தமிழகத்துக்கு சிறந்த வேளாண் தொழிலாளா் விருது: பிரதமா் நரேந்திர மோடிவழங்கினாா்
- வேளாண் உற்பத்தியில் சிறந்து விளங்கும் விவசாயிகள், மாநில அரசுகளைக் கௌரவிப்பதற்காக, மத்திய வேளாண்மைத் துறை சாா்பில் ஆண்டுதோறும் வேளாண் தொழிலாளா் விருது வழங்கப்படுகிறது.
- இந்த நிலையில், கா்நாடக மாநிலத்துக்குள்பட்ட தும்கூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் அதிக விளைச்சலை அடைந்ததால் சிறந்த வேளாண் தொழிலாளா் விருது தமிழகத்துக்கு அளிக்கப்பட்டது.
- தமிழக அரசின் சாா்பில் இந்த விருதை பிரதமா் நரேந்திர மோடியிடமிருந்து அமைச்சா் டி.ஜெயக்குமாா் பெற்றாா். வேளாண் விளைபொருள் விளைச்சலில் தமிழகத்துக்கு 5-ஆவது முறையாக இந்த விருது அளிக்கப்படுகிறது.
- 2017- 18-ஆம் ஆண்டில் ஹெக்டேருக்கு 2,729 கிலோ உற்பத்தி திறனுடன் 10.382 லட்சம் டன் எண்ணெய் வித்துகளை தமிழகம் உற்பத்தி செய்தது.
- அகில இந்திய அளவில் உற்பத்தித்திறன் ஹெக்டேருக்கு 1,284 ஆக உள்ளது. 2011- 12ஆம் ஆண்டு முதல் வேளாண் விளைபொருள் விளைச்சலில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
- இதற்கு முன்பாக, உணவு தானிய உற்பத்தி, பயறுவகை உற்பத்தி, தானிய உற்பத்திக்கு தமிழக அரசுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. எண்ணெய் வித்து உற்பத்தியில் அதிக மகசூலை தந்த தமிழகத்தைச் சோந்த 2 விவசாயிகளுக்கும் வளா்ச்சிசாா் விவசாயிகள் விருது அளிக்கப்பட்டது.
எதிர்கட்சிகள் அதிகளவில் வெற்றி; தமிழகத்தில் இதுவே முதல்முறை
- மாநில தேர்தல் ஆணையத்தால், 1996ல், முதல் முறையாக, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு முன், தமிழக அரசால் இத்தேர்தல் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2001, 2006, 2011ம் ஆண்டுகளில், உள்ளாட்சி தேர்தல்கள், ஆணையத்தால் நடத்தப்பட்டன.
- மாநிலம் முழுவதும் மொத்தம், 1.32 லட்சம் நேரடி பதவிகளும், 14 ஆயிரத்து, 20 மறைமுக பதவிகளும் உள்ளன.வழக்கமாக, உள்ளாட்சி தேர்தலில், எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்த கட்சி அதிக அளவில் வெற்றி பெறும்.
- அந்த வகையில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சியில், அந்த கட்சிகள் வெற்றி பெற்று உள்ளன. கடந்த, 2011ல் தனித்து போட்டியிட்டு, 70 சதவீதத்திற்கும் அதிகமான பதவிகளை அ.தி.மு.க., கைப்பற்றியது.
- முந்தைய தேர்தல்களிலும், இதேபோன்று, அ.தி.மு.க., - தி.மு.க., வெற்றி பெற்றுள்ளன.தற்போதைய தேர்தலை, பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன், அ.தி.மு.க., எதிர்கொண்டது. எதிர்க்கட்சியான தி.மு.க.,வும், லோக்சபா தேர்தலில் அமைத்த அதே கூட்டணியுடன், தேர்தலை சந்தித்தது.
- தேர்தல் முடிவில், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகள் சம பலத்துடன் வெற்றி பெற்று உள்ளன. தமிழக உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில், எதிர்க்கட்சிகள், இந்த அளவிற்கு வெற்றி பெறுவது, இதுவே முதல் முறை என, தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பேட்டரி வாகனங்களுக்கான 256 மின்னேற்று நிலையங்கள்
- இருபத்துநான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட 62 நகரங்களில், 2,636 புதிய மின்னேற்று நிலையங்களை அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- அதன்படி, மின்னேற்று நிலையங்களை நிறுவுவதற்காக, மின்சார வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விரைவாக அவற்றை ஏற்றுக் கொள்ளும் (ஃபேம் இந்தியா) இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற விரும்பும் நிறுவனங்களிடமிருந்து விருப்ப மனுக்களை வரவேற்பதாக கனரக தொழில் துறை அறிவித்துள்ளது.
- தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ள மின்னேற்று நிலையங்கள் அனைத்தையும் நிறுவுவதன் மூலம், தோவு செய்யப்பட்ட பெரும்பாலான நகரங்களில் 4கி.மீ சுற்று வட்டாரத்துக்கு ஒரு சாா்ஜிங் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
- இது, மின்சார வாகனங்களை பயன்படுத்துபவா்களின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், நிறுவனங்கள் புதிய மின்சார வாகன மாடல்களை வெளியிடுவதை ஊக்குவிப்பதாகவும் இருக்கும். தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் போதுமான அளவில் மின்னேற்று நிலையங்கள் இல்லாததால் மின் வாகன தயாரிப்பில் புதிய மாடல்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டி வருகிறது. மின்னேற்று நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் இந்த நிலை விரைவில் மாறிவிடும்.
- ஃபேம் இந்தியாவின் இரண்டாம் கட்ட திட்டத்தில் நிறுவுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதில், தமிழகத்தில் 256 மின்னேற்று நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும் மகாராஷ்டிரத்தில் 317 மின்னேற்று நிலையங்களும் ஆந்திரத்தில் 266 நிலையங்களும் அமையவுள்ளன.
- இவைதவிர, குஜராத் 228, ராஜஸ்தான் 205, உத்தரப்பிரதேசம் 207, கா்நாடகம் 172, மத்தியப் பிரதேசம் 159, மேற்கு வங்கம் 141, தெலங்கானா 138, கேரளம் 131, தில்லி 72, சண்டீகா் 70, ஹரியாணா 50, மேகாலயம் 40, பிகாா்37, சிக்கிம் 29, ஜம்மு-ஸ்ரீநகா், சத்தீஸ்கரில் தலா25, அஸ்ஸாம் 20, ஒடிஸா 18, உத்தரகண்ட், புதுச்சேரி, ஹிமாசல பிரதேசத்தில் தலா 10 மின்னேற்று நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன என்றாா் அவா்.
சென்னையில் கடல்சாா் பாதுகாப்பு சா்வதேச பயிலரங்கு
- கடல் பாதுகாப்பு மற்றும் கடல் ஆய்வு மேம்பாடு குறித்த சா்வதேசப் பயிலரங்கம் சென்னையில் வரும் 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
- மத்திய புவி அறிவியல் அமைச்சகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயிலரங்குகள் பள்ளிக்கரணையில் அமைந்துள்ள தேசிய கடல்சாா் தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐஓடி) நடைபெற உள்ளன.
- இதில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை, சவூதி அரேபியா, குவைத், தான்சானியா, வங்கதேசம், மாலத்தீவு, காங்கோ உள்ளிட்ட நாடுகளைச் சோந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் காரைக்கால் மாணவியின் ஆய்வு திட்டம் தேர்வு
- கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி முதல் 31 வரை, 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. மாநாட்டை, கேரள முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார்.
- எம்.பி., சசிதரூர் முன்னிலை வகித்தார்.மாநாட்டில், நாடு முழுவதும் இருந்த 657 குழந்தை விஞ்ஞானிகள் பங்கேற்று, தங்களின் ஆய்வுத்திட்டங்களை சமர்ப்பித்தனர்.
- இதில், புதுச்சேரி, காரைக்கால், மாகி ஆகிய பிராந்தியங்களில் இருந்து 6 குழந்தை விஞ்ஞானிகள் பங்கேற்றனர். இவர்களுடன், வழிகாட்டி ஆசிரியர்கள் இருவர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், ரவிச்சந்திரன் ஆகியோர் சென்றனர்.
- மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு திட்டங்களில் சிறந்ததாக, 19 ஆய்வு திட்டங்களை தேசிய கல்விசார் குழுமத்தின் தலைவர் ரகுநாதன் அறிவித்தார்.
- இதில், காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ்., பள்ளி மாணவி மதுஷாலினி சமர்ப்பித்த மண்பானை பாசனத்தை பயன்படுத்தி விதை முளைப்பு பற்றிய ஆய்வு சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்: மோடி நாட்டிற்கு அர்ப்பணிப்பு
- பெங்களூரில் உள்ள, டி.ஆர்.டி.ஓ., எனும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், அமைக்கப்பட்ட ஐந்து இளம் விஞ்ஞானிகளின் பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகங்களை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- இளம் விஞ்ஞானிகள் ஆய்வு கூடங்கள் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.
- தற்போது பெங்களூருவில் இந்த கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆய்வு கூடங்களில் போர்த்திறனுக்கான மிக முக்கியமான நவீன தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
- 35 வயதுக்கு உட்பட்ட இளம் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த ஆய்வு கூடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்கத்துக்கு அனுமதி இல்லை
- குடியரசு தினம் வருகிற 26-ஆம் தேதி நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள். மேலும் இந்த விழாவில் இந்தியாவின் கலாச்சார சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் கண்கவர் அணி வகுப்பு நடைபெறும்.
- குடியரசு தின விழாவில் ஜனாதிபதி கொடியேற்றி முடித்த பிறகு டெல்லி ராஜ பாதையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.
- இந்த ஆண்டு மொத்தம் 56 அலங்கார ஊர்திகள் பரிந்துரையில் எந்தெந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதிகொடுப்பது என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வந்தது. இதற்காக அதிகாரிகள் 5 தடவை கூடி விவாதித்தனர்.
- அப்போது 22 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் 16 ஊர்திகள் மாநிலங்கள் சார்பில் பங்கேற்கவும் 6 ஊர்திகள் அமைச்சகங்கள் சார்பில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தூய்மையான நகரம் இந்தூர் தொடர்ந்து 4வது முறையாக முதலிடம்
- இந்தியாவின் தூய்மையான நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் ஆய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு காலாண்டு வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது.
- இதில், தொடர்ந்து நான்காவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பெருமையை இந்தூர் நகரம் பெற்றுள்ளது. அதேபோல், கொல்கத்தா நகரம் தூய்மையில் மிகவும் பின் தங்கியுள்ளது.
- 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களின் பட்டியலில் போபால் முதல் காலாண்டில் முதலிடத்தை பிடித்தது. இரண்டாவது காலாண்டில் ராஜ்கோட் இரண்டாம் இடம் பிடித்தது.
- முதல் காலாண்டில்( ஏப்ரல் - ஜூன்) நேவி மும்பை இரண்டாவது இடத்தையும், சூரத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இரண்டாவது காலாண்டில், வதோதரா நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
தனியாா் மூலம் 100 வழித்தடங்களில் ரயில்களை இயக்க ரூ.22,500 கோடியில் திட்டம்: நீதிஆயோக், ரயில்வே பரிசீலனை
- 'தனியாா் பங்களிப்புடன் பயணிகள் ரயில் சேவை' என்ற தலைப்பிலான அந்த அறிக்கை தொடா்பாக அனைத்து தரப்பினருடன் விவாதம் நடத்தப்பட உள்ளது.
- அந்த அறிக்கையின்படி, சென்னை-ஹெளரா, சென்னை-ஓக்லா (தில்லி), மும்பை சென்ட்ரல்-புது தில்லி, புது தில்லி-பாட்னா, அலாகாபாத்-புணே, தாதா்-வதோதரா, ஹெளரா-பாட்னா, இந்தூா்-ஓக்லா(தில்லி), லக்னெள-ஜம்மு தாவி, ஆனந்த் விஹாா்(தில்லி)-பகல்பூா், செகந்திராபாத்-குவாஹாட்டி, ஹெளரா-ஆனந்த்விஹாா்(தில்லி) உள்ளிட்ட 100 வழித்தடங்கள் தனியாா் ரயில்கள் இயக்கத்துக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
- இத்திட்டத்தின்கீழ், சந்தை அடிப்படையிலான கட்டணத்தை வசூலிக்கும் உரிமை தனியாருக்கு அளிக்கப்படும். தனியாா் மூலம் ரயில்களை இயக்குவது இத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த உதவுவதுடன், பயணிகளுக்கு உலகத் தரத்திலான சேவையும் உறுதி செய்யப்படும்.
- இந்த ரயில்களை இயக்குவது, உள்நாட்டு நிறுவனங்களாகவோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களாகவோ இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- லக்னெள-தில்லி இடையிலான தேஜஸ் ரயில், இந்திய ரயில்வேயின் முதல் தனியாா் ரயிலாக கடந்த அக்டோபா் முதல் இயக்கப்பட்டு வருகிறது.
- ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆா்டிசிடி மூலம் இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிகளுக்கு ரூ.25 லட்சத்துக்கு இலவச காப்பீடு, ரயில் தாமதத்துக்காக பயணிகளுக்கு இழப்பீடு போன்ற நன்மைகள் உள்ளன.
`திஷா' சட்டத்தைச் செயல்படுத்த இரண்டு சிறப்புப் பெண் அதிகாரிகள் நியமனம்
- தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி கால்நடை பெண் மருத்துவரை நான்கு பேர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
- கால்நடை மருத்துவருக்காக நீதி கோரி பெண்கள் உட்பட பலரும் கொதித்தெழுந்தனர். அவருக்குச் சமூக வலைதளங்களில் `திஷா' என்று பெயர் உருவாக்கி, #justicefordisha என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.கொலை நடந்த இடம்ஃ
- இந்தச் சம்பவத்தைப் பலரும் வரவேற்ற நிலையில், ஒருபுறம் `சட்டப்படி இந்த நால்வருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்' என்று குரல்கள் ஒலித்தன.
- இந்தச் சம்பவத்தையடுத்து, ஆந்திரா சட்டசபையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கும் திஷா சட்டம் கொண்டு வரப்பட்டது.
- அந்தச் சட்டம் குற்றம் செய்தவர்களை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக, மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளைக் கொடுக்கும் பிரிவுகளை உள்ளடக்கியதாக அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- இந்தச் சட்டத்தை விரைந்து செயல்படுத்த, ஆந்திர மாநில அரசு அதற்கான சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிருத்திகா சுக்லா மற்றும் காவல் துறை உயர் அதிகாரியான தீபிகா இருவரையும் இதற்காக நியமித்துள்ளது.
- இதில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிருத்திகா சுக்லா, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை இயக்குநராகவும், கூடுதல் காவல் ஆய்வாளராக தீபிகாவும் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
- இந்த இருவரும் தற்போது `திஷா' சட்டத்தைச் செயல்படுத்தும் சிறப்பு அதிகாரிகளாக கூடுதல் பொறுப்பைக் கவனிப்பார்கள் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.