Thursday, 31 December 2020

TNPSC 30th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

மதரசாக்களுக்கு எதிரான மசோதா அசாம் சட்டசபையில் நிறைவேற்றம்

 • அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில அரசின் நிதியுதவியுடன் முஸ்லிம்களால் நடத்தப்படும் மதரசா சிறப்பு பள்ளிகளை சராசரி பள்ளிகளாக மாற்றுவதற்கான மசோதா மாநில சட்டசபையில் கடந்த 28ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 
 • இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது காங்கிரஸ் மற்றும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'இந்த மசோதாவை ஆய்வு செய்ய தேர்வு குழுவுக்கு அனுப்பிவைக்கவேண்டும்' என அவர்கள் வலியுறுத்தினர்.
 • எனினும் மாநில கல்வித் துறை அமைச்சர் பிஸ்வ சர்மா அதை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் அந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது. 
 • இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.இந்த மசோதா நிறைவேறியுள்ளதால் மாநிலத்திலுள்ள அனைத்து மதரசாக்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் சராசரி பள்ளிகளாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிப்மர் கதிரியக்க துறை ஊழியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
 • இந்திய ரேடியோகிராபர்ஸ் சங்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கிளை சார்பில் 125-வது ஆண்டு உலக கதிர் வீச்சு தின விழா கொண்டாடப்பட்டது.
 • விழாவில் ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் சண்முகத்திற்கு இந்திய ரேடியோகிராபர்ஸ் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 
 • இந்திய ரேடியோலஜி மருத்துவர்கள் சங்கத் தலைவர் அமர்நாத், பேராசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கினர்.கடந்த 34 ஆண்டு களாக ஜிப்மர் கதிரியக்க துறையில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வரும் சண்முகம், மருத்துவ மாணவர்களை ஊக்குவித்து பயிற்சி அளித்தற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
ஐரோப்பிய யூனியன் - சீனா இடையே பொருளாதார ஒப்பந்தம்
 • ஐரோப்பிய யூனியன் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளி. அதே போல் சீனாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஐரோப்பிய யூனியனும் உள்ளது. 
 • ஒரு நாளைக்கு இரு நாட்டு வர்த்தகமானது சராசரியாக 100 கோடி பவுண்ட் அளவிற்கு நடக்கிறது. சீனாவின் சந்தையை தங்கள் நிறுவனங்கள் அணுகுவதை அதிகரிக்க ஐரோப்பா முயன்றது. 
 • ஆனால் சர்வதேச தொழிலாளர்கள் சட்டங்களை சீனா மதிக்காதது அதற்கு தடையாக இருந்தது.சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களை கட்டாய தொழிலாலர்களாக்கி பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யப்படுகிறது.
 • இது பற்றி அறிக்கைகள் இரு வாரங்களுக்கு முன் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியிருந்தன. இதனை கண்டித்து ஐரோப்பிய எம்.பி.,க்கள் கண்டன தீர்மானம் நிறைவேற்றிருந்தனர். 
 • இந்த சூழலில் தான் ஐரோப்பிய யூனியன் மற்றும் சீனா இடையே முக்கிய முதலீட்டு ஒப்பந்தம் உறுதியாகியிருக்கிறது. வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்த அக்கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜிங் பிங். பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மன் சான்ஸ்லர் ஏஞ்சலா மெர்க்கல் பங்கேற்றனர்.
ஹங்கேரி கல்வித் துறை - யுஜிசி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
 • ஹங்கேரி நாட்டுக்கு கல்வி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள கல்வி நிறுவனங்களில் 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கான குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் முறையில் கல்வி பயில விரும்பும் மாணவா்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
 • இதுதொடா்பான முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பம் உள்ளிட்டவற்றை இணையதளங்களில் பாா்வையிடலாம். அதன்படி, விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து யுஜிசியின் முகவரிக்கே நேரடியாக அனுப்பவேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
 • ஹங்கேரி நாட்டின் கல்வி நிறுவனங்களில் பயில விரும்பும் மாணவா்களுக்கு யுஜிசியின் உதவித் தொகை திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • ''தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் ஏவுகணை உற்பத்தி திறனை இந்தியா விரிவுபடுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, ஆகாஷ் ஏவுகணை அமைப்பை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
 • ஆகாஷ் ஏவுகணை அமைப்பில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் 96 சதவீதம் உள்நாட்டை சேர்ந்தவை. ஆகாஷின் ஏற்றுமதி பதிப்பு தற்போது நமது ஆயுதப்படையில் பயன்படுத்தப்படும் அமைப்பிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.
இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு மத்திய அரசு உத்தரவு
 • இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஜனவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மத்திய அரசு இஸ்ரோ தலைவர் சிவனின் பதிவுக்காலத்தை 2022-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரை, அதாவது ஓராண்டுக்கு நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
நாட்டில் முதல்முறையாக 1½ கி.மீ. நீள சரக்கு ரெயில்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
 • இந்தியாவில் இ.டி.எப்.சி. என்ற பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட கிழக்கு சரக்கு ரெயில்பாதை திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இது 1,839 கி.மீ. நீளம் கொண்டது.
 • இது பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் இருந்து மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா டங்குனி வரை நீள்கிறது. இந்த திட்டத்தின் ஒரு பிரிவாக உத்தரபிரதேச மாநிலத்தின் புதிய பாபூர்-புதிய குர்ஜா வரையில் 351 கி.மீ. தொலைவுக்கு ரூ.5,750 கோடி மதிப்பில் சரக்கு ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 
 • இந்த புதிய ரெயில்பாதையை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வழியாக தொடங்கிவைத்தார். பிரக்யாராஜில் (அலகாபாத்) அமைந்துள்ள இ.டி.எப்.சி. செயல்பாட்டு மையத்தையும் அவர் திறந்துவைத்தார்.
 • அத்துடன் நாட்டில் முதல்முறையாக 1½ கி.மீ. நீளம் கொண்ட சரக்கு ரெயில்களையும் அவர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
எஸ்டோனியா உட்பட 3 நாடுகளில் இந்திய தூதரகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • சென்னை-பெங்களூரு தொழில் பாதை (சிபிஐசி) திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபட்டணம் மற்றும் துமகுருவில் தொழில் பாதை முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • நொய்டாவில் பன்முக மாதிரி தளவாட மையம் மற்றும் பன்முக மாதிரி போக்குவரத்து மையம் அமைக்கவும் ஒப்புதல்.
 • எஸ்டோனியா, பராகுவே மற்றும் டொமினிக் குடியரசு நாடுகளில் இந்திய தூதரகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • உணவு தானியங்களான (அரிசி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் சோளம்), கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து, முதல் தலைமுறை எத்தனால் உற்பத்திக்கான வடி திறனை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • விண்வெளியின் அமைதியான பயன்பாடுகளில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • பாரதீப் துறைமுகத்தில், ரூ.3,004.63 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய கப்பல்களை கையாளும் விதத்தில், மேற்கு கப்பல்துறை உள்பட உள் கட்டமைப்பு வசதிகளை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ஆழப்படுத்தவும், மேம்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • இந்தியாவில் 684 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி திறன் உள்ளது. 2019-20 சர்க்கரை ஆண்டில் எங்கள் எத்தனால் கொள்முதல் 38 கோடி லிட்டரிலிருந்து 173 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2020 / DIGITAL INDIA AWARDS 2020

TNPSCSHOUTERS

 • புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை முன்னிறுத்தி அவற்றை அனைத்து அரசு நிறுவனங்களும் பின்பற்றுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, டிஜிட்டல் இந்தியா விருதுகள் இந்திய தேசிய இணையத்தில் நிறுவப்பட்டுள்ளன.
 • சுகாதாரம், தொழிலாளர், நிதி, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும்பொருட்டு, விரிவான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உபயோகிப்பதில் முன்னோடி முயற்சிகளைகொண்டுள்ள மாநிலம் மற்றும்யூனியன் பிரதேசங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
 • நம்பிக்கை இணையம், இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, பல்பொருள் இணையம், இயற்கை மொழி செயலாக்கம், குரல் பயனர்இடைமுகம், பெரிய தரவு மற்றும்பகுப்பாய்வு, மெய்நிகர் உண்மை போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களும் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
 • இந்நிலையில், 'டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்' என்ற பிரிவில் 'டிஜிட்டல் இந்தியா- 2020 தங்க விருதை' இந்த ஆண்டு தமிழகம் பெற்றுள்ளது. 

Wednesday, 30 December 2020

TNPSC 29th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

முரளிதரன் சாதனையை முறியடித்த அஸ்வின்

 • மெல்போர்னில் நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்சில் ஜோஷ் ஹேசில்வுட்டை அவுட் ஆக்கியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை ஆட்டக்காரர்களை வீழ்த்திய பந்து வீச்சாளராக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்து உள்ளார்.
 • அஸ்வின் இதுவரை 192 இடது கை ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார், இது இலங்கையின் முத்தையா முரளிதரனின் 191 பேரை விட சிறந்ததாகும். அஸ்வின் 73 டெஸ்ட் போட்டிகளில் இருந்து 25.22 சராசரியாக 375 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக ஹர்ஷ் வர்தன் நியமனம்

 • உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக மியான்மரைச் சேர்ந்த மின்ட்ஹிட்வே உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில் இந்தப் பதவிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தில், தென்கிழக்கு மண்டல அலுவலகம், மேற்கத்திய பசிபிக் மண்டல அலுவலகத் தொகுதியின் பிரதிநிதியாக 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல், 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரை ஹர்ஷ் வர்தன் செயல்படுவார்.
 • இந்த வாரியம் ஆண்டுக்கு இரு முறை கூடி தடுப்பூசித் திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும். இந்த உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியம், தனது திட்டங்கள் மூலம் உலக நாடுகளைத் தொற்றுநோய் அச்சுறுத்தலில் இருந்து காக்கிறது, ஏழ்மையைக் குறைக்கிறது.
 • மனித உயிர்களைக் காக்கிறது. உலகின் ஏழை நாடுகளில் 822 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இந்த வாரியம் உதவியுள்ளது.

உபி.யில் 351 கிமீ தொலைவுக்கு சரக்கு ரயில் சேவைக்கு தனி வழித்தடம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

 • பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் இருந்து மேற்கு வங்கத்தின் கொல்கத்தா வரை 1,840 கிமீ தொலைவுக்கு கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தை (இடிஎப்சி) ரயில்வே அமைத்து வருகிறது. 
 • இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், 351 கிமீ தொலைவுக்கு நியூ பாபுர் நியூ குர்ஜா வரையிலான சரக்கு ரயில் வழித்தட தொடக்க விழா நேற்று நடந்தது. 
 • வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பங்கேற்று, ரூ.5,750 கோடியில் அமைக்கப்பட்ட புதிய வழித்தடத்தை திறந்து வைத்து, அதில் 1.5 கிமீ நீள முதல் சரக்கு ரயிலின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், பிரயாக்ராஜ்ஜில் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்தின் கட்டுப்பாட்டு மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் முதல் மகரந்தச் சேர்க்கை பூங்கா திறப்பு

 • நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் மகரந்தச் சேர்க்கை பூங்கா இன்று உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹால்ட்வானியில் திறக்கப்பட்டது.
 • இந்த பூங்காவை பட்டாம்பூச்சி நிபுணர் பீட்டர் ஸ்மேடசெக் திறந்து வைத்தார். மேலும், இது சுமார் 50 வெவ்வேறு மகரந்தச் சேர்க்கை இனங்களைக் கொண்டுள்ளது. இதில் பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், பறவைகள் மற்றும் பிற பூச்சிக்களும் நிறைந்துள்ளது.
 • தற்போது, ​​பூமியில் உள்ள அனைத்து பூச்செடிகளிலும் 75-95 சதவீதம் வரை மகரந்தச் சேர்க்கைகளைச் சார்ந்து 180,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு தாவர இனங்களுக்கு மகரந்தச் சேர்க்கை சேவைகளை வழங்குகின்றது.
 • இந்த பூங்காவில், சாமந்தி, ரோஜா, ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி, பல்வேறு தேனீ மற்றும் பட்டாம்பூச்சி, பறவை மற்றும் அந்துப்பூச்சி இனங்கள் மற்றும் பறவைகள் மற்றும் அந்துப்பூச்சி இனங்கள் மற்றும் முட்டை, லார்வாக்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்கான தாவரங்களை ஹோஸ்ட் செய்வது போன்ற பல்வேறு மகரந்தச் சேர்க்கைகளுக்கு வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 • இது தவிர, பல்வேறு பறவை மற்றும் பட்டாம்பூச்சி இனங்களை ஈர்க்க, பறவை தீவனங்கள் மற்றும் கூடுகள் மற்றும் பல பழ மரங்களுடன் பூங்கா முழுவதும் பல்வேறு பறவை இனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

Tuesday, 29 December 2020

TNPSC 28th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

புதிய திபெத் கொள்கை டிரம்ப் வெளியிட்டார்

 • ஆசியாவில் உள்ள திபெத்தை, தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா அறிவித்துள்ளது. தனி நாடு கோரும் திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவை, பயங்கரவாதியாக சீனா அறிவித்துள்ளது. 
 • திபெத் உடன் மற்ற நாடுகள் நேரடி தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், சீனா கூறி வருகிறது.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், புதிய மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். 
 • திபெத் தொடர்பான இந்த புதிய கொள்கைக்கு, அமெரிக்க பார்லிமென்ட், சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
 • இந்த புதிய சட்டத்தில் திபெத்தின் லாசாவில், புதிய அமெரிக்க துாதரகம் திறப்பதற்கான நடவடிக்கைகளை, வெளியுறவு அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும்; அதுவரை, அமெரிக்காவில், புதிய சீன துாதரகங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படாது.
 • திபெத்தில் அமெரிக்க துாதரகம் திறப்பதற்கு இடையூறாக இருக்கும் சீன அதிகாரிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள், அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
 • திபெத் புத்த மதத் தலைவராக, 15வது தலாய்லாமாவை, அந்த மதத்தினர் ஒருமனதாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், சீனாவின் தலையீடு இருக்கக் கூடாது. இதற்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெறும் முயற்சியில், அமெரிக்க வெளியுறவுத் துறை ஈடுபடும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 
 • காந்தி - கிங் ஒப்பந்தம் : மஹாத்மா காந்தி - மார்ட்டின் லுாதர் கிங் ஜூனியர் பெயரில், கல்வியாளர்கள் பரிமாற்றத்துக்காக, அமெரிக்கா - இந்தியா இடையே ஒப்பந்தம் செய்வதற்கான சட்டத்தில், அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
100 வது கிஸான் ரயிலை பிரதமா் நரோந்திர மோடி தொடங்கி வைத்தாா்
 • விவசாயிப் பொருள்களை கொண்டு செல்லும் நாட்டின் 100 வது கிஸான் ரயிலை பிரதமா் நரோந்திர மோடி திங்கள்கிழமை கானொலி வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தாா். 
 • மகாராஷ்டிர மாநிலம், சங்கோலாவிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாா் வரையில் இந்த ரயில் செல்லும். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள், நரேந்திர சிங் தோமா், பியூஷ் கோயல் ஆகியோா் கலந்து கொண்டனா்.
 • தற்போது ஆந்திரம், மகாராஷ்டிரம், பிகாா், நாக்பூா் உள்ளிட்ட 9 ரயில் மாா்க்கங்களில் கிஸான் ரயில் இயக்கப்படுகிறது. கரோனா காலத்தில் சவால்கள் இருந்தபோதிலும் கடந்த நான்கு மாதங்களில் கிஸான் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
 • வேளாண் தொழில் இருந்துவரும் இடங்களில் எல்லாம் விவசாயிகள் நலனுக்காக கிஸான் ரயில் விடப்படும். இந்த ரயில்கள் மூலம் 80 சதவீதம் சிறு மற்றும் குறு விவசாயிகள் பலனடைய முடியும்.
 • கிஸான் ரயில்களில் விவசாயிகள் விளை பொருள்களைக் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. 50 கிலோ அல்லது 100 கிலோ விளைபொருள்களைக்கூட ரயிலில் அனுப்பலாம். 
 • விவசாயிகள் சாலை மாா்க்கமாக விளைப் பொருள்களைள சந்தைக்கு கொண்டுள்ள அதிகம் செலவிட வேண்டிவந்தது. இதையடுத்தே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை கொண்டு செல்ல அரசு 50 சதவீத மானியம் வழங்கியது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 66 லட்சம் கோடி நிதி உதவி டிரம்ப் ஒப்புதல்

 • அமெரிக்காவில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள், வேலையிழந்தவர்களுக்கான 66 லட்சம் கோடி நிவாரண நிதி உள்ளிட்ட 170 லட்சம் கோடி சிறப்பு தொகுப்புக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் வழங்கினார். 
 • அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் பலர் வேலையிழந்து தவிக்கின்றனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக 66 லட்சம் கோடி வழங்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
 • இதே போல, அரசு அமைப்புகளுக்கு 104 லட்சம் கோடி வழங்குவதற்கான மசோதாவும் நிறைவேறியது. இறுதியாக அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்தால் இது சட்டமாகும். 

ஜன.,1 முதல் அனைத்துவகை வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி மத்திய அரசு

 • கொரோனா பொதுமுடக்கம், தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
 • இதன் காரணமாக சில்லறை வர்த்தகம், மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுநாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்தது. 
 • இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
 • இந்நிலையில், தற்போது நிலமை சீராகி விட்டதால், அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவின் முதல் ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில் சேவையை தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்
 • தில்லி, என்சிஆா் பகுதியில் பொதுப் போக்குவரத்தில் தில்லி மெட்ரோ ரயில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. தில்லி மெட்ரோ ரயில் சேவையை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) மேற்கொண்டு வருகிறது. 2002-ஆம் ஆண்டு, டிசம்பா் 24-ஆம் தேதி ஷாதரா- தீஸ் ஹஸாரி ரயில் நிலையங்கள் இடையே 8.4 கிலோ மீட்டா் வழித்தடத்தில் இந்த ரயில் சேவை முதல் முதலாக தொடங்கப்பட்டது.
 • அதைத் தொடா்ந்து பல கட்டங்களாக மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி விரிவுபடுத்தப்பட்டு, நகரின் பல பகுதிகளிலும் மெட்ரோ ரயில் சேவை மொத்தம் எட்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
 • மெட்ரோ வழித்தடத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் படிப்படியாக புகுத்த தில்லி மெட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதன் நீட்சியாக தற்போது நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநா் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை மெட்ரோவின் எட்டாவது மெஜந்தா வழித்தடத்தில் 38 கிலோ மீட்டா் தொலைவுக்கு இயக்கப்படுகிறது.
 • இந்த மெஜந்தா வழித்தடத்தில் மேற்கு ஜனக்புரி- பொட்டானிக்கல் காா்டன் இடையே இந்த புதிய முறையில் ரயில் இயக்கப்பட உள்ளது. மெஜந்தா வழித்தடம் தேசியத் தலைநகா் மற்றும் அதை ஒட்டியுள்ள நொய்டா, குருகிராம், பரீதாபாத், காஜியாபாத், பஹதுா்கா் ஆகிய இடங்களைச் சென்றடையும் வகையில் 390 கிலோ மீட்டா் நீளம் கொண்டது.
 • ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்படும் ரயில் சேவையானது முற்றிலும் தானியங்கி முறையை அடிப்படையாகக் கொண்டதாகும். ஓட்டுநா் இல்லாமல் ரயில் இயக்கப்படுவதற்கு முந்தைய விதிகள் அனுமதி அளிக்காததால் மத்திய அரசு மெட்ரோ ரயில்வே பொது விதிகளில் மாற்றம் செய்து அறிவிக்கையாக வெளியிட்டது.
 • இதையடுத்து, தேதி மெஜந்தா ரயில் வழித்தடத்தில் தானியங்கி முறையில் ஓட்டுநா் இல்லா ரயில் சேவை இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி இந்த புதிய சேவையை தொடங்கிவைத்தார்.
 • ஓட்டுநா் இல்லாமல் ரயில் இயக்கப்படும் வகையில் இந்த வழித்தடத்தில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்தத் தொழில்நுட்பம் வழித்தடம் 7 மற்றும் 8-இல் மட்டுமே அமையப்பெற்றுள்ளது. எனினும், தற்போதைக்கு வழித்தடம் 8-இல் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஓட்டுநா் இல்லாமல் இயங்கும் வகையில் தொழில்நுட்பம் அமையப்பெற்றுள்ளது.
 • இந்த வகை ரயில்கள் அனைத்தும் செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை (ஓசிசி) மூலம் கட்டுப்படுத்தப்படும். தற்போது இந்த கட்டுப்பாட்டு அறைகள் மெட்ரோ தலைமையகத்தில் இரண்டும், சாஸ்திரி பாா்க்கில் ஒன்றும் உள்ளன. 
 • தகவல் தொடா்பு சாா்ந்த ரயில் கட்டுப்பாட்டு சமிக்ஞை தொழில்நுட்பம் மூலம் ரயில்களை தானியங்கி மூலம் இயக்குவதை கண்காணிக்க உதவிடுகிறது.
 • வன்பொருள்களை மாற்றுவதாக இருந்தால் மட்டுமே மனிதச் செயல்பாடுகள் தேவைப்படும். இந்த மெஜந்தா வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாமல் ரயில்களை இயக்குவதற்கான அனுமதியை ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தசாப்தத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் 2011 - 2020 / PLAYER OF THE DECADE 2011 - 2020

TNPSCSHOUTERS

 

 • டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடங்கிய கனவு அணிகளை ஐசிசி வெளியிட்டது. 
 • அதில் இந்திய வீரர்கள் அதிக அளவில் தேர்வான நிலையில், விருது பெறும் வீரர் வீராங்கனைகள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர் என இரண்டு விருதுகளை விராத் கோஹ்லி தட்டிச் சென்றார்.
 • விருதுக்கான காலகட்டத்தில் அவர் 66 சர்வதேச சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்துக்கு கிடைத்துள்ளது. 
 • டி20 போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை ஆப்கானிஸ்தான் சுழல் நட்சத்திரம் ரஷித் கான் பெறுகிறார். கிரிக்கெட் நெறிமுறைகளை கடைப்பிடித்ததற்கான 'ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்' விருதுக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 • கடந்த 2011ல் நாட்டிங்காமில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன் இயான் பெல் சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட்டானபோது, அவரை மீண்டும் பேட் செய்யுமாறு பெருந்தன்மையுடன் அழைத்ததற்காக இந்த விருது தோனிக்கு வழங்கப்படுகிறது.
 • ஆன்லைனில் நடந்த வாக்கெடுப்பில் ரசிகர்கள் ஒருமனதாக அவரை தேர்வு செய்தனர். பெர்ரி ஹாட்ரிக்! தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த வீராங்கனை என 3 விருதுகளையும் ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி கைப்பற்றியுள்ளார்.

Monday, 28 December 2020

Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana SEHAT scheme for Jammu and Kashmir ஜம்மு காஷ்மீருக்கான ஆயுஷ்மான் பிரதான் மந்திரி பாரத் ஜெய் செஹத்

TNPSCSHOUTERS

 • ஜம்மு காஷ்மீருக்கான ஆயுஷ்மான் பிரதான் மந்திரி பாரத்  ஜெய் செஹத் (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana SEHAT scheme for Jammu and Kashmir) திட்டத்தை 26-12-2020 அன்று காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
 • ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டை இத்திட்டம் வழங்குகிறது. ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையில் காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது. கூடுதலாக சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்படுகிறது. பிரதமர்-ஜெய்யுடன் இணைந்து செயல்பட உள்ள இத்திட்டத்தின் பலன்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறலாம்.
 • அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் இத்திட்டம் வழங்குவதோடு, நிதி ஆபத்தில் இருந்து மக்களைக் காத்து, அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது.

TNPSC 27th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

21 நாட்களில் 72 ரயில் பெட்டிகள் தயாரித்து, ஐ.சி.எப்., சாதனை

 • சென்னையில், ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்., கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், ரயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது. இம்மாதம், பராமரிப்பு பணி மற்றும் விடுமுறை நாட்கள் தவிர, 21 நாட்கள் மட்டுமே, பெட்டி தயாரிப்பு பணிகள் நடந்தன. 
 • இதில், 'மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட்' எனும், 'மெமூ' ரயில் பெட்டிகள் தயாரிப்பு துரிதமாக நடந்துள்ளது. இதில், ஒன்பது ரயில்களுக்கான, 72 பெட்டிகள் தயாரித்து, ஐ.சி.எப்., சாதனை படைத்துள்ளது. 
 • இத்துடன், ராஜஸ்தான் மாநில சுற்றுலாத் துறைக்கு, புதிய வடிவமைப்புடன் கூடிய, 'விஸ்டம்' என்ற சுற்றுலா பயணியருக்கான ரயில் பெட்டியும், மஹாராஷ்டிரா மாநிலம், லாட்டூரில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
 • சுற்றுலா இடங்களில், வெளிப்புற காட்சிகளை எல்லா திசையிலும் பார்க்க ஏதுவாக, பெட்டியின் மேற்கூரை முழுதும், நவீன கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில், 44 பேர் பயணம் செய்யலாம். 
 • இத்துடன், ஐ.சி.எப்., உற்பத்தி மேம்பாட்டுக்கு பெரிதும் உதவியாக இருந்ததற்காக, 'வெல்டிங்' பிரிவுக்கு தரச்சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், ஐ.சி.எப்., தரக்கட்டுப்பாடு மேலாண்மைக்காக, 'ஐ.எஸ்.ஓ., 9,000, ஐ.எஸ்.ஓ., 14,000' என்ற தரச்சான்றுகளும் பெற்றுள்ளன.

தஞ்சை மாணவன் கண்டுபிடித்த மிகச்சிறிய செயற்கைகோள்

 • தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் ரியாஸ்தீன்(18). சாஸ்த்ரா கல்லூரியில், பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் 2ம் ஆண்டு படித்து வரும் இவர் வடிவமைத்துள்ள சிறிய செயற்கைக்கோள் வரும் 2021 ஜூனில் அமெரிக்காவின் நாசா விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. 
 • நாசா விண்வெளி மையம் மற்றும் 'ஐ டூ லேனிங்' அமைப்பு இணைந்து 'க்யூப் இன்ஸ்பேஸ்' என்ற விண்வெளி ஆராய்ச்சி போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் 73 நாடுகளை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கடந்த 2019 - 2020க்கான போட்டியில் கலந்துகொண்டு, தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தேன். இதில் நான் உருவாக்கிய விசன்-1 மற்றும் விசன் -2 இரண்டு செயற்கைக்கோள் தேர்வாகியுள்ளது.
 • இரு செயற்கைகோளும், 37 மில்லி மீட்டர் உயரமும், 33 கிராம் எடையும் கொண்டது. இதற்கு, 'பெமிடோ ' என, பெயரிடப்பட்டுள்ளது. பெமிடோ என்பது எடையில் சிறியது என பொருளாகும். இது டெக்னாலஜி எக்ஸ் பிரிமெண்ட்டல் செயற்கைகோள். 
 • இதற்கு தேவையான, மின் சக்தியை, செயற்கை கோளின் மேற்புறத்தில் உள்ள, சோலார் செல்களில் இருந்து பெற முடியும். இதில் 11 சென்சார் பொருத்தப்பட்டு இருப்பதால், விண்வெளியில் இருந்து, பல வகையான தகவல்களை அறியலாம். 
 • இதில், விசன் -1 செயற்கை கோள் 2021 ஜூன் மாதம், நாசா விண்வெளி தளத்தில் இருந்து, எஸ்.ஆர். - 7 ராக்கெட் மூலம், ஏவப்படுகிறது. இதைப்போன்று விசன்-2 செயற்கோள் ஆர்.பி-6 என்கிற ஆராய்ச்சி பலூனில் பறக்கவிடப்படுகிறது.

ICC TEAM OF DECADE 2011 - 2020 / ஐசிசியின் கனவு அணி

TNPSCSHOUTERS

 

ஐசிசியின் கனவு ஒருநாள் அணி
 • ரோஹித் சர்மா, 
 • டேவிட் வார்னர், 
 • விராட் கோலி, 
 • ஏபி டி வில்லியர்ஸ், 
 • ஷாகிப் அல் ஹசன், 
 • எம்.எஸ்.தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) 
 • பென் ஸ்டோக்ஸ், 
 • மிட்செல் ஸ்டார்க், 
 • ட்ரெண்ட் போல்ட், 
ஐசிசியின் கனவு டி20 அணி
 • ரோஹித் சர்மா, 
 • கிறிஸ் கெய்ல், 
 • ஆரோன் ஃபிஞ், 
 • விராட் கோலி, 
 • ஏபி டி வில்லியர்ஸ், 
 • கிளென் மேக்ஸ்வெல் 
 • எம்.எஸ்.தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) 
 • கைரோன் பொல்லார்ட், 
 • ரஷீத் கான், 
 • ஜஸ்பிரித் பும்ரா, 
 • லசித் மலிங்கா
ஐசிசி கனவு டெஸ்ட் அணி
 • ஆலஸ்டைர் குக், 
 • டேவிட் வார்னர், 
 • கேன் வில்லியம்சன், 
 • விராட் கோலி (கேப்டன்) 
 • ஸ்டீவ் ஸ்மித், 
 • குமார் சங்கக்கரா ( விக்கெட் கீப்பர்), 
 • பென் ஸ்டோக்ஸ், 
 • ரவிச்சந்திரன் அஸ்வின், 
 • டேல் ஸ்டெய்ன் 
 • ஸ்டுவர்ட் பிராட், 
 • ஜேம்ஸ் ஆண்டர்சன்

Sunday, 27 December 2020

TNPSC 26th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

கூடுதல் கடன் பெற ராஜஸ்தானுக்கு மத்திய அரசு அனுமதி

 • நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவும் வகையில், ஜி.எஸ்.டி.பி., எனப்படும், மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து, மாநிலங்களுக்கு பெறும் கடன் வரம்பை, 2 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்தது.
 • எனினும், 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமல், தொழில் செய்வதை எளிதாக்கும் சீர்த்திருத்தம் போன்றவற்றை செய்யவும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், எளிதில் தொழில் செய்வதற்கான சீர்த்திருத்தங்களை, ராஜஸ்தான் அரசு செய்துள்ளது.
 • இதையடுத்து, அந்த சீர்த்திருத்தங்களை ஏற்கனவே செய்துள்ள ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழகம் மற்றும் தெலுங்கானாவுடன், ஆறாவது மாநிலமாக, ராஜஸ்தானும் இணைந்துள்ளது.
 • இந்த ஆறு மாநிலங்களுக்கும், கூடுதலாக, 19 ஆயிரத்து, 459 கோடி ரூபாய் கடன் பெற, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தூய்மையான கங்கை 17 திட்டங்களுக்கு ஒப்புதல்

 • மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கத் துறை குறிப்பிடத்தக்க சாதனைகளை இந்த வருடம் செய்துள்ளது.
 • தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் 22 திட்டங்களை நிறைவு செய்து ரூ.557.83 கோடி மதிப்பிலான 17 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 
 • கழிவுநீர் உள்கட்டமைப்பு, படித்துறை, சுடுகாடு, மாசு கட்டுப்படுத்துதல், வனங்களைப் பாதுகாத்தல், பல்லுயிர்த் தன்மையைப் பேணுதல் உள்ளிட்ட திட்டங்கள் இவற்றில் அடங்கும்.
 • 2020 செப்டம்பர் 15 அன்று ஒரு நாளைக்கு 43 மில்லியன் லிட்டர் திறன் உள்ள பேயூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஒரு நாளைக்கு 37 மில்லியன் லிட்டர் திறன் உள்ள கர்மலிச்சாக் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை பாட்னாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
 • ரூ.10,211 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் அணைப் புத்தாக்கம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 • மாவட்ட அளவிலான அலுவலர்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான பொது நிர்வாகத்தில் சிறப்பான சேவைக்கான பிரதமரின் விருதுகளில் நமாமி கங்கே இணைக்கப்பட்டுள்ளது.
 • நாடு முழுவதும் நீர் சேமிப்பை மேம்படுத்துவதற்காக 'மழையைப் பிடியுங்கள்' என்னும் சிறப்புப் பிரச்சாரம் தேசிய தண்ணீர் இயக்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் ஜெய் செஹத் திட்டம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

 • ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
 • ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டை வழங்கும் திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் உருவாக்கப்படுகிறது. 
 • இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையில் காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது. கூடுதலாக சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்படுகிறது. 
 • பிரதமர்-ஜெய்யுடன் இணைந்து செயல்பட உள்ள இத்திட்டத்தின் பலன்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறலாம். பிரதமர்-ஜெய்யுடன் இணைந்துள்ள அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் சிகிச்சை பெறலாம்.

கட்டாயமாக மதம் மாற்றினால் 10 ஆண்டு சிறை: ம.பி., அமைச்சரவை ஒப்புதல்

 • திருமணம் அல்லது ஏமாற்றி, கட்டாயமாக மதம் மாற்றுவோரை தண்டிக்க மத சுதந்திர சட்டம் 2020க்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • குற்றவாளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும். நாட்டிலேயே, இந்த சட்டம் அமலுக்கு வந்த பின்னர், திருமணம், மோசடி செய்து அல்லது ஏமாற்றுவோருக்கு கடும் தண்டனை வழங்குவதாக இருக்கும். 
 • 1968 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மத சுதந்திர சட்டத்திற்கு மாற்றாக இருக்கும். புதிய சட்டத்தின்படி, மதம் மாற்றுவதற்காக மட்டும் செய்யப்பட்ட திருமணம் செல்லுபடியாகாது. 
 • மதம் மாற விரும்புவோர், முன்னதாகவே மாவட்ட நிர்வாகத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

'களரிபயட்டு' தேசிய விளையாட்டாக அறிவிப்பு

 • மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் கட்கா, களறிப்பயட்டு, தங்-டா, மல்லர்கம்பம் ஆகிய 4 விளையாட்டுகள் தேசிய விளையாட்டு போட்டிகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
 •  மேலும், 'யோகாசனா' அறிமுக விளையாட்டாகவும் இடம்பெற உள்ளது. இப்போட்டிகள் அடுத்தாண்டு ஹரியானாவில் நடத்தப்படும் எனவும் கேலோ இந்தியா தெரிவித்துள்ளது.
 • களரிப்பயட்டு - ரத்தத்தை துள்ளச்செய்யும் மண்சார்ந்த விளையாட்டு. 

CEPR ECONOMIC SURVEY 2020 / பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (சிஇபிஆர்) வெளியிட்ட அறிக்கை

TNPSCSHOUTERS


 • பிரிட்டனை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (சிஇபிஆர்) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பாதிப்பு காரணமாக, இந்தியாவானது, 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 
 • 2019ல் பிரிட்டன் பின்னடைவை சந்தித்த போதும், அந்நாடு எடுத்த நடவடிக்கை காரணமாக மீண்டும் 5வது இடத்திற்கு வந்தது. தற்போது, நிலவும் சூழல் காரணமாக 2024ம் ஆண்டில் இந்தியா மீண்டும் 5வது இடத்திற்கு வரும்.
 • ரூபாயில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தான் இந்த ஆண்டு பிரிட்டன் 5வது பெரிய நாடாக மாறியது. 2021ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமும் 2022ல் 7 சதவீதமும் அதிகரிக்கும். 
 • இந்த வளர்ச்சி விகிதம் மூலம், இந்தியாவானது, 2024 ல் பிரிட்டனையும், 2027 ல் ஜெர்மனியையும், 2030 ல் ஜப்பானை முந்தி 3வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும்.
 • 2028 ம் ஆண்டில் சீனாவானது, அமெரிக்காவை முந்தி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழும். கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சி காரணமாக, ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட 5 ஆண்டுகளுக்கு முன்பே சீனா முதலிடத்திற்கு வரும். 
 • டாலர் அடிப்படையில் 2030 வரை ஜப்பான் 3வது பெரிய பொருளாதார நாடாகவும், ஜெர்மனி 5வது பெரிய பொருளாதார நாடாகவும் இருக்கும். 

Saturday, 26 December 2020

THE LOON PROJECT லூன் திட்டம்

TNPSCSHOUTERS

 • லூன் திட்டமானது உலகில் உள்ள தொலைதுரப் பகுதிகளுக்கு இணைய வசதியை அளிப்பதற்காக பூமியின் அடுக்கு மண்டலத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • இது கூகுள்  நிறுவனத்தினால் செயல்படுத்தப்படுகின்றது.
 • சமீபத்தில் கூகுள் நிறுவனமானது தனது பலூன்கள் ஒரு ஆண்டு காலத்திற்கு வளியடுக்கு மண்டலத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டுள்ளதாக அறிவித்து உள்ளது.
 • இந்தப் பலூன்கள் ஹீலியத்தினால் நிரப்பப்பட்டுள்ளன. இது 2.1 லட்சம் கிலோ மீட்டர்கள் அளவிற்குத் தொலைவைக் கண்காணிக்கும் திறன் கொண்டது.
 • சமீபத்தில், லூன் ஆனது 318 நாட்கள் வான்வெளியில் இருந்ததன் மூலம் அதிக நாட்கள் வளியடுக்கு மண்டலத்தில் இருந்த பறக்கும் பொருள் என்ற ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.


IISF - India International Science Festival இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (IISF)

TNPSCSHOUTERS • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று பிரதமர் மோடி அவர்கள் 6வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை (IISF - India International Science Festival)  தொடங்கி வைத்தார்.
 • இந்தத் திருவிழாவின் கருத்துரு, ”தன்னிறைவு இந்தியா மற்றும் உலக நலனிற்கான அறிவியல்” என்பதாகும்.
 • விக்யான் யாத்திரையானது IISF-2020 விழாவினை முன்னிட்டு அறிவியல் மனப்பான்மையை அதிகரிப்பதற்காக வேண்டி  டிசம்பர் 14 அன்று தொடங்கி வைக்கப் பட்டது.
 • இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், உயிரித் தொழில்நுட்பத் துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், மத்தியப் புவி அறிவியல் துறை அமைச்சகம், விஜ்னானா பாரதி என்ற ஒரு அறிவியல் நிறுவனம் ஆகியவற்றினால் கருத்தாக்கம் செய்யப் பட்டது.
 • இதன் நோக்கம் அன்றாட வாழ்வில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும்.

TNPSC 25th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

உசிலம்பட்டி அருகே ஊர்மந்தையில் தமிழி (பிராமி) எழுத்துக்களுடன் கல்

 • உசிலம்பட்டி உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி ஊர் மந்தையில் கிடந்த தொம்பரை கல்லில் கி.மு., 2 ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • கல்லில் இருந்த எழுத்துக்கள் கி.மு., காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் என்பதை உறுதி செய்தனர். கல்வெட்டு எழுத்துக்களை படி எடுத்து அதில் உள்ள தகவல்களை படிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 • தனிக்கல்லில் தமிழி எழுத்துக்களுடன் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாகும் என்றார்.தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பிகல்வெட்டின் காலம் கி.மு., 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம். 
 • மதுரையில் இருந்து செல்லும் வணிகப்பாதையின் வழியில் இந்த பகுதியில் வணிகர்கள் தங்கிச் செல்லும் இடமாக முன்னர் இருந்திருக்கலாம். 

துருக்கியில் மிகப்பெரிய தங்கப்புதையல் கண்டுபிடிப்பு

 • துருக்கியில், மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, உலகின் பல நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியம்.
 • இந்த தங்கத்தின் மதிப்பு, கிட்டத்தட்ட, 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த தங்க புதையலின் எடை, 99 டன். 
 • துருக்கியில், உர நிறுவனம் ஒன்று வாங்கிய நிலத்தில் இந்த தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இங்கு தங்கம் வெட்டி எடுக்கப்படும் என்றும், துருக்கி பொருளாதாரத்துக்கு இது மிகவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.

ரத்த புற்றுநோய்க்கு மருந்து அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

 • அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இயங்கும், 'கிளீவ்லேண்ட் கிளினிக்' மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், 10 ஆண்டுகளாக, புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தனர். 
 • அதில் குறிப்பிட்ட சில புற்றுநோய்களுக்கு, அவர்கள் மருந்துகளை கண்டுபிடித்துள்ளது, தற்போது தெரியவந்துள்ளது. ரத்த புற்றுநோய் மற்றும் எலும்பு புற்றுநோயை குணப்படுத்த, புதிய மருந்துகளை, அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
 • அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளுடன், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை வாயிலாக, அது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
 • ரத்தம் மற்றும் எலும்பு புற்றுநோய்களை எதிர்த்து போராடக்கூடிய, டி.இ.டி.ஐ., 76 என்ற செயற்கை மூலக்கூறு ஒன்றை உருவாக்கி உள்ளோம். 
 • இந்த செயற்கை மூலக்கூறு, உடலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, செல்களை குறிவைத்து அழிக்கும் திறன் உடையது என்பதை கண்டறிந்தோம்.
 • இது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட துவக்க காலம் முதல், முழுதும் பாதிக்கப்பட்ட காலம் வரை, உடலில் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும் திறன் உடையது. 

9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

 • பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாவது தவணையாக, ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான நிதி ரூ.18,000 கோடியை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் விடுவித்தார்.
 • இந்நிகழ்ச்சியில் அவர் தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகளுடன் கலந்துரையாடினார். புதிய வேளாண் சட்டங்களால் பலன் பெற்றது குறித்து விவசாயிகள் பிரதமரிடம் விளக்கினர்.

அசாமில் 27 நெடுஞ்சாலைத் திட்டங்கள்: மத்திய அமைச்சர் கட்கரி அடிக்கல் நாட்டினார்

 • அசாமில் 27 நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி மூலம் அடிக்கல் நாட்டி இன்று துவக்கி வைத்தார்.
 • இன்று அடிக்கல் நாட்டப்பட்டத் திட்டங்களின் மூலம் 439 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்படும். இதற்கான செலவு ரூ.2,366 கோடி ஆகும். அசாமின் வளர்ச்சிக்கு இந்தச் சாலைகள் வழிவகுக்கும்.

வாஜபேயி புத்தகம் வெளியிட்டார் பிரதமர் மோடி

 • பாஜக மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான வாஜபேயின் 96-வது பிறந்தநாள் இன்று (டிச.25) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தில்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 • காலையில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அவரது திருவுருவப் படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வாஜபேயின் வாழ்க்கை மற்றும் அரசியல் பணிகள் குறித்த குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 

இந்தியாவின் முதல் இளம் மேயராக திருவனந்தபுரத்தில் பதவியேற்கும் 21 வயது கல்லூரி மாணவி

 • கேரள மாநிலம் திருவனத்தபுரத்தில் நாட்டிலேயே இளம் வயது மேயராக, 21 வயதே ஆன ஆர்யா ராஜேந்திரன் எனும் கல்லூரி மாணவி பொறுப்பேற்க உள்ளார்.
 • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் முதவன்முகல் வார்டில் போட்டியிட்டு வென்றவர் ஆர்யா ராஜேந்திரன்.
 • 21 வயதே நிரம்பிய இவரை புதிய மேயராக நியமிக்க, சிபிஎம் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் கணிதத்துறையில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வரும் ஆர்யா எஸ்எஃப்ஐ மாநிலக் குழுவின் உறுப்பினர். 
 • சிபிஎம் கேசவதேவ் சாலைக் கிளைக் குழுவின் உறுப்பினராகவும், பாலாஜனசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இவர் உள்ளார், அரசியலில் தீவிரமாக செயல்பட்டு உள்ளார்.

இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா நியமனம்

 • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 
 • இதில் இந்திய அணியின் தேர்வு குழு உறுப்பினர்களாக மேற்கு மண்டலம் சார்பில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அபய் குருவில்லா, கிழக்கு மண்டலம் சார்பில் மொஹந்தி ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் இடம்பெற்றனர். 
 • ஏற்கனவே தெற்கு மண்டலம் சார்பில் சுனில்ஜோஷி, மத்திய மண்டலம் சார்பில் ஹர்விந்தர்சிங் ஆகியோர் உள்ளனர். சுனில்ஜோஷி தேர்வு குழு தலைவராக இதுவரை பதவி வகித்து வந்த நிலையில், சேத்தன் சர்மா, ஜோஷியை விட அதிக டெஸ்ட்டில் ஆடி இருப்பதால் தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனம்: விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம் தேர்வு

 • இந்திய வர்த்தகத் தொழில் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 'விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனம் (பொதுத்துறை) 2020' என்ற பிரிவில் விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தை (AFSCB) வெற்றியாளராகக் குறிப்பிட்டுள்ளது.
 • எப்ஐசிசிஐ இந்தியா விளையாட்டு விருதுகள் விழாவில், விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனம் என்ற விருது விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடந்த 8ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி முத்கல் தலைமை தாங்கினார்.
 • காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்த விழாவில், இந்த விருதை விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏர் கமடோர் அசுதோஷ் சதுர்வேதி, எப்ஐசிசிஐ தலைவரிடம் இருந்து பெற்றார்.

Friday, 25 December 2020

TNPSC 24th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

4 திரைப்பட ஊடக அமைப்புகளை தேசிய திரைப்பட மேம்பாட்டு வளர்ச்சிக்கழகத்துடன் இணைத்தது மத்திய அரசு

 • பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 
 • அதன்படி மத்திய அரசின் திரைப்படப் பிரிவு, திரைப்படவிழாக்கள் இயக்குனரகம், இந்தியாவின் தேசிய திரைப்பட ஆவண காப்பகங்கள், குழந்தைகளுக்கான திரைப்படக்கழகம் ஆகியவை என்எப்டிசி எனப்படும் தேசிய திரைப்பட மேம்பாட்டு வளர்ச்சிக்கழகத்துடன் இணைக்கப்படுகின்றன.
 • மனித வளம், கட்டமைப்பு ஆகியவற்றை சேமிக்கும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு அமைப்புகளுக்கு இடையேயும் உரிய ஒத்துழைப்புடன் இனி இவை செயல்படும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.
 • நான்கு அமைப்புகளிலும் உள்ள ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எந்த ஒரு ஊழியரும் கைவிடப்படமாட்டார் என்றும் உறுதி அளித்துள்ளது.

விஸ்வ பாரதி பல்கலை. நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி உரை

 • மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் உள்ளது. இது, 1921-ல்ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்று பேசியதாவது:
 • சுதந்திரப் போராட்ட காலத்தில் தாகூரின் வழிகாட்டுதலால் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் இந்திய தேசிய உணர்வை வலுவாக ஏற்படுத்தி வந்தது. சுதேசி சமூகத்துக்கு ரவீந்திரநாத் தாகூர் அழைப்பு விடுத்தார். விவசாயம், வர்த்தகம், தொழில், கலை, இலக்கியம் போன்றவற்றில் அவர் தற்சார்பை காண விரும்பினார்.
 • இந்தியாவின் ஆன்மிக விழிப்புணர்வில் இருந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் பலன் அடைய வேண்டும் என தாகூர் விரும்பினார். இந்த உணர்வில் இருந்து தோன்றியதுதான் மத்திய அரசின் 'சுயசார்பு இந்தியா' தொலைநோக்கு திட்டமாகும். மத்திய அரசின் சுயசார்பு இந்தியா அழைப்பு,இந்தியா மட்டுமின்றி இந்த உலகத்துக்கும் நன்மை தரக்கூடியதாகும்.
 • இந்தியாவை சிறந்த நாடாகமாற்றுவதற்கு பல நூற்றாண்டுகளாக பங்களித்த அனைவரிடம் இருந்தும் நாம் உத்வேகம் பெறவேண்டும். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், சுதந்திரத்துக்காக போராடியபோது கற்பனை செய்திருந்த இந்தியாவையும் நாம்மனதில் கொள்ள வேண்டும். அதனால்தான் சுயசார்பு இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருகிறோம்.
 • நாட்டின் நிலையான ஆற்றலுக்கான மதிப்புமிக்க ஆதாரமாகஇந்தப் பல்கலைக்கழம் விளங்கியது. இங்கு தோன்றிய கருத்துகள் சர்வதேச துறையில் தேசத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரிட்டன்-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்

 • பிரிட்டன்-ஐரோப்பிய யூனியன் இடையே 'பிரெக்ஸிட்'டுக்குப் பிந்தைய தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. 
 • ஐரோப்பிய யூனியனில் இருந்து வரும் 31-ஆம் தேதியுடன் வா்த்தகரீதியாகவும் பிரிட்டன் முழுமையாக வெளியேறும் நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
 • நூற்றுக்கணக்கான பக்கங்களில் அடங்கிய இந்த ஒப்பந்தத்துக்கு இரு தரப்பு நாடாளுமன்றமும் அடுத்த சில நாள்களில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
 • இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய யூனியன் - பிரிட்டன் இடையே பொருள்கள், சேவைகள் பரிமாற்றத்துக்கு வரிகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அதிகம் இருக்காது.
 • முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பின்போது ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் வெளியேற ('பிரெக்ஸிட்') அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்தனா்.

பூடானுக்கு மருத்துவ சாதனங்களை வழங்கியது இந்தியா

 • கொரோனா தொற்றின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதில், தனது நெருங்கிய நண்பரும், அண்டை நாடுமான பூட்டானுடன் இந்தியா நிற்கும் என்ற பிரதமர் மோடியின் உறுதிமொழியைக் கருத்தில் கொண்டு 20,000 சோதனைகளுக்கான COVID-19 RT-PCR சோதனைக் கருவிகளை திம்புவில் உள்ள இந்திய தூதரகம் பூட்டான் ராயல் அரசிடம் ஒப்படைத்தது. 
 • இந்த ஆர்டி-பி.சி.ஆர் சோதனை கருவிகளை வழங்குவது பூட்டானின் சுகாதார அமைச்சகத்திற்கு அத்தியாவசிய பரிசோதனைகளை மேற்கொள்ள உதவும்.

2022-ம் ஆண்டு ஐ.பி.எல்லில் 10 அணிகள் - பி.சி.சி.ஐ கூட்டத்தில் ஒப்புதல்

 • இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடும் இந்தியன் பிரிமியர் லீக் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தொடக்கம் முதல் மொத்தம் 8 அணிகள் விளையாண்டு வருகின்றன. 
 • இந்தநிலையில், வரும் ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரில் 10 அணிகளை இடம் பெறச் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
 • இந்தநிலையில், இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ பொதுக்கூட்டத்தில் 2022-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் இடம்பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

Thursday, 24 December 2020

TNPSC 23rd DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

நடுத்தர ரக ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா

 • ஒடிசா கடற்கரைக்கு அருகே உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து நேற்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்த சாதனையை செய்தது.
 • விமானம் போன்ற ஆளில்லாத அதிவேக வான் இலக்கு ஒன்றை நேரடியாக வெற்றிகரமாக இந்த ஏவுகணை தாக்கி அழித்ததன் மூலம் முக்கிய மைல்கல்லை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எட்டியது.
 • இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக தரையிலிருந்து வானுக்கு பாயும் நடுத்தர ரக ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்தியா, மற்றும் ஐ ஏ ஐ, இஸ்ரேல் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.

கால்பந்து ஜாம்பவான் பீலே சாதனையை முறியடித்த மெஸ்ஸி

 • ஸ்பெயினில் நடைபெற்று வரும் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டியில், நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா ரியல் வல்லாடோலிட்டை சந்தித்த்து. 
 • இந்த போட்டியில், 65-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவருமான லயோனல் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். 
 • இதன் மூலம் பார்சிலோனா கிளப்புக்காக தனது 644-வது (749 ஆட்டம்) கோலை பதிவு செய்த மெஸ்ஸி, ஒரே கிளப்புக்காக அதிக கோல்கள் அடித்தவரான பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை மெஸ்சி முறியடித்தார்.
 • பீலே, பிரேசிலைச் சேர்ந்த சான்டோஸ் கிளப்புக்காக மட்டும் 643 கோல்கள் (656 ஆட்டம்) 1956-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அடித்திருந்தார். அவரது 46 ஆண்டு கால சாதனைக்கு மெஸ்சி இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அமெரிக்க நிதி நிறுவனம் இந்தியாவில் ரூ.400 கோடி முதலீடு

 • கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில், பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. இதனால், உள்கட்டமைப்பு திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன.
 • இந்நிலையில், இந்தியாவுக்கு உதவ, அமெரிக்க நிதி நிறுவனம் முன்வந்துள்ளது. அதன்படி, இந்திய தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில், டி.எப்.சி., எனப்படும், அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம், 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

எஸ்சி மாணவர்களின் கல்வி உதவி தொகைக்கு ரூ.59,000 கோடி ஒதுக்கீடு

 • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி எஸ்சி மாணவர்களின் மேற்படிப்பிற்காக ரூ.59,000 கோடி கல்வித் தொகை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 60 சதவீதமான ரூ.35,534 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்.

Wednesday, 23 December 2020

TNPSC 22nd DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

நெய்வேலி சுரங்க நீரை குடியிருப்புகளுக்கு வழங்க ரூ.479 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

 • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி சுரங்க நீரை ஆதாரமாகக் கொண்டு ரூ.479 கோடிமதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
 • இதன்மூலம் திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் பேரூராட்சிகள், மங்களூர், நல்லூர், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியங்களில் 625 ஊரக குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த 5.58 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சியில் ரூ.9.54கோடி குடிநீர் மேம்பாட்டு திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
 • நத்தம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீரைக் கொண்டு ரூ.20.34 கோடியில் திண்டுக்கல் மாவட்டம்குஜிலியம்பாறை ஒன்றியத்தை சார்ந்த 53 ஊரக குடியிருப்புகளுக் கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
 • நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் தஞ்சை, கும்பகோணம் நகராட்சிக்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.59.93 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் ரூ.2.98 கோடி, காங்கயம் நகராட்சியில் ரூ.2 கோடி, தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் ரூ.2.60 கோடியில் கட்டப்பட்டுள்ள கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தார்.
 • சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், சென்னை தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் ரூ.69.70 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சிறப்பு தங்குமிடம், திருவல்லிக்கேணி மீர்சாகிப்பேட்டையில் உள்ள நகர்ப்புற சமூக சுகாதார மையத்துக்கு ரூ.67 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள முதல் தளம் என ரூ.89.22 கோடிமதிப்பிலான திட்டங்கள், கட்டிடங்களை தொடங்கி வைத்தார்.

மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது

 • மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருதான, 'லெஜியன் ஆப் மெரிட்' என்ற விருதை அதிபர் டிரம்ப் வழங்கி கவுரவித்துள்ளார். 
 • இந்திய-அமெரிக்க உறவை பலப்படுத்தியதற்காகவும், உலகளவில் இந்தியாவை சக்தியுள்ள நாடாக உயர்த்தியதற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 • வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓபிரைனிடம் இருந்து பிரதமர் மோடி சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து இந்த விருதை பெற்றுக் கொண்டார். இதேபோல், ஜப்பான் அதிபர் ஷின்சோ அபேவிற்கும் இதே விருது வழங்கப்பட்டது.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தமிழக அரசு கூடுதலாக ரூ.1,805 கோடி ஒதுக்கீடு முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

 • பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் மத்திய அரசு பங்களிப்புடன் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கான தொகை ரூ.1,20,000. இதில் மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.72 ஆயிரம் மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.48 ஆயிரம்.
 • இத்துடன் கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு, கூடுதல் நிதியாக ரூ.50 ஆயிரம் ஒவ்வொரு வீட்டிற்கும் அளித்து வருகிறது.
 • இத்தொகையுடன் ஒரு வீட்டிற்கான மொத்த தொகை ரூ.1,70,000. இந்த தொகையுடன் கூடுதலாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23,040 மற்றும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிக்கு ரூ.12,000 ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.
 • தற்போது கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் காரணமாகவும், கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மேற்கண்ட தொகையினைக் கொண்டு ஏழை எளிய மக்கள் வீட்டினை கட்ட இயலாத நிலை உள்ளதாகவும், தகுதியான குடும்பங்கள் வீடுகளை தாங்களே கட்ட இயலாத நிலையில் உள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்தது. எனவே தமிழ்நாடு அரசால் ஏற்கனவே மேற்கூரை அமைக்க கூடுதலாக வழங்கப்பட்டு வந்த ரூ.50 ஆயிரத்தை உயர்த்தி 1 லட்சத்து 20 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
 • இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் 2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இத்துடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23,040 மற்றும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.12,000 சேர்த்து மொத்தம் ஒரு வீட்டிற்கு ரூ.2,75,040 வழங்கப்படும். 
 • இதற்காக தமிழ்நாடு அரசால் கூடுதலாக ரூ.1805.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் சுமார் 2,50,000 பயனாளிகள் பயன்பெறுவர். 

திருப்பத்தூர் அருகே கி.பி.751-ம் ஆண்டைச் சேர்ந்த பள்ளிச்சந்தம் வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டெடுப்பு

 • திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளர் சேகர், ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் மாவட்டம், குண்டு ரெட்டியூர் மலைச்சரிவில் கள ஆய்வு நடத்தியபோது சுமார் 1,270 ஆண்டுகள் முந்தைய, பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டைக் கண்டெடுத்துள்ளனர்.
 • இதில், ஆயுதங்கள், கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகள், சுடுமண் ஊது குழாய்கள், தக்களிகள், கல்மணிகள், உடைந்த வளையல்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் சேரிக்கப்பட்டு தூய நெஞ்சக்கல்லூரி நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குண்டு ரெட்டியூரில் முறையாக அகழாய்வு நடத்தவும் அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பியுள்ளோம்.
 • இந்நிலையில், குண்டு ரெட்டியூரில் சமீபத்தில் கள ஆய்வு நடத்தியபோது, மலைச்சரிவில் அடர்ந்து புதர்களுக்கு இடையே பாறைக்குன்றின் பக்கவாட்டில் 'பள்ளிச்சந்தம் வட்டெழுத்து' கல்வெட்டு கண்டெடுத்தோம். இந்தக் கல்வெட்டு, தூய தமிழ் வட்டெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. புடைப்பு விளிம்புடன் கூடிய கட்டத்தில் 9 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
 • இக்கல்வெட்டானது, சமணப் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட 'பள்ளிச்சந்தம்' என்பதைக் குறித்தும் அதன் எல்லைகள் குறித்தும் விவரிக்கிறது. அக்காலத்தில் பள்ளிச்சந்தம் என்பது, பிரமதேயம், தேவதானம் போல சமண சமயத்தார்க்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையைக் குறிப்பதாகும்.
 • ஸ்ரீ புருஷ வர்மன் என்ற மேலைக்கங்க மரபைச் சார்ந்த மன்னனின் 25-ம் ஆட்சிக் காலத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டதாகும். ஸ்ரீ புருஷவர்மன் மன்னன் தெற்கு கர்நாடகம் மற்றும் வட தமிழகத்தை ஆட்சி செய்தவர். இவரது காலம் கி.பி.726 முதல் கி.பி.788 வரையாகும். இக்கல்வெட்டு கி.பி 751-ல் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,270 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும். 
 • ஸ்ரீ புருஷ வர்மனின் நடுகற்கள் தருமபுரி மாவட்டம், பாலவாடி மற்றும் இண்டூர் பகுதிகளில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கி.பி. 736 மற்றும் 747 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்தவையாகும். குண்டு ரெட்டியூரில் நிலக்கொடைக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
 • இக்கல்வெட்டில் உள்ள வட்டெழுத்துகள் தூய தமிழ் நடையினைக் கையாண்டு எழுதப்பட்டுள்ளன. 'ஸ்வஸ்திஸ்ரீ' என்ற சொல்லை 'சுவத்திரிசிரி' என்றும் புருஷவர்மன் என்பதை 'புருசவிக்கிரமபருமர்' என்றும் தமிழ்ப்படுத்திக் குறிப்பிட்டுள்ளனர். கங்க மன்னர்கள் சிறந்த சமணப் பற்றாளர்கள் என்பதற்கு இக்கல்வெட்டு சிறந்த சான்றாகும்.

மின்சார நுகர்வோரின் உரிமைகள் விதிகள் 2020 / EB CONSUMERS RIGHTS RULES 2020

TNPSCSHOUTERS

 

 • மின்சார நுகர்வோரின் உரிமைகளை விளக்கும் விதிமுறைகளான மின்சார (நுகர்வோரின் உரிமைகள்) விதிகள் 2020-ஐ முதன் முறையாக மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
 • நுகர்வோருக்கு பணி செய்வதே மின்அமைப்பின் முக்கிய குறிக்கோள் என்பதை கருத்தில் கொண்டும். தொய்வற்ற மின்சாரத்தையும், நம்பகத்தன்மையான சேவையையும் பெறுவது நுகர்வோரின் உரிமை என்பதை முன்னிறுத்தியும் இந்த விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
 • நாட்டில் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதில் இந்த விதிகள் முக்கியப்பங்கு வகிக்கும். புதிய மின் இணைப்பு, பணம் திருப்பிச் செலுத்துதல் மற்றும் இதர சேவைகளை காலவரைக்குள் வழங்குவதை இந்த விதிகள் உறுதி செய்யும். நுகர்வோர் உரிமைகளை களங்கப்படுத்துவோர்மீது அபராதம் விதிக்கப்படும்.
 • பொதுப் பயன்பாட்டு சேவைகளில் மக்களை மையமாகக் கொண்டு செயல்படும் மத்திய அரசின் மற்றொரு முக்கிய முன்முயற்சியாக இந்த விதிகள் அமைகின்றன. நாட்டில் தற்போது மின்சாரத்தை பயன்படுத்துவோரும், எதிர்காலத்தில் உபயோகிப்போருமாக சுமார் 30 கோடி பேர் இதன்மூலம் பயனடைவார்கள்.
 • ஊரக மற்றும் கிராமப்புற நுகர்வோர் இடையே இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். மாநிலங்களும், மின்சாரம் வழங்கும் நிறுவனங்களும் நுகர்வோருக்கு உகந்த இந்த விதிகளை பெருவாரியான மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். 
 • இந்த விதிகளின்படி, இணையதளம் வாயிலாக நுகர்வோர் புதிய மின்சார இணைப்புகளுக்கு பதிவு செய்வதுடன், மின் கட்டணத்தையும் செலுத்தலாம்.
 • நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் மின் இணைப்புகள் நுகர்வோருக்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்த அமைச்சர் ஆர்.கே சிங், பெருநகரங்களில் 7 நாட்கள், இதர நகரங்களில் 15 நாட்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 30 நாட்களுக்குள் புதிய இணைப்புகளை வழங்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு 'ஆதார்' கட்டாயம் & ஓஎம்ஆர் விடைத்தாளிலும் அதிரடி மாற்றம்

TNPSCSHOUTERS

 

 • தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் ஒருமுறைப்பதிவு நிரந்தரப்பதிவில் கட்டாயமாக தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இதுவரை தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் விரைவில் பதிவு செய்ய வேண்டும்.
 • இனிவரும் காலங்களில் தேர்வர்கள் தாங்கள் எழுதவிருக்கும் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யும் முன் தங்களது ஆதார் எண்ணைப்பதிவு செய்தால் மட்டுமே நிரந்தர பதிவு மூலமாக பதிவிறக்கம் செய்ய இயலும்.விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறைப்பதிவு/ நிரந்தர பதிவு வைத்திருக்க அனுமதியில்லை.
 • இருப்பினும் ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட ஒருமுறைப்பதிவு/ நிரந்தர பதிவு வைத்துள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தை தொடர்பு கொண்டு ஏனைய இதர நிரந்தரப் பதிவிற்கு மாற்றம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வருவதனையும், விண்ணப்பதாரர்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களது நிரந்தரப்பதிவில் இணைந்துள்ள ஆதார் பதிவினை ஒரே ஒரு முறை மட்டுமே ரத்து செய்து தங்களது விருப்பத்திற்கேற்ப ஏனைய நிரந்தரப்பதிவில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு
 • வழிவகை ெசய்யப்பட்டுள்ளது. ஆகையால், விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பினை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். வருகிற 3ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்(குரூப் 1) முதனிலை தேர்வு மற்றும் வருகிற 9ம் தேதி, 10ம் தேதி நடைபெற உள்ள உதவி இயக்குனர்(தொழில் மற்றும் வணிகம்) தேர்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஒருமுறைப்பதிவு/ நிரந்தர பதிவு மூலம் ஆதார் எண்ணை இணைத்த பிறகே பதிவிறக்கம் செய்ய இயலும்.
 • மேலும் இதுகுறித்த கூடுதல் விளக்கம் தேவைப்படின் விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002ல் அலுவலக நேரங்களில்(காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) எல்லா வேலை நாட்களிலும் வருகிற 8ம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம். தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
 • தேர்வாணையத்தால் இனிவரும் நாட்களில் நடத்தப்படவிருக்கும் கொள்குறிவகைத் தேர்வுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள ஓஎம்ஆர் விடைத்தால் பல சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 • எனவே, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் விடைத்தாளின் மாதிரி படிவம், விடைத்தாளை கையாளும் முறை குறித்த விளக்க குறும்படமும், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 • டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:குரூப் 1 தேர்வுகளில் அடங்கிய பதவிகளுக்கு திட்டமிட்டப்படி முதன்நிலை தேர்வு வருகிற 3ம் தேதி முற்பகலில் மட்டும் 32 மாவட்டங்களில் 856 தேர்வுக்கூடங்களில் நடைபெற உள்ளது. 
 • முதன்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஹால்டிக்ெகட் ேதர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. 
 • தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை, பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும்.

Tuesday, 22 December 2020

TNPSC 21st DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

இந்தியா - வியட்நாம் ஒப்பந்தம்

 • பிரதமர் மோடி தென் கிழக்காசிய நாடான, வியட்நாமின் பிரதமர் நகுயன் ஜூயன் புக் உடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசினார்.
 • அப்போது, இந்தியா - வியட்நாம் இடையே, பிராந்தியம் மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்தும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் இருவரும் விவாதித்தனர்.
 • வங்கதேசம், இலங்கையை அடுத்து, ராணுவ துறையில் இத்தகைய கடன் வரம்பு வசதியை பெறும் மூன்றாவது நாடு, வியட்நாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 • இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவு திட்டங்களின் கீழ், வியட்நாமின் மெகாங் டெல்டா பகுதியில் நீர் வள மேலாண்மை பணிகளை இந்தியா மேற்கொள்ள உள்ளது. 
 • இது பற்றியும், மின்னணு தொழில்நுட்ப இணைப்பு வசதி, பாரம்பரிய கலாசார சின்னங்களின் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாகவும், இரு தலைவர்களும் பேசினர்.
 • தென் சீனக் கடல் பிராந்தியத்தில், சுதந்திரமான சரக்கு போக்குவரத்தை பராமரிப்பது, இந்திய - பசிபிக் கடல் பிராந்தியத்தில், விதிமுறைகளைப் பின்பற்றி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள், பேச்சில் முக்கிய இடம் பெற்றிருந்தன. 
 • இதையடுத்து, ராணுவ துறையில், 750 கோடி ரூபாய் கடன் வரம்பு உட்பட, எரிசக்தி, ஆரோக்கியப் பராமரிப்பு, நீர் மேலாண்மை ஆகிய துறைகளில், இரு தலைவர்களின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
 • இரு நாடுகளின் எதிர்கால வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டுறவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், பேச்சு நடந்தது. வியட்நாமிற்கு, 750 கோடி ரூபாய் கடன் வரம்பின் கீழ், ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 12 அதிவிரைவு கடலோர காவல் படகுகளை வியட்நாமிற்கு இந்தியா வழங்க உள்ளது. 

அதிக நெல் மகசூல் செய்வோருக்கு நாராயணசாமி பெயரில் விருது முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

 • அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருது, இந்தஆண்டு முதல், 'சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது' என்ற பெயரில் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
 • விவசாயிகளின் பெருந்தலைவர் சி.நாராயணசாமி நாயுடு தனதுபேச்சு, செயல் மற்றும் தலைமைப்பண்புகளால் தமிழக விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்களின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தார். 
 • 1973-ம் ஆண்டில் தமிழக விவசாயிகள் சங்கத்தை தொடங்கி, அதன் தலைவராக பொறுப்பேற்று, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாநாடுகளை நடத்தி விவசாயிகளின் உரிமைகளுக்காக பாடுபட்டார்.
 • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு ஓய்வெடுத்தபோது, தன் இன்னுயிரை நீத்தார்.

ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்

 • சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து ஜப்பானின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. இதனை எதிா்கொள்ள வேண்டுமெனில் ராணுவத்தை பலப்படுத்த வேண்டியது அவசியத் தேவையாகி உள்ளது.
 • நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை மேம்படுத்தவும், போா் விமானங்களை வாங்கவும், வீரா்களின் எண்ணிக்கையை அதிகரித்து படை பலத்தை விரிவாக்கவும் அதிக நிதி தேவைப்படுகிறது.
 • தற்போது இந்த கூடுதல் நிதியினை ஒதுக்கீடு செய்ய ஜப்பான் அமைச்சரவை தனது ஒப்புதலை தெரிவித்துள்ளது. தொடா்ச்சியாக ராணுவத்துக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவது இது ஒன்பதாவது முறையாகும்.
 • இதையடுத்து, 2021-நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்காக இதுவரை இல்லாத வரலாற்று உச்சமாக 5,170 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.3.87 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு திட்டம் துவக்கி வைத்தார் முதல்வர்

 • ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுசிறப்பு பரிசு தொகுப்பாக ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 2500 ரூபாய் ரொக்கம், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, தலா 20 கிராம் உலர் திராட்சை, முந்திரி 5 கிராம், ஏலக்காய் நல்ல துணிப்பை போன்றவை ஜனவரி 4 முதல் வழங்கப்படும் என டிச.19ல் முதல்வர் அறிவித்தார்.
 • அத்திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் நேற்று துவக்கி வைத்தார்; ஒன்பது அரிசி கார்டுதாரர்களுக்கு பணம் மற்றும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கினார். இத்திட்டத்திற்காக தமிழக அரசு 5604.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
 • 2021ம் ஆண்டில் 484.25 கோடி ரூபாய் செலவில் 1.80 லட்சம் வேட்டிகள் சேலைகள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார்; ஒன்பது குடும்பங்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்.

சர்வதேச ஹாக்கி தரவரிசை 2020

 • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் பெல்ஜியம் அணி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் முதலிடம் வகித்து வருகிறது. ஆடவர் ஹாக்கியில் ஐரோப்பிய சாம்பியனான பெல்ஜியம் 2496.88 புள்ளிகளுடன் உலகின் நம்பர் 1 அணியாகத் திகழ்கிறது. 
 • 2385.70 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2ம் இடத்திலும் 2,257.96 புள்ளிகளுடன் நெதர்லாந்து 3ம் இடத்திலும் 2063.78 புள்ளிகளுடன் இந்தியா 4ம் இடத்திலும் 2020ம் ஆண்டை முடித்துள்ளது.
 • ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜெண்டினா 5ம் இடத்திலும் ஜெர்மனி 6ம் இடத்திலும் இங்கிலாந்து 7ம் இடத்திலும் நியூஸிலாந்து 8ம் இடத்திலும் ஸ்பெயின் 9ம் இடத்திலும் கனடா 10-ம் இடத்திலும் 2020-ஐ முடித்துள்ளது.
 • மகளிர் ஹாக்கி அணி தரவரிசையில் நெதர்லாந்து முதலிடம். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் அர்ஜெண்டினா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஸ்பெயின், அயர்லாந்து, இந்தியா, சீனா ஆகிய அணிகளும் உள்ளன.

Monday, 21 December 2020

TNPSC 20th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் பதக்கப் பட்டியல் 2020
 • ஜொமனியில் கொலோன் நகரில் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த போட்டியில், கடைசி நாளில் மகளிருக்கான 60 கிலோ பிரிவில் சிம்ரன்ஜீத் கௌரும், 57 கிலோ பிரிவில் மணீஷ் மௌனும் தங்கப் பதக்கம் வென்றனா். இதில் சிம்ரன்ஜீத் இறுதிச்சுற்றில் ஜொமனியின் மாயா கிளியென்ஹஸை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினாா். 
 • மணீஷ் மௌன் தனது இறுதிச்சுற்றில் மற்றொரு இந்திய வீராங்கனையான சாக்ஷி சௌதரியை 3-2 என்ற கணக்கில் வென்றாா்.
 • இதையடுத்து பதக்கப்பட்டியலில் இந்தியா மொத்தமாக 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது.
 • போட்டியை நடத்திய ஜொமனி 4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தது. பிரான்ஸ் 3 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் 3-ஆம் இடம் பிடித்தது.
 • முன்னதாக இப்போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால் (52 கிலோ) தங்கம் வென்றிருந்தாா். சதீஷ் குமாா் (+91 கிலோ) காயம் காரணமாக இறுதிச்சுற்றிலிருந்து பாதியில் வெளியேறி வெள்ளியைப் பெற்றிருந்தாா். 
 • சோனியா லேதா் (57 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), கௌரவ் சோலங்கி (57 கிலோ), முகமது ஹசாமுதீன் (57 கிலோ) ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனா்.
 • இப்போட்டியில் இந்தியாவுடன், ஜொமனி, பெல்ஜியம், குரோஷியா, டென்மாா்க், பிரான்ஸ், மால்டோவா, நெதா்லாந்து, போலாந்து, உக்ரைன் நாடுகளின் போட்டியாளா்கள் பங்கேற்றிருந்தனா்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதி
 • எளிதாக தொழில் துவங்குவதற்காக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு, கூடுதலாக கடன் பெற அனுமதி அளிக்கப்படும்' என, மத்திய அரசு, கடந்த மே மாதம் அறிவித்தது.
 • இந்நிலையில், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும், மாவட்ட அளவிலான வர்த்தக சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 • இதையடுத்து, இம்மாநிலங்கள் கூடுதல் கடன் பெற, மத்திய நிதி அமைச்சகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.
 • தொழில், வர்த்தகம் தொடங்குவதற்கான பதிவுச் சான்று பெறுதல், சான்றுகளைப் புதுப்பித்தல், அங்கீகாரம் வழங்குதல், ஒப்புதல் அளித்தல் போன்றவற்றுக்கான தேவைகளை நீக்குவது, இந்தச் சீரமைப்பின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
 • கொரோனா வைரஸ் பரவலால், பாதிக்கப்பட்டுள்ள மாநில அரசுகளின் கூடுதல் நிதித் தேவையை நிறைவு செய்ய, கடந்த மே மாதம் முடிவு செய்யப்பட்டது.
 • இதன்படி, மாநில அரசு கள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2 சதவீதம், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மையில், 3 சதவீதம் கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டது.
 • ஆனால், அதற்கு மாநில அரசுகள், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு, எளிதாக வர்த்தகம் செய்யும் சீரமைப்பு விதிகள், நகர உள்ளாட்சி சீர்திருத்தம், மின்துறை சீர்திருத்தத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும் என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 
 • இதுவரை, 10 மாநிலங்கள், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தையும், ஐந்து மாநிலங்கள் எளிதாகத் தொழில் செய்யும் சீரமைப்பு விதிகளையும், இரண்டு மாநில அரசுகள், உள்ளாட்சி சீர்திருத்தங்களையும் முழுமையாக செய்து முடித்துள்ளன.
 • எளிதாக வர்த்தகம் செய்வதற்கான சீரமைப்பு விதிகளை, தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநில அரசுகளும், முழுமையாக செயல்படுத்தி உள்ளன. 
 • இந்த ஐந்து மாநில அரசுகளும், வெளிச்சந்தையில் கூடுதலாக, 16 ஆயிரத்து, 728 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
ஜெருசலேம் உதவித்தொகை அதிகரிப்பு முதல்வர் அறிவிப்பு
 • தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெருசலேம் செல்ல விரும்புவர்களுக்கு அரசு வழங்கி வரும் மானியம் ரூ.20,000 இருந்து ரூ.37000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
 • முஸ்லிம்கள் ஹஜ்ஜுக்குப் புனித யாத்திரை செல்வதைப்போல கிறிஸ்தவர்களும் ஜெருசலேமுக்குச் செல்கின்றனர். இந்த புனிதத் தலங்களுக்குச் செல்ல அதிகச் செலவாகும் என்பதால் ஹஜ் யாத்திரைக்குச் செல்ல உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 
 • கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கும் தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2036ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா & தமிழகம் மத்திய அரசு அறிக்கை / Central Government Report on India & Tamil Nadu for the year 2036

TNPSCSHOUTERS

 

 • 2011ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2036ம் ஆண்டில் 152 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 • இதன்படி, ஒவ்வொரு ஆண்டுக்கும் இந்தியாவின் மக்கள் தொகை 1 சதவீதம் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
 • இந்தியாவில் 2011ம் ஆண்டு மொத்தம் 31.8 சதவீதம் மக்கள் நகர்புறத்தில் வசித்தனர். இந்த எண்ணிக்கை 2036ம் ஆண்டில் 38.2 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 • இவ்வாறு நகர்புறத்திற்கு அதிகம் குடி பெரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
 • இதன்படி தமிழகத்தில் 2011ம் ஆண்டு தமிழகத்தின் மொத்த தொகை 7.21 கோடியாக இருந்தது. 2021ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7.64 கோடியாகவும், 2036ம் ஆண்டு 7.80 கோடியாகவும் இருக்கும்.
 • இதில் ஆண்களின் எண்ணிக்கை 3.87 கோடியாகவும், பெண்களின் எண்ணிக்கை 3.93 கோடியாகவும் இருக்கும். எனினும் 58.2 சதவீதம் பேர் நகர்புறத்தில் வசிப்பவர்களாக இருப்பார்கள். இந்த எண்ணிக்கை 2011ம் ஆண்டு 49.3 சதவீதமாக இருந்தது. 
 • நகர்மயமாதலில் 2036ம் ஆண்டு டெல்லி, கேரளாவிற்கு அடுத்த படியாக தமிழகம் 3வது இடத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு சதுர கி.மீட்டர் பகுதியில் 2021ம் ஆண்டு 587 பேரும், 2026ம் ஆண்டில் 596 பேரும், 2036ம் ஆண்டில் 600 பேரும் வசிப்பார்கள் என்று கணக்கீடப்பட்டுள்ளது.
 • 2036ம் ஆண்டு தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 16 சதவீதம் குறையும். இதனால் குறைந்த குழந்தைகள் இறப்பு விகிதம் கொண்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணம் 19 சதவிதகமாக குறையும்.
 • ஆண், பெண் பிறப்பு பாலின விகிதம் 1015 ஆக அதிகரிக்கும். இதன்படி பாலின விகிதம் 2021ம் ஆண்டு 1002 ஆகவும், 2026ம் ஆண்டு 1006 ஆகவும், 2031ம் ஆண்டு 1011 ஆகவும், 2036ம் ஆண்டு 1015 ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • 2036ம் ஆம் தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7.80 கோடியாக இருந்தால், இதில் 4.67 கோடி நகரத்தில் வசிப்பார்கள். 2021ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 4 கோடியாகவும், 2026ம் ஆண்டு 4.29 கோடியாகவும், 2031ம் ஆண்டு 4.49 கோடியாகவும் இருக்கும்.

Sunday, 20 December 2020

TNPSC 19th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் முதல்வர் அறிவிப்பு

 • பொங்கல் பண்டிகை வருவதையொட்டி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும். 
 • இந்தத்திட்டம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதியிலிருந்து தொடங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரிசி, ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.
 • முன்னதாக, கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 1000 ரூபாய், துண்டு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தொகை 2500 ஆகவும், முழு கரும்பாகவும் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர்

 • ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில், ஆண்களுக்கான 52 கிலோ பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய வீரர் அமித் பன்ஹால், ஜெர்மனி வீரர் அர்ஜிஷ்டி டெர்டெர்யனுடன் மோத இருந்தார். 
 • ஆனால் கடைசி நேரத்தில் அவர், விலகியதால் போட்டியின்றி அமித் பன்ஹாலுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர்

  • 91 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் சதீஷ்குமார் 4-1 என்ற கணக்கில் பிரான்ஸ் வீரர் டாமிலி டினி மொயின்டை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
  • ஆனால் காயம் காரணமாக சதீஷ்குமார் இறுதிப்போட்டியில் இருந்து ஒதுங்கியதால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது.

  நிலவிலிருந்து 1.73 கிலோ கற்கள் கொண்டு வந்தது சீன விண்கலம்

  • நிலவிலிருந்து பாறைகள், கற்களை சேகரித்துள்ள சாங்கி விண்கலம், அதனை வெற்றிகரமாக பூமிக்கு அனுப்பியுள்ளது. 1,731 கிராம் எடை கொண்ட அந்தப் பொருள்கள் ஆய்வுக் குழுவிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
  • அந்தக் கற்களை சேகரிப்பது, ஆய்வு செய்வது ஆக்ய பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வாா்கள் என்று ஆய்வு மையம் தெரிவித்தது.
  • நிலவிலிருந்து கற்கள், பாறைகளை பூமிக்குக் கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கான சீனாவின் சாங்கி-5 விண்கலம், கடந்த மாதம் 24-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது.
  • அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இத்தகைய திட்டத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா நிறைவேற்றி வருகிறது.

  பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த 134 கோடி ஒதுக்கீடு

  • தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 35 ஆயிரம் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்திட 134 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
  • அதன்படி, 71 இடங்களில் கூடுதல் வகுப்பறைகள், 280 இடங்களில் அறிவியல் ஆய்வகம், 98 பள்ளிகளில் கணினி அறை, 82 இடங்களில் நூலகம், 98 இடங்களில் கலை/கைவினை அறை, 117 இடங்களில் பழுதுபார்க்கும் பணிகள், 303 ஆண்கள் கழிப்பறை, 271 பெண்கள் கழிப்பறை, 784 இடங்களில் சாய்வு தள வசதி என மொத்தம் 2146 வேலைகள் மேற்கொள்ளப்படுகிறது. 
  • இப்பணிகளுக்கு 10 நாட்களுக்குள் டெண்டர் விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டவுடன் அந்த பள்ளிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  Saturday, 19 December 2020

  TNPSC 18th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

  TNPSCSHOUTERS

   

  தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்திய நாராயணனை நியமிக்க ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு

  • தென்னிந்திய மாநிலங்கள் சார்ந்த சூற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, கடந்த 2012-ம்ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. 
  • இதேபோன்று கொல்கத்தா, புனே, போபால் ஆகிய இடங்களிலும் மண்டல அமர்வுகள் தொடங்கப்பட்டன. சென்னையில் வழக்குகள் அதிகமாக இருந்ததால் 2வது அமர்வும் தொடங்கப்பட்டது.
  • முதன்மை அமர்வு மற்றும் மண்டல அமர்வுகளில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதித் துறை உறுப்பினர்களாகவும், சுற்றுச்சூழல் துறைகளில் பணியாற்றிய இந்திய வனப் பணி அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பேராசிரியர்கள் தொழில்நுட்ப உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு வந்தனர்.
  • அதன்பின்னர் உறுப்பினர்கள் நியமனத்தில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, கடந்த வாரம் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் ஆகியோரை நியமிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி இருந்தது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • அதைத் தொடர்ந்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள எம்.சத்திய நாராயணனை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வுபெற இருந்த நிலையில், அவருக்கு இப்பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • கடந்த 2012-ம் ஆண்டு தேசியபசுமை தீர்ப்பாயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 நீதித் துறை உறுப்பினர்கள், ஒரு தொழில்நுட்ப உறுப்பினர் என 3 உறுப்பினர்கள் இருந்தனர். 
  • அவர்கள் ஓய்வுபெற்ற நிலையில், பசுமை தீர்ப்பாயத்தில் உறுப்பினர்களாக தமிழர்கள் யாரும் இல்லை. தற்போது மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் பசுமை தீர்ப்பாயத்துக்கு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

  மாடர்னா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

  • அமெரிக்காவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 
  • இந்நிலையில் 'பைசர் - பயோ என்டெக்' நிறுவன கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சமீபத்தில் அனுமதி அளித்தது.
  • இதையடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் பைசர் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் 'மாடர்னா' நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையின் அதிகாரப்பூர்வ அனுமதி உடனடியாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பின் அமெரிக்காவின் இரண்டாவது தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்.

  33 நெடுஞ்சாலை திட்டங்கள்: கர்நாடகத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல்

  • கர்நாடகத்தில் ரூ.11,000 கோடி மதிப்பிலான 33 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
  • இந்த காணொலி நிகழ்ச்சிக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமை தாங்குகிறார். மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கோவிந்த் எம்.கர்ஜோல், கர்நாடக துணை முதல்வர் மற்றும் கர்நாடக அமைச்சர்கள் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
  • பெங்களூரு, மைசூரு உட்பட மொத்தம் 33 இடங்களில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. சுமார் 1200 கி.மீ தூரத்துக்கு இந்த சாலைகள் ரூ.11 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் கர்நாடகத்தில் சாலைகள் இணைப்பு மேம்படும், பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

  Friday, 18 December 2020

  TNPSC 16th & 17th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

  TNPSCSHOUTERS

   

  இந்தியா - வங்கதேசம் இடையே நடந்த மெய்நிகர் மாநாட்டில் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து

  • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடு நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும், கொரோனாவிற்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் ஆலோசித்தார்கள்.மேலும் பிறகு சிலஹதி - ஹல்திபாரி இடையே ரயில் சேவையை இரு நாட்டு தலைவர்களும் தொடங்கி வைத்தார்கள்.
  • இதனிடையே இந்தியா-வங்கதேசம் இடையே நடந்த மெய்நிகர் மாநாட்டில் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வங்கதேசத்துக்கான இந்திய தூதர், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகச் செயலாளர் மற்றும் வங்கதேச அதிகாரிகள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
  • ஹைட்ரோ கார்பன் துறையில் இணைந்து செயல்படுதல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் சமுதாய வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த இந்திய மானிய உதவி அளிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • எல்லை கடந்த யானைகள் பாதுகாப்புக்கான நெறிமுறைகள் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • திடக்கழிவு மேலாண்மைக்கான சாதனங்களை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • வேளாண்துறை ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • வங்கதேசம் தாகாவில் உள்ள தேசத்தந்தை பங்காபந்து ஷேக் முஜிபூர் ரகுமான் நினைவு அருங்காட்சியகம், தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • இந்தியா-வங்கதேசம் சிஇஓ கூட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

  ஊக்கமருந்துத் தடுப்பு உலக நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி

  • சர்வதேச விளையாட்டுபோட்டிகளில் வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்டறியும் பணியில் ஊக்கமருந்துத் தடுப்பு உலக நிறுவனம் ( World Anti-Doping Agency) ஈடுப்பட்டு வருகிறது. 
  • இந்த நிறுவனம் புதுமையான பரிசோதனை முறைகளைக் கண்டறிய ஆய்வுப் பணியில் ஈடுபடவுள்ளது.இதற்காக பல நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. உலகளவில் நேர்மையான விளையாட்டுச் சூழலை ஏற்படுத்த, இந்த ஆராய்ச்சிக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை அளிப்பதாக இந்தியா உறுதி அளித்துள்ளது.
  • உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் புலனாய்வு மற்றும் உளவுத்துறைக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்தியா அளித்துள்ள நிதி சீனா, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகள் அளித்த நிதியைவிடவும் அதிகம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உறுப்பு நாடுகளின் மொத்தப் பங்களிப்பு மற்றும் அதற்கு இணையாக சர்வதேச ஒலிம்பிக்குழுவின் அளிக்கும் நிதியுடன் சேர்த்து மொத்தம் 10 மில்லியன் டாலர் தொகுப்பு நிதி உருவாக்கப்படவுள்ளது. 

  உலகக்கோப்பை மல்யுத்த போட்டி.. இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் சாதனை 

  • உலக கோப்பை மல்யுத்த போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் தகுதி பெற்றார்.
  • அதன்படி அவர் இறுதிப்போட்டியில் மால்டோவா நாட்டு வீராங்கனை அனஸ்டாசியா நிசிதாவை எதிர்கொண்டார். அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அன்ஷு மாலிக் இறுதிப் போட்டியில் பெரிதும் தடுமாறினார்.
  • பின்னர் போட்டியின் முடிவில் 1-5 என்ற செட் கணக்கில் அன்ஷு மாலிக் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

  இந்திய பொறியாளருக்கு ஐ.நா.வின் உலக இளம் சாதனையாளர் விருது

  • தற்போதுள்ள சுற்றுச்சூழல் சவால்களில் இருந்தும் காலநிலை மாற்ற நெருக்கடிகளில் இருந்தும் உலகைக் காப்பற்றக் கூடிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக 7 இளைஞர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உலக இளம் சாதனையாளர்கள் விருதை வழங்கியுள்ளது.
  • இதில் இந்திய பொறியாளர் வித்யுத் மோகன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 29 வயதாகும் இவர் 'தகாச்சர்' என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
  • இவர் அறுவடைக்குப் பிறகான விவசாய கழிவுகளைத் தீயிட்டு எரிக்காமல், அவற்றில் இருந்து ஆக்டிவேட்டட் கார்பன் போன்ற மதிப்புக் கூட்டு பொருட்களை உற்பத்தி செய்யும் முறையை கண்டுபிடித்ததற்காக இந்த விருதுக்கு அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
  • வழக்கமாக விவசாய கழிவுகள் அப்படியே தீயிலிட்டு எரிக்கப்படும். இதனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு உள்ளாகி வருகிறது. இதைத் தடுக்கவும் அதேசமயம் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் வித்யுத் மோகன் வழி செய்துள்ளார்.
  • வித்யுத் மோகன் மற்றும் கெவின் கங் இணைந்து 2018-ல் தொடங்கிய தகாச்சர் நிறுவனம் இதுவரை 4,500 விவசாயிகளிடம் இருந்து 3,000 டன்னுக்கும் மேலான விவசாய கழிவுகளைப் பெற்று அவற்றில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்களை தயாரித்து வருகிறது.

  சி.எம்.எஸ்-01 செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

  • இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த உதவும் சி.எம்.எஸ்-01 என்ற செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் மூலம் டிசம்பர் 17ம் தேதி விண்ணில் ஏவ உள்ளதாக இஸ்ரோ அறிவித்தது. 
  • இந்தநிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து 3.41 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும் சி.எம்.எஸ்-01 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. 
  • ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 20 நிமிடம் 11 விநாடிகளில் 545 வது கிலோ மீட்டர் தொலைவில் சி.எம்.எஸ் 01 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி அதன் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

  ரூ.28 ஆயிரம் கோடியில் ஆயுதம் வாங்க ஒப்புதல்

  • ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் தலைமையில், ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து, முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் வாங்கப்பட உள்ளன. இதற்காக, ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
  • 'மேக் இன் இந்தியா' மற்றும் தற்சார்பு இந்தியா திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

  விளையாட்டுப் போட்டிகளில் யோகா மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல்

  • விளையாட்டுப் போட்டிகளில் யோகாவை சேர்ப்பதற்கு ஒப்புதல் அளிப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.
  • யோகாவை ஊக்குவிப்பதற்கும், அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், மக்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
  • மேலும் எதிர்கால கெலோ இந்தியா விளையாட்டு திட்டத்தில் யோகா சேர்க்கப்படும் என்றும் இதன்மூலம் தேசிய மற்றும் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் யோகா இடம்பெறும் எனவும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ரிஜிஜு தெரிவித்தார்.

  இந்தியாவில் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள 4 திட்டங்களுக்கு உலக வங்கி ஒப்புதல்

  • இந்தியாவின் சமூக பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துதல், சத்தீஸ்கரில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் விவசாயத்தை ஊக்குவித்தல், நாகாலாந்தில் தரமான கல்வியை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போதுள்ள அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துதலுக்கு உதவுகிறது.
  • இந்த நான்கு திட்டங்கள் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு சிறந்த வருமான வாய்ப்புகள், கல்வி, நீர் வழங்கல் ஆகியவற்றிக்கு உதவுகிறது என்று உலக வங்கி இயக்குநர் ஜுனைத் அகமது கூறினார்.
  • அங்கீகரிக்கப்பட்ட நான்கு திட்டங்களில் 100 மில்லியன் டாலர் சத்தீஸ்கர் உள்ளடக்கிய கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சி திட்டம் மாநிலத்தின் தொலைதூர பகுதிகளில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு பல்வகைப்பட்ட மற்றும் சத்தான உணவை வழங்க உதவுகிறது.
  • இரண்டாவது திட்டம் நாகாலாந்தில் 68 மில்லியன் டாலர் வகுப்பறை, கற்பித்தல் மற்றும் வளங்களை மேம்படுத்தும் திட்டம் ஆகும். இந்தியாவின் அணை மேம்பாடு மற்றும் புனர்வாழ்வு திட்டத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டங்களுக்கும் உலக வங்கி நிதியளிக்கிறது.

  சீனாவுக்கான ஐ.நா., பிரதிநிதியாக இந்தியர் நியமனம்

  • ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் சீனாவுக்கான தன் பிரதிநிதியாக இந்தியாவைச் சேர்ந்த சித்தார்த் சட்டர்ஜியை நியமித்துள்ளார்.
  • ஐ.நா.வில் பணியாற்றும் சித்தார்த் சட்டர்ஜி தேசிய ராணுவ அகாடமியில் பயின்று அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலை.யில் பொது கொள்கையில் முதுகலை பட்டம் பெற்றவர்.
  • இவர் தற்போது ஆப்ரிக்க நாடான கென்யாவிற்கு ஐ.நா. பிரதிநிதியாக உள்ளார். கென்யாவில் ஐ.நா. வளர்ச்சி திட்டம் தேசிய மக்கள் தொகை நிதியம் ஆகியவற்றின் தலைமை பொறுப்புகளை வகித்துள்ளார்.
  • அத்துடன் இந்தோனேஷியா சோமாலியா சூடான் நாடுகளுக்கான ஐ.நா. குழந்தைகள் நிதியத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
  • சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் முதன்மை துாதராக செயல்பட்டுள்ள சித்தார்த் சட்டர்ஜி 1997ல் ஐ.நா.வில் இணைவதற்கு முன் இந்திய ராணுவ அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.இவர் 2021 ஜனவரியில் சீனாவில் ஐ.நா.வின் பிரதிநிதியாக பொறுப்பேற்க உள்ளார்.

  சர்க்கரை ஏற்றுமதிக்கு 3,500 கோடி மானியம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • நாட்டில் தற்போது, 5 கோடி கரும்பு விவசாயிகளும், அவர்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர். மேலும், 5 லட்சம் தொழிலாளர்கள் சர்க்கரை ஆலைகளிலும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். 
  • கரும்புகளை சர்க்கரை ஆலைகளில் விவசாயிகள் விற்கின்றனர். ஆனால், சர்க்கரை ஆலைகளில் கூடுதல் இருப்பு உள்ளதால், அவர்களுக்கு செலுத்த வேண்டிய பணம் நிலுவையில் வைக்கப்படுகிறது. 
  • இப்பிரச்னைக்கு தீர்வு காண, கூடுதல் சர்க்கரை இருப்பை அகற்ற மத்திய அரசு உதவி வருகிறது. அந்த வகையில், 2020-21 நடப்பு ஆண்டில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு ₹3,500 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.