கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சோந்த 'சித்திரமேழி' கல்வெட்டு கண்டெடுப்பு
- திருப்பத்தூா் அருகே கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சோந்த 'சித்திரமேழி' கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூா் மாவட்டம், கல்நாா்சாம்பட்டியில் மாந்தோப்பின் நடுவே ஒரு கல்லின் மீது கோட்டுருவம் இருப்பதை அறிந்தோம்.
- அக்கல்லை சுத்தம் செய்து பாா்த்தபோது, அது பழைமையான 'சித்திரமேழி' கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது. 'மேழி' என்பது உழவுக் கலப்பை அல்லது ஏா் என்று பொருள்படும்.சித்திரமேழி என்றால் அழகிய கலப்பையைக் குறிக்கும் சொல்லாகும்.
- சித்திரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும் உழவுக் கலப்பை முத்திரையே சித்திரமேழி எனக் குறிப்பிடப்படுகிறது. இது ஒரு வணிகக் குழுவுக்கான கல்வெட்டாகும். சித்திரமேழி என்ற சின்னம் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மக்கள் கூட்டமைப்பின் அதிகாரக் குறியீடாக அக்காலத்தில் கருதப்பட்டது.
குழந்தைகள் பலாத்கார சம்பவங்கள் இரண்டாவது இடத்தில் தமிழகம்
- நாட்டில், 2018ம் ஆண்டில், 21 ஆயிரத்து, 605 குழந்தைகள், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதில், மஹாராஷ்டிராவில், 2,832 குழந்தைகளும், தமிழகத்தில், 1,457 குழந்தைகளும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
- வன்முறை மற்றும் பலாத்காரத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், 2012ல், 'போஸ்கோ' சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், 2017ல், 32 ஆயிரத்து, 608 வழக்குகள் பதிவாகின. 2018ல், 22 சதவீதம் அதிகரித்து, 39 ஆயிரத்து, 827 வழக்குகள் பதிவாகின.
- அதாவது, 2018ல், நாட்டில், தினமும், 109 குழந்தைகள், பாலியல் வன்முறைக்கு உள்ளாகிஉள்ளனர். கடந்த, 2018ம் ஆண்டில், நாடு முழுவதும், குழந்தைகள் பலாத்காரம் தொடர்பாக, 21 ஆயிரத்து, 605 புகார்கள் பதிவாகி உள்ளன.
- பாதிக்கப்பட்டவர்களில், 21 ஆயிரத்து, 401 பேர் சிறுமியர். மற்றவர்கள் சிறுவர்கள். இதில், மஹாராஷ்டிராவில், 2,832 குழந்தைகளும், தமிழகத்தில், 1,457 குழந்தைகளும், பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
- கடந்த, 10 ஆண்டுகளில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. 2008ம் ஆண்டில், 22 ஆயிரத்து, 500 புகார்கள் பதிவாகின.கடந்த, 2017ல், ஒரு லட்சத்து, 29 ஆயிரத்து, 32 புகார்களாக அதிகரித்தது.
- 2018ல், ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 764 புகார்கள் பதிவாகியுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில், 2018ல், குழந்தைகள் கடத்தல் வழக்குகள் மட்டும், 44.2 சதவீதமாக உள்ளது. 2018ல் மட்டும், 67 ஆயிரத்து, 134 குழந்தைகள் மாயமாகியுள்ளன.
- இதில், 41 ஆயிரத்து, 191 பேர் சிறுமியர். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், முதலிடத்தில், உத்தர பிரதேசம் உள்ளது. 2018ல், இந்த மாநிலத்தில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்பாக, 19 ஆயிரத்து, 936 வழக்குகள் பதிவாகி உள்ளன. குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ், 2018ல், 501 வழக்குகள் பதிவாகின. இது, 2017ம் ஆண்டை விட, 26 சதவீதம் அதிகம்.
கொல்கத்தா துறைமுகம் இனி சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம்
- பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு சென்றார். கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
- இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள கொல்கத்தா துறைமுகம், இனி சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் கடலோர காவல் படையுடன், இந்திய கடலோர காவல்படை கூட்டு பயிற்சி
- ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான, 'எசிகோ' என்ற ரோந்து கப்பல், ஐந்து நாள் சுற்றுப் பயணமாக, இன்று சென்னை வருகிறது. இன்று முதல், 17ம் தேதி வரை, இரு நாட்டு வீரர்களும், கூட்டு பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
- ஜப்பான் நாட்டின் கடலோர காவல் படையுடன், இந்திய கடலோர காவல்படை, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, அந்நாட்டு கடலோர காவல்படை கப்பல்கள், இந்தியாவுக்கு வருவதும், இந்திய கடலோர காவல்படை கப்பல்கள், ஜப்பானுக்கு செல்வதும் வழக்கம்.
- இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல், 2019ல், ஜப்பான் சென்று, கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது. அதே போல, ஜப்பான் கடலோர காவல்படையின், 'எசிகோ' என்ற ரோந்து கப்பல், சென்னை துறைமுகத்திற்கு, வருகிறது.
- கப்பலை, இந்திய கடலோர காவல்படையின், கிழக்கு பிராந்திய உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதையடுத்து, இன்று முதல், 17ம் தேதி வரை, இருநாட்டு கடலோர காவல் படையினரும் இணைந்து, தேடுதல் மற்றும் மீட்பு, கடற்கொள்ளை பாதுகாப்பு உட்பட, பல்வேறு கூட்டு பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.