உலகத் திருக்கு மாநாடு: கம்போடியாவில் திருவள்ளுவா் சிலை
- கம்போடியா நாட்டில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை உலகத் திருக்கு மாநாடு நடைபெறவுள்ளது. இதில் உலகெங்கிலும் இருந்து திருக்கு ஆய்வாளா்கள், எழுத்தாளா்கள், கவிஞா்கள், பேராசிரியா்கள், தமிழகத்திலிருந்து அரசுத்துறை அலுவலா்கள், அமைச்சா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனா். கம்போடியா நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத்தமிழா் நடுவம், அங்கோா் தமிழ்ச்சங்கம் ஆகியோா் இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளனா்.
- இந்த மாநாட்டில் திருவள்ளுவா் சிலை திறப்பு, கெமா் மொழியில் மொழிபெயா்ப்பு செய்யப்பட்ட திருக்கு நூல் வெளியீடு, கருத்தரங்கம் திருக்கு சாா்ந்த சொற்பொழிவுகள் ஆய்வு நூல்கள் வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
- மாநாட்டை முன்னிட்டு கம்போடியா நாட்டில், கலாசாரத்துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவா் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை அங்கோா் தமிழ்ச் சங்கத்தினா் செய்துவருகின்றனா்.
- இந்தநிலையில், கம்போடியா நாட்டுக்கு திருவள்ளுவா் சிலையை வழியனுப்பும் விழா எம்.ஜி.ஆா். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
- புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் 5 சிறிய மாநிலங்களில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகங்களுக்கு (என்ஐடி) நிரந்தர வளாகங்கள் அமைப்பதற்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டிற்கு புதன்கிழமை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த நிரந்தர வளாகங்களை அமைப்பதற்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டை ரூ.4,371.90 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இதா்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். 2021-22-க்குள் இந்தத் தேசிய தொழில்நுட்பக் கழகங்களுக்கு வளாகங்கள் அமைக்கப்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக 80000 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. 370வது பிரிவினை ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
- சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. இணைய சேவைகள் மெல்ல மெல்ல திரும்பியது. அண்மையில் 2ஜி இணையசேவைகள் காஷ்மீர் முழுவதும் மீண்டும் வந்தது. சுற்றுலாவும் பழைய நிலையை அடைந்துள்ளது.
- மெதுவாக காஷ்மீர் பழைய நிலைக்கு திரும்பிய நிலையில் , மத்திய அரசு அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை ஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ஒதுக்கி உள்ளது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி., வாட், கலால் சட்ட திருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்
- பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் ஜி.எஸ்.டி., வாட் மற்றும் கலால் வரி களை கையாளும் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர ஒப்புதல் கொண்டுவரப்பட்டது.
- இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் திருத்தங்கள் கொண்டு வரப்படுவதன் மூலம் வரிவிதிப்புச் சட்டங்களில் சீரான தன்மையைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், சட்ட அமைப்பை வலுப்படுத்துவதாகவும் அமையும் என தெரிவித்தனர்.
ஜனநாயக குறியீடு பட்டியல்: 10 இடங்கள் சரிந்து பின்னடைவு பிரிவில் இந்தியா
- 2019 ஆம் ஆண்டிற்கான வெளியிடப்பட்ட ஜனநாயகக் குறியீட்டின் பட்டியலில் பொருளாதாரத்தை புலனாய்வு பிரிவு (ஈஐயு) இந்தியாவை "குறைபாடுள்ள ஜனநாயகம்" என்று பட்டியலிட்டுள்ளது.
- இந்தியாவில் சிவில் சுதந்திரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவின் மொத்த மதிப்பெண் 2018 இல் 7.23 ஆக இருந்தது. இது தற்போது 6.90 ஆக குறைந்துள்ளது.
- நாட்டில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை (திருத்தம்) சட்டம், ஜம்மு-காஷ்மீரின் நிலைமை மற்றும் சர்ச்சைக்குரிய என்.ஆர்.சி (குடிமக்களின் தேசிய பதிவு) குறித்து கவலை தெரிவித்த பொருளாதாரத்தை புலனாய்வு பிரிவு, ஜனநாயக பின்னடைவுக்கு இந்த காரணங்கள் தான் முக்கியமானதாகும் என்றது.
- இந்த உலகளாவிய பட்டியலில் 165 நாடுகளிலும், இரண்டு பிராந்தியங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த நாடுகளில் ஜனநாயகம் எப்படி உள்ளது. அதன் நிலையை வழங்கி வருகிறது.
- ஜனநாயகக் குறியீட்டுக்கான உலகளாவிய தரவரிசையில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51 வது இடத்திற்கு வந்துள்ளது என்று அறிக்கை கூறியுள்ளது. ஜனநாயக பட்டியலில் இந்த சரிவு நாட்டில் சிவில் உரிமைகள் மோசமடைந்து வருவதால் ஏற்பட்டு உள்ளது.
- ஒரு நாட்டில் நடைபெறும் தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைவாதம், அரசாங்கத்தின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாச்சாரம் மற்றும் சிவில் உரிமைகள் ஆகிய ஐந்து பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.
- அவற்றின் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், நாடுகள் நான்கு வகையாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன - முழு ஜனநாயகம் (8 புள்ளிகளுக்கு மேல் மதிப்பெண்), குறைபாடுள்ள ஜனநாயகம் (6 க்கும் மேற்பட்டவை, ஆனால் 8 அல்லது 8 ஐ விட குறைவாக), கலப்பின ஆளுகை (4 ஐ விட அதிகமாகவோ அல்லது 6 ஐ விட குறைவாகவோ) மற்றும் சர்வாதிகார ஆட்சி (4 அல்லது அதற்கும் குறைவாக). இதன் அடிப்படையில் குறைபாடுள்ள ஜனநாயகப் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.
- இதற்கிடையில், சீனா இப்போது 2.26 புள்ளிகளுடன் 2019 இல் 153 வது இடத்தில் உள்ளது. இது உலக தரவரிசையில் கீழ்நிலைக்கு அருகில் உள்ளது. வளர்ந்து வரும் மற்ற பொருளாதாரங்களில், பிரேசில் 6.86 புள்ளிகளுடன் 52 வது இடத்திலும், ரஷ்யா 3.11 புள்ளிகளுடன் 134 வது இடத்திலும் உள்ளது.
- அதேபோல் மொத்தம் 4.25 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 108 வது இடத்திலும், இலங்கை 6.27 புள்ளிகளுடன் 69 வது இடத்திலும், பங்களாதேஷ் 5.88 புள்ளிகளுடன் 80 வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் நார்வே முதலிடத்திலும், வட கொரியா 167 வது இடத்திலும் உள்ளது.
டாமன்-டையூ தாத்ரா-நகரஹவேலி ஒருங்கிணைந்த யூனியன் பிரதேசத்துக்கு டாமன் தலைநகராக செயல்படும்: பிரகாஷ் ஜவடேகர்
- டாமன்-டையூ தாத்ரா-நகரஹவேலி ஒருங்கிணைந்த யூனியன் பிரதேசத்துக்கு டாமன் தலைநகராக செயல்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மத்திய அமைச்சரவை கூட்ட முடிவை விளக்கி டெல்லியில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
`முதல் மனித உருகொண்ட ரோபோ!' - இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் கலக்கவிருக்கும் `வியோமித்ரா!'
- ISRO-வின் கண்டுபிடிப்பான வியோமித்ரா (Vyommitra) என்ற ரோபோ, formal உடையணிந்து, ISRO-வின் அடையாள அட்டையுடன், அழகான கண் சிமிட்டலுடன் அமர்ந்துள்ளது. தூரத்தில் இருந்து பார்த்தால் ISRO-வில் பணிபுரியும் ஒரு பெண் விஞ்ஞானி என்றுதான் எண்ணத் தோன்றும். அத்தகைய நேர்த்தியான வடிவமைப்பு.
- மனிதர்கள் செய்வதைத் திரும்ப செய்யவல்ல இந்த ரோபோவுக்கு கால்களில்லை என்பதால் இதனால் முன்புறமும் பக்கவாட்டிலும் மட்டுமே சாய்ந்து வேலைகளைச் செய்ய முடியும். அதனால் இதை "Half Humanoid" என்கிறார்கள்.
- கடந்த ஆண்டு 2019-ல் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அவர்கள் நம் இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் இந்தியாவிலிருந்து விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்று உரையாற்றினார்.
- அந்த உரையின் விதையை தன்னுள் எடுத்த ISRO அதை விருட்சமாக உருவாக்க எடுத்த திட்டம்தான் "Gaganyaan Mission". இந்தத் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப உருவாக்கப்பட்ட ரோபோதான் வியோமித்ரா.
- மனிதர்கள் இல்லாத சோதனை ஓட்டத்தை இந்த வருட டிசம்பரிலும் மற்றும் ஜூன் 2021-லும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதில் வியோமித்ரா பங்கேற்று விண்வெளி செல்லும்.
- அங்கிருந்து ISRO விஞ்ஞானிகளிடம் உரையாட முடியும். அவர்களின் கட்டளைக்கு ஏற்ப இந்த ரோபோவால் பணிபுரிய முடியும்.
- ISRO 2022-ல் மனிதர்களை இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்காக 4 இந்திய விமானிகள் தேர்வாகி உள்ளார்கள். அவர்களுக்கு ரஷ்யா மற்றும் இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- அவர்கள் உடல் நிலையைக் கண்காணிக்க இந்திய விமான துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் பிரான்சில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். 2022 மனிதர்களுடன் இணைந்து வியோமித்ரா விண்வெளி செல்லுமா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
ரூ. 5 ஆயிரத்து 100 கோடி மதிப்பில் உள்நாட்டு நிறுவனங்களில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல்
- பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் குழு கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பி 75 ஐ (P-75I)என்ற திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
- 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் டீசல், எலக்ட்ரிக் சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கு இரு கப்பல்கட்டும் தளங்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இவற்றை தயாரித்து வழங்குவதற்கான பட்டியலில் இந்திய நிறுவனங்களுடன், பன்னாட்டு நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்களை 5 ஆயிரத்து 100 கோடி செலவில் வாங்க பாதுகாப்புத்துறை கொள்முதல் குழு அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன எலக்ட்ரானிக் போர்தளவாடங்களும் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
- போர் விமானங்களை உற்பத்தி செய்யவும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
உலக பொருளாதார மாநாட்டின் ஐ.டி., கவர்னராக எச்.சி.எல்., சி.இ.ஓ.,
- ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- இதன் மூலம் உலகளவில் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பிற்கும் சவால்களை சமாளித்து முன்னேறுவதற்கும் விஜய்குமார் உறுதுணை புரிவார்' என ஐ.டி. துறை தலைவர் எரிக் வைட் தெரிவித்துள்ளார்.'
கிரீசில் முதல் பெண் அதிபர் தேர்வு
- ஐரோப்பிய நாடான கிரீசின் முதல் பெண் அதிபராக ஏகதெரினி சகெல்ரோபவுலு 63, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- கிரிஸ் தலைநகர் ஏதென்சில் உள்ள பார்லிமென்டில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் 261 எம்.பி.க்கள் ஆதரவுடன் ஏகதெரினி சகெல்ரோ பவுலு வெற்றி பெற்றார்.
- மூத்த நீதிபதியான இவர் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றில் நிபுணர். கிரீசின் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள சகெல்ரோபவுலு மார்ச் 13ல் அதிபராக பதவியேற்கிறார்.