நாட்டின் 71வது குடியரசு தினவிழா கோலாகலம்.. தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி
- நாட்டின் 71வது குடியரசு தின விழா ,இன்று கோலாகலமாக கொண்டாட. இதையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
- இதையொட்டி, டெல்லியில் நடந்த விழாவில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு, இந்தியா கேட் பகுதியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
- இந்த விழாவில் தலைமை விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ பங்கேற்றார்.முப்படை அணிவகுப்பு
- ராஜபாதை முதல் செங்கோட்டை வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நாட்டின் வலிமையை பறைசாற்றும் விதமாக முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டு பார்வையிட்டார்.
- அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட எம்-77 ஏ2 அல்ட்ரா லைட் ஹோவிட்ஸர் என்ற நவீன ஆயுதம், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இன்ஜின் இல்லாத ரயிலான டிரெயின் 18 மற்றும் புல்லட் ரயில்களின் மாதிரிகள், உயிரி எரிபொருள் பயன்படுத்தப்படும் ஏ.என். 32 விமானம், மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் கண்கவர் அலங்கார ஊர்திகள் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றன..
- இதேபோல் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார ஊர்திகள் இடம் பெற்றன. பல்லாயிரம் மக்கள் விழாவில் பங்கேற்றனர் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், மெய்சிலிர்க்கவைக்கும் முப்படை வீரர்களின் அணி வகுப்பும் நடந்தது.. விழாவை ஒட்டி டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
- விழாவில் எல்லை பாதுகாப்பு படையின் ஒட்டகப்படையின் அணிவகுப்பு நடந்தது. சாரண படைப்பிரிவின் சிறந்த மாணவர்கள் அணிவகுப்பு நடந்தது
- அணிவகுப்பில் செயற்கைகோள் எதிர்பபு ஏவுகணை சக்தி இடம் பெற்றது. ஆகாஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம் பெற்றது.
- தமிழக காவல் தெய்வம் அய்யனார் சிலை கிராமிய கலை நடனத்துடன் கம்பீரமாக வந்தது. ராஜஸ்தான், தெலுங்கானா மாநில வாகனங்கள் அணிவகுப்பில் தங்கள் கலாச்சாரததை பறைசாற்றும் வகையில் வந்தது அஸ்ஸாம், இமாச்சல் பிரதேசம், ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், உள்பட பல 22 மாநிலங்களின் வாகனங்கள் அணிவகுப்பில் வந்தன. மாநிலங்களின் கலாச்சாரததை பறைசாற்றும் வகையில் இந்த ஊர்திகள் அணிவகுப்பு நடந்தது.
லடாக்கில் தேசியக் கொடி ஏந்திய இந்தோ திபெத் வீரர்கள்
- நாடு முழுவதும் இன்று 71-ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றினார். அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் கொடியை ஏற்றினர்.
- இந்த நிலையில் ஜம்மு- காஷ்மீரின் லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 20 டிகிரி செல்சியல் வெப்பநிலை நிலவி வருகிறது. அதிக குளிரையும் பொருட்படுத்தாத தேசியக் கொடியுடன் இந்தோ- திபெத் எல்லை போலீஸார் குடியரசு தினத்தை கொண்டாடினர்.
சென்னை ரயில்வே கோட்டம் ரூ.2,465 கோடி வருவாய் ஈட்டி சாதனை
- சென்னை ரயில்வே கோட்டம் 2019-20 -ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை 9 மாதத்தில் 6,873 மெட்ரிக் டன் பொருள்களை ஏற்றி சாதனை படைத்துள்ளது. ஆட்டோ மொபைல் பிரிவுக்காக 293 ரேக்குகள் பயன்படுத்தப்பட்டன.
- இதன்மூலம், ரூ.73.36 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது 2018-19-ஆம் ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 17.83 சதவீதம் அதிகம். சென்னை கோட்டம் 2019-20-ஆம் ஆண்டில் முதல் 9 மாதத்தில் ரூ.2,465.55 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
- டிக்கெட் சோதனை மூலம், ரூ.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ரயில்கள் சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைதல் என்பதை பொருத்தவரை, மெயில்,விரைவு ரயில்கள் 80.7 சதவீதமும், புகா் ரயில்கள் 89.86 சதவீதமும் அடைந்துள்ளன.
- அரக்கோணம், காட்பாடி, தாம்பரம், ராயபுரம், மூா் மாா்க்கெட் வளாகம், ஜோலாா்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் சூரியஒளி மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டதால், ரூ.38.98 லட்சம் சேமிக்கப்பட்டது.
- 2019-ஆம் ஆண்டில் பயணிகள் வசதிக்காக ரூ.40.82 கோடி செலவிடப்பட்டது. சென்னை எழும்பூா், காட்பாடியில் நகரும் படிக்கட்டு வசதி, அரக்கோணத்தில் ஒரு மின்தூக்கி வசதி ஏற்படுத்தப்பட்டது. இதுதவிர, சென்னை ரயில்வே கோட்டத்தில் 135 ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வை-பை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
10 ரூபாய்க்கு சாதம், பருப்பு, காய்கறி மற்றும் 2 சப்பாத்திகள்: மதிய உணவுத் திட்டம்
- 'சிவ போஜனம்' எனப்பெயரிடப்பட்டுள்ள அத்திட்டத்தில் 10 ரூபாய்க்கு சாதம், பருப்பு, காய்கறி மற்றும் 2 சப்பாத்திகள் வழங்கப்படுகின்றன. முதற்கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- மக்கள் அதிகம் கூடும் மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், சந்தைகள் ஆகியவற்றில் உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
- ஒரு உணவகத்தில் 500 பேருக்கு உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை உணவு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த 3 மாதங்களுக்கு 6 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
- இதன்மூலம் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மதிய உணவு வழங்கப்படும் என்று தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை உத்தவ் தாக்கரே நிறைவேற்றியுள்ளார்.