Type Here to Get Search Results !

TNPSC SHOUTERS - CURRENT AFFAIRS FEBRUARY 2018 TAMIL PDF


S.NO
CURRENT AFFAIRS
DAY & MONTH
DOWNLOAD LINK
1.
1st FEBRUARY 2018
2.
2nd FEBRUARY 2018
3.
3rd FEBRUARY 2018
4.
4th FEBRUARY 2018
5.
5th FEBRUARY 2018
6.
6th FEBRUARY 2018
7.
7th FEBRUARY 2018
8.
8th FEBRUARY 2018
9.
9th FEBRUARY 2018
10.
10th FEBRUARY 2018
11.
11th FEBRUARY 2018
12.
12th FEBRUARY 2018
13.
13th FEBRUARY 2018
14.
14th FEBRUARY 2018
15.
15th FEBRUARY 2018
16.
16th FEBRUARY 2018
17.
17th FEBRUARY 2018
18.
18th FEBRUARY 2018
19.
19th FEBRUARY 2018
20.
20th FEBRUARY 2018
21.
21st FEBRUARY 2018
22.
22nd FEBRUARY 2018
23.
23rd FEBRUARY 2018
24.
24th FEBRUARY 2018
25.
25th FEBRUARY 2018
26.
26th FEBRUARY 2018
27.
27th FEBRUARY 2018
28.
28th FEBRUARY 2018
மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தக பாதை: ஆஷ்காபாத் ஒப்பந்தத்தில் இணைந்தது இந்தியா
  • மத்திய ஆசியா மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளுடனான சர்வதேச போக்குவரத்து மற்றும் வரத்தகம் மேற்கொள்வதற்கான ஆஷ்காபாத் ஒப்பந்தத்தில் இந்தியாவும் இணைந்தது.ஆஷ்காபாத் ஒப்பந்தம் ஈரான், ஓமன், துர்மெனீஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து சர்வதேச வர்த்தகத்தினை மேம்படுத்த 2011-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன.
  • இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்து கொள்ள வலியுறுத்தியது. இதன்படி இந்தியாவையும் இணைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆஷ்காபாத் ஒப்பந்தத்தில் இந்தியாவையை சேர்த்துக்கொள்வதற்கான கோரிக்கை யை நான்கு நாடுகளும் ஏற்றுக்கொண்டன.
  • பிப்.3-ம் தேதி முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் மத்திய ஆசியா மற்றும் பாரசீகவளைகுடா நாடுகளுக்கிடையேயான சரக்கு போக்குவரத்து வர்த்தகம் மற்றும் முதலீடு மூலம் வர்த்தக பாதையை இந்தியா ஏற்படுத்தும். 
என்.எஸ்.ஜி.புதிய இயக்குனர் ஜெனரல் பொறுப்பேற்பு
  • தேசிய பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரலாக சுதீப் லக்தாகியா பொறுப்பேற்றார். என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரலாக இருந்த எஸ்.பி.சிங் நேற்று ஒய்வு பெற்றார். இப்பதவிக்கு சுதீப் லக்தாகியா பெயரை பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை கடந்த மாதம் 19-ம் தேதி ஒப்புதல் அளித்தது. 
  • இதன்படி சுதீப் லக்தாகியா பொறுப்பேற்றார். இவர் 1984-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஐ.பி.எஸ். கேடராக தேர்வு பெற்றார். சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்பு டி.ஜி. உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது. 2019-ம் ஆண்டு ஜூலை வரை இப்பதவியில் வகிப்பார்.
சரக்குகளை எடுத்து செல்ல இ-வே பில் தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் அமல்
  • சரக்குகளை எடுத்து செல்லும் போது இ-வே பில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம், ஆந்திரா, பீகார், அரியானா, கேரளா உட்பட 13 மாநிலங்களில் நேற்று முதல் இ-வே பில் நடைமுறை அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
  •  இதை தொடர்ந்து, வணிக வரித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன. இதற்கு பதிலாக, சரக்குகளை அனுப்புவோர் அதுகுறித்த இ-வே பில் விவரங்களை இணையதள ரசீதில் குறிப்பிட்டு எடுத்து செல்லும் முறையை கொண்டு வர திட்டமிடப்பட்டது. 
20 ஆயிரம் தடுப்பணை : ரூ.250 கோடி ஒதுக்கீடு
  • தமிழகத்தில், 20 ஆயிரம் தடுப்பணைகள் கட்ட, 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் தண்ணீரை சேமித்து, பாசனத்திற்கு பயன்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வாய்க்கால், ஓடை மற்றும் கால்வாய்களின் குறுக்கே, நான்கு ஆண்டுகளில், இரண்டு லட்சம் தடுப்பணைகள் கட்டப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • அதில், 'நடப்பாண்டில், 20 ஆயிரம் தடுப்பணைகள், 250 கோடி ரூபாயில் கட்டப்படும்' என, உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி, சட்டசபையில் தெரிவித்தார். அதன்படி, 250.36 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல், 9,300 மழைநீர் சேகரிப்பு தொட்டி, 31.62 கோடி ரூபாயில் அமைக்கவும், மகளிர் குழுவினர், தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை, கண்காட்சி நடத்தி விற்பனை செய்ய, தலா, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டடங்கள், 1,000 கட்டவும், அரசு அனுமதி அளித்துள்ளது.
  • தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறு, குறு விவசாயிகள், தங்களின் விவசாய நிலங்களில், வீட்டுக்கழிவு மற்றும் விவசாயக் கழிவுகளை மக்கச் செய்து, உயிரி உரமாக மாற்றி பயன்படுத்த, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு, 75 கோடி ரூபாய் செலவில், அனைத்து மாவட்டங்களில், உரக்குழிகள் அமைக்கவும், அனுமதி அளித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடி
  • விவசாயிகளின் நலனுக்காக பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, விவசாயக் கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
  • இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகம். மேலும், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, உற்பத்தி செலவை விட 50 சதவீதம் அதிகம் நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விவசாயிகள் நலனை மத்திய அரசு குறிக்கோளாகக் கொண்டு திட்டங்கள் இயற்றி வருகிறது. விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளயும் அரசு மேற்கொள்ளும். வரும் 2022ம் ஆண்டில் விவசாயிகள் தனி நபர் வருமானம் இரட்டிப்பாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இருப்பதை அமல்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 
  • விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய கடன் 10% சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதன்படி இந்த நிதியாண்டுக்கான இலக்கு ரூ.11 லட்சம் கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 201415ம் ஆண்டில் ரூ.8.5 லட்சம் கோடி என இருந்ததை படிப்படியாக அதிகரித்து தற்போது ரூ.11 லட்சம் கோடி இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
  • மீன் வளப்பு மற்றும் மீன்வளக் கலை மற்றும் கால்நடைத் துறை உள்கட்டமைப்பை அதிகரிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இஎன்ஏஎம் எனப்படும் தேசிய வேளாண் சந்தைகள் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 558 சந்தைகளில் 470 சந்தைகளை மின்னணு முறையில் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவையும் 2018 மார்ச் மாதத்தில் திட்டத்தில் இணைக்கப்படும். 
  • உணவு பதப்படுத்தும் அமைச்சகத்திற்கு செய்யப்பட்டுள்ள ரூ.1,400 கோடி நடப்பு நிதியாண்டில் ஒதுக்கியதைக் காட்டிலும் இரு மடங்கு ஆகும். 
நீண்டகால அடிப்படையிலான பங்குசந்தை முதலீடு மூலமான லாபத்திற்கு 10% வரி
  • பங்குசந்தை சார்ந்த முதலீடுகள் மூலம் பெறப்படும் லாபம் ரூ.1 லட்சத்திற்கு மேல் இருப்பின் அவற்றிற்கு 10 சதவீதம் வரி விதிக்கும் புதிய நடைமுறையை இந்த பட்ஜெட்டில் ஜெட்லி அறிவித்துள்ளார். 
  • பட்டியலிடப்பட்ட பங்குகள் மூலம் கிடைக்கப்பெறும் நீண்டகால முதலீடுகளுக்கான லாபத்தில் வரி விதிப்பில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்படுகிறது. 
  • தற்போதுள்ள நடைமுறையில் சிறிய மாற்றம் செய்து பங்குசந்தை சார்ந்த நீண்டகால முதலீடுகள் மூலம் பெறப்படும் லாபம் ₹1 லட்சத்திற்கு மேல் இருப்பின் அவற்றிற்கு 10 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 
  • அதேசமயத்தில் பங்குகள் விற்பனையை ஓராண்டுக்கு பின் விற்பனை செய்யும்பட்சத்தில் வரிவிலக்கும் பெறலாம். இருப்பினும் ஜனவரி 31, 2018ம் ஆண்டு வரையிலான பங்குகள் விற்பனைக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என கூறினார். 
கல்வித்துறைக்கு 85,010 கோடி 24 புதிய மருத்துவ கல்லூரிகள்
  • மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 85,010 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அருண்ஜெட்லி அறிவித்தார். இதில் 35,010 கோடி உயர்கல்விக்கும், பள்ளிக்கல்விக்கு 50,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 
  • இது தவிர 1000 பிடெக் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பிரதமர் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சில் மாணவர்கள் பிஎச்டி கல்வி பயில வாய்ப்பு உருவாக்கப்படும். 
  • இது தவிர டாக்டர்கள் மற்றும் நோயாளிகள் இடையேயான விகிதத்தை குறைக்கும் வகையில் நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவகல்லூரிகள் அமைக்கப்படுகிறது. 
  • 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைப்பதே மத்திய அரசின் நோக்கம் என அருண்ஜெட்லி தெரிவித்தார்.
கல்வி செஸ் வரி 4 சதவீதமாக உயர்வு
  • வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக வருமான வரி செலுத்துவோரிடம் 3 சதவீத செஸ் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த செஸ் வரி தற்போது 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
  • இந்த புதிய செஸ் வரிக்கு 'சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரி' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி வருவாயில் 11,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், செஸ் வரி 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது வருமான வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும்.
மீன்வளம், கால்நடை பராமரிப்பு கட்டமைப்புக்கு 10 ஆயிரம் கோடி
  • உணவுப் பதப்படுத்தல் அமைச்சத்துக்கான ஒதுக்கீடு ரூ.715 கோடியாக இருந்து ரூ.1400 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உணவுப் பதப்படுத்தல் துறையில் முதலீட்டை ஊக்கப்படுத்துவதற்கு பிரதமரின் உணவுப் பதப்படுத்துதல் திட்டம் நமக்கு வழிகாட்டும் திட்டமாக உள்ளது. 
  • இந்தத் துறையின் மூலம் அனைத்து 42 பெரிய உணவுப் பூங்காக்களிலும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரிசோதனை வசதிகள் உருவாக்கப்படும். மீன்வளத் துறைக்கு மீன்வள மற்றும் நீர்வாழ் உயின கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் , கால்நடை பராமரிப்புத் துறையில் கட்டமைப்புத் தேவைகளுக்கு நிதி வசதி அளிக்க கால்நடை பராமரிப்பு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஆகியவை உருவாக்கப்படும்.
ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி
  • ரயில்வே திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • ரயில் தண்டவாள பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
  • 4000 கி.மீ., தூரத்திற்கு ரயில்வே பாதைகள் மின்பாதையாக மாற்றப்படும்.
  • ரயில்வே பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 
  • 4 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். 
  • மும்பை புறநகர் ரயில் இணைப்பு திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. 
  • 25 ஆயிரம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படும்.
  • 3600 கி.மீ., தூரத்திற்கு ரயில் பாதைகள் சீரமைக்கப்படும்.
  • அனைத்து ரயில் நிலையங்களில் வைபை அமைக்கப்படும்.
  • 4,257 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்படும். 
  • 18 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும்.
பெரும் நிறுவனங்களுக்கான வரி 25 சதவிகிதமாகக் குறைப்பு!
  • இன்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வருமானமுள்ள பெரும் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி 25 சதவிகிதமாக நீடிக்கிறது. முந்தைய பட்ஜெட்டிலும் இதே அளவு வரியே விதிக்கப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டிலும் இது தொடரும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். 
  • "ஆண்டுக்கு ரூ.250 கோடிக்குள் வருமானம் பெற்று அதற்கான வரிசெலுத்தும் 7 லட்சம் நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ளன. அவற்றில் 99 சதவிகித நிறுவனங்கள் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாகும்.
  •  வரி குறைப்பு இந்நிறுவனங்களுக்கு பயனளிக்கும். மீதமுள்ள 7,000 பெரு நிறுவனங்களும் 30 சதவிகித வரி செலுத்த வேண்டும். பெரு நிறுவன வரி குறைக்கப்பட்டு இருப்பதால் அரசுக்கு கூடுதலாக ரூ.7,000 கோடி செலவாகும்" என்று அருண் ஜெட்லி தெரிவித்தார்.
இந்திய குத்துச்சண்டை போட்டி : 69 கிலோ பிரிவில் தினேஷ் தாகர் வெள்ளி பதக்கம்
  • இந்திய குத்துச்சண்டை போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ் இன்டோர் ஸ்டேடியமில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 69 கிலோ பிரிவில் தினேஷ் தாகர் வெள்ளி பதக்கம் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel