Type Here to Get Search Results !

TNPSC 20th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் பதக்கப் பட்டியல் 2020
  • ஜொமனியில் கொலோன் நகரில் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த போட்டியில், கடைசி நாளில் மகளிருக்கான 60 கிலோ பிரிவில் சிம்ரன்ஜீத் கௌரும், 57 கிலோ பிரிவில் மணீஷ் மௌனும் தங்கப் பதக்கம் வென்றனா். இதில் சிம்ரன்ஜீத் இறுதிச்சுற்றில் ஜொமனியின் மாயா கிளியென்ஹஸை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினாா். 
  • மணீஷ் மௌன் தனது இறுதிச்சுற்றில் மற்றொரு இந்திய வீராங்கனையான சாக்ஷி சௌதரியை 3-2 என்ற கணக்கில் வென்றாா்.
  • இதையடுத்து பதக்கப்பட்டியலில் இந்தியா மொத்தமாக 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது.
  • போட்டியை நடத்திய ஜொமனி 4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தது. பிரான்ஸ் 3 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் 3-ஆம் இடம் பிடித்தது.
  • முன்னதாக இப்போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால் (52 கிலோ) தங்கம் வென்றிருந்தாா். சதீஷ் குமாா் (+91 கிலோ) காயம் காரணமாக இறுதிச்சுற்றிலிருந்து பாதியில் வெளியேறி வெள்ளியைப் பெற்றிருந்தாா். 
  • சோனியா லேதா் (57 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), கௌரவ் சோலங்கி (57 கிலோ), முகமது ஹசாமுதீன் (57 கிலோ) ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனா்.
  • இப்போட்டியில் இந்தியாவுடன், ஜொமனி, பெல்ஜியம், குரோஷியா, டென்மாா்க், பிரான்ஸ், மால்டோவா, நெதா்லாந்து, போலாந்து, உக்ரைன் நாடுகளின் போட்டியாளா்கள் பங்கேற்றிருந்தனா்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதி
  • எளிதாக தொழில் துவங்குவதற்காக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு, கூடுதலாக கடன் பெற அனுமதி அளிக்கப்படும்' என, மத்திய அரசு, கடந்த மே மாதம் அறிவித்தது.
  • இந்நிலையில், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும், மாவட்ட அளவிலான வர்த்தக சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இதையடுத்து, இம்மாநிலங்கள் கூடுதல் கடன் பெற, மத்திய நிதி அமைச்சகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.
  • தொழில், வர்த்தகம் தொடங்குவதற்கான பதிவுச் சான்று பெறுதல், சான்றுகளைப் புதுப்பித்தல், அங்கீகாரம் வழங்குதல், ஒப்புதல் அளித்தல் போன்றவற்றுக்கான தேவைகளை நீக்குவது, இந்தச் சீரமைப்பின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
  • கொரோனா வைரஸ் பரவலால், பாதிக்கப்பட்டுள்ள மாநில அரசுகளின் கூடுதல் நிதித் தேவையை நிறைவு செய்ய, கடந்த மே மாதம் முடிவு செய்யப்பட்டது.
  • இதன்படி, மாநில அரசு கள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2 சதவீதம், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மையில், 3 சதவீதம் கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டது.
  • ஆனால், அதற்கு மாநில அரசுகள், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு, எளிதாக வர்த்தகம் செய்யும் சீரமைப்பு விதிகள், நகர உள்ளாட்சி சீர்திருத்தம், மின்துறை சீர்திருத்தத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும் என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 
  • இதுவரை, 10 மாநிலங்கள், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தையும், ஐந்து மாநிலங்கள் எளிதாகத் தொழில் செய்யும் சீரமைப்பு விதிகளையும், இரண்டு மாநில அரசுகள், உள்ளாட்சி சீர்திருத்தங்களையும் முழுமையாக செய்து முடித்துள்ளன.
  • எளிதாக வர்த்தகம் செய்வதற்கான சீரமைப்பு விதிகளை, தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநில அரசுகளும், முழுமையாக செயல்படுத்தி உள்ளன. 
  • இந்த ஐந்து மாநில அரசுகளும், வெளிச்சந்தையில் கூடுதலாக, 16 ஆயிரத்து, 728 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
ஜெருசலேம் உதவித்தொகை அதிகரிப்பு முதல்வர் அறிவிப்பு
  • தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெருசலேம் செல்ல விரும்புவர்களுக்கு அரசு வழங்கி வரும் மானியம் ரூ.20,000 இருந்து ரூ.37000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
  • முஸ்லிம்கள் ஹஜ்ஜுக்குப் புனித யாத்திரை செல்வதைப்போல கிறிஸ்தவர்களும் ஜெருசலேமுக்குச் செல்கின்றனர். இந்த புனிதத் தலங்களுக்குச் செல்ல அதிகச் செலவாகும் என்பதால் ஹஜ் யாத்திரைக்குச் செல்ல உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 
  • கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கும் தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel