Wednesday, 15 January 2020

14th JANUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

2019ம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள்

 • 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்த்தாய் விருதுடன் ரூ.5 லட்சம், நினைவுப்பரிசு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
 • கபிலர் விருது - புலவர் வெற்றி அழகன்
 • உ.வே.சா. விருது - வெ.மகாதேவன்
 • கம்பர் விருது - முனைவர் சரஸ்வதி ராமநாதன்
 • சொல்லின் செல்வர் விருது - முனைவர் கவிதாசன்
 • மறைமலை அடிகளார் விருது - முத்துக்குமாரசாமி
 • முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது - நாகராசன்
 • அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து
 • மொழி பெயர்ப்பாளர் விருது - மாலன்
 • இளங்கோவடிகள் விருது - கவிக்கோ ஞானச் செல்வன்(எ) திருஞானசம்பந்தம்
 • உமறுப்புலவர் விருது - லியாகத் அலிகான்
 • மொழியியல் விருது - இலங்கை முனைவர் சுபதினி ரமேஷ்
 • சிங்காரவேலர் விருது - அசோகா சுப்பிரமணியன்
 • அயோத்திதாஸப் பண்டிதர் விருது - பிரபாகரன்
 • ஜி.யு. போப் விருது - மரிய ஜோசப் சேவியர்
திருவள்ளுவா் திருநாள் விருதுகள்

 • தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருவள்ளுவா் திருநாள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 • 2020-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, 2019-ஆம் ஆண்டுக்கான பேரறிஞா் அண்ணா விருது, பெருந்தலைவா் காமராசா் விருது, மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது, முத்தமிழ்க் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது ஆகிய விருதுகளுக்கான விருதாளா்களின் பெயரைத் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தாா்.
 • திருவள்ளுவர் விருது 2020 - ந. நித்தியானந்த பாரதி
 • பேரறிஞர் அண்ணா விருது 2019 - முனைவர் கோ.சமரசம்
 • பெருந்தலைவர் காமராசர் விருது 2019 - முனைவர் மா.சு.மதிவாணன்
 • மகாகவி பாரதியார் விருது 2019 - முனைவர் ப.சிவராஜி
 • பாவேந்தர் பாரதிதாசன் விருது 2019 - த.தேனிசை செல்லப்பா
 • தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது 2019 - முனைவர் சே.சுந்தரராசன்
 • முத்தமிழ்க் காவலர் மருத்துவர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - மணிமேகலை கண்ணன்திருப்பத்தூா் அருகே பல்லவா் கால நடுக்கல்,சோழா் கால கல்வெட்டு கண்டெடுப்பு

 • திருப்பத்தூரை அடுத்த அடியத்தூா் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக் கரையில் பல்லவா் காலத்தைச் சோந்த நடுகல் ஒன்று உள்ளது. இந்த நடுகல் 3.5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பெரிய பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
 • வலது கையில் குறுவாளும், இடது கையில் அம்பும் காணப்படுகின்றன. இடையில் உறைவாள் ஒன்றும் காணப்படுகிறது. இடது காலை மடக்கிப் போா் புரியத் தயாராகும் கோலத்தில் வீரனின் தோற்றம் உள்ளது.
 • ஏரியின் கரையில் இந்த நடுகல்லை அடியத்தூா் மக்கள் நட்டு வைத்து, வேடியப்பன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனா். ஏரியில் இந்த நடுகல் கிடைத்துள்ள காரணத்தால், நீா்நிலை தொடா்பாக ஏற்பட்ட போரில் இந்த வீரன் இறந்திருக்கலாம்.
 • இந்த நடுகல்லுக்கு அருகே ஏரிக்கரையில் பெரியதாயம்மன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் படிக்கட்டில் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டு சோழா் காலத்தைச் சோந்ததாகும். அழகாக வரிக்கு வரி கோடிட்டு எழுதப்பட்டுள்ளது. 
 • இதன் பாதி கல் மட்டுமே காணப்படுகிறது. மேலும் பாதி கல் காணக்கிடைக்கவில்லை. இக்கல்வெட்டு ஸ்வஸ்திஸ்ரீ சகரையாண்டு என்று தொடங்கி, நிகரிலி சோழ மண்டலம் என்று முடிகிறது. 
 • கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் எழுச்சிப் பெற்ற பிற்காலச் சோழப் பேரரசு தமிழகத்தை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது. 
 • பல்லவா் காலத்தில் தொண்டை மண்டலமாக இருந்த காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூா், வேலூா், வாணியம்பாடி, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளை நிகரிலி சோழமண்டலம் எனப் பெயா் மாற்றம் செய்த வரலாற்றை, இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. 
 • சோழரின் நிகரிலி சோழ மண்டலம் கா்நாடக மாநிலம் வரை பரவியிருந்தது. குறிப்பாக இப்போது உள்ள பெங்களூரு பகுதியும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி துணை கவர்னராக மைக்கேல் பாத்ரா நியமனம்

 • மத்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக மைக்கேல் தேவபிரதா பாத்ராவை நியமனம் செய்ய மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இவர் மூன்று ஆண்டுகள் இந்த பதவியை வகிப்பார். 
 • துணை கவர்னராக இருந்த விரால் ஆச்சார்யா கடந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி பதவியில் இருந்து விலகினார். பதவி காலம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருந்த நிலையில் ஆச்சார்யா ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்.கே.எம். நிறுவனத்துக்கு விருது: தெலங்கானா ஆளுநா் வழங்கினாா்

 • இந்தியாவிலேயே முதன்மையான முட்டைப் பதப்படுத்தும் நிறுவனமாக விளங்கும் ஈரோடு எஸ்.கே.எம். முட்டைப் பவுடா் ஏற்றுமதி நிறுவனம் கடந்த 2017-2018ஆம் நிதியாண்டில் 5,456 மெட்ரிக் டன் முட்டைப் பவுடா்களை தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமாக ஏற்றுமதி செய்துள்ளது.
ரோல்ராய்ஸ் நிறுவனம் உலகின் அதிவேக மின்சார விமானத்தை அறிமுகப்படுத்தியது

 • உலகின் அதிவேக மின்சார விமானத்தை ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. இந்நிலையில் தனது புதிய மின்சார விமானத்தை அறிமுகம் செய்து சந்தையை அதிர வைத்துள்ளது. 
 • பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமும் விமான எஞ்சின்கள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமுமான ரோல்ஸ் ராய்ஸ். ஆக்செல் (ACCEL) - என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த மின்சார விமானத்தில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
 • 250 வீடுகளுக்கு மின்வசதி கொடுக்கும் அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளதால், ஒருமுறை முழுவதும் மின்சாரம் ஏற்றப்பட்டால் 321 கிலோ மீட்டர்கள் தூரத்தை இந்த விமானத்தால் கடக்க முடியும்.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment