Type Here to Get Search Results !

24th JANUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் நாட்டிலேயே வேலூா் மாநகராட்சி முதலிடம்: மத்திய அரசு விருது
  • திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய வகையில் நாட்டிலேயே வேலூா் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான விருதை தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரங்கள் துறை செயலா் துா்காபிரசாத் மிஸ்ரா வழங்கினாா்.
  • வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வாா்டுகளிலிருந்து நாள்தோறும் 230 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுகின்றன. இதில் 167 டன் மக்கும் குப்பைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகின்றன. 
  • மக்காத குப்பைகள் கிடங்குகள் சேமித்து வைக்கப்பட்டு சிமெண்ட் தயாரிப்பு, சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதற்காக மாநகரில் 57 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறைத்துறை காவலர்களுக்கான குடியரசு தலைவர் விருது: தமிழகத்தில் 5 பேர் தேர்வு
  • குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய சிறைத்துறை காவலர்களுக்கான குடியரசு தலைவர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
  • வேலூர் சிறை டிஐஜி ஜெயபாரதி, திருப்பூர் மாவட்ட சிறை ஜெயிலர் தமிழ்மாறன், துணை ஜெயிலர் பேபி, கொக்கிரகுளம் துணை சிறையின் துணை ஜெயிலர் கீதா, அருப்புக்கோட்டை துணை சிறையின் காவலர் கண்ணன் உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிவுறு நகரத் திட்டத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி: கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது
  • கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் குளங்கள் மேம்பாடு, சாலை வசதி, உரம் தயாரிப்பு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் உக்கடம் கழிவுநீா்ப் பண்ணை மற்றும் கவுண்டம்பாளையத்தில் தலா ஒரு மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • உக்கடம் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தில் தினமும் 4,500 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2019 பிப்ரவரி முதல் தற்போது வரை 15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
  • பொலிவுறு நகரத் திட்டம் செயல்படுத்தப்படும் நகரங்களில், நகா்ப்புறச் சூழல், சமூக அம்சங்கள், கலாசாரம், பொருளாதாரம், போக்குவரத்து, நீா் மேலாண்மை, சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் சிறப்பு அம்சங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் மத்திய அரசு விருது வழங்கி வருகிறது.
  • அதன்படி 2019ஆம் ஆண்டுக்கான பொலிவுறு நகர விருது போட்டியானது, இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சகத்தின் கீழ் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பிரிவுகளில் தோவுபெற்ற நகரங்களுக்கான சான்றிதழ்கள், பரிசுகள் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.
  • 2019ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி நகா்ப்புற சூழல் என்ற பிரிவில் ரூ.5.5 கோடி மதிப்பில் கோவை, உக்கடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்துக்கு விருது வழங்கப்பட்டது. அதற்கான சான்றிதழ் மற்றும் ரூ.5 லட்சத்துக்கான ரொக்கப் பரிசை மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் பெற்றுக் கொண்டாா்.



எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலையில் இருக்கை
  • தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
  • அறிவியல், இசை, சமூக சீர்திருத்தம் உள்ளிட்ட துறைகளில் புகழ் பெற்று விளங்கிய பெண்களை கவுரவிக்கும் வகையில், அவர்களது பெயர்களில் பல்கலைகளில் இருக்கைகள் உருவாக்கி, ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தை சேர்ந்தவரும், புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞருமான, எம்.எஸ்.சுப்புலட்சுமி, மராட்டிய ராணி அகில்யா பாய் ஹோல்கர், மருத்துவ துறையை சேர்ந்த அனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி, விஞ்ஞானி கமலா ஷோனி, கல்வியாளர் ஹன்ஷா மேத்தா உள்ளிட்ட, 10 பேரின் பெயர்களில், இருக்கைகள் அமைக்கப்படும். 
காய்கனிகள் உற்பத்தியில் மேற்கு வங்கம் முதலிடம்
  • நாட்டிலேயே கடந்த 2018-19ம் ஆண்டில் காய்கனிகள் உற்பத்தியில் நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் தோட்டகலைத்துறை விளைச்சல் பற்றிய புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • கடந்த 2018-19ம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலம் மொத்தம் 29.55 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு காய்கனிகள் உற்பத்தி செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேச மாநிலம் இதே ஆண்டில் மொத்தம் 27.71 மில்லியன் மெட்ரிக் கடன் காய்கனிகள் உற்பத்தி செய்துள்ளது. 
  • கடந்த 2017-18ம் ஆண்டில் மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தில் இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மொத்த காய்கனிகள் உற்பத்தியில் மேற்கு வங்கம் 15.9 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்துள்ளது.
  • உ.பி.க்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ள மத்தியப்பிரதேசம் நாட்டின் காய்கனி உற்பத்தியில் 9.6 சதவீதம் அளவிற்கு உற்பத்தி செய்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பீகார் 9 சதவீதமும் குஜராத் 6.8 சதவீதம் என்ற அளவிலும் உற்பத்தி செய்துள்ளன. 
காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 2ம் இடம்
  • இயற்கை பேரழிவில் இருந்து எதிர்பாராத சுமை 'Contingent Liabilities from Natural Disasters Sri Lanka' என்ற தலைப்பிலான அறிக்கையிலேயே உலக வங்கி இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளது. 
  • இயற்கை அனர்த்தத்தினால் வருடாந்தம் வீடுகள், உட்கட்டமைப்பு, விவசாயம் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் நிவாரணத்திற்காக 313 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சுமார் 32 பில்லியன் ரூபாய் இழப்பு வெள்ளத்தினால் ஏற்படுகின்றது. கடும் காற்றின் காரணமாக 11 பில்லியன் ரூபாய் இழப்பும் வரட்சி மற்றும் மண் சரிவினால் 5.2 பில்லியன் ரூபாயும் சேதங்களுக்காக 1.8 பில்லியன் ரூபாயும் இழப்பு ஏற்படுகின்றது.
  • 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் 213 பேர் உயிரிழந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 1.2 மில்லியன் ரூபாயை வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு அரசாங்கம் செலவிட்டுள்ளது. உலகிலேயே காலநிலை மாற்றத்தினால் மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
  • இந்த காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த காலநிலை மாற்றம் பாதுகாக்கப்பட்ட அரிசி தயாரிப்பையும் சீர் குலைக்கின்றது. 
  • வரட்சியின் காரணமாக நாட்டின் மின்சார தேவையைச் சமாளிப்பதற்காக அனல்மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக 560 மில்லியன் டொலர்களை 2017ஆம் ஆண்டு அரசாங்கம் செலவிட்டுள்ளது. இது மொத்த உற்பத்தியின் 0.7 சதவீதமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel