Type Here to Get Search Results !

10th JANUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம் நடைமுறைக்கு வந்தது
  • பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் சட்டம் (Citizenship Amendment Act) நாட்டில் ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்தது என்று அரசிதழ் அறிவிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் (Union Home Ministry) தெரிவித்துள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2019 (2019 இன் 47) இன் பிரிவு 1 இன் துணைப்பிரிவு (2) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில், இதன் மூலம் 2020 ஜனவரி 10 ஆம் தேதியை மத்திய அரசு நியமிக்கிறது. அன்று முதல் அந்தச் சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும்' என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு டிசம்பர் 11 அன்று குடியுரிமை திருத்தம் சட்டம் பாராளுமன்றத்தால் (Parliament) நிறைவேற்றப்பட்டது.
கட்டுப்பாடுகள் 7 நாட்களுக்குள் மறு ஆய்வு: ஜம்மு -- காஷ்மீர் நிர்வாகத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
  • ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 5ம் தேதி ரத்து செய்தது. அதற்கு முன், மாநிலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க, முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உட்பட, 400க்கும் அதிகமான அரசியல் மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். 
  • மேலும், ஜம்மு - காஷ்மீர் முழுவதும், மொபைல் போன்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வசதி, இணைய வசதி மற்றும் தொலை பேசி வசதி முடக்கப்பட்டன. பல்வேறு இடங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. 
  • இரண்டும், கடந்த ஆண்டு அக்டோபர், 31ல் நடைமுறைக்கு வந்தன. ஜம்மு - காஷ்மீரில், அமைதி திரும்ப துவங்கியதையடுத்து, யூனியன் பிரதேச நிர்வாகம், பல்வேறு வசதிகளை படிப்படியாக அளித்து வந்தது.
  • இதற்கிடையில், ஜம்மு - காஷ்மீரில் விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக, காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
  • இந்த வழக்கில், நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இணையதளம் என்பது, கருத்துரிமையின் ஒரு பகுதியே.
  • இணையதளம் வழியாக கருத்து சுதந்திரம் என்பது, அரசியல் சாசன பிரிவு, 19ன் கீழ் வருகிறது. தனிநபர் சுதந்திரத்தையும், தனிநபர் பாதுகாப்பையும் காக்க வேண்டியது, நீதிமன்றம் மற்றும் அரசின் கடமை. அசாதாரண சூழ்நிலையில் இணையத்தை முடக்கினாலும், காலவரையறை இன்றி முடக்குவதை ஏற்க முடியாது. அனைத்து கட்டுப்பாடுகளையும் மறு பரீசீலனை செய்ய, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு உத்தரவிடப்படுகிறது.



உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்
  • உலகின் அதிக செல்வாக்குடைய பாஸ்போர்ட்டுகளின் பட்டியலை வெளியிடும் அமைப்பு ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ். இந்த அமைப்பு, தற்போது 2020-ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. 
  • இந்தப் பட்டியலில், ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. இதன்மூலம் 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இரண்டாமிடத்தை சிங்கப்பூர் பாஸ்போர்ட் பிடித்திருக்கிறது. 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்றுவரும் வாய்ப்பை இது வழங்குகிறது.
  • 4-வது இடம்- பின்லாந்து மற்றும் இத்தாலி. 5-வது இடம்- ஸ்பெயின், லக்சம்பர்க் மற்றும் டென்மார்க். 6-வது இடம்- ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ்
  • 7-வது இடம்- சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, அயர்லாந்து, ஆஸ்திரியா, 8-வது இடம்- அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, கிரீஸ், பெல்ஜியம், 9-வது இடம்- நியூசிலாந்து, மல்டா, கிரீஸ் ரிபப்ளிக், கனடா, ஆஸ்திரேலியா, 10-வது இடம்- ஸ்லோவாக்கியா, லித்தானியா மற்றும் ஹங்கேரி.
  • இந்த 'சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள்' பட்டியலில் கடந்த 2019-ம் ஆண்டில், 82-வது இடத்தில் இருந்த இந்தியா, 84-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய பாஸ்போர்ட், 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது.
  • மோசமான பாஸ்போர்ட்டுகள்' பட்டியலில், வடகொரியா, சூடான், நேபாளம் , லிபியா, ஏமன், சோமாலியா, பாகிஸ்தான், சிரியா, ஈராக், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இருக்கின்றன.
கோப்பை வென்றது இந்தியா; இலங்கை அணி தோல்வி
  • இலங்கைக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20' போட்டியில் அசத்திய இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை கைப்பற்றி கோப்பை வசப்படுத்தியது.
  • இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ஷர்துல் தாகூருக்கும், தொடர் நாயகன் விருது, நவ்தீப் சைனிக்கு வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel