TNPSC 21st DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்தியா - வியட்நாம் ஒப்பந்தம்

 • பிரதமர் மோடி தென் கிழக்காசிய நாடான, வியட்நாமின் பிரதமர் நகுயன் ஜூயன் புக் உடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசினார்.
 • அப்போது, இந்தியா - வியட்நாம் இடையே, பிராந்தியம் மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்தும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் இருவரும் விவாதித்தனர்.
 • வங்கதேசம், இலங்கையை அடுத்து, ராணுவ துறையில் இத்தகைய கடன் வரம்பு வசதியை பெறும் மூன்றாவது நாடு, வியட்நாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 • இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவு திட்டங்களின் கீழ், வியட்நாமின் மெகாங் டெல்டா பகுதியில் நீர் வள மேலாண்மை பணிகளை இந்தியா மேற்கொள்ள உள்ளது. 
 • இது பற்றியும், மின்னணு தொழில்நுட்ப இணைப்பு வசதி, பாரம்பரிய கலாசார சின்னங்களின் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாகவும், இரு தலைவர்களும் பேசினர்.
 • தென் சீனக் கடல் பிராந்தியத்தில், சுதந்திரமான சரக்கு போக்குவரத்தை பராமரிப்பது, இந்திய - பசிபிக் கடல் பிராந்தியத்தில், விதிமுறைகளைப் பின்பற்றி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள், பேச்சில் முக்கிய இடம் பெற்றிருந்தன. 
 • இதையடுத்து, ராணுவ துறையில், 750 கோடி ரூபாய் கடன் வரம்பு உட்பட, எரிசக்தி, ஆரோக்கியப் பராமரிப்பு, நீர் மேலாண்மை ஆகிய துறைகளில், இரு தலைவர்களின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
 • இரு நாடுகளின் எதிர்கால வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டுறவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், பேச்சு நடந்தது. வியட்நாமிற்கு, 750 கோடி ரூபாய் கடன் வரம்பின் கீழ், ராணுவ தளவாடங்களை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 12 அதிவிரைவு கடலோர காவல் படகுகளை வியட்நாமிற்கு இந்தியா வழங்க உள்ளது. 

அதிக நெல் மகசூல் செய்வோருக்கு நாராயணசாமி பெயரில் விருது முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

 • அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருது, இந்தஆண்டு முதல், 'சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது' என்ற பெயரில் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
 • விவசாயிகளின் பெருந்தலைவர் சி.நாராயணசாமி நாயுடு தனதுபேச்சு, செயல் மற்றும் தலைமைப்பண்புகளால் தமிழக விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்களின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தார். 
 • 1973-ம் ஆண்டில் தமிழக விவசாயிகள் சங்கத்தை தொடங்கி, அதன் தலைவராக பொறுப்பேற்று, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாநாடுகளை நடத்தி விவசாயிகளின் உரிமைகளுக்காக பாடுபட்டார்.
 • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு ஓய்வெடுத்தபோது, தன் இன்னுயிரை நீத்தார்.

ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்

 • சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து ஜப்பானின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. இதனை எதிா்கொள்ள வேண்டுமெனில் ராணுவத்தை பலப்படுத்த வேண்டியது அவசியத் தேவையாகி உள்ளது.
 • நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை மேம்படுத்தவும், போா் விமானங்களை வாங்கவும், வீரா்களின் எண்ணிக்கையை அதிகரித்து படை பலத்தை விரிவாக்கவும் அதிக நிதி தேவைப்படுகிறது.
 • தற்போது இந்த கூடுதல் நிதியினை ஒதுக்கீடு செய்ய ஜப்பான் அமைச்சரவை தனது ஒப்புதலை தெரிவித்துள்ளது. தொடா்ச்சியாக ராணுவத்துக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவது இது ஒன்பதாவது முறையாகும்.
 • இதையடுத்து, 2021-நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்காக இதுவரை இல்லாத வரலாற்று உச்சமாக 5,170 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.3.87 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு திட்டம் துவக்கி வைத்தார் முதல்வர்

 • ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுசிறப்பு பரிசு தொகுப்பாக ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 2500 ரூபாய் ரொக்கம், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, தலா 20 கிராம் உலர் திராட்சை, முந்திரி 5 கிராம், ஏலக்காய் நல்ல துணிப்பை போன்றவை ஜனவரி 4 முதல் வழங்கப்படும் என டிச.19ல் முதல்வர் அறிவித்தார்.
 • அத்திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் நேற்று துவக்கி வைத்தார்; ஒன்பது அரிசி கார்டுதாரர்களுக்கு பணம் மற்றும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கினார். இத்திட்டத்திற்காக தமிழக அரசு 5604.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
 • 2021ம் ஆண்டில் 484.25 கோடி ரூபாய் செலவில் 1.80 லட்சம் வேட்டிகள் சேலைகள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார்; ஒன்பது குடும்பங்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்.

சர்வதேச ஹாக்கி தரவரிசை 2020

 • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் பெல்ஜியம் அணி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் முதலிடம் வகித்து வருகிறது. ஆடவர் ஹாக்கியில் ஐரோப்பிய சாம்பியனான பெல்ஜியம் 2496.88 புள்ளிகளுடன் உலகின் நம்பர் 1 அணியாகத் திகழ்கிறது. 
 • 2385.70 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2ம் இடத்திலும் 2,257.96 புள்ளிகளுடன் நெதர்லாந்து 3ம் இடத்திலும் 2063.78 புள்ளிகளுடன் இந்தியா 4ம் இடத்திலும் 2020ம் ஆண்டை முடித்துள்ளது.
 • ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜெண்டினா 5ம் இடத்திலும் ஜெர்மனி 6ம் இடத்திலும் இங்கிலாந்து 7ம் இடத்திலும் நியூஸிலாந்து 8ம் இடத்திலும் ஸ்பெயின் 9ம் இடத்திலும் கனடா 10-ம் இடத்திலும் 2020-ஐ முடித்துள்ளது.
 • மகளிர் ஹாக்கி அணி தரவரிசையில் நெதர்லாந்து முதலிடம். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் அர்ஜெண்டினா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஸ்பெயின், அயர்லாந்து, இந்தியா, சீனா ஆகிய அணிகளும் உள்ளன.

0 Comments