Type Here to Get Search Results !

TNPSC 19th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் முதல்வர் அறிவிப்பு

  • பொங்கல் பண்டிகை வருவதையொட்டி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும். 
  • இந்தத்திட்டம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதியிலிருந்து தொடங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரிசி, ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.
  • முன்னதாக, கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 1000 ரூபாய், துண்டு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தொகை 2500 ஆகவும், முழு கரும்பாகவும் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர்

  • ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில், ஆண்களுக்கான 52 கிலோ பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய வீரர் அமித் பன்ஹால், ஜெர்மனி வீரர் அர்ஜிஷ்டி டெர்டெர்யனுடன் மோத இருந்தார். 
  • ஆனால் கடைசி நேரத்தில் அவர், விலகியதால் போட்டியின்றி அமித் பன்ஹாலுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர்

    • 91 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் சதீஷ்குமார் 4-1 என்ற கணக்கில் பிரான்ஸ் வீரர் டாமிலி டினி மொயின்டை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    • ஆனால் காயம் காரணமாக சதீஷ்குமார் இறுதிப்போட்டியில் இருந்து ஒதுங்கியதால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது.

    நிலவிலிருந்து 1.73 கிலோ கற்கள் கொண்டு வந்தது சீன விண்கலம்

    • நிலவிலிருந்து பாறைகள், கற்களை சேகரித்துள்ள சாங்கி விண்கலம், அதனை வெற்றிகரமாக பூமிக்கு அனுப்பியுள்ளது. 1,731 கிராம் எடை கொண்ட அந்தப் பொருள்கள் ஆய்வுக் குழுவிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
    • அந்தக் கற்களை சேகரிப்பது, ஆய்வு செய்வது ஆக்ய பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வாா்கள் என்று ஆய்வு மையம் தெரிவித்தது.
    • நிலவிலிருந்து கற்கள், பாறைகளை பூமிக்குக் கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கான சீனாவின் சாங்கி-5 விண்கலம், கடந்த மாதம் 24-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது.
    • அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இத்தகைய திட்டத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா நிறைவேற்றி வருகிறது.

    பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த 134 கோடி ஒதுக்கீடு

    • தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 35 ஆயிரம் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்திட 134 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
    • அதன்படி, 71 இடங்களில் கூடுதல் வகுப்பறைகள், 280 இடங்களில் அறிவியல் ஆய்வகம், 98 பள்ளிகளில் கணினி அறை, 82 இடங்களில் நூலகம், 98 இடங்களில் கலை/கைவினை அறை, 117 இடங்களில் பழுதுபார்க்கும் பணிகள், 303 ஆண்கள் கழிப்பறை, 271 பெண்கள் கழிப்பறை, 784 இடங்களில் சாய்வு தள வசதி என மொத்தம் 2146 வேலைகள் மேற்கொள்ளப்படுகிறது. 
    • இப்பணிகளுக்கு 10 நாட்களுக்குள் டெண்டர் விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டவுடன் அந்த பள்ளிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel