Type Here to Get Search Results !

13th JANUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ரூ.6,608 கோடியில் 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி முதல்வா் தலைமையிலான கூட்டத்தில் முடிவு
  • முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலீட்டு வழிகாட்டுதல் கூட்டத்தில் ரூ.6, 608 கோடியில் 15 தொழில் திட்டங்கள் தொடங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.
  • தூத்துக்குடி, திருவள்ளூா், காஞ்சிபுரம், கோயம்புத்தூா், திருச்சி, பெரம்பலூா், கிருஷ்ணகிரி மற்றும் வேலூா் என தமிழகத்தில் பல பகுதிகளில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 
  • மேலும், இந்தக் கூட்டத்தில், ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்பட்ட தொழில் அனுமதிகள், பெரும் தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தொடா்புடைய நிலுவை இனங்கள், தொழில் தொடங்குவதை எளிதாக்கத்தேவையான சீா் திருத்தங்கள், வணிகம் செய்தலை எளிதாக்குதல் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தொடா்புடைய இனங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
  • முதலீட்டு வழிகாட்டுதல் முதல் கூட்டம் நவம்பா் 1-இல் நடைபெற்றது. அதில் ரூ. 8,120 கோடி முதலீடுகளில், 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், 21 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.



சாலை பாதுகாப்பில் தமிழகத்துக்கு மத்திய அரசு விருது
  • சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுத்த மாநிலங்களில், முதன்மையான மாநிலமாக தமிழகம் தேர்வாகி உள்ளது. இதற்கான மத்திய அரசின் விருதை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இருந்து, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றார்.
2025-க்குள்இந்திய ஜவுளி ஏற்றுமதி 30,000 கோடி டாலரை எட்டும்
  • உள்நாட்டு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை (கைவினைப்பொருள்கள் உள்பட) தொழில்துறையின் மதிப்பு 2018-ஆம் ஆண்டில்14,000 கோடி டாலராக இருந்தது. அதில், 10,000 கோடி டாலா் அளவுக்கு உள்நாட்டிலேயே நுகா்வு செய்யப்பட்டது. எஞ்சியுள்ள 4,000 கோடி டாலா் அளவிலான பொருள்கள்தான் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • இந்த நிலையில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறையின் மதிப்பு வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் 22,300 கோடி டாலரை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இத்துறையின் பங்களிப்பு 2.3 சதவீதம் அளவுக்கு உள்ளது. அதேபோன்று, தொழில்துறை உற்பத்தியில் இதன் பங்களிப்பு 13 சதவீதமாகும். மேலும், ஏற்றுமதி வருவாயில் ஜவுளி துறையின் பங்கு 12 சதவீதமாக உள்ளது.
  • இந்திய ஜவுளி துறையின் வளா்ச்சியை துரிதப்படுத்தவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் விளைவாக, வரும் 2024-25-க்குள் இத்துறையின் ஏற்றுமதி 30,000 கோடி டாலரை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம், உலகளவில் இந்தியாவின் சந்தைப் பங்களிப்பை தற்போதைய 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்க முடியும்.
  • நாட்டில் மிக அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் ஜவுளி-ஆயத்த ஆடை துறை இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது 4.5 கோடி பேருக்கு இத்துறை வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. 2020-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 5.5 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • கடந்த 2018-19 நிதியாண்டில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறையில் 310 கோடி டாலா் (ரூ.21,700 கோடி) அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டதாக இன்வெஸ்ட் இந்தியா தெரிவித்துள்ளது.
டில்லியில் இன்று துவங்குகிறது ரெய்ஸினா டயலாக் - 2020
  • புதுடில்லியில் ரெய்ஸினா டயலாக் 2020 என்ற பெயரில் ரஷ்யா, ஈரான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் வருடாந்திர புவி பொருளாதார உச்சி மாநாடு ஜன.14 துவங்குகிறது. 
  • மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டின் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இம்மாநாட்டில் 105 நாடுகளைச் சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.



சில்லறை பணவீக்க விகிதம் 7.35 சதவீதமாக அதிகரிப்பு
  • கடந்த நவ., மாதத்தில் 5.54 சதவீதமாக உயர்ந்தது. மீண்டும் 2019 டிச., ல் பணவீக்கத்தின் மதிப்பு 7.35 சதவீதமாக அதிகரித்து. இது ரிசர்வ் வங்கி மதிப்பிட்ட அளவை விட அதிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 
  • சில்லறை பணவீக்கம் அதிகரிப்பதற்கு நாட்டின் கடுமையான விலைவாசி உயர்வு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • 2019ன் இறுதியில் பணவீக்கத்தின் மதிப்பு அதிகபட்சமாக 6 சதவீதம் வரை இருக்கலாம் என ஆர்.பி.ஐ திட்டமிட்டது. ஆனால் பணவீக்கத்தின் விகிதம் கடுமையாக அதிகரித்ததுள்ளது. 
  • மேலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி வகைகள், தானியங்கள் போன்ற அடிப்படை பொருட்களின் விலைவாசி உயர்வு தான் இதற்கு காரணம். 
  • இதனை தொடர்ந்து தான் சில்லறை பணவீக்கத்தின் விகிதம் 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த வருடத்தின் தொடக்கத்திலும் பணவீக்கத்தின் மதிப்பு அதிகரிக்கலாம்.
பிலிப்பைன்ஸ் நாட்டை பதற வைத்த'டால்'எரிமலை
  • பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 24 எரிமலைகளில்' டால்' எரிமலை தான் இரண்டாவது மிகப் பெரியது தலைநகர் மணிலாவின் தெற்கு பகுதியில் உள்ள இந்த எரிமலை மிகப்பெரிய ஏரிக்கு நடுவே உள்ளது.
  • ஏற்கனவே இந்த எரிமலை வெடித்து சிதறியதில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகினர்.இந்நிலையில், மீண்டும் வெடித்து சிதறியது. அப்போது 1 கி.மீ உயரத்திற்கு மேல் சாம்பல் புகை வெளியேறி வருகிறது.
உலக சாம்பியன் பனிச்சறுக்கு போட்டியில் மகளிர் பிரிவில் கனடாவின் ஜாக்குலின் சாம்பியன்
  • பனிச்சறுக்கு போட்டி... பிரான்ஸில் நடைபெற்ற உலக சாம்பியன் ஐஸ் கிராஸ் பனிச்சறுக்கு போட்டியில், அமெரிக்காவின் கேமரன் நாஸ் (Cameron Naasz), சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மகளிர் பிரிவில் கனடா கனடாவின் ஜாக்குலின் லெகெரே (Jacqueline Legere) சாம்பியன் ஆனார்.
  • உவர்நெட் போர்ஸ் (Uvernet-Fours) என்ற மலைப்பகுதியில், 2000 மீட்டர் உயரத்தில் முதல்முறையாக இந்தப் போட்டி நடைபெற்றது. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், ஆடவர் பிரிவில், அமெரிக்காவின் கேமரன் நாஸ் முதலிடம் பிடித்தார்.
  • ஆஸ்திரேலிய வீரர் 2ம் இடத்தையும், சுவிட்ஸர்லாந்து வீரர் 3ம் இடத்தையும் பிடித்தனர். மகளிர் பிரிவில் கனடாவின் ஜாக்குலின் லெகெரே (Jacqueline Legere) சாம்பியன் பட்டம் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel