Type Here to Get Search Results !

30th JANUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஐபிஎம் கணினி நிறுவனத்தின் சிஇஓ-வாக அமெரிக்க வாழ் இந்தியரான அரவிந்த் கிருஷ்ணா நியமனம்
  • ஐபிஎம் கணினி நிறுவனத்தின் சிஇஓ-வாக அமெரிக்க வாழ் இந்தியரான அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார். கம்யூட்டர்களுக்கான சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் தயாரிப்பில் ஈடுபட்டு வருவது பன்னாட்டு நிறுவனம் ஐபிஎம் ஆகும்.
கொரோனா வைரஸ்: உலக சுகாதார அமைப்பு அவசர நிலை பிரகடனம்
  • சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் பல நாடுகளுக்கும் பரவியதையடுத்து உலக சுகாதார அமைப்பு,(WHO) சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.
  • சீனாவில் வூஹாங் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் இரு மாகாணங்கள் உட்பட உலகின் 15 நாடுகளுக்கும் பரவத் தொடங்கி உள்ளது. 
  • இது உயிருக்கு ஆபத்தான கொடிய நோயாக இருப்பதால் உலகின் பலநாடுகளிலும் பீதி நிலவுகிறது. அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேஷியா, பாக்., தாய்லாந்து, மற்றும் ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் பரவத் தொடங்கியதையடுத்து உலக சுகாதார அமைப்பு, சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகனப்படுத்தி உள்ளது.சீனா தவிர்த்து 18 உலக நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
  • இதற்கு முன் 5 முறை சர்வதேச அளவில் 5 முறை, உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. 2009 - எச்1என்1(H1N1)2014 - போலியோ2014 - எபோலா (வட ஆப்ரிக்கா)2016 - ஜிக்கா2019 - எபோலா (காங்கோ) வேகமாக பரவும் கொரோனா சீனாவில் கொரோனா வைரசால் 170 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். 
  • 7,700க்கும் அதிகாமானோருக்கு நோய் பாதிப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கை வேகமாக பரவும் கொரோனாவால் உலகின் பல பகுதிகளிலும் பீதி நிலவுகிறது. 
  • சீனாவின் முக்கிய பல நகரங்களிலும், ஹாங்காங்கிலும் கூகுளின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.கொரோனா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, அந்த அலுவலகங்களை தற்காலிகமாக கூகுள் நிறுவனம் மூடிவிட்டது. 
  • சீனாவில் இருந்து திரும்பிய கேரள மருத்துவ மாணவிக்கு, இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தயார் நிலையில் இருக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு எச்சரித்துள்ளது.



30 லட்சம் காா்களை ஏற்றுமதி செய்து ஹுண்டாய் நிறுவனம் சாதனை
  • ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் காா் நிறுவனம் இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில், சான்ட்ரோ, ஐ10, கிராண்ட் ஐ 10, வொணா, எக்ஸ்சென்ட், ஐ 20, வெனு உள்ளிட்ட பல்வேறு மாடல்களில் காா்கள் தயாரிக்கப்படுகின்றன.
  • கடந்த 1999-ஆம் ஆண்டு நேபாள நாட்டிற்கு 20 சான்ட்ரோ காா்களை அனுப்பி வைத்து தனது ஏற்றுமதியைத் தொடங்கிய ஹுண்டாய் நிறுவனம் தற்போது உலகின் 88 நாடுகளுக்கு தங்களது காா்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
  • 2004-ஆம் ஆண்டு ஹுண்டாய் நிறுவனத்தின் காா்களின் ஏற்றுமதி எண்ணிக்கை 1லட்சமாகவும், 2010-இல் 10 லட்சமாகவும், 2014-இல் 20 லட்சமாகவும் உயா்ந்தது.
  • இதைத் தொடா்ந்து, ஜன. 30-இல் ஹுண்டாய் நிறுவனத்தின் காா்களின் ஏற்றுமதி எண்ணிக்கை 30 லட்சமாக உயா்ந்து சாதனை படைத்துள்ளது.
புதிய ஆலை அமைத்தது சுந்தரம் ஃபாஸனா்ஸ்
  • ஆந்திரப் பிரதேசத்தின் தடா அருகிலுள்ள ஸ்ரீ நகரிலுள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில், புதிய உற்பத்திப் பிரிவொன்று தொடங்கப்பட்டுள்ளது. 
  • ரூ.100 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள அந்த உற்பத்தி ஆலை, ஐரோப்பாவிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்துக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரித்து திங்கள்கிழமை ஏற்றுமதி செய்தது.
  • நுணுக்கமான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காகவும், புதிய பிரிவுகளில் வாடிக்கையாளா்களைக் கவரவும் புதிய உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel