சிஏஏவுக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம்
- பாகிஸ்தான், ஆப்கான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட 6 மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்காக குடியுரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
- இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மத அடிப்படையில் பாகுபாட்டினை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
- குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல் மாநிலமாக, கேரள மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இந்நிலையில், கேரளாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டு நாள் சிறப்பு சட்டசபைக் கூட்டத் தொடரில் அம்மாநில அமைச்சர் மொஹிந்திரா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
ககன்யான்' திட்டத்துக்கு ரஷ்யாவில் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் இஸ்ரோ
- விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் `ககன்யான்' திட்டத்துக்காக நான்கு விண்வெளி வீரர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து 11 மாதம் பயிற்சியளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
- விண்வெளி வீரர்கள் இந்தப் பயிற்சியை ரஷ்யாவில் பெற உள்ளனர். இந்தப் பயிற்சிக்குப் பிறகு இஸ்ரோ தயாரித்துள்ள Module-ஐ இயக்குவது மற்றும் அதைச் சுற்றி எப்படி வேலை பார்ப்பது உள்ளிட்ட பயிற்சியை விண்வெளி வீரர்கள் பெறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
- 10,000 கோடி ரூபாயில் மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டமானது 2022-ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக `Baahubali GSLV Mark-III' ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த `ககன்யான்' திட்டத்தின் மூலம்தான் மனிதர்களை முதன்முறையாக விண்வெளிக்கு அனுப்புகிறது இந்தியா.
பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்தது ஐ.நா., நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கும்
- இந்தியாவின், நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை, குறைத்து அறிவித்துள்ளது,
- இந்தியாவின், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியை, 7.6 சதவீதம் என்று முன்பு கணித்திருந்ததிலிருந்து குறைத்து, 5.7 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.
- மேலும், அடுத்த நிதியாண்டுக்கான வளர்ச்சி, முன்னர் கணிக்கப்பட்டிருந்த, 7.4 சதவீதத்திலிருந்து, 6.6 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது.
- அத்துடன், அடுத்த நிதியாண்டின் ஆரம்பத்தில், வளர்ச்சி விகிதம், 6.3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேக்கமடையும் உலக பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, 2020ல், 2.5 சதவீதமாக இருக்கும்.
- புவிசார் அரசியல் உள்ளிட்ட எதிர்மறையான சூழ்நிலையில் வளர்ச்சி, இந்த ஆண்டில் வெறும், 1.8 சதவீதமாக குறையும். தனிநபர் வருமானத்தை பொறுத்தவரை, ஐந்து நாடுகளில் ஒரு நாட்டின் தனிநபர் வருமானம் தேக்கமடையும் அல்லது வீழ்ச்சியடையும்.
- அதேசமயம், 2020ல், தனிநபர், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், 4 சதவீதத்தை தாண்டக்கூடிய நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக இருக்கும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, 2019ல் வளர்ச்சி, 2.2 சதவீதத்திலிருந்து, 1.7 சதவீதமாக குறையும்.
- ஐரோப்பிய ஒன்றியத்தில், தனியார் நுகர்வு வளர்ச்சியால், 2019ல் வளர்ச்சி, 1.4 சதவீதத்திலிருந்து, 1.6 சதவீதமாகஅதிகரிக்க வாய்ப்புள்ளது. சீனாவின் வளர்ச்சி, 2019ல், 6.1 சதவீதமாகவும்; 2020ல், 6 சதவீதமாகவும்; 2021ல், 5.9 சதவீதமாகவும் இருக்கும்.
- முன்னுரிமை உலகளாவிய பொருளாதார சமநிலை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளிலிருந்து சீனா, இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளை நோக்கி நகர்ந்து வருவதால், உலகளாவிய பொருளாதார முடிவெடுக்கும் சக்தியும் இடம் மாறுகிறது.
- கொள்கைகளை வகுக்கும் இடத்தில் இருப்பவர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக, சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
- இதற்கு கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களில், முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது 5G ப்ராட்பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைகோள்
- சீனாவில், தனியார் அமைப்பு தயாரித்துள்ள 5G ப்ராட்பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
- சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஜியூக்வான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, Kuaizhou-1A என்ற ராக்கெட் மூலம், இந்த செயற்கைக் கோளை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது.
- பெய்ஜிங்கை சேர்ந்த தனியார் அமைப்பு தயாரித்துள்ள, 300 கிலோகிராமுக்கும் குறைவான எடைகொண்ட இந்த சிறிய ரக செயற்கைக் கோள், வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
- இந்த செயற்கைக் கோள் மூலம், 5G தொழில்நுட்பத்தில், ஒரு வினாடிக்கு 10 ஜிகாபைட் தகவல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.