Type Here to Get Search Results !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விருது / ICC CRICKET AWARDS 2019

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐ.சி.சி., துபாயில் வெளியிட்டது. இதற்காக 2019, ஜன. 1 முதல் டிச. 31 வரை வீரர்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
  • சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி., நிர்ணயித்த காலகட்டத்தில் இவர், 28 ஒருநாள் போட்டியில், 7 சதம் உட்பட 1409 ரன்கள் குவித்தார். இதில் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் 9 போட்டியில், 5 சதம் உட்பட 648 ரன்கள் எடுத்தது அடங்கும். இதன்மூலம் இவர், ஒரு உலக கோப்பை சீசனில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.
  • கேப்டவுன் டெஸ்டில் (2018) பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கியதால் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் களமிறங்கிய போது ரசிகர்கள் கேலி செய்தனர். அப்போது இந்திய அணி கேப்டன் கோஹ்லி ரசிகர்களை நோக்கி ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டார். இதனால் கோஹ்லி 'ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • கடந்த ஆண்டு நாக்பூரில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 'டுவென்டி-20' போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகார், 7 ரன் மட்டும் வழங்கி 6 விக்கெட் கைப்பற்றினார். இதனையடுத்து இவர், 'டுவென்டி-20'யில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரருக்கான விருதுக்கு தேர்வானார்.
  • சிறந்த வீரருக்கான 'சர் கார்பீல்டு சோபர்ஸ் டிராபி' விருதுக்கு இங்கிலாந்து 'ஆல்-ரவுண்டர்' பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை பைனலில் 84 ரன் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட இவர், லீட்சில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் 135 ரன்கள் விளாசி 'திரில்' வெற்றி தேடித்தந்தார். தவிர இவர், ஐ.சி.சி., நிர்ணயித்த கால கட்டத்தில் 20 ஒருநாள் போட்டியில் 719 ரன், 12 விக்கெட் மற்றும் 11 டெஸ்டில், 821 ரன், 22 விக்கெட் கைப்பற்றினார்.
  • சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பட் கம்மின்ஸ் கைப்பற்றினார். இவர், 12 டெஸ்டில், 59 விக்கெட் சாய்த்தார். தவிர டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
  • வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதை ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசேன் தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு 11 டெஸ்டில், 1104 ரன்கள் குவித்த இவர், அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். தவிர, தரவரிசையிலும் 4வது இடத்துக்கு முன்னேறினார்.
  • 'அசோசியேட்' கிரிக்கெட் வீரருக்கான விருதை ஸ்காட்லாந்தின் கைல் கோட்ஸர் வென்றார். சிறந்த அம்பயருக்கான 'டேவிட் ஷெப்பர்டு டிராபி' விருதை இங்கிலாந்தின் ரிச்சர்டு இல்லிங்வொர்த் கைப்பற்றினார்.
  • ஒருநாள் அணி: விராத் கோஹ்லி (கேப்டன், இந்தியா), ரோகித் சர்மா (இந்தியா), ஷாய் ஹோப் (விண்டீஸ்), பாபர் ஆசம் (பாக்.,), கேன் வில்லியம்சன் (நியூசி.,), பென் ஸ்டோக்ஸ் (இங்கி.,), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர், இங்கி.,), மிட்சல் ஸ்டார்க் (ஆஸி.,), டிரண்ட் பவுல்ட் (நியூசி.,), முகமது ஷமி (இந்தியா), குல்தீப் யாதவ் (இந்தியா).
  • டெஸ்ட் அணி: விராத் கோஹ்லி (கேப்டன், இந்தியா), மயங்க் அகர்வால் (இந்தியா), டாம் லதாம் (நியூசி.,), மார்னஸ் லபுசேன் (ஆஸி.,), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி.,), பென் ஸ்டோக்ஸ் (இங்கி.,), வாட்லிங் (விக்கெட் கீப்பர், நியூசி.,), பட் கம்மின்ஸ் (ஆஸி.,), மிட்சல் ஸ்டார்க் (ஆஸி.,), நீல் வாக்னர் (நியூசி.,), நாதன் லியான் (ஆஸி.,).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel