- 2020-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, இந்த ஆண்டு மொத்தமாக 141 பத்ம விருதுகள் வழங்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதில் 7 பத்மவிபூஷண் விருதுகளும், 16 பத்மபூஷண் விருதுகளும், 118 பத்மஸ்ரீ விருதுகளும் அடங்கும்.
- இந்த ஆண்டு பத்ம விருது பெறுவோரில் 34 பேர் பெண்களாவர். வெளிநாட்டவர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் 18 பேருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இறப்புக்குப் பிறகான விருது 12 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷண் விருதும், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோர் பத்மபூஷண் விருது பெறவுள்ளனர்.
- கர்நாடக இசைக் கலைஞர்களான லலிதா சிதம்பரம் மற்றும் சரோஜா சிதம்பரம், ஓவியர் மனோகர் தேவதாஸ், சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், நாகஸ்வர இசைக் கலைஞர்கள் காலீஷாபி மெஹபூப் மற்றும் ஷேக் மெஹபூப் சுபானி, சென்னை ஐஐடியின் விரிவுரையாளர் பிரதீப் தலப்பில் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருது பெறுகின்றனர்.
- அத்துடன், புதுச்சேரியைச் சேர்ந்த இலக்கியவாதி மனோஜ் தாஸுக்கு பத்மபூஷண் விருதும், டெரகோட்டா சிலை வடிக்கும் கலைஞர் முனுசாமி கிருஷ்ணபக்தருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படவுள்ளது.
- மோரீஷஸ் முன்னாள் பிரதமர் அனிருத் ஜெகந்நாத், பாடகர் சன்னுலால் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேருக்கு பத்மவிபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மத போதகர் மும்தாஸ் அலி, மறைந்த வங்கதேச தூதர் சையது முவாஸெம் அலி, பாடகர் அஜய் சக்ரவர்த்தி, சமூக சேவகர் அனில் பிரகாஷ் ஜோஷி உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்படவுள்ளது.
- பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், மருத்துவர் பத்மாவதி பந்தோபாத்யாய, பாடகர் அட்னான் சமி, தொழிலதிபர் பரத் கோயங்கா உள்ளிட்ட 118 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
பத்ம விருதுகள் / PADMA AWARDS 2020
January 26, 2020
0
Tags