Type Here to Get Search Results !

TNPSC 25th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உசிலம்பட்டி அருகே ஊர்மந்தையில் தமிழி (பிராமி) எழுத்துக்களுடன் கல்

  • உசிலம்பட்டி உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி ஊர் மந்தையில் கிடந்த தொம்பரை கல்லில் கி.மு., 2 ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • கல்லில் இருந்த எழுத்துக்கள் கி.மு., காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் என்பதை உறுதி செய்தனர். கல்வெட்டு எழுத்துக்களை படி எடுத்து அதில் உள்ள தகவல்களை படிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
  • தனிக்கல்லில் தமிழி எழுத்துக்களுடன் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாகும் என்றார்.தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பிகல்வெட்டின் காலம் கி.மு., 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம். 
  • மதுரையில் இருந்து செல்லும் வணிகப்பாதையின் வழியில் இந்த பகுதியில் வணிகர்கள் தங்கிச் செல்லும் இடமாக முன்னர் இருந்திருக்கலாம். 

துருக்கியில் மிகப்பெரிய தங்கப்புதையல் கண்டுபிடிப்பு

  • துருக்கியில், மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, உலகின் பல நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியம்.
  • இந்த தங்கத்தின் மதிப்பு, கிட்டத்தட்ட, 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த தங்க புதையலின் எடை, 99 டன். 
  • துருக்கியில், உர நிறுவனம் ஒன்று வாங்கிய நிலத்தில் இந்த தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இங்கு தங்கம் வெட்டி எடுக்கப்படும் என்றும், துருக்கி பொருளாதாரத்துக்கு இது மிகவும் உதவும் என்றும் கூறப்படுகிறது.

ரத்த புற்றுநோய்க்கு மருந்து அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

  • அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இயங்கும், 'கிளீவ்லேண்ட் கிளினிக்' மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், 10 ஆண்டுகளாக, புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தனர். 
  • அதில் குறிப்பிட்ட சில புற்றுநோய்களுக்கு, அவர்கள் மருந்துகளை கண்டுபிடித்துள்ளது, தற்போது தெரியவந்துள்ளது. ரத்த புற்றுநோய் மற்றும் எலும்பு புற்றுநோயை குணப்படுத்த, புதிய மருந்துகளை, அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
  • அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளுடன், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை வாயிலாக, அது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
  • ரத்தம் மற்றும் எலும்பு புற்றுநோய்களை எதிர்த்து போராடக்கூடிய, டி.இ.டி.ஐ., 76 என்ற செயற்கை மூலக்கூறு ஒன்றை உருவாக்கி உள்ளோம். 
  • இந்த செயற்கை மூலக்கூறு, உடலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, செல்களை குறிவைத்து அழிக்கும் திறன் உடையது என்பதை கண்டறிந்தோம்.
  • இது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட துவக்க காலம் முதல், முழுதும் பாதிக்கப்பட்ட காலம் வரை, உடலில் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும் திறன் உடையது. 

9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

  • பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாவது தவணையாக, ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான நிதி ரூ.18,000 கோடியை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் விடுவித்தார்.
  • இந்நிகழ்ச்சியில் அவர் தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகளுடன் கலந்துரையாடினார். புதிய வேளாண் சட்டங்களால் பலன் பெற்றது குறித்து விவசாயிகள் பிரதமரிடம் விளக்கினர்.

அசாமில் 27 நெடுஞ்சாலைத் திட்டங்கள்: மத்திய அமைச்சர் கட்கரி அடிக்கல் நாட்டினார்

  • அசாமில் 27 நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி மூலம் அடிக்கல் நாட்டி இன்று துவக்கி வைத்தார்.
  • இன்று அடிக்கல் நாட்டப்பட்டத் திட்டங்களின் மூலம் 439 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்படும். இதற்கான செலவு ரூ.2,366 கோடி ஆகும். அசாமின் வளர்ச்சிக்கு இந்தச் சாலைகள் வழிவகுக்கும்.

வாஜபேயி புத்தகம் வெளியிட்டார் பிரதமர் மோடி

  • பாஜக மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான வாஜபேயின் 96-வது பிறந்தநாள் இன்று (டிச.25) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தில்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
  • காலையில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அவரது திருவுருவப் படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வாஜபேயின் வாழ்க்கை மற்றும் அரசியல் பணிகள் குறித்த குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 

இந்தியாவின் முதல் இளம் மேயராக திருவனந்தபுரத்தில் பதவியேற்கும் 21 வயது கல்லூரி மாணவி

  • கேரள மாநிலம் திருவனத்தபுரத்தில் நாட்டிலேயே இளம் வயது மேயராக, 21 வயதே ஆன ஆர்யா ராஜேந்திரன் எனும் கல்லூரி மாணவி பொறுப்பேற்க உள்ளார்.
  • கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் முதவன்முகல் வார்டில் போட்டியிட்டு வென்றவர் ஆர்யா ராஜேந்திரன்.
  • 21 வயதே நிரம்பிய இவரை புதிய மேயராக நியமிக்க, சிபிஎம் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் கணிதத்துறையில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வரும் ஆர்யா எஸ்எஃப்ஐ மாநிலக் குழுவின் உறுப்பினர். 
  • சிபிஎம் கேசவதேவ் சாலைக் கிளைக் குழுவின் உறுப்பினராகவும், பாலாஜனசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இவர் உள்ளார், அரசியலில் தீவிரமாக செயல்பட்டு உள்ளார்.

இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா நியமனம்

  • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 
  • இதில் இந்திய அணியின் தேர்வு குழு உறுப்பினர்களாக மேற்கு மண்டலம் சார்பில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அபய் குருவில்லா, கிழக்கு மண்டலம் சார்பில் மொஹந்தி ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் இடம்பெற்றனர். 
  • ஏற்கனவே தெற்கு மண்டலம் சார்பில் சுனில்ஜோஷி, மத்திய மண்டலம் சார்பில் ஹர்விந்தர்சிங் ஆகியோர் உள்ளனர். சுனில்ஜோஷி தேர்வு குழு தலைவராக இதுவரை பதவி வகித்து வந்த நிலையில், சேத்தன் சர்மா, ஜோஷியை விட அதிக டெஸ்ட்டில் ஆடி இருப்பதால் தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனம்: விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம் தேர்வு

  • இந்திய வர்த்தகத் தொழில் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 'விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனம் (பொதுத்துறை) 2020' என்ற பிரிவில் விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தை (AFSCB) வெற்றியாளராகக் குறிப்பிட்டுள்ளது.
  • எப்ஐசிசிஐ இந்தியா விளையாட்டு விருதுகள் விழாவில், விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனம் என்ற விருது விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடந்த 8ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி முத்கல் தலைமை தாங்கினார்.
  • காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்த விழாவில், இந்த விருதை விமானப்படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏர் கமடோர் அசுதோஷ் சதுர்வேதி, எப்ஐசிசிஐ தலைவரிடம் இருந்து பெற்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel