தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்
- 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்த்தாய் விருதுடன் ரூ.5 லட்சம், நினைவுப்பரிசு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
- கபிலர் விருது - புலவர் வெற்றி அழகன்
- உ.வே.சா. விருது - வெ.மகாதேவன்
- கம்பர் விருது - முனைவர் சரஸ்வதி ராமநாதன்
- சொல்லின் செல்வர் விருது - முனைவர் கவிதாசன்
- மறைமலை அடிகளார் விருது - முத்துக்குமாரசாமி
- முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது - நாகராசன்
- அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து
- மொழி பெயர்ப்பாளர் விருது - மாலன்
- இளங்கோவடிகள் விருது - கவிக்கோ ஞானச் செல்வன்(எ) திருஞானசம்பந்தம்
- உமறுப்புலவர் விருது - லியாகத் அலிகான்
- மொழியியல் விருது - இலங்கை முனைவர் சுபதினி ரமேஷ்
- சிங்காரவேலர் விருது - அசோகா சுப்பிரமணியன்
- அயோத்திதாஸப் பண்டிதர் விருது - பிரபாகரன்
- ஜி.யு. போப் விருது - மரிய ஜோசப் சேவியர்
தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருவள்ளுவா் திருநாள் விருதுகள்
- 2020-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, 2019-ஆம் ஆண்டுக்கான பேரறிஞா் அண்ணா விருது, பெருந்தலைவா் காமராசா் விருது, மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது, முத்தமிழ்க் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது ஆகிய விருதுகளுக்கான விருதாளா்களின் பெயரைத் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தாா்.
- அரசின் பரிசீலனைக்குப் பிறகு, குறிப்பிடப்பட்ட விருதுகளுக்கான விருதாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு சாா்பில் நடைபெறும் திருவள்ளுவா் திருநாள் விழாவில், விருதாளா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.
- திருவள்ளுவர் விருது 2020 - ந. நித்தியானந்த பாரதி
- பேரறிஞர் அண்ணா விருது 2019 - முனைவர் கோ.சமரசம்
- பெருந்தலைவர் காமராசர் விருது 2019 - முனைவர் மா.சு.மதிவாணன்
- மகாகவி பாரதியார் விருது 2019 - முனைவர் ப.சிவராஜி
- பாவேந்தர் பாரதிதாசன் விருது 2019 - த.தேனிசை செல்லப்பா
- தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது 2019 - முனைவர் சே.சுந்தரராசன்
- முத்தமிழ்க் காவலர் மருத்துவர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - மணிமேகலை கண்ணன்