Type Here to Get Search Results !

11th JANUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழகத்திலேயே முதன்முறை - ஊராட்சி தலைவர் பதவியில் பழங்குடி இனத்தவர்
  • நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்த பொன்தோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொன்தோஸ் நீலகிரி பகுதியில் வசிக்கும் தோடர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். 
  • தமிழக அரசியலில் தோடர் பழங்குடி நபர் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது உதுவே முதன்முறை என கூறப்படுகிறது. 
சிறந்த கல்வி நிறுவன பட்டியல் ; சென்னை ஐஐடி முதலிடம்
  • இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பட்டியிலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. 
  • அண்ணா பல்கலை (சென்னை) - 7 வது இடம், பாரதியார் பல்கலை (கோவை) - 14 வது இடம், சென்னை பல்கலை - 20 வது இடம், அழகப்பா பல்கலை (காரைக்குடி) - 28 வது இடம், எஸ்.ஆர்.எம் பல்கலை (சென்னை ) - 32 வது இடம் பிடித்துள்ளன.
5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்
  • மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த 150வது துறைமுக ஆண்டு விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் மோடி கலந்து கொண்டு பேசினார் .
  • நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது; 'நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும். மேலும், கோல்கட்டாவில் உள்ள பெல்டவர் ஹவுஸ், பழைய நாணய கட்டடம், விக்டோரியா நினைவகம் உள்ளிட்ட காட்சியகங்கள் நவீனமாக்கப்படும் பணிகள் நிறைவடைந்துள்ளன. 
  • பெல்டவர் ஹவுசினை உலகின் அருங்காட்சியமாக மாற்றுவதற்கு மத்திய அரசு ஒத்துழைக்கும். பிப்லோபி பாரத் என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். 
  • அதில் நேதாஜி, சுபாஷ்சந்திரபோஸ் அரவிந்தோ கோஷ் ராஷ் பிஹாரி போஸ் தேஷ்பந்து, பாகா ஜடின், பினாய், பாடல், தினேஷ் போன்ற ஒவ்வொரு சிறந்த சுதந்திர போராளிகளுக்கு அதில் முக்கியத்துவம் வழங்கப்படும்' இவ்வாறு மோடி பேசினார். 



தேஜஸ் வெற்றிகரமாக தரையிறக்கம்
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர்க்கப்பல், மிக் 27 ரக போர் விமானங்களை உள்ளடக்கியது. 
  • இந்த போர்க்கப்பலில், 30 விமானங்களை நிறுத்தலாம்.இந்நிலையில், சமீபத்தில், கடற்படைக்காக தேஜஸ் போர் விமானம் உருவாக்கப்பட்டது. அதை, கடந்த ஆண்டு கோவாவில் உள்ள சோதனை தளத்தில், வெற்றிகரமாக தரையிறக்கி சோதிக்கப்பட்டது. 
  • தரையிறங்கிய உடனே, விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள, கியர், விமானத்தை தரையில் நகர்ந்து விடாமல், உடனடியாக நிறுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், இந்த புதிய தேஜஸ் போர் விமானம், ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர்க்கப்பலில், நேற்று வெற்றிகரமாக தரையிறக்கி மீண்டும் மேலே பறந்தது. இந்தச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்த, டி.ஆர்.டி.ஓ.
ஓமன் சுல்தான் காபூஸ் மரணம்: அரபு பிராந்தியத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்
  • அரபு நாடுகளிலேயே நீண்ட காலம் மன்னராக இருந்தவரான ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் தனது 79வது வயதில் உயிரிழந்துள்ளார்.
  • ஓமனின் பிரதமர், பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி, பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர், வெளியுறவு அமைச்சர் ஆகிய உட்சபட்ச பதவிகளையும் இவர் தன் வசமே வைத்திருந்தார்.
  • இவரது இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஓமனின் அடுத்த சுல்தானாக இவரது ஒன்று விட்ட சகோதரர் ஹைத்தம் பின் தாரிக் அல் சைத் பதவியேற்றார்.
  • சுமார் 50 ஆண்டுகாலம் ஓமன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் சுல்தான் காபூஸ். 46 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஓமனில் வசிப்பவர்களில், 43% பேர் வெளிநாட்டவர்கள்.
  • தன் 29வது வயதில் பழமைவாத ஆட்சியாளராக இருந்த தனது தந்தை சைத் பின் தைமூரை ஆட்சியில் இருந்து நீக்கி இவர் ஆட்சிக்கு வந்தார்.
  • இவரது தந்தையின் ஆட்சிக் காலத்தில் வானொலிகளில் பாடல் கேட்பது, கண்களுக்கு சன் கிளாஸ் அணிவது போன்றவை தடை செய்யப்பட்டிருந்தன.
  • யாரெல்லாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும், வெளிநாடுகளுக்கு பயணிக்க வேண்டும் போன்றவற்றைக் கூட முடிவு செய்பவராக சுல்தான் சைத் பின் தைமூர் விளங்கினார்.
  • தந்தை தைமூரிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியபின், எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு நாட்டின் ஆட்சிமுறையையே புதுப்பிக்க போவதாக அறிவித்தார்.
  • அந்தக் காலகட்டத்தில் ஓமன் முழுவதும் மூன்றே பள்ளிகளும், 10 கிலோமீட்டர் மட்டுமே சாலை வசதி இருந்தது.
  • மார்க்சிய சார்புடைய நாடாக இருந்த ஏமன் மக்கள் ஜனநாயக குடியரசின் ஆதரவைப் பெற்ற தோஃபார் இன மக்களின் ஆயுதப் போராட்டத்தை பிரிட்டிஷ் சிறப்புப் படைகளின் உதவியுடன் ஒடுக்கினார்.
  • 'அரபு வசந்தம்' என்று பரவலாக அறியப்பட்ட எழுச்சி, அரபு நாடுகளில் 2011இல் உண்டானபோது ஓமனில் பெரிய அளவில் போராட்டங்கள் நடக்கவில்லை.ஓமன் எண்ணெய் வள
  • ம் மூலம் காபூஸ் பொருளாதாரத்தை மேம்படுத்தினார்எனினும், ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட முற்பட்டனர்.
  • தொடக்கத்தில் அமைதியாக இருந்த பாதுகாப்புப் படைகள், கண்ணீர் புகை, துப்பாக்கிச் சூடு ஆகியவை மூலம் போராட்டத்தை அடக்கியது. இதில் இருவர் கொல்லப்பட்டனர்.
  • அனுமதியின்றி கூட்டம் கூடியது, சுல்தானை அவமதித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது.



தேசிய த்ரோபால்: தமிழ்நாடு 3வது இடம்
  • மேற்கு வங்க மாநிலம் பர்த்தமானில், அகில இந்திய அளவிலான 42வது சீனியர் த்ரோபால் போட்டி நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 22 மாநிலங்களை சேர்ந்த அணிகளும், பெண்கள் பிரிவில் 18 மாநிலங்களை சேர்ந்த அணிகளும் பங்கேற்றன.
  • தமிழ்நாடு ஆண்கள் அணி லீக் சுற்றில் ராஜஸ் தான், மத்திய பிரதேசம், கேரளா, ஆந்திரா ஆகிய அணிகளை 2-0 என நேர் செட்களில் வீழ்த்தியது. தமிழ்நாடு அதன் பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. 
  • காலிறுதியில் கர்நாடகாவை 2-1 என்ற செட்களில் போராடி வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் டெல்லி அணியிடம் 0-2 என்ற செட்களில் தோல்வியை தழுவியதை அடுத்து 3, 4வது இடத்துக்கான போட்டியில் தமிழ்நாடு, ஒடிஷா அணிகள் மோதின. 
  • அதில் தமிழ்நாடு 2-1 என்ற செட்களில் வென்று 3வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது. பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களை தமிழ்நாடு த்ரோபால் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.
டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் : பும்ரா சாதனை
  • இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. 
  • இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இலங்கை வீரர் குணதிலகாவின் விக்கெட்டை சாய்த்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இது அவரது 53-வது விக்கெட்டாகும். 
  • இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமையை பெற்றார்.
  • இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின் ஆகியோர் தலா 52 விக்கெட்டுகளுடன் அடுத்த இடங்களில் உள்ளனர்.
கேலோ இந்தியா தொடரில் முதல் தங்கம் வென்ற திரிபுரா வீராங்கனை
  • இந்தியாவின் விளையாட்டுத் திறமையாளர்களைக் கண்டறியும் வகையில் 'கேலோ இந்தியா யூத் கேம்ஸ்' என்ற பெயரில் விளையாட்டுத் திருவிழா நடத்தப்படுகிறது. அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் தற்போது 3வது சீசன் நடைபெற்று வருகிறது.
  • இதில் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஜிம்னாஸ்டிக் ஆல் ரவுண்ட் பிரிவில் கலந்துகொண்ட திரிபுராவின் பிரியங்கா தாஸ்குப்தா 42.06 புள்ளிகள் பெற்று, இந்த விளையாட்டுத் தொடரின் முதல் தங்கத்தை வென்ற வீராங்கணை என்ற பெயரைப் பெற்றார்.
  • ஆண்கள் பிரிவில் முதல் தங்கத்தை வென்றவர் என்ற பெருமை உத்திரப்பிரதேசத்தின் ஜடின் குமாருக்கு கிடைத்தது.
  • பெண்களுக்கான 'ரிதமிக்' பிரிவில் மராட்டியத்தின் அன்குஷிற்கு தங்கமும், ஸ்ரேயாவுக்கு வெள்ளியும் கிடைத்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel