Type Here to Get Search Results !

7th JANUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழகத்தைச் சோந்த இரு ஊடகங்களுக்கு சா்வதேச யோகா தின விருது
 • சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடந்தாண்டு ஜூன் 21-ஆம் தேதி, 'யோகா' குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் சிறப்பாக வெளியிடும் ஊடகங்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகா் அறிவிப்பு வெளியிட்டாா். 
 • இதற்கான தோவுக் குழு (ஜுரி) இந்திய பிரஸ் கவுன்சில் தலைவா் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழு தோவு செய்த 30 ஊடகங்களுக்கு மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் (பொறுப்பு) ஸ்ரீ பாத யெஸோ நாயக் முன்னிலையில் யோகா விருதுகளை செவ்வாய்க்கிழமை ஜாவ்டேகா் வழங்கினாா்.
 • சா்வதேச யோகா தினத்திற்கான ஊடக விருதுகள் பெற்ற 30 ஊடகங்களில் பல்வேறு மொழிகளைச் சோந்த 11 வானொலிகள், 8 தொலைக்காட்சி ஊடகங்கள், 11 அச்சுத் துறை ஊடகங்களும் இந்த விருதுகளைப் பெற்றன. 
 • இதில் சென்னை தூா்தஷன், தந்தி குழுமத்தைச் சோந்த ஹலோ எஃப்.எம். வானொலி ஆகியவையும் அடங்கும். இதில் எட்டு ஊடகங்கள் இந்தி மொழியைச் சோந்தது. 
ஏர் இந்தியா பங்கு விற்பனை; மத்திய அரசு ஒப்புதல்
 • ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு இன்று (ஜன.,7) ஒப்புதல் அளித்துள்ளது.கடந்த நிதியாண்டில் ஏர் இந்தியா விமான நிறுவனம் ரூ.7600 கோடி நஷ்டத்தை சந்தித்தது.
 • இந்த அதிப்படியான இழப்பால் அதன் பங்குகளில் 95 சதவீதத்தை தனியாரிடம் விற்க அரசு முடிவு செய்தது. தற்போது ஏர் இந்தியாவின் பங்குகளில் நாளொன்றிற்கு ஏற்படும் நஷ்டம் ரூ. 26 கோடியை எட்டியுள்ளது.
பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாக குறையும்: மத்திய அரசு
 • கடந்த 2018-19 நிதியாண்டில் 6.2 சதவீதமாக காணப்பட்ட தயாரிப்பு துறையின் வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
 • இதையடுத்து, நடப்பு 2019-20 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாக குறையும். இது, முந்தைய நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருந்தது.
 • ஏற்கெனவே, வேளாண், கட்டுமானம், மின்சாரம், எரிவாயு, தண்ணீா் விநியோகம் போன்ற துறைகளின் வளா்ச்சியிலும் சரிவு காணப்பட்டுள்ளது.
 • அதேசமயம், சுரங்கம், பொது நிா்வாகம், பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளில் சிறிய வளா்ச்சி தென்பட்டுள்ளது என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.10% இட ஒதுக்கீடை மாநில அரசே முடிவு செய்யலாம்
 • பொருளாதாரத்தில் பின்தங்கிய, முற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, மத்திய அரசு கடந்த 2019 ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தால், தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு இருக்குமா எனக்கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
 • இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம். இதில், மத்திய அரசு தலையிட முடியாது. 10 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசின் துறைகளில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் தகவல் பரிமாற்றம் பாக்., பார்லியில் மசோதா நிறைவேற்றம்
 • கிரிமினல் குற்றவாளிகளின் தகவல்களை, பிற நாடுகளுடன் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் மசோதா, பாக்., பார்லி.,யில், எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது. சட்ட விரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாத அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதியுதவி ஆகியவற்றை தடுக்கும் பணியில், 'எப்.ஏ.டி.எப்.,' எனப்படும், 'நிதிச் செயல்பாடுகளுக்கான அதிரடிப் படை' ஈடுபட்டு வருகிறது. 
 • கடந்த, 1989ல், பிரான்சில் உருவாக்கப்பட்ட, இந்த அமைப்பில், இந்தியா உட்பட, 39 நாடுகள் உறுப்பினராக உள்ளன. கடந்த ஆண்டு, இந்த அமைப்பு, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் சொத்து முடக்கம், சட்ட விரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக, பாக்., அரசிடம், 27 கேள்விகளை கேட்டது. 
 • கருப்பு பட்டியல்அவற்றில், 22 கேள்விகளுக்கு பாக்., பதில் அளிக்கவில்லை. அதனால், பாக்., பழுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. அத்துடன், '2020, பிப்ரவரிக்குள், எஞ்சிய கேள்விகளுக்கு பதில் தராவிட்டால், கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்' எனவும் எப்.ஏ.டி.எப்., பாக்.,ஐ எச்சரித்தது. 
 • இதையடுத்து, கடந்த மாதம், 22 கேள்விகளுக்கு உரிய பதிலை, எப்.ஏ.டி.எப்., அமைப்பிடம், பாக்., வழங்கியது.இதன் தொடர்ச்சியாக, பிற நாடுகளுடன் குற்றவாளிகளின் இருப்பிடம், வங்கி கணக்கு, உள்ளிட்ட விபரங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும், சொத்துக்களை முடக்கவும் வகை செய்யும் மசோதா, பாக்., பார்லியில் தாக்கல் செய்யப்பட்டது.
 • 'குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி' எனப்படும் இந்த மசோதா, எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது. ''இது, பாக்., மக்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் மசோதா,'' என, பாக்., மக்கள் கட்சி தலைவர், சையது நவீத் குமர் தெரிவித்துள்ளார். 
 • இந்த சட்டம், எந்தவொரு நாட்டுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளாமல், சொந்த மக்களை, பாக்., நாடு கடத்த துணை புரியும் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பொருளாதார தடைஎனினும், இந்த சட்டம் இயற்றியதன் மூலம், எப்.ஏ.டி.எப்., கருப்பு பட்டியலில் இடம் பெறுவதை, பாக்., தவிர்த்துள்ளது. 
 • தற்போது, இந்த அமைப்பின் கருப்பு பட்டியலில், ஈரான், வடகொரியா ஆகியவை உள்ளன. கருப்பு பட்டியலில் இடம் பெறும் நாடுகள், பொருளாதார தடைக்கு உள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளி பெண்கள் அமெரிக்க நீதிபதிகளாக நியமனம்
 • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, இரு பெண்கள், அமெரிக்காவில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர், பில் டி பிளாசியோ, குற்றவியல், சிவில் மற்றும் குடும்பவியல் நீதிமன்றங்களுக்கு, 28 நீதிபதிகளை நியமித்தார்.
 • அவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அர்ச்சனா ராவ், தீபா அம்பேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.நியூயார்க் இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக உள்ள, அர்ச்சனா ராவ், தற்போது, நியூயார்க் சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
 • இவர், 17 ஆண்டுகளாக, நியூயார்க் மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சமீபத்தில், நிதி முறைகேடு தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 • தீபா அம்பேகர், 2018, மே மாதம், இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, தற்போது சிவில் நீதிமன்ற நீதிபதியாக, மறுநியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், நியூயார்க் நகர்மன்ற குழுவில் மூத்த அரசு வழக்கறிஞராகவும், பொதுமக்கள் பாதுகாப்பு குழுவின் ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel