டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு 'ஆதார்' கட்டாயம் & ஓஎம்ஆர் விடைத்தாளிலும் அதிரடி மாற்றம்

 

  • தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் ஒருமுறைப்பதிவு நிரந்தரப்பதிவில் கட்டாயமாக தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இதுவரை தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் விரைவில் பதிவு செய்ய வேண்டும்.
  • இனிவரும் காலங்களில் தேர்வர்கள் தாங்கள் எழுதவிருக்கும் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யும் முன் தங்களது ஆதார் எண்ணைப்பதிவு செய்தால் மட்டுமே நிரந்தர பதிவு மூலமாக பதிவிறக்கம் செய்ய இயலும்.விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறைப்பதிவு/ நிரந்தர பதிவு வைத்திருக்க அனுமதியில்லை.
  • இருப்பினும் ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட ஒருமுறைப்பதிவு/ நிரந்தர பதிவு வைத்துள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தை தொடர்பு கொண்டு ஏனைய இதர நிரந்தரப் பதிவிற்கு மாற்றம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வருவதனையும், விண்ணப்பதாரர்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களது நிரந்தரப்பதிவில் இணைந்துள்ள ஆதார் பதிவினை ஒரே ஒரு முறை மட்டுமே ரத்து செய்து தங்களது விருப்பத்திற்கேற்ப ஏனைய நிரந்தரப்பதிவில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு
  • வழிவகை ெசய்யப்பட்டுள்ளது. ஆகையால், விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பினை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். வருகிற 3ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்(குரூப் 1) முதனிலை தேர்வு மற்றும் வருகிற 9ம் தேதி, 10ம் தேதி நடைபெற உள்ள உதவி இயக்குனர்(தொழில் மற்றும் வணிகம்) தேர்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஒருமுறைப்பதிவு/ நிரந்தர பதிவு மூலம் ஆதார் எண்ணை இணைத்த பிறகே பதிவிறக்கம் செய்ய இயலும்.
  • மேலும் இதுகுறித்த கூடுதல் விளக்கம் தேவைப்படின் விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002ல் அலுவலக நேரங்களில்(காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) எல்லா வேலை நாட்களிலும் வருகிற 8ம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம். தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
  • தேர்வாணையத்தால் இனிவரும் நாட்களில் நடத்தப்படவிருக்கும் கொள்குறிவகைத் தேர்வுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள ஓஎம்ஆர் விடைத்தால் பல சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • எனவே, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் விடைத்தாளின் மாதிரி படிவம், விடைத்தாளை கையாளும் முறை குறித்த விளக்க குறும்படமும், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
  • டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:குரூப் 1 தேர்வுகளில் அடங்கிய பதவிகளுக்கு திட்டமிட்டப்படி முதன்நிலை தேர்வு வருகிற 3ம் தேதி முற்பகலில் மட்டும் 32 மாவட்டங்களில் 856 தேர்வுக்கூடங்களில் நடைபெற உள்ளது. 
  • முதன்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஹால்டிக்ெகட் ேதர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. 
  • தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை, பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும்.

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel