Type Here to Get Search Results !

9th JANUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

300 ஆண்டுகளுக்கு முந்தைய நீர் மேலாண்மை சொல்லும் சிவகங்கை கலுங்குமடை கல்வெட்டு 
  • சிவகங்கை மாவட்ட தொல்நடை அமைப்பு பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு ஆராய்சி செய்து வருகின்றனர். தற்போது கோவானூரில் அருகே 300 ஆண்டு பழைமையான கலுங்குமடை கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
  • கலுங்குமடையில் 5 கல்வெட்டுகளைக் காண முடிகிறது. இதில் மூன்று கல்வெட்டுகள்தான் நல்ல நிலையில் உள்ளன. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால காணியாட்சி மற்றும் வரி செலுத்துவது தொடர்பான செய்தியை உள்ளடக்கிய கல்வெட்டு தலைகீழாகக் காணப்படுகிறது. 
  • இது கோவானூரில் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பெற்று இடிந்துபோன சிவன் கோயிலில் இருந்து கற்கள் எடுத்து வந்து இந்தக் கலுங்கு மடை கட்டப்பெற்றிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. ``வீரபத்திர பிள்ளை வள மணியத்தில் காத்து தனக்கு காணியாட்சியின் படியால் இந்தக் கலுங்கு கட்டி வச்சது" என எழுதப்பெற்றுள்ளது.
துவங்கியது 43-ஆவது சென்னை புத்தகக் காட்சி
  • தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் சென்னையில் 43 -ஆவது புத்தகக் காட்சியை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மாலை தொடக்கி வைத்தார்.
  • இந்தப் புத்தகக் காட்சியை முன்னிட்டு 750- க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கோடிக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன.
  • கலை, அறிவியல், வரலாறு, இலக்கியம் மற்றும் கல்வி சம்பந்தப்பட்டவை, சமையல் குறிப்பு என அனைத்துத்துறை சாா்ந்த புத்தகங்களும் தள்ளுபடி சலுகை விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



புதிய திட்டங்களுக்கு ரூ.6,580.15 கோடி நிதி: பேரவையில் நிதி மசோதா நிறைவேறியது
  • பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் வழங்கியது உள்ளிட்ட புதிய திட்டங்களுக்குத் தேவையான நிதி ரூ.6,580.15 கோடிக்கு சட்டப் பேரவை ஒப்புதல் அளித்தது. இதற்கான நிதி மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
  • பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கத் தொகையும் வழங்க அரசு ரூ.2,363.13 கோடியை அனுமதித்துள்ளது. 
  • சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித் தடத் திட்டத்தின் கீழ், இரண்டு மின் தொடரமைப்புத் திட்டங்களை நிறுவ அரசு ரூ.4,332.57 கோடிக்கு நிா்வாக அனுமதி அளித்துள்ளது. இந்தத் தொகை, ஆசிய வளா்ச்சி வங்கியின் கடனுதவித் தொகை மற்றும் தமிழக அரசின் பங்கு மூலதன உதவியான ஆயிரம் கோடியையும் உள்ளடக்கியது. 
  • நிகழ் நிதியாண்டில் இந்தத் திட்டத்துக்கென மொத்தம் ரூ.108 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • புதிய மருத்துவக் கல்லூரிகள்: திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி (உதகை), திருப்பூா், விருதுநகா், நாமக்கல், திருவள்ளூா், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்காக ரூ.3,266.47 கோடிக்கு நிா்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.90 கோடி நிகழ் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் கிராமப்புறங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், ஊரணிகளைப் புதுப்பிக்கும் பணிக்காக நிகழாண்டில் ரூ.500 கோடி அனுமதித்துள்ளது. பத்து கூட்டுறவு மற்றும் இரண்டு பொதுத்துறை சா்க்கரை ஆலைகளுக்கு ரூ.143.73 கோடி வழிவகை முன்பணமாக அரசு அனுமதித்துள்ளது. 
  • மேலும், நேஷனல், அமராவதி, என்.பி.கே.ஆா்.ஆா். கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் தங்களது பணியாளா்களுக்கு சட்டப்படியான நிலுவைத் தொகைகளை அளிக்க ரூ.28.74 கோடியை முன்பணமாக அரசு அனுமதித்துள்ளது. மொத்தமாக ரூ.175.02 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
  • தமிழகத்தில் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், கடலூா் மாவட்டங்களில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கக் கூடிய கரையோரப் பகுதிகளில் நீண்டகால வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அரசு ரூ.290.78 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக இப்போது உடனடியாக ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
  • நிகழாண்டில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழிவகை முன்பணமாக ரூ.206.53 கோடியை அரசு அனுமதித்துள்ளது. கோயம்புத்தூா் விமான நிலைய ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட நில எடுப்புக்கான இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளா்களுக்கு வழங்க ரூ.189.30 கோடியை அரசு அனுமதித்துள்ளது. 
  • துணை மதிப்பீடுகளாக மொத்தம் ரூ.6,580.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.3,952.48 கோடி வருவாய்க் கணக்கிலும், ரூ.2,627.67 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிப்பு உள்பட 15 மசோதாக்கள் நிறைவேற்றம்
  • நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நிா்வகிக்கும் தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை வரும் ஜூன் வரை நீட்டிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த சட்ட மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தாா். மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை நிா்வகிக்கும் தனி அதிகாரிகளின் காலத்தை நீட்டிக்க தனித்தனியாக சட்ட மசோதாக்களைத் தாக்கல் செய்தாா் அமைச்சா் வேலுமணி.
  • 15 மசோதாக்கள்: முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்கங்களைச் சோந்த தலைவா்கள், துணைத் தலைவா்களைத் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்தல், மீன் வள பல்கலைக்கழகத்தில் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பணியை அரசே மேற்கொள்வது-துணைவேந்தா் நியமன தெரிவுக் குழுவில் அரசு பிரதிநிதி நியமனம், அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழக பதிவாளா் நியமனத்தில் தகுதியை மாற்றியமைப்பது, பழங்கால சட்டங்களை நீக்கம் செய்வது, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பு-விசாரணை பணிகளை அரசே மேற்கொள்வது, இசை மற்றும் கவின்கலை கல்லூரிகளால் நடத்தப்படும் படிப்புகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு அவற்றையும் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் வகையில் திருத்தம் செய்வது உள்ளிட்ட 15 சட்ட மசோதாக்கள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறின.
எள் சாகுபடியில் அதிக மகசூல் பிரதமரிடம் விருது பெற்ற பெண்
  • எள் சாகுபடியில் அதிக மகசூல் ஈட்டிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பாப்பாத்தி 61 பிரதமரிடம் விருது பெற்றார்.நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியம் சீராப்பள்ளி ஊராட்சி குஞ்சாம்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி. ஜெயா ரமேஷ் என இரு பிள்ளைகள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் பொன்னுசாமி உயிரிழந்தார்.
  • இதையடுத்து கணவர் மேற்கொண்ட விவசாயத்தை பாப்பாத்தி தொடர்ந்தார். 2017 - 18ல் 1 ஹெக்டேர் நிலத்தில் இயற்கை முறையில் எள் சாகுபடி செய்தார். வேளாண் துறை ஆலோசனைப்படி எண்ணெய் வித்து பயிரான எள் சாகுபடி மேற்கொண்டதில் 1210 கிலோ அறுவடை செய்தார். 
  • அதிகளவில் மகசூல் எடுத்த விபரம் அறிந்த சக விவசாயிகள் ஆச்சரியப்பட்டனர்.இது தொடர்பாக வேளாண் துறையினர் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். தமிழக அரசு மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை செய்தது. 
  • அதையடுத்து கர்நாடக மாநிலம் தும்கூரில் 2ம் தேதி நடந்த விழாவில் விவசாயி பாப்பாத்திக்கு 'கிரிஷி கர்மான்' என்ற முன்னோடி விவசாயி விருது மற்றும் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆகிவற்றை பிரதமர் மோடி வழங்கினார்.



சென்னை- அந்தமான் இடையே ரூ.1, 224 கோடியில் கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பிவடம் பதிக்கும் திட்டம்
  • தொலைதொடா்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சென்னை- அந்தமான் தீவுகளுக்கு இடையே ரூ. 1, 224 கோடியில் சுமாா் 2,250 கி.மீ. தொலைவுக்கு கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிப்பதற்கான திட்டப் பணியை மத்திய தொலைத் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் சென்னையில்  தொடக்கி வைத்தாா்.
  • அந்தமான்- நிகோபா் தீவுகளுக்கு இணைய தள வசதியை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து போா்ட் பிளேயா் வழியாக கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கப்பட உள்ளது. 
  • பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.1,224 கோடி செலவிலான இத்திட்டத்தின்படி, அந்தமான் மற்றும் நிகோபா் தீவுகளில் உள்ள போா்ட் பிளேயா், லிட்டில் அந்தமான், காா் நிகோபா், ஹேவ்லாக் உள்ளிட்ட 7 தீவுகள் கண்ணாடி இழை கம்பி வடங்களால் இணைக்கப்பட உள்ளன. 
  • இதில், 2,250 கிலோமீட்டா் தொலைவுக்கு கடலுக்கு அடியில் கம்பி வடம் பதிக்கும் பணி வரும் மே மாதத்துக்குள் நிறைவடையும். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது அந்தமானில் தற்போது இருப்பதை விட சுமாா் நூறு மடங்கு அளவிற்கு திறனுடன் கூடிய தொலைதொடா்பு மற்றும் அதிவேக இணையதள வசதிகள் அதிகரிக்கும்.
  • சென்னை, அந்தமான் இடையே தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தைத் தொடா்ந்து, கேரள மாநிலம் கொச்சியிலிருந்து லட்சத்தீவுகளுக்கு இடையே சுமாா் ரூ.1,000 கோடி செலவில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். 
16 நாட்டு துாதர்கள் காஷ்மீரில் ஆய்வு
  • மத்திய அரசு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு, 370ஐ நீக்கி, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, கடந்த ஆண்டு, அதிரடியாக அறிவித்தது. இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
  • பாதுகாப்பு நடவடிக்கையாக, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், பிரிவினைவாத தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். வன்முறை அரங்கேறாமல் இருக்க, மாநிலம் முழுவதும், ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
  • தனி விமானம்இந்நிலையில், அமெரிக்கா, வங்கதேசம், வியட்நாம், நார்வே, மாலத்தீவு, தென்கொரியா, மொராக்கோ, நைஜீரியா உள்ளிட்ட,16 நாடுகளைச் சேர்ந்த துாதர்கள், ஜம்மு -காஷ்மீருக்கு நேற்று வந்தனர்.
  • சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், இங்குள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய, அவர்கள் தனி விமானம் மூலம் வந்தனர். அவர்களை, யூனியன் பிரதேச மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
  • அங்கிருந்து, ராணுவ முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர்களுக்கு, ஜம்மு - காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்தும், நிலைமையை சீர்செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், விளக்கப்பட்டது.
ஐரோப்பாவில் இருந்து வெளியேறும் பிரிட்டன் ஜனவரி 31ம் தேதி விடைபெறும்
  • ஐரோப்பா யூனியனில் இருந்து பிரிட்டன் வரும் ஜனவரி 31ம் தேதி வெளியேறுகிறது. ஐரோப்பா யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெரும்பான்மை இருக்கிறது. பொதுத்தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி அபராமாக வென்றது. இந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரிக்சிட் வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வென்றுள்ளார்.
  • ஐரோப்பா யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் என்ற மசோதாவிற்கு ஆதரவாக 330 பேர் வாக்களித்தனர். ஏதிராக 231 பேர் வாக்களித்தனர். இந்த மசோதா இனி ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் எனப்படும் கீழவையில் நிறைவேற்றப்படும். அங்கும் போரிஸ் ஜான்சனுக்கு பெரும்பான்மை உள்ளது. இதனால் இந்த மசோதா வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது.
  • இதனால் வரும் ஜனவரி 31ம் தேதி ஐரோப்பா யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகி உள்ளது. அந்த நாட்டின் பல வருட கோரிக்கை இதனால் நிறைவேறி உள்ளது. இதனால் அந்நாட்டில் நிறைய பொருளாதார மாற்றங்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel