தமிழக அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள்
- தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழக அரசு ஆண்டுதோறும் பெரியார் மற்றும் அம்பேத்கர் விருதுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில், 2019-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கர் விருது முனைவர் க.அருச்சுனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் பெரியார் விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம், 1 சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது. அதுபோன்று அம்பேத்கர் விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் பொற்கிழியும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதிக காப்புரிமை பெற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 2-வது இடம்
- கடந்த ஆண்டுக்கான, அமெரிக்க காப்புரிமை பட்டியலில், அதிகளவுக்கு காப்புரிமைகளை பெற்ற நிறுவனங்களில், முதலிடத்தை, ஐ.பி.எம்., நிறுவனம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம், 9,262 காப்புரிமைகளுக்கான அனுமதியைப் பெற்றுள்ளது.
- கடந்த ஆண்டில், இந்தியாவிலிருந்து மட்டும், ஐ.பி.எம்., கண்டுபிடிப்பாளர்கள், 900க்கும் அதிகமான காப்புரிமைகளை பெற்றுள்ளனர். இது, அமெரிக்காவுக்குப் பிறகு, உலகளாவிய எண்ணிக்கையில், இரண்டாவது அதிக பங்களிப்பாகும்.
350 அடிக்கு அம்பேத்கர் சிலை - மகாராஷ்டிர அமைச்சரவை முடிவு
- மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக உள்ளார்.
- இந்நிலையில், மகாராஷ்டிராவில் 350 அடி உயரத்திற்கு அம்பேத்கர் சிலை அமைக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
- இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏற்கனவே 250 அடியில் சிலை அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அது தற்போது 350 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அத்துடன், சிலைக்கு கீழ் பகுதியில் 100 அடிக்கு அம்பேத்கர் நினைவகம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது. இதனால், மொத்த உயரம் 450 அடி ஆகும்" என்றார். மேலும், இந்த சிலை 2 வருடங்களில் அமைக்கப்படும் என்றும் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
வர்த்தக போர் அமெரிக்கா-சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்து
- வர்த்தக போரை நடத்தி வந்த அமெரிக்கா - சீன நாடுகள் தற்போது பரஸ்பரம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வர்த்தக போரை முடிவுக்குகொண்டு வந்துள்ளன. சீனாவுக்கும் , அமெரிக்காவுக்கும் இடையே இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக வர்த்தக மோதல் நடந்து வந்தது.
- கடந்தாண்டு ஜூனில் ஜப்பானின் ஒசாகாவில் நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஷி ஜிங்பிங் இடையிலான சந்திப்பின் போது, சீன பொருட்களுக்கு புதிதாக வரி விதிப்பதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஒப்பு கொண்டன.
- இதையடுத்து இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொள்வதென முடிவு செய்தன. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.
- தலைநகர் வாஷிங்டனில் சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் - சீன துணை பிரதமர் லீயு ஹி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
- இதன் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வர்த்தக போரை நடத்தி வந்த அமெரிக்க- சீன நாடுகள் இன்று முதற்கட்ட ஒப்பந்தம் ஏற்படுத்தி வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே புதிய நட்பு மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.7088.90 கோடி முதலீடு
- உலக கோடீஸ்வர்களில் முதன்மையானவர் முன்னணி அமேசான் நிறுவனர் மற்றும் அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ., வான ஜெப் பெசோல் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- இதனையடுத்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெப், 21 ஆம் நூற்றாண்டு இந்திய நூற்றாண்டாக இருக்கும் என கணித்துள்ளேன். வரும் 2025 ஆம் ஆண்டில் ரூ. 70880 மதிப்புள்ள மேக் இன் இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்ய அமேசான் தனது உலகளாவிய தனங்களை பயன்படுத்தும்.
- அதேபோல், இந்தியாவின் நடுத்தர சிறு நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்க அமேசான் நிறுவனம் 100 கோடி டாலரை (ரூ. 7கோடி ) முதலீடு செய்ய உள்ளது என தெரிவித்துள்ளார். இதுவரை 5.5 பில்லியன் டாலர் முதலீடுகளைச் செய்துள்ளது என தெரிவித்தார்.
ரோகித், கோஹ்லிக்கு ஐ.சி.சி., விருது
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐ.சி.சி., துபாயில் வெளியிட்டது. இதற்காக 2019, ஜன. 1 முதல் டிச. 31 வரை வீரர்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
- சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி., நிர்ணயித்த காலகட்டத்தில் இவர், 28 ஒருநாள் போட்டியில், 7 சதம் உட்பட 1409 ரன்கள் குவித்தார். இதில் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் 9 போட்டியில், 5 சதம் உட்பட 648 ரன்கள் எடுத்தது அடங்கும். இதன்மூலம் இவர், ஒரு உலக கோப்பை சீசனில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.
- கேப்டவுன் டெஸ்டில் (2018) பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கியதால் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் களமிறங்கிய போது ரசிகர்கள் கேலி செய்தனர். அப்போது இந்திய அணி கேப்டன் கோஹ்லி ரசிகர்களை நோக்கி ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டார். இதனால் கோஹ்லி 'ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- கடந்த ஆண்டு நாக்பூரில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 'டுவென்டி-20' போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகார், 7 ரன் மட்டும் வழங்கி 6 விக்கெட் கைப்பற்றினார். இதனையடுத்து இவர், 'டுவென்டி-20'யில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரருக்கான விருதுக்கு தேர்வானார்.
- சிறந்த வீரருக்கான 'சர் கார்பீல்டு சோபர்ஸ் டிராபி' விருதுக்கு இங்கிலாந்து 'ஆல்-ரவுண்டர்' பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை பைனலில் 84 ரன் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட இவர், லீட்சில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் 135 ரன்கள் விளாசி 'திரில்' வெற்றி தேடித்தந்தார். தவிர இவர், ஐ.சி.சி., நிர்ணயித்த கால கட்டத்தில் 20 ஒருநாள் போட்டியில் 719 ரன், 12 விக்கெட் மற்றும் 11 டெஸ்டில், 821 ரன், 22 விக்கெட் கைப்பற்றினார்.
- சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பட் கம்மின்ஸ் கைப்பற்றினார். இவர், 12 டெஸ்டில், 59 விக்கெட் சாய்த்தார். தவிர டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
- வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதை ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசேன் தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு 11 டெஸ்டில், 1104 ரன்கள் குவித்த இவர், அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். தவிர, தரவரிசையிலும் 4வது இடத்துக்கு முன்னேறினார்.
- 'அசோசியேட்' கிரிக்கெட் வீரருக்கான விருதை ஸ்காட்லாந்தின் கைல் கோட்ஸர் வென்றார். சிறந்த அம்பயருக்கான 'டேவிட் ஷெப்பர்டு டிராபி' விருதை இங்கிலாந்தின் ரிச்சர்டு இல்லிங்வொர்த் கைப்பற்றினார்.
- ஒருநாள் அணி: விராத் கோஹ்லி (கேப்டன், இந்தியா), ரோகித் சர்மா (இந்தியா), ஷாய் ஹோப் (விண்டீஸ்), பாபர் ஆசம் (பாக்.,), கேன் வில்லியம்சன் (நியூசி.,), பென் ஸ்டோக்ஸ் (இங்கி.,), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர், இங்கி.,), மிட்சல் ஸ்டார்க் (ஆஸி.,), டிரண்ட் பவுல்ட் (நியூசி.,), முகமது ஷமி (இந்தியா), குல்தீப் யாதவ் (இந்தியா).
- டெஸ்ட் அணி: விராத் கோஹ்லி (கேப்டன், இந்தியா), மயங்க் அகர்வால் (இந்தியா), டாம் லதாம் (நியூசி.,), மார்னஸ் லபுசேன் (ஆஸி.,), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி.,), பென் ஸ்டோக்ஸ் (இங்கி.,), வாட்லிங் (விக்கெட் கீப்பர், நியூசி.,), பட் கம்மின்ஸ் (ஆஸி.,), மிட்சல் ஸ்டார்க் (ஆஸி.,), நீல் வாக்னர் (நியூசி.,), நாதன் லியான் (ஆஸி.,).