Type Here to Get Search Results !

DOWNLOAD SEPTEMBER CURRENT AFFAIRS 2018 TNPSCSHOUTERS TAMIL PDF




TNPSC SHOUTERS  - SEPTEMBER 2018
CURRENT AFFAIRS
S.NO
DAY & MONTH
DOWNLOAD LINK
1.
1st SEPTEMBER 2018
2.
2nd SEPTEMBER 2018
3.
3rd SEPTEMBER 2018
4.
4th SEPTEMBER 2018
5.
5th SEPTEMBER 2018
6.
6th SEPTEMBER 2018
7.
7th SEPTEMBER 2018
8.
8th SEPTEMBER 2018
9.
9th SEPTEMBER 2018
10.
10th SEPTEMBER 2018
11.
11th SEPTEMBER 2018
12.
12th SEPTEMBER 2018
13.
13th SEPTEMBER 2018
14.
14th SEPTEMBER 2018
15.
15th SEPTEMBER 2018
16.
16th SEPTEMBER 2018
17.
17th SEPTEMBER 2018
18.
18th SEPTEMBER 2018
19.
19th SEPTEMBER 2018
20.
20th SEPTEMBER 2018
21.
21st SEPTEMBER 2018
22.
22nd SEPTEMBER 2018
23.
23rd SEPTEMBER 2018
24.
24th SEPTEMBER 2018
25.
25th SEPTEMBER 2018
26.
26th SEPTEMBER 2018
27.
27th SEPTEMBER 2018
28.
28th SEPTEMBER 2018
29.
29th SEPTEMBER 2018
30.
30th SEPTEMBER 2018


உச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பெயர் பரிந்துரை
  • உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பொறுப்புக்கு மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாயின் பெயரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்துள்ளார்.
  • உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்துவருகிறார். அவர் அக்டோபர் 2-ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். நீதித்துறை மரபுப்படி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவர், அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்க வேண்டும்.
  • தீபக் மிஸ்ராவின் பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கான பதவிக் காலம் நவம்பர் 2019 வரை உள்ளது. உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4 நீதிபதிகள் செய்தியாளர்கள் முன்னிலையில் அதிருப்தி தெரிவித்திருந்தனர். அதில், ரஞ்சன் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.93,960 கோடி
  • ஜிஎஸ்டி மூலம் மாதந்தோறும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கையும் தாண்டி சில மாதங்களில் அதிக வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி. வருவாய் 93 ஆயிரத்து 960 கோடியாக உள்ளது. இத்தகவலை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த் துறை இன்று தெரிவித்துள்ளது.
  • ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மத்திய ஜி.எஸ்.டி. 15 ஆயிரத்து 303 கோடி ரூபாயும், மாநிலங்களின் மூலம் ஜி.எஸ்.டி. 21 ஆயிரத்து 154 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.இறக்குமதி பொருட்களுக்கு வசூலிக்கப்படும் வரி உள்பட ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் 49 ஆயிரத்து 876 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இறக்குமதிக்கான செஸ் வரி 849 கோடி ரூபாய் உள்பட 7 ஆயிரத்து 628 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
பாலத்தீன அகதிகள் முகமைக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா
  • ஐ.நாவின் பாலத்தீனிய அகதிகள் முகமைக்கான தங்களது நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
  • பாலத்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் மீட்புப் பணி முகமை "சரிசெய்ய முடியாத அளவு தவறிழைத்துவிட்டதாக" அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  • "அமெரிக்க நிர்வாகம் இந்த விஷயத்தை கவனமாக மறுஆய்வு செய்தது. இதற்கு மேலும் ஐ.நாவின் மீட்புப் பணி முகமைக்கு நிதியுதவி அளிக்க முடியாது" என செய்தி தொடர்பாளர் ஹீதர் நவட் தெரிவித்துள்ளார்.
  • 1948ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களை காக்க அமைக்கப்பட்டதுதான் இந்த முகமை.
  • மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள 5 மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்களுக்கு சுகாதாரம், கல்வி
  • சமூக சேவைகள் ஆகியவற்றை இந்த முகமை அளித்து வருகிறது.இந்த முகமைக்கு அமெரிக்கா இதுவரை மிகப்பெரிய நிதியுதவியை அளித்து வரும் தனி ஒரு நாடாக உள்ளது. 2016ஆம் ஆண்டில் 368 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடனையாக வழங்கியுள்ளது அமெரிக்கா.
வரி கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
  • இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆக., 30 வரை, ஐந்து கோடி பேர், தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். 
  • கறுப்பு பணத்தை ஒழிக்கவும், நாட்டின் வரி வருவாயை உயர்த்தவும், பினாமிகள் பெயரில் சொத்து வாங்கி குவிப்பதை தடுக்கவும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. 'வரி கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, 



ஆண்கள் ஹாக்கியில் வெண்கலம்
  • ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கி 3வது இடத்துக்கான மோதலில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேற்று பலப்பரீட்சையில் இறங்கின. விறுவிறுப்பான இப்போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்று வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டது. 
  • இந்தியா சார்பில் ஆகாஷ்தீப் 3வது நிமிடத்திலும், ஹர்மான்பிரீத் 50வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பாகிஸ்தான் வீரர் அட்டியோ 52வது நிமிடத்தில் ஆறுதல் கோல் போட்டார். 
ஆசிய போட்டியில் மகளிர் ஹாக்கி அணிக்கு வெள்ளிப்பதக்கம்
  • ஆசிய மகளிர் ஹாக்கி பைனல் போட்டியில் இந்திய, ஜப்பான் அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.தோல்வியடைந்த இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
  • தங்கபதக்கம் வென்ற ஜப்பான் அணி 2020ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் அமீத்
  • ஆசிய விளையாட்டுக் குத்துச்சண்டையில் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் ஹஸன்பாய் டஸ்மாடோவை வீழ்த்தி இந்திய வீரர் அமீத் பங்கல் தங்கம் வென்று சாதித்துள்ளார்.
  • 49 கிலோ எடைப் பிரிவில் இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்தினார் அமீத் பங்கல். உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் டஸ்மாடோ 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தப் பிரிவில் தங்கம் வென்றவர். கடந்த ஆண்டு ஹம்பர்க்கில் நடந்த உலகச் சாம்பியனுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் பெண்கள் பிரிவில் வெள்ளி வென்றது இந்தியா
  • ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் ஹாங்காங்கிற்கு தோல்வி கண்ட இந்திய அணிக்கு வெள்ளி வென்றது.



'சமஹ்ரா சிக்ஷா' திட்டத்தின் மூலம் தற்காப்பு கலை பயிற்சிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு
  • நாடு முழுவதும் கல்வியின் தரத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமஹ்ரா சிக்ஷா திட்டம் வாயிலாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
  • இந்த திட்டத்தின் மூலம் தற்காப்பு கலை பயிற்சிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
  • தற்போது இந்த திட்டத்தின் வாயிலாக பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க நாடு முழுவதும் உள்ள 2,11,416 பள்ளிகளுக்கு ரூ.164.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும், நாடு முழுவதும் உள்ள 1,34,835 தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.102.22 கோடியும், 76,581 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.62.27 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
  • நாடு உயர்கல்வி தரத்தினை உயர்த்த ஏற்படுத்தப்பட்டமே சம்ஹார சிக்ஷா திட்டம் எனப்படும் தேசிய உயர்கல்வி மையம். ஏற்கனவே இந்த மையம் சார்பில் கல்வித் திட்டங்களுக்காக 1700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 70 புதிய மாதிரிக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும், ஏற்கெனவே உள்ள 29 கல்லூரிகள், மாதிரிக் கல்லூரிகளாக மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
  • மேலும் கிராமபுற பள்ளிகளில் போதிய வசதிகளை ஏற்படுத்தவும், SC/ST மாணவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்குவதற்கு ஏற்ற வகையிலும் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் கொள்கைகளின் படி 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் இருத்தல் வேண்டும், அதன்படி மாநில அரசு பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி: பிரிட்ஜ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றது இந்தியா
  • ஆசிய விளையாட்டு போட்டியில் பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டு போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவின் பிரணாப் பார்த்தன், சிவ்நாத் சர்க்கார் ஜோடி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel