Type Here to Get Search Results !

27th JANUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


நுண்ணீர் பாசனத்தை கண்காணிக்க அண்ணா பல்கலையுடன் ஒப்பந்தம்
  • நாடு முழுவதும், பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில், பாசன பற்றாக்குறை உள்ளதால், இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  • இலக்குசிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்திலும், நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் அமைத்து தரப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை, 11.1௦ லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நுண்ணீர் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.
  • நடப்பாண்டில், 6.17 லட்சம் ஏக்கரில் நுண்ணீர் பாசனம் அமைக்க, மத்திய, மாநில அரசுகள் இலக்கு நிர்ணயம் செய்தன. இதற்காக, 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுவரை, 3.70 லட்சம் ஏக்கரில், நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் அமைத்து தரப்பட்டுள்ளன.
  • மீதமுள்ள இலக்கை அடைவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. நுண்ணீர் பாசன கட்டமைப்பை அமைத்து தரும் நிறுவனங்கள், மூன்று ஆண்டுகள், அவற்றை பராமரிக்க வேண்டும். 
  • தகவல்சில இடங்களில் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்ற புகார், விவசாயிகள் மத்தியில் எழுந்தது. திட்டத்தை செயலாக்கம் செய்வதிலும், சில இடங்களில் பிரச்னை உள்ளது.
  • எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண, அண்ணா பல்கலையுடன், தோட்டக்கலை துறை ஒப்பந்தம் செய்துள்ளது. வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங், தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
  • இதன்படி, அண்ணா பல்கலையின், பாசன பொறியியல் பிரிவு வல்லுனர் குழுவினர்,மாநிலம் முழுவதும் சென்று, திட்ட பணிகளை கண்காணிக்க உள்ளனர். 
சூரிய சக்தி மின்சாரம் கொள்முதல் 2,800 மெகா வாட் தாண்டி சாதனை
  • காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம், சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை. தமிழகத்தில், ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல், சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சூழல் நிலவுகிறது. இதனால், பல நிறுவனங்களும், நம் மாநிலத்தில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, ஆர்வம் காட்டுகின்றன. 
  • தற்போதைய நிலவரப்படி, தென் மாவட்டங்களில், தனியார் நிறுவனங்கள், 3,674 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன. அவற்றில், தினமும், 1,800 - 2,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. அந்த மின்சாரத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. 
  • கடந்த, 2019 அக்டோபர், 4ம் தேதி, சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, 2,475 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப் பட்டது. 
  • இதுவே, இதுவரை உச்ச அளவாக இருந்தது.தற்போது, இரவில் கடும் குளிர் நிலவினாலும், பகலில், வெயில் சுட்டெரிக்கிறது. அதனால், இம்மாதம், 25ம் தேதி, சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, 2,735 மெகா வாட் கொள்முதல் செய்து, பழைய சாதனை முறியடிக்கப் பட்டது. 
  • அதற்கு அடுத்த நாள், அதாவது, குடியரசு தினத்தன்று, மின் வாரியம் முதல் முறையாக, 2,803 மெகா வாட் சூரியசக்தி மின்சாரத்தை கொள்முதல் செய்து, புதிய சாதனை படைத்துள்ளது. 



போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
  • வடகிழக்கு மாநிலமான அசாமை பிரித்து, தனியாக போடோலாந்து மாநிலம் உருவாக்கக் கோரி போராட்டம் நடத்தி வந்த குழுக்களுடன், அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 40 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
  • வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் சர்பானந்தா சோனேவால் தலைமையிலான, பா.ஜ., அரசு நடக்கிறது. இங்கு, நான்கு மாவட்டங்களில், போடோ உள்ளிட்ட மலைவாழ் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர்.
  • இவர்கள், தங்களை அசாமில் இருந்து பிரித்து, போடோலாந்து என, தங்களுக்கென தனி மாநிலம் அமைக்க வேண்டும் என, 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.இந்தப் பிரச்னை தொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களுடன், ஏற்கனவே, இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. 
  • கடந்த, 1993ல், ஏ.பி.எஸ்.யு., எனப்படும் அனைத்து போடோ மாணவர் சங்கத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பி.ஏ.சி., எனப்படும், போடோலாந்து தன்னாட்சி கவுன்சில் அமைக்கப்பட்டது. அதற்கு, 10 ஆண்டுகளுக்குப் பின், 2003ல், போடோ விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
  • அதன்படி, பி.டி.சி., எனப்படும் போடோலாந்து பிராந்திய கவுன்சில் அமைக்கப்பட்டது. அத்துடன் கோக்ரஜார், பக்சா, சிராங்க், உதல்குரி மாவட்டங்களையும் சேர்த்து, பி.டி.ஏ.டி., எனப்படும் போடோலாந்து பிராந்திய மாவட்டங்கள் என்று அழைக்கப்பட்டன.
  • நீண்டகாலம் நீடித்து வந்த இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, என்.டி.எப்.பி., எனப்படும் போடோலாந்துக்கான தேசிய ஜனநாயக முன்னணியுடன், முத்தரப்பு ஒப்பந்தம் நேற்று கையழுத்தானது.முக்கிய அமைப்புஇந்த அமைப்பின் நான்கு பிரிவுகளும் இணைந்து, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பி.டி.ஏ.டி., எனப்படும் பகுதி, இனி, போடோலாந்து மண்டலம் என்றழைக்கப்படும்.
  • அசாமின் மலைப் பகுதியில் வசிக்கும் போடோ மக்களுக்கு, மலைவாழ் பழங்குடியினர் அந்தஸ்து கிடைக்கும். போடோ மொழி, அசாம் அரசின் துணை அரசு அலுவலக மொழியாகும்.இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் என, மூன்று ஆண்டுகளுக்கு, வளர்ச்சிப் பணிகளுக்கு மாநில அரசு செலவிடும். 
  • அதற்கு இணையான தொகையை, மத்திய அரசும் செலவிடும். அடுத்த, மூன்று ஆண்டுகளில், ஒட்டுமொத்தமாக, 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.இந்த நிதியில் இருந்து, தொழிற்சாலைகள் அமைப் பது, சுற்றுலாவை மேம்படுத்துவது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • மேலும், உபேந்திரநாத் பெயரில் மத்திய பல்கலை, தேசிய விளையாட்டு பல்கலை அமைக்கப்பட உள்ளன. பிராந்திய மருத்துவ மையம், ஓட்டல் நிர்வாக மையம், பால் பண்ணை, தேசிய தொழில்நுட்ப மையம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட உள்ளன.
  • போடோ இயக்கத்துக்காக நடந்த போராட்டங்களில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம்
  • குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில, மத ரீதியாக பாதிக்கப்பட்டு, இந்தியா வந்துள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. 
  • இதற்கான மசோதா, பார்லி.,யின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 
  • இந்த சட்ட திருத்தத்துக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கும் கேரளா, காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, சட்ட சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்திலும், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்: அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
  • ஆந்திராவில், மூன்று தலைநகரங்கள் மசோதாவை நிறைவேற்ற முடியாததால், செயல்பாட்டில் உள்ள மேல்சபை கலைக்கப்படும் என, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
  • ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சட்டசபை மட்டு மின்றி மேல்சபையும் செயல்பாட்டில் உள்ளது. ஆந்திர சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, மேல்சபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, விதிகள் உள்ளன. 
  • ஆந்திர மேல்சபையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிக்கு ஒன்பது உறுப்பினர்கள் மட்டும் உள்ளனர். எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்திற்கு, 33 உறுப்பினர்கள் உள்ளனர். 
  • இந்நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பது உள்ளிட்ட, இரண்டு மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மேல்சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. 
  • யோசிக்க வேண்டும்மேல்சபையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. 
  • தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, மசோதாக்கள், சிறப்பு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
  • இதைத் தொடர்ந்து, சட்டசபையில் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி கூறும்போது, ''அரசியல் நோக்கங்களுடன் மட்டுமே செயல்படும் மேல்சபை, நமக்கு தேவையா என, யோசிக்க வேண்டும்,'' என்றார். இதை தொடர்ந்து, மேல்சபையை அகற்றுவது என, ஆந்திர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



2024ம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வே முழுவதும் மின்மயம்: ரயில்வே அமைச்சர்
  • பிரேசில் அதிபர் இந்தியா வந்துள்ளதையடுத்து, இந்தியா - பிரேசில் தொழில்துறை கூட்டம் நடைபெற்றது. இதில் வர்த்தகப் பொறுப்பையும் சேர்த்து வகிக்கும் பியூஷ் கோயல் பேசினார்.
  • 'வரும் 2024ம் ஆண்டிற்குள் அனைத்து ரயில்களையும் மின்மயமாக்க திட்டமிட்டுள்ளோம். அப்படியான நடவடிக்கை பூர்த்தியடைந்தால், உலகிலேயே 100% மின்சாரத்தில் இயங்கும் ரயில்வே துறை இந்தியாவினுடையதாக இருக்கும்.
  • அதேசமயம், வரும் 2030ம் ஆண்டில், முழு ரயில்வே நெட்வொர்க்கையும் முற்றிலும் உமிழ்வற்ற வலையமைப்பாக மாற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளோம். அது தூய்மை சக்தியாக இயங்கும்' என்று பேசினார்.
ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகள் விற்பனை; மத்திய அரசு முடிவு
  • தினசரி 20 முதல் 25 கோடி ரூபாய் வரை இழப்புடன் இயங்கி வரும் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்று விட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதை வாங்க நினைக்கும் நிறுவனங்கள் வரும் மார்ச் 17 ஆம் தேதிக்குள் விருப்ப விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 2018 ஆம் ஆண்டு தன் வசம் உள்ள ஏர் இந்தியாவின் பங்குகளில் 76 சதவிகிதத்தை தனியாருக்கு விற்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் அதற்கு யாரும் ஆர்வம் காட்டாததை தொடர்ந்து 100 சதவிகித பங்குகளையும் விற்று விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • ஏர் இந்தியாவுக்கு இருக்கும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளிட்ட இதர சுமைகளையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் எந்த அறிவிப்பும் சேர்ந்து வெளியாகி இருப்பதால், ஏர் இந்தியாவை வாங்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதனிடையே, ஏர் இந்தியாவை வாங்க டாடா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், சில வெளிநாட்டு விமான நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ஏர் இந்தியாவை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
  • கடந்த நிதியாண்டில் மட்டும் ஏர் இந்தியாவுக்கு 25 ஆயிரத்து 509 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கும் ஏர் இந்தியாவுக்கு தொடர்ந்து நிதிஉதவி அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ள மத்திய அரசு, இந்த இரண்டாவது விற்பனை அறிவிப்பும் பலனளிக்கவில்லை என்றால், அதை நிரந்தரமாக இழுத்து மூட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நாக்பூர் மெட்ரோ வழித்தடத்தை ஜன.28 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
  • நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மெட்ரோ வழித்தடங்கள் பல்வேறு கட்டங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு மெட்ரோ வழித்தடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
  • முதற்கட்ட மெட்ரோ கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். தற்போது இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் நாக்பூர் அக்வா-லைன் புதிய மெட்ரோ வழித்தடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார்.
  • இந்த புதிய மெட்ரோ வழித்தடத்தை ஜனவரி 28 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ பாதை 11 கிலோமீட்டர் நீளம் கொண்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel