TNPSC 28th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

புதிய திபெத் கொள்கை டிரம்ப் வெளியிட்டார்

 • ஆசியாவில் உள்ள திபெத்தை, தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா அறிவித்துள்ளது. தனி நாடு கோரும் திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவை, பயங்கரவாதியாக சீனா அறிவித்துள்ளது. 
 • திபெத் உடன் மற்ற நாடுகள் நேரடி தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், சீனா கூறி வருகிறது.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், புதிய மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். 
 • திபெத் தொடர்பான இந்த புதிய கொள்கைக்கு, அமெரிக்க பார்லிமென்ட், சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
 • இந்த புதிய சட்டத்தில் திபெத்தின் லாசாவில், புதிய அமெரிக்க துாதரகம் திறப்பதற்கான நடவடிக்கைகளை, வெளியுறவு அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும்; அதுவரை, அமெரிக்காவில், புதிய சீன துாதரகங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படாது.
 • திபெத்தில் அமெரிக்க துாதரகம் திறப்பதற்கு இடையூறாக இருக்கும் சீன அதிகாரிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள், அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
 • திபெத் புத்த மதத் தலைவராக, 15வது தலாய்லாமாவை, அந்த மதத்தினர் ஒருமனதாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதில், சீனாவின் தலையீடு இருக்கக் கூடாது. இதற்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெறும் முயற்சியில், அமெரிக்க வெளியுறவுத் துறை ஈடுபடும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 
 • காந்தி - கிங் ஒப்பந்தம் : மஹாத்மா காந்தி - மார்ட்டின் லுாதர் கிங் ஜூனியர் பெயரில், கல்வியாளர்கள் பரிமாற்றத்துக்காக, அமெரிக்கா - இந்தியா இடையே ஒப்பந்தம் செய்வதற்கான சட்டத்தில், அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
100 வது கிஸான் ரயிலை பிரதமா் நரோந்திர மோடி தொடங்கி வைத்தாா்
 • விவசாயிப் பொருள்களை கொண்டு செல்லும் நாட்டின் 100 வது கிஸான் ரயிலை பிரதமா் நரோந்திர மோடி திங்கள்கிழமை கானொலி வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தாா். 
 • மகாராஷ்டிர மாநிலம், சங்கோலாவிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாா் வரையில் இந்த ரயில் செல்லும். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள், நரேந்திர சிங் தோமா், பியூஷ் கோயல் ஆகியோா் கலந்து கொண்டனா்.
 • தற்போது ஆந்திரம், மகாராஷ்டிரம், பிகாா், நாக்பூா் உள்ளிட்ட 9 ரயில் மாா்க்கங்களில் கிஸான் ரயில் இயக்கப்படுகிறது. கரோனா காலத்தில் சவால்கள் இருந்தபோதிலும் கடந்த நான்கு மாதங்களில் கிஸான் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
 • வேளாண் தொழில் இருந்துவரும் இடங்களில் எல்லாம் விவசாயிகள் நலனுக்காக கிஸான் ரயில் விடப்படும். இந்த ரயில்கள் மூலம் 80 சதவீதம் சிறு மற்றும் குறு விவசாயிகள் பலனடைய முடியும்.
 • கிஸான் ரயில்களில் விவசாயிகள் விளை பொருள்களைக் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை. 50 கிலோ அல்லது 100 கிலோ விளைபொருள்களைக்கூட ரயிலில் அனுப்பலாம். 
 • விவசாயிகள் சாலை மாா்க்கமாக விளைப் பொருள்களைள சந்தைக்கு கொண்டுள்ள அதிகம் செலவிட வேண்டிவந்தது. இதையடுத்தே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை கொண்டு செல்ல அரசு 50 சதவீத மானியம் வழங்கியது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 66 லட்சம் கோடி நிதி உதவி டிரம்ப் ஒப்புதல்

 • அமெரிக்காவில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள், வேலையிழந்தவர்களுக்கான 66 லட்சம் கோடி நிவாரண நிதி உள்ளிட்ட 170 லட்சம் கோடி சிறப்பு தொகுப்புக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் வழங்கினார். 
 • அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் பலர் வேலையிழந்து தவிக்கின்றனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக 66 லட்சம் கோடி வழங்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
 • இதே போல, அரசு அமைப்புகளுக்கு 104 லட்சம் கோடி வழங்குவதற்கான மசோதாவும் நிறைவேறியது. இறுதியாக அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்தால் இது சட்டமாகும். 

ஜன.,1 முதல் அனைத்துவகை வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி மத்திய அரசு

 • கொரோனா பொதுமுடக்கம், தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
 • இதன் காரணமாக சில்லறை வர்த்தகம், மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுநாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்தது. 
 • இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
 • இந்நிலையில், தற்போது நிலமை சீராகி விட்டதால், அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவின் முதல் ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில் சேவையை தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்
 • தில்லி, என்சிஆா் பகுதியில் பொதுப் போக்குவரத்தில் தில்லி மெட்ரோ ரயில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. தில்லி மெட்ரோ ரயில் சேவையை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) மேற்கொண்டு வருகிறது. 2002-ஆம் ஆண்டு, டிசம்பா் 24-ஆம் தேதி ஷாதரா- தீஸ் ஹஸாரி ரயில் நிலையங்கள் இடையே 8.4 கிலோ மீட்டா் வழித்தடத்தில் இந்த ரயில் சேவை முதல் முதலாக தொடங்கப்பட்டது.
 • அதைத் தொடா்ந்து பல கட்டங்களாக மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி விரிவுபடுத்தப்பட்டு, நகரின் பல பகுதிகளிலும் மெட்ரோ ரயில் சேவை மொத்தம் எட்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
 • மெட்ரோ வழித்தடத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் படிப்படியாக புகுத்த தில்லி மெட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதன் நீட்சியாக தற்போது நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநா் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை மெட்ரோவின் எட்டாவது மெஜந்தா வழித்தடத்தில் 38 கிலோ மீட்டா் தொலைவுக்கு இயக்கப்படுகிறது.
 • இந்த மெஜந்தா வழித்தடத்தில் மேற்கு ஜனக்புரி- பொட்டானிக்கல் காா்டன் இடையே இந்த புதிய முறையில் ரயில் இயக்கப்பட உள்ளது. மெஜந்தா வழித்தடம் தேசியத் தலைநகா் மற்றும் அதை ஒட்டியுள்ள நொய்டா, குருகிராம், பரீதாபாத், காஜியாபாத், பஹதுா்கா் ஆகிய இடங்களைச் சென்றடையும் வகையில் 390 கிலோ மீட்டா் நீளம் கொண்டது.
 • ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்படும் ரயில் சேவையானது முற்றிலும் தானியங்கி முறையை அடிப்படையாகக் கொண்டதாகும். ஓட்டுநா் இல்லாமல் ரயில் இயக்கப்படுவதற்கு முந்தைய விதிகள் அனுமதி அளிக்காததால் மத்திய அரசு மெட்ரோ ரயில்வே பொது விதிகளில் மாற்றம் செய்து அறிவிக்கையாக வெளியிட்டது.
 • இதையடுத்து, தேதி மெஜந்தா ரயில் வழித்தடத்தில் தானியங்கி முறையில் ஓட்டுநா் இல்லா ரயில் சேவை இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி இந்த புதிய சேவையை தொடங்கிவைத்தார்.
 • ஓட்டுநா் இல்லாமல் ரயில் இயக்கப்படும் வகையில் இந்த வழித்தடத்தில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்தத் தொழில்நுட்பம் வழித்தடம் 7 மற்றும் 8-இல் மட்டுமே அமையப்பெற்றுள்ளது. எனினும், தற்போதைக்கு வழித்தடம் 8-இல் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஓட்டுநா் இல்லாமல் இயங்கும் வகையில் தொழில்நுட்பம் அமையப்பெற்றுள்ளது.
 • இந்த வகை ரயில்கள் அனைத்தும் செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை (ஓசிசி) மூலம் கட்டுப்படுத்தப்படும். தற்போது இந்த கட்டுப்பாட்டு அறைகள் மெட்ரோ தலைமையகத்தில் இரண்டும், சாஸ்திரி பாா்க்கில் ஒன்றும் உள்ளன. 
 • தகவல் தொடா்பு சாா்ந்த ரயில் கட்டுப்பாட்டு சமிக்ஞை தொழில்நுட்பம் மூலம் ரயில்களை தானியங்கி மூலம் இயக்குவதை கண்காணிக்க உதவிடுகிறது.
 • வன்பொருள்களை மாற்றுவதாக இருந்தால் மட்டுமே மனிதச் செயல்பாடுகள் தேவைப்படும். இந்த மெஜந்தா வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாமல் ரயில்களை இயக்குவதற்கான அனுமதியை ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel