Type Here to Get Search Results !

TNPSC 18th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்திய நாராயணனை நியமிக்க ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு

  • தென்னிந்திய மாநிலங்கள் சார்ந்த சூற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, கடந்த 2012-ம்ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. 
  • இதேபோன்று கொல்கத்தா, புனே, போபால் ஆகிய இடங்களிலும் மண்டல அமர்வுகள் தொடங்கப்பட்டன. சென்னையில் வழக்குகள் அதிகமாக இருந்ததால் 2வது அமர்வும் தொடங்கப்பட்டது.
  • முதன்மை அமர்வு மற்றும் மண்டல அமர்வுகளில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதித் துறை உறுப்பினர்களாகவும், சுற்றுச்சூழல் துறைகளில் பணியாற்றிய இந்திய வனப் பணி அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பேராசிரியர்கள் தொழில்நுட்ப உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு வந்தனர்.
  • அதன்பின்னர் உறுப்பினர்கள் நியமனத்தில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, கடந்த வாரம் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் ஆகியோரை நியமிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி இருந்தது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • அதைத் தொடர்ந்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள எம்.சத்திய நாராயணனை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வுபெற இருந்த நிலையில், அவருக்கு இப்பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • கடந்த 2012-ம் ஆண்டு தேசியபசுமை தீர்ப்பாயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 நீதித் துறை உறுப்பினர்கள், ஒரு தொழில்நுட்ப உறுப்பினர் என 3 உறுப்பினர்கள் இருந்தனர். 
  • அவர்கள் ஓய்வுபெற்ற நிலையில், பசுமை தீர்ப்பாயத்தில் உறுப்பினர்களாக தமிழர்கள் யாரும் இல்லை. தற்போது மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் பசுமை தீர்ப்பாயத்துக்கு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாடர்னா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

  • அமெரிக்காவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 
  • இந்நிலையில் 'பைசர் - பயோ என்டெக்' நிறுவன கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சமீபத்தில் அனுமதி அளித்தது.
  • இதையடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் பைசர் தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் 'மாடர்னா' நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையின் அதிகாரப்பூர்வ அனுமதி உடனடியாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பின் அமெரிக்காவின் இரண்டாவது தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்.

33 நெடுஞ்சாலை திட்டங்கள்: கர்நாடகத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல்

  • கர்நாடகத்தில் ரூ.11,000 கோடி மதிப்பிலான 33 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
  • இந்த காணொலி நிகழ்ச்சிக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமை தாங்குகிறார். மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கோவிந்த் எம்.கர்ஜோல், கர்நாடக துணை முதல்வர் மற்றும் கர்நாடக அமைச்சர்கள் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
  • பெங்களூரு, மைசூரு உட்பட மொத்தம் 33 இடங்களில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. சுமார் 1200 கி.மீ தூரத்துக்கு இந்த சாலைகள் ரூ.11 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் கர்நாடகத்தில் சாலைகள் இணைப்பு மேம்படும், பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel