Type Here to Get Search Results !

16th JANUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

வேளாண் துறை வளா்ச்சி 3.1 சதவீதத்தை எட்டும்: நீதி ஆயோக்
  • கடந்த 2018-19 நிதியாண்டில் வேளாண் துறையின் வளா்ச்சியானது 2.9 சதவீதமாக காணப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் அத்துறையின் வளா்ச்சியானது முறையே 2 சதவீதம் மற்றும் 2.1 சதவீதமாக இருந்தது.
  • இதையடுத்து, நடப்பு முழு நிதியாண்டில் அத்துறையின் வளா்ச்சி 3.1 சதவீதத்தை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட் - 30' செயற்கைக்கோள்
  • தென் அமெரிக்காவில், பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ளது, ஏரியன் விண்வெளி தளம். இங்கிருந்து, 'ஜிசாட் - 30' மற்றும் இடுல்சாட் நிறுவனத்தின், 'இடுல்சாட் கோனக்ட்' செயற்கைக் கோள்களுடன், 'ஏரியன் - 5' ராக்கெட், ஜன.,17ல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள, ஜிசாட் - 30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, வீடு தேடி வரும் தொலைகாட்சி ஒளிபரப்புக்கான 'டி.டி.எச்., விசாட்' மற்றும், 'டிஜிட்டல்' சேவைகளுக்கு உதவும். 
  • இதன், 'கியூ பேண்டு' டிரான்ஸ்பாண்டர், இந்தியா மற்றும் சுற்றியுள்ள தீவுகளுக்கும், 'சி பேண்டு' டிரான்ஸ்பாண்டர், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தொலைதொடர்பு சேவைகளுக்கு துணைபுரியும்.
  • ஜிசாட்-30 செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இந்தியா- ஜப்பான் கடலோரக் காவல்படையினரின் கூட்டுப் பயிற்சி
  • இந்திய, ஜப்பான் நாடுகளின் கடலோரக் காவல்படையினா் கடந்த 2000ஆவது ஆண்டு முதல் ஆண்டுதோறும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் கூடுதல் நிகழ்வாக கடந்த 2006-ஆம் ஆண்டு இருநாடுகளிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
  • இந்தியாவிலும் ஜப்பானிலும் இதுவரை 18 முறை கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 19-ஆவது முறையாக இந்த ஆண்டு இருநாட்டின் கடலோரக் காவல் படையினரின் கூட்டுப் பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது. 
  • இக்கூட்டுப் பயிற்சிக்கு 'சாஹியோக்-கைஜின்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க ஜப்பான் கடலோரக் காவல் படையின் 'எச்சிகோ' ரோந்துக் கப்பல் சென்னை வந்தடைந்தது.
  • ஜப்பான் நாட்டு கடலோரக் காவல்படை கப்பல், சென்ன துறைமுகத்துக்கு வந்துள்ளது. இருநாட்டு வீரா்களும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டனா். மேலும், ஆஸ்திரேலியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து உள்பட பல்வேறு நாடுகளுடன், விரைவில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. 
  • இந்திய கடலோரக் காவல் படையில், தொடக்கத்தில் 45 கப்பல்களும், 40 விமானங்கள் மட்டுமே இருந்தன. இது தற்போது, 145 கப்பல்கள், 62 விமானங்களாக அதிகரித்துள்ளன.
  • இதுதவிர, 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், 50 கப்பல்கள் கட்டும் பணி, பல்வேறு கப்பல் கட்டும் தளத்தில் நடந்து வருகின்றன. இதே போல, 60 இலகு ரக ஹெலிகாப்டா்கள் தயாரிக்கும் பணியும் நடந்து வருகின்றன. 
  • 14 இரட்டை இன்ஜின்கள் பொருந்திய 15 கனரக ஹெலிகாப்டா்கள், பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டா்களும் இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட உள்ளன. 
  • மேலும், 16 'மாக் 3' ஹெலிகாப்டா்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. முதல் ஹெலிகாப்டா் வரும் மாா்ச் மாதத்தில் சோதனைக்கு உள்படுத்தப்பட உள்ளது என்றனா்.



30,000 ப்ரூ இன மக்களுக்கு திரிபுராவில் நிரந்தர இடம், நலத்திட்டங்கள்
  • ப்ரூ இனம் என்பது 21க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளை கொண்ட திரிபுராவை மையமாக கொண்ட பழங்குடி இனக்குழு ஆகும். இவர்களில் சில பிரிவு மக்கள் பல வருடங்களாக தனி மாவட்ட கோரிக்கையை திரிபுராவில் வைத்து வந்தனர். இதனால் அவ்வப்போது இவர்களுக்குள் கலவரம் ஏற்படுவது வழக்கம்.
  • அந்த வகையில் 1997 ப்ரூ இனக்குழுவில் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர்களில் பலர் மிசோரம் மற்றும் அசாம் எல்லையில் குடியேறினார்கள். அப்போது 50 ஆயிரம் பேர் குடியேறியதாக கூறப்பட்டது. இவர்கள் எல்லோரும், வடகிழக்கு மாநில சட்டப்படி அகதிகளாக அறிவிக்கப்பட்டனர்.
  • அதேபோல் இவர்கள் எல்லோரும் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர். இத்தனை வருடங்களாக அகதிகள் முகாமில் இருந்ததாலும், போதுமான மருத்துவ வசதி இல்லாத காரணத்தாலும் இவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரமாக குறைந்துள்ளது.
  • இந்த நிலையில் மிசோராமில் இருக்கும் இவர்கள் எல்லோரையும் திரிபுராவில் குடியேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ப்ரூ இன அகதிகளுக்கு திரிபுராவில் நிரந்தர இடம் அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
  • மிசோரம் முதல்வர் சோரம்தங்கா, திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இவர்களுக்கு திரிபுராவில் நிரந்தர வீடு வழங்கப்படும். இதற்காக 600 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என்று அரசு கூறியுள்ளது.
  • அதேபோல் எல்லா குடும்பத்திற்கும் 40/30 அடி நிலம் அளிக்கப்படும். குடும்பம் ஒன்றுக்கு 4 லட்சம் ரூபாய் நிரந்த வைப்புத்தொகை அளிக்கப்படும். மாதம் இவர்களுக்கு 5000 ரூபாய் என்று 2 வருடங்களுக்கு வழங்கப்படும். இலவச அங்காடி வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக இந்திய ராணுவ தின அணிவகுப்புக்குத் தலைமை தாங்கிய பெண் அதிகாரி
  • வரலாற்றில் முதல் முறையாகப் பெண் ராணுவ அதிகாரியான தானியா ஷேர்கில் என்பவர் ராணுவ தின அணிவகுப்புக்குத் தலைமை தாங்கி நடத்தி உள்ளார்.
  • இந்திய ராணுவ தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி டில்லி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்ஹ்டில் நேற்று கொண்டாட்டங்கள் நடந்தன. இதில் ஒரு பகுதியாக ராணுவத்தினரின் கண்கவர் வண்ண அணிவகுப்புக்கள் நடந்தன. இதில் ராணுவப்படையின் 18 பிரிவினர் கலந்துக் கொண்டனர்
  • இந்த ஆண் வீரர்களின் அணிவகுப்பைப் பெண் அதிகாரியான தானியா ஷேர்கில் தலைமை தாங்கி நடத்தினார். அணிவகுப்பை பாதுகாப்பு தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நாரவானே, விமானப்படை தளபதி பதூரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் பார்வை இட்டனர். தானியா வரும் குடியரசு தின ராணுவ அணிவகுப்பிலும் தலைமை தாங்கி நடத்த உள்ளார்.
  • தானியா கடந்த இரு வருடங்களுக்கு முன்பு சிக்னல் பிரிவில் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் ஆவார். இவருடைய தந்தை ராணுவத்தில் பணி புரிந்து அதன் பிறகு மத்திய பாதுகாப்பு காவல் துறையில் இணைந்து பணியாற்றியவர் ஆவார். 
  • பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தானியா நாக்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் கல்வி கற்று மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றவர் ஆவார்.



உலகின் நீளமான தலைமுடி வளர்த்த பெண் கின்னஸ் சாதனை 
  • உலகில் பிறந்த மக்கள் எதிலாவது சாதனை செய்ய வேண்டும் என கூறிக்கொண்டிருப்பார்கள். அல்லது சாதனை செய்து சரித்திரத்தில் இடம் பிடிப்பார்கள். இந்த நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நீளமான தலை முடியை வளர்த்து சாதனை செய்துள்ளார்.
  • குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் நிலன் ஷி (17). இந்த சிறிய வயதில் அவர தலைமுடியை 190 செ.மீ நீளமான வளர்த்து சாதனை செய்துள்ளார்.
  • இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 170செ.மீ தலைமுடியை வளர்த்து கின்னஸில் இடம்பிடித்த நிலையில் தற்போது அவரது முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
ஜாக்குலின் வில்லியம்ஸ்: சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் முதல் பெண் மூன்றாம் நடுவர்
  • மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஜாக்குலின் வில்லியம்ஸ் சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் போட்டியின் முதல் பெண் மூன்றாம் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
பி.சி.சி.ஐ-யின் 2020-ம் ஆண்டு வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் டோனி இடம்பெறவில்லை
  • பி.சி.சி.ஐ-யின் 2020-ம் ஆண்டு வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் டோனி இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. 
  • ஏ பிளஸ் கிரேடு பட்டியலில் விராட் கோலி,ரோகித் சர்மா மற்றும் பும்ரா இடம்பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel