சிவகங்கை அருகே 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
- சிவகங்கை அருகே கோவானூரில் கி.பி.17-ஆம் நூற்றாண்டைச் சோந்த கலுங்குமடை கல்வெட்டுகள் தொல்லியல் ஆய்வாளா்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இந்த கழுங்குடை கட்டுமானத்தில் 5 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒரு கல்வெட்டைத் தவிர மற்றவைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக தலைகீழாகக் காணப்படுகின்றன.
- இவை மராமத்துப் பணியின் போது அவ்வாறாக மாற்றப்பட்டிருக்கலாம். அதில் மூன்று கல்வெட்டுகள் நல்ல நிலையிலும், இரண்டு கல்வெட்டுகள் முற்றிலும் சிதைந்த நிலையிலும் காணப்படுகின்றன.
- வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டு துண்டுக் கல்வெட்டை இணைத்துப் படித்த போது சகாப்தம் 1641அதாவது பொது ஆண்டு 1719-க்கு மேல் செல்லா நின்ற விகாரி ஆண்டு தை மாதம் 2ஆம் நாள் முத்தப்பன் சோவைக்காரனவா்கள் கட்டி வைத்தது எனவும், வீரபத்திர பிள்ளை வள மணியத்தில்(மணியம் என்ற சொல்லுக்கு நிா்வகித்தல் எனக் கூறப்படுகிறது) தனக்கு காணியாட்சியின் படியினால் இந்த கலுங்கு கட்டி வைத்தது என எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 6% க்கு பதில் 5% ஆக குறையும்: உலக வங்கி கணிப்பு
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 6% க்கு பதில் 5% ஆக குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 6% ஆக இருக்கும் என கணிதத்தை 5% ஆக குறைத்து கணித்து உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
- ஏற்கனவே மத்திய புள்ளியியல் அலுவலகமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருக்கும் என கூறியிருந்தது.
உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் டிச.2021ல் முடிக்க இலக்கு
- காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.1110 கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்த பாலம் பாரீசில் உள்ள ஈபிள் டவரை விடவும் உயரமானது ( ஈபிள் டவரின் உயரம் 324 மீட்டர்களாகும்.) 1.3 கி.மீ., நீளம் கொண்ட இந்த பாலத்தின்உயரம் 359 மீட்டர் ஆகும்.
- இது குறித்து கொங்கன் ரயில்வே நிர்வாகம் கூறியது, சீனாவில் 275 மீ. உயரம் கொண்ட ஷிபாய் ரயில்வே பாலமே உலகின் மிக உயரமான ரயில்வே பாலமாககருதப்படுகிறது.
- தற்போது காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலப்பணிகள் 2021-ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்திய ரயில்வே வரலாற்றில் இந்த பாலம் மிகப்பெரிய சாதனையாக திகழும் என்றார்.
பொது துறை பங்கு விற்பனை அமைச்சரவை குழு ஒப்புதல்
- பொதுத் துறையைச் சேர்ந்த, ஆறு நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. டில்லியில், பிரதமர் மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
- கூட்டத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, நீலாச்சல் இஸ்பட் நிகம் உருக்கு நிறுவனத்தின் விற்பனைக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிறுவனத்தில், எம்.எம்.டி.சி., - ஓ.எம்.சி., - ஐ.பி.ஐ.சி.ஓ.எல்., - என்.எம்.டி.சி., மெகான் மற்றும் பி.எச்.இ.எல்., ஆகிய ஆறு நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க பங்கு மூலதனத்தை கொண்டுள்ளன.
- பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு அனுமதி அளித்ததையடுத்து, இந்த ஆறு நிறுவனங்களும், நீலாச்சல் இஸ்பட் நிகம் நிறுவன பங்குகளை விற்பனை செய்யும்.
- மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், தேசிய போக்குவரத்து கொள்கை மற்றும் சரக்கு போக்குவரத்து திட்டங்களை உருவாக்க, புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான விதிமுறைகளை, அமைச்சரவைக் குழு பார்வையிட்டது.
- குழாய் மூலம் எரிவாயுஅசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், 1,656 கி.மீ., துாரம், குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு தரவும், வாகனங்களுக்கு, இயற்கை எரிவாயு சப்ளை செய்யவும், 5,559 கோடி ரூபாய் ஒதுக்க, ஒப்புதல் தரப்பட்டது.
- குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள, ஆயுர்வேத போதனை மற்றும் ஆய்வு மையத்திற்கு, 'தேசத்தின் முக்கிய மையம்' என்ற அந்தஸ்து வழங்க, கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
- கடந்த, 2018ல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் இந்தியா வந்தபோது, இரு நாடுகள் இடையே, மாணவர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், திறன் வல்லுனர்களை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த திட்டத்திற்கும், அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- பில் அண்டு மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன், பிரசவ கால சிசு இறப்பு விகிதத்தை குறைத்து, கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்குவது உள்ளிட்ட ஆரோக்கிய பராமரிப்பு திட்டத்திற்கும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1 லட்சம் கோடி பிரீமியம் வருவாய் எல்ஐசி சாதனை
- ஓய்வூதியம், குழு திட்டங்கள் மூலம் எல்ஐசி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த திட்டங்கள் மூலம் கடந்த 2019-20 நிதியாண்டில் பிரீமியமாக 1 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஒரு பொதுத்துறை நிறுவனம் குறிப்பாக எல்ஐசி முதல் முறையாக இந்த புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
- எல்ஐசி தொழிலாளர் ஓய்வூதிய நிதி மேலாண்மை திட்டத்தை திறம்பட நிர்வகித்து வருகிறது. ஆயுள் காப்பீட்டு நிறுவனத் தொழிலில் 80 சதவீதம் வரையிலான வர்த்தகத்தை எல்ஐசி மேற்கொண்டுள்ளது.
- இதனால், கருணைத் தொகை, முதிர்வு தொகை, விடுப்பு சரண்டர் மூலம் பெறும் தொகை மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் சுமார் ₹7 லட்சம் கோடி அளவுக்கு நிதியை கையாள்கிறது.
- ஆயுள் காப்பீட்டு நிறுவனத் தொழிலில் 80 சதவீதம் வரையிலான வர்த்தகத்தை எல்ஐசி மேற்கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் எல்ஐசி மற்றும் குழு திட்டங்கள் மூலம் பிரிமியம் தொகையாக 1.5 லட்சம் பிரீமியம் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச காற்றாடித் திருவிழா குஜராத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா இன்று தொடங்கியது. சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெறும் இந்த விழாவை முதல் அமைச்சர் விஜய் ரூபானி தொடங்கி வைத்தார்.
- குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் காற்றாடி திருவிழா நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இத்திருவிழாவில் பங்கேற்று உள்ளனர்.
- இது போன்ற திருவிழாவின் மூலம் காற்றாடி தொழிலில் பணியாற்றும் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவார்கள். பல விதமான பட்டங்கள் இந்த திருவிழாவில் பறக்க விடப்பட்டுள்ளன. இதை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
- இதில் உள்ளூர் மக்களுடன் 40 நாடுகளில் இருந்து திரண்டுள்ள ஏராளமான வெளிநாட்டவர்களும் உற்சாகத்துடன் காற்றாடிகளை பறக்க விட்டனர். பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்பட்ட காற்றாடிகள் வானில் வட்டமிட்டன.
மசோதா நிறைவேற்றம்
- பாகிஸ்தான் ராணுவ தளபதி, ஜெனரல் கமர் ஜாவித் பாஜ்வாவின் பதவிக்காலத்தை, மேலும், மூன்று ஆண்டு காலம் நீட்டிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தின் தேசிய சபையில் நிறைவேற்றப்பட்டது.
- அந்த மசோதா, மேலவையில் நிறைவேற்றப்பட்டதும், அதிபரின் ஒப்புதலுக்குப் பின் அமல்படுத்தப்படும்.