மக்களவை உறுப்பினா், எழுத்தாளா் சு.வெங்கடேசனுக்கு இயல் விருது
- கனடாவில் செயல்பட்டு வரும் தமிழ் இலக்கிய தோட்ட அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளா்களுக்கு இயல் விருது வழங்கி வருகிறது.
- இதுவரை சுந்தரராமசாமி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், அம்பை, நாஞ்சில்நாடன், சுகுமாரன், வண்ணதாசன், இமையம் உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரை மாவட்டம், ஹாா்விபட்டியைச் சோந்த சு.வெங்கடேசன் இளங்கலை வணிகவியல் படித்தவா். இதுவரை 4 கவிதை தொகுப்புகள், 5 கட்டுரை தொகுப்புகள், 2 புதினங்கள், ஒரு கிராஃபிக் நாவல் எழுதியிருக்கிறாா்.
- இவா் எழுதிய 'காவல் கோட்டம்' என்ற முதல் நாவலுக்கு 2011-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. வசந்தபாலன் இயக்கத்தில் 2012-இல் வெளிவந்த 'அரவான்' திரைப்படம் இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டது.
மகப்பேறு மருத்துவா்கள் மாநாடு: ஆளுநா் தமிழிசை தொடக்கி வைத்தாா்
- மகப்பேறு மற்றும் மகளிா் நல மருத்துவா்கள் மாநாடு சென்னை, போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
- மாநாட்டில், ராமச்சந்திரா உயா் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தா் டாக்டா் பி.வி.விஜயராகவன், மூத்த மருத்துவா் டாக்டா் சௌந்தரராஜன், மகப்பேறு, மகளிா் நல மருத்துவத் துறைத் தலைவா் டாக்டா் உஷா விஸ்வநாத் மற்றும் நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சோந்த 300-க்கும் மேற்பட்ட மருத்துவா்களும், மருத்துவ மேற்படிப்பு மாணவா்களும் கலந்துகொண்டனா்.
கோல்டன் க்ளோப் விருதுகளின் மொத்த பட்டியல்
- ஃபாரின் ப்ரெஸ் அஸோசியேஷன் அமைப்பினரால் 1944 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் "கோல்டன் க்ளோப்" விருது. ஆண்டு முழுவதும் அமெரிக்காவில் வெளியாகும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்காக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
- இயக்கம், நடிப்பு, இசை உள்ளிட்ட வரையறையின் அடிப்படையில் சிறந்த ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் திரைக்கலைஞர்களுக்கு இவ்விருது பரிந்துரைக்கப்பட்டு, இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும். கோல்டன் க்ளோப் விருதின் 77-ஆவது ஆண்டான 2019-ஆம் ஆண்டு வெளிந்த படங்களில் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் :
- சிறந்தத் திரைப்படம் - ட்ராமா : 1917
- சிறந்த நடிகை - ட்ராமா : ஜூடி படத்தில் நடித்த ரெனீ ஜெல்வெகேர் (ஜூடி)
- சிறந்த நடிகர் - ட்ராமா : ஜோக்கர் படத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ்
- சிறந்த படம் - மியூசிக்கல் அல்லது நகைச்சுவை : ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்
- சிறந்த நடிகர் - மியூசிக்கல் அல்லது நகைச்சுவை : தரேன் ஏஜர்டான் (ராக்கெட் மேன்)
- சிறந்த நடிகை - மியூசிக்கல் அல்லது நகைச்சுவை : அக்வாபினா (தி பாரவெல்)
- சிறந்த குணச்சித்திர நடிகர் - மியூசிக்கல் அல்லது நகைச்சுவை : பிராட் பிட் (ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்)
- சிறந்த இசை - ஹில்டுர் (ஜோக்கர்)
- சிறந்தத் தொலைகாட்சி சீரிஸ் - செர்நோபில்
- சிறந்தத் தொலைகாட்சி சீரிஸ் நடிகை - மைக்கல் வில்லியம்ஸ் (போஸ்)
- சிறந்த இயக்குனர் - சாம் மெண்டிஸ் (1917)
முதல் 'Defence Expo 2020' உத்திரபிரதேசத்தில் நடைபெறும்
- மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் 'Defence Expo-2020' பிப்ரவரி மாதத்தில் லக்னோவில் நடைபெறும் என்று அறிவித்தனர்.
- உத்திரபிரதேசத்தின் லக்னோவில் நடைபெறவிருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய எக்ஸ்போ இதுவாகும். பல முதலீட்டாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
- 'Defence Expo-2020'-ன் கருப்பொருள் 'இந்தியா: வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி மையம்' மற்றும் 'பாதுகாப்பு டிஜிட்டல் உருமாற்றம்' என்பதில் கவனம் செலுத்தும்.
- மூத்த வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் Business-to-Business (B2B) தொடர்புகளில் ஈடுபட இந்திய நிறுவனங்களுக்கு Defence Expo ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது. இது அரசாங்கத்திற்கு அரசு (G2G) கூட்டங்களுக்கும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உதவுகிறது.
2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மீறுவோம் என ஈரான் அறிவிப்பு
- ஈரான் நாட்டு புரட்சி படையின் தலைவர் சுலைமானியை அமெரிக்க படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி கொலை செய்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவை பழிக்கு பழி வாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.
- இந்த நிலையில் 2015-இல் அணுசக்தி ஒப்பந்தத்தை மீற போவதாக ஈரான் அறிவித்துள்ளது. அத்துடன் ஈரானில் உள்ள அமெரிக்க படைகளை வெளியேற்ற உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
- இதுகுறித்து ஈரான் நாட்டு அரசு தொலைகாட்சி சேனல் வெளியிட்ட அறிக்கையில் எரிபொருள் செறிவூட்டல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பின் அளவு, அதன் ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகள் மீதான ஒப்பந்தத்தை ஈரான் மீறுகிறது.
- ஆனால் தற்போது ஈரான் எடுத்த முடிவுகளால் அதிருப்தி அடைந்துள்ளது. எடுத்த முடிவுகளை ஈராக் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம் என்றார். 2015-ஆம் ஆண்டு ஈரான், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் (ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன்) ஆகிய நாடுகள் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- அதன்படி ஈரான் புளூடானியம் மற்றும் யுரேனியம் ஆகிய இரு அணுசக்தி பொருட்களைப் பயன்படுத்த அதிகளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஏற்கெனவே வெளியேறிவிட்டது. ஈரான் நாட்டின் இந்த நடவடிக்கையால் அடுத்தது அனுமதியின்றி அணு ஆயுதம் தயாரிக்கும் என அஞ்சப்படுகிறது.