TNPSC 24th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

4 திரைப்பட ஊடக அமைப்புகளை தேசிய திரைப்பட மேம்பாட்டு வளர்ச்சிக்கழகத்துடன் இணைத்தது மத்திய அரசு

 • பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 
 • அதன்படி மத்திய அரசின் திரைப்படப் பிரிவு, திரைப்படவிழாக்கள் இயக்குனரகம், இந்தியாவின் தேசிய திரைப்பட ஆவண காப்பகங்கள், குழந்தைகளுக்கான திரைப்படக்கழகம் ஆகியவை என்எப்டிசி எனப்படும் தேசிய திரைப்பட மேம்பாட்டு வளர்ச்சிக்கழகத்துடன் இணைக்கப்படுகின்றன.
 • மனித வளம், கட்டமைப்பு ஆகியவற்றை சேமிக்கும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு அமைப்புகளுக்கு இடையேயும் உரிய ஒத்துழைப்புடன் இனி இவை செயல்படும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.
 • நான்கு அமைப்புகளிலும் உள்ள ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எந்த ஒரு ஊழியரும் கைவிடப்படமாட்டார் என்றும் உறுதி அளித்துள்ளது.

விஸ்வ பாரதி பல்கலை. நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி உரை

 • மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் உள்ளது. இது, 1921-ல்ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்று பேசியதாவது:
 • சுதந்திரப் போராட்ட காலத்தில் தாகூரின் வழிகாட்டுதலால் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் இந்திய தேசிய உணர்வை வலுவாக ஏற்படுத்தி வந்தது. சுதேசி சமூகத்துக்கு ரவீந்திரநாத் தாகூர் அழைப்பு விடுத்தார். விவசாயம், வர்த்தகம், தொழில், கலை, இலக்கியம் போன்றவற்றில் அவர் தற்சார்பை காண விரும்பினார்.
 • இந்தியாவின் ஆன்மிக விழிப்புணர்வில் இருந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் பலன் அடைய வேண்டும் என தாகூர் விரும்பினார். இந்த உணர்வில் இருந்து தோன்றியதுதான் மத்திய அரசின் 'சுயசார்பு இந்தியா' தொலைநோக்கு திட்டமாகும். மத்திய அரசின் சுயசார்பு இந்தியா அழைப்பு,இந்தியா மட்டுமின்றி இந்த உலகத்துக்கும் நன்மை தரக்கூடியதாகும்.
 • இந்தியாவை சிறந்த நாடாகமாற்றுவதற்கு பல நூற்றாண்டுகளாக பங்களித்த அனைவரிடம் இருந்தும் நாம் உத்வேகம் பெறவேண்டும். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், சுதந்திரத்துக்காக போராடியபோது கற்பனை செய்திருந்த இந்தியாவையும் நாம்மனதில் கொள்ள வேண்டும். அதனால்தான் சுயசார்பு இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருகிறோம்.
 • நாட்டின் நிலையான ஆற்றலுக்கான மதிப்புமிக்க ஆதாரமாகஇந்தப் பல்கலைக்கழம் விளங்கியது. இங்கு தோன்றிய கருத்துகள் சர்வதேச துறையில் தேசத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரிட்டன்-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்

 • பிரிட்டன்-ஐரோப்பிய யூனியன் இடையே 'பிரெக்ஸிட்'டுக்குப் பிந்தைய தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. 
 • ஐரோப்பிய யூனியனில் இருந்து வரும் 31-ஆம் தேதியுடன் வா்த்தகரீதியாகவும் பிரிட்டன் முழுமையாக வெளியேறும் நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
 • நூற்றுக்கணக்கான பக்கங்களில் அடங்கிய இந்த ஒப்பந்தத்துக்கு இரு தரப்பு நாடாளுமன்றமும் அடுத்த சில நாள்களில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
 • இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய யூனியன் - பிரிட்டன் இடையே பொருள்கள், சேவைகள் பரிமாற்றத்துக்கு வரிகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அதிகம் இருக்காது.
 • முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பின்போது ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் வெளியேற ('பிரெக்ஸிட்') அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்தனா்.

பூடானுக்கு மருத்துவ சாதனங்களை வழங்கியது இந்தியா

 • கொரோனா தொற்றின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதில், தனது நெருங்கிய நண்பரும், அண்டை நாடுமான பூட்டானுடன் இந்தியா நிற்கும் என்ற பிரதமர் மோடியின் உறுதிமொழியைக் கருத்தில் கொண்டு 20,000 சோதனைகளுக்கான COVID-19 RT-PCR சோதனைக் கருவிகளை திம்புவில் உள்ள இந்திய தூதரகம் பூட்டான் ராயல் அரசிடம் ஒப்படைத்தது. 
 • இந்த ஆர்டி-பி.சி.ஆர் சோதனை கருவிகளை வழங்குவது பூட்டானின் சுகாதார அமைச்சகத்திற்கு அத்தியாவசிய பரிசோதனைகளை மேற்கொள்ள உதவும்.

2022-ம் ஆண்டு ஐ.பி.எல்லில் 10 அணிகள் - பி.சி.சி.ஐ கூட்டத்தில் ஒப்புதல்

 • இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடும் இந்தியன் பிரிமியர் லீக் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தொடக்கம் முதல் மொத்தம் 8 அணிகள் விளையாண்டு வருகின்றன. 
 • இந்தநிலையில், வரும் ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரில் 10 அணிகளை இடம் பெறச் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
 • இந்தநிலையில், இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ பொதுக்கூட்டத்தில் 2022-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் இடம்பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

0 Comments