- நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த உரைக்கு பிறகு, பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
- பொருளாதார ஆய்வறிக்கை இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இது புதிய நூறு ரூபாய் நோட்டு போல லாவண்டர் நிறத்தில் இருந்தது.
- நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிப்பிடும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வரும் நிதியாண்டில் 6 முதல் 6.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கில் தளர்வு செய்யப்படும்.
- அந்நிய நேரடி முதலீடு, தேவையை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில், பொருளாதார வளர்ச்சி மேம்படும்.
- நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில், ஜிஎஸ்டி வசூல் 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
- வரும் 2024-25 நிதியாண்டில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை எட்ட, கூடுதலாக உள்கட்டமைப்புகளுக்கு 1.4 லட்சம் கோடி (சுமார் 100 லட்சம் கோடி) முதலீடு செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு பற்றாக்குறை தடையாக இருக்கக்கூடாது.
- கடந்த 2011-12 முதல் 2017-18 நிதியாண்டு வரை ஊரக மற்றும் நகர பகுதிகளில் புதிதாக 2.62 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் எண்ணிக்கை 18 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களுக்கான வேலை வாய்ப்பு 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
- கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் புதிய நிறுவனங்கள் உருவாக்கம் ஆண்டுக்கு 12.2 சதவீதம் வீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. புதிய நிறுவனங்கள் உருவாக்கம் 2014ல் 70,000 ஆக இருந்தது, கடந்த 2018ல் 80 சதவீதம் அதிகரித்து 1.24 லட்சமாக உயர்ந்துள்ளது.
- விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது, புதிய கடன்கள் வழங்குவதற்கு இடையூறாக உள்ளது. மேலும், அதே விவசாயிகளுக்கு கடன் வழங்குவதையும் குறைக்கிறது.
- பிரதமர் ஆவாஸ் - கிராமின் திட்டத்தில் கடந்த 2018-19 நிதியாண்டில் 47.33 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2014-15 நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், கால்நடை வளர்ப்பு மூலம் வருவாய் 7.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
- மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுத்து வந்தபோதும், மரங்கள் மற்றும் வன பரப்பளவு 80.73 மில்லியன் ஹெக்டேராக உள்ளது. இது, நாட்டின் புவி பரப்பளவில் 24.56 சதவீதம்.
- ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதன் மூலம் 2025ல் 4 கோடி வேலை வாய்ப்புகளையும், 2030ல் 8 கோடி வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும். இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கையில் திருக்குறள்
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட்டில் புறநானூற்று பாடல் வரிகளை கூறினார். இதுபோல் அவர் சமர்ப்பித்த பொருளாதார ஆய்வறிக்கையில் 2 திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
- அவை வருமாறு: ''பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று''விளக்கம்: பொருள் (செல்வ வளம்) என்று சொல்லக்கூடிய அணையா விளக்கு மட்டும் கையில் இருந்து விட்டால், நினைத்த இடத்துக்குச் சென்று பகையென்னும் இருளை துரத்தி விடும்.
- ''செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும் எஃகுஅதனின் கூரியது இல்'' விளக்கம்: ஒருவன் பொருளை ஈட்டவேண்டும்; அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்கவல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.
2011-2018 க்கு இடையில் 2.62 கோடி புதிய வேலைகள்
- நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்சினை குறித்து மோடி அரசிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில், 2011-12 முதல் 2017-18 வரையிலான நிதியாண்டுகளில் வழக்கமான ஊதியம் மற்றும் சம்பள வகுப்பில் 2.62 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனாவின் கீழ், 2019 நவம்பர் வரை 69.03 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. 2011-12 உடன் ஒப்பிடும்போது 2017-18 ஆம் ஆண்டில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் சுமார் 8 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
- கடந்த சில ஆண்டுகளில், வழக்கமான சம்பள வேலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2011-12 உடன் ஒப்பிடும்போது 2017-18 ஆம் ஆண்டில் வழக்கமான சம்பள வேலைகள் 5% அதிகரித்து 23% ஆக உயர்ந்துள்ளன.
- இந்த ஆறு ஆண்டுகளில், 2.62 கோடி புதிய வேலைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 1.21 கோடி வேலைகள் கிராமப்புறங்களிலும், 1.39 கோடி நகர்ப்புறங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு சிறப்பு கவனம்
- பெண்களின் உரிமைகள் குறித்துப் பேசும்போது, ஊதியம் பெற்ற மகப்பேறு விடுப்பு 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நன்மைகளைப் பெறும் சிறப்பு திட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
சாமானிய குடும்பத்தின் உணவுக்கான செலவு விவரங்கள்
- பொருளாதார ஆய்வறிக்கையில் முதல்முறையாக ஃபுல் மீல்ஸ் விலை குறித்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண மனிதன் சைவ மற்றும் அசைவ உணவுக்காக ஓராண்டுக்கு செலவழிக்கும் தொகை குறித்த விவரங்கள் இந்த உணவுப் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
- நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பொருளாதார ஆய்வறிக்கையில் ஒரு சாமானிய குடும்பம் உணவுக்காக ஆண்டுதோறும் எவ்வளவு ரூபாய் செலவிடுகிறது என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது.
- அதன்படி சைவ உணவுக்கான சாதாரண குடும்பத்தின் செலவு 2015 முதல் நாடு முழுவதும் குறைந்திருப்பதாகவும், இதன் மூலம் சைவ உணவு சாப்பிடும் ஒரு குடும்பம் ஆண்டுதோறும் 11 ஆயிரம் ரூபாய் வரை மிச்சம் பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதேபோல் அசைவ உணவு சாப்பிடும் ஒரு குடும்பம் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்தி இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
- இதேபோல் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வில் சைவ உணவுக்காக ஒரு குடும்பம் செலவிடும் தொகை 29 சதவிகிதம் வரை முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், அசைவ உணவை பொருத்தவரை இந்த முன்னேற்றம் 18 சதவிகிதமாக இருக்கிறது என்றும் தெரியவந்திருக்கிறது.
- கடந்த 2006 ஏப்ரல் முதல் 2019 அக்டோபர் வரை நுகர்வு விலை குறியீட்டின் அடிப்படையில் தொழிற்சாலை ஊழியர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
- இந்தக் கணக்கெடுப்பின்படி 2015-ஆம் நிதியாண்டு முதல் ஒரு குடும்பத்திற்கான உணவு செலவு குறைந்திருந்தாலும், நடப்பு நிதியாண்டில் உணவுக்காக செலவிடும் தொகை சற்று உயர்ந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
- அதன்படி தமிழகத்தில் 2006-07 ஆம் ஆண்டில் சைவ உணவுக்காக 10 ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், அதன் விலையில் 2016-ஆம் ஆண்டு வரை ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. கடைசியாக 2018-19-ஆம் ஆண்டில் 22 ரூபாய் வரை செலவிடப்பட்ட நிலையில், 2019-20 ஆம் ஆண்டில் 25 ரூபாய் வரை எட்டியிருக்கிறது.
- பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்களுக்கு இடையிலான ஒற்றுமையை விளக்குவதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தோசாநாமிக்ஸ் என்ற பெயரை பயன்படுத்தினார். அதை அடியொற்றி அவரது சீடரான பொருளாதார நிபுணர் சுப்ரமணியன் தாலிநாமிக்ஸ் என்ற பெயரில் சாமான்ய மனிதர்களின் உணவுச் செலவை இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் சேர்த்துள்ளார்.