது மற்றும் முகவரியை கிராம பஞ்சாயத்திடம், புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்தார், தகுந்த விசாரணைக்கு பின்னர், நபரை பதிவு செய்து, அவருக்கான, பணி அட்டையை வழங்குவார். 
  • பணி அட்டையில், நபரின் விவரங்கள், புகைப்படத்துடன் இடம் பெற்று இருக்கும். பதிவு செய்யப்படட் நபர், வேலைக்கான (குறைந்தது 14 நாட்களுக்கு தொடர்ந்து), விண்ணப்பத்தை அலுவலரிடமோ, கிராம ஊராட்சி அலுவலரிடமோ அளிக்க வேண்டும்.
  • செயல் அலுவலரோ/கிராம ஊராட்சி அலுவலரோ, தகுதியான விண்ணப்பத்தை பெற்று கொண்டு, விண்ணப்பம் பெற்றுக் கொண்டதற்கான தேதியை அளித்துவிட்டு, வேலை வாய்ப்புக்கான கடிதத்தை, அந்த நபருக்கு அனுப்புவதோடு மட்டுமில்லாமல், கிராம ஊராட்சி அலுவலகத்திலும் அறிவிப்பார்கள். 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு, உட்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்; 5 கிலோ மீட்டருக்கு, மேல் இருந்தால், கூடுதல் ஊதியம் வழங்கப்படும்.
திட்ட செயலாக்கம்
  • இத்திட்டமானது, 2006-07-க்கான நிதியாண்டில், 200 மாவட்டங்களிலும், 2007-08-க்கான நிதியாண்டில், 130 மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஏப்ரல் 2008-ல், 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 614 மாவட்டங்கள், 6,096 வட்டங்கள் மற்றும் 2.65 லட்ச கிராம ஊராட்சிகளில் விரிவடைந்து, நாடு முழுவதும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel