TNPSC 26th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கூடுதல் கடன் பெற ராஜஸ்தானுக்கு மத்திய அரசு அனுமதி

 • நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவும் வகையில், ஜி.எஸ்.டி.பி., எனப்படும், மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து, மாநிலங்களுக்கு பெறும் கடன் வரம்பை, 2 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்தது.
 • எனினும், 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமல், தொழில் செய்வதை எளிதாக்கும் சீர்த்திருத்தம் போன்றவற்றை செய்யவும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், எளிதில் தொழில் செய்வதற்கான சீர்த்திருத்தங்களை, ராஜஸ்தான் அரசு செய்துள்ளது.
 • இதையடுத்து, அந்த சீர்த்திருத்தங்களை ஏற்கனவே செய்துள்ள ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழகம் மற்றும் தெலுங்கானாவுடன், ஆறாவது மாநிலமாக, ராஜஸ்தானும் இணைந்துள்ளது.
 • இந்த ஆறு மாநிலங்களுக்கும், கூடுதலாக, 19 ஆயிரத்து, 459 கோடி ரூபாய் கடன் பெற, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தூய்மையான கங்கை 17 திட்டங்களுக்கு ஒப்புதல்

 • மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கத் துறை குறிப்பிடத்தக்க சாதனைகளை இந்த வருடம் செய்துள்ளது.
 • தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் 22 திட்டங்களை நிறைவு செய்து ரூ.557.83 கோடி மதிப்பிலான 17 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 
 • கழிவுநீர் உள்கட்டமைப்பு, படித்துறை, சுடுகாடு, மாசு கட்டுப்படுத்துதல், வனங்களைப் பாதுகாத்தல், பல்லுயிர்த் தன்மையைப் பேணுதல் உள்ளிட்ட திட்டங்கள் இவற்றில் அடங்கும்.
 • 2020 செப்டம்பர் 15 அன்று ஒரு நாளைக்கு 43 மில்லியன் லிட்டர் திறன் உள்ள பேயூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஒரு நாளைக்கு 37 மில்லியன் லிட்டர் திறன் உள்ள கர்மலிச்சாக் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை பாட்னாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
 • ரூ.10,211 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் அணைப் புத்தாக்கம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 • மாவட்ட அளவிலான அலுவலர்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான பொது நிர்வாகத்தில் சிறப்பான சேவைக்கான பிரதமரின் விருதுகளில் நமாமி கங்கே இணைக்கப்பட்டுள்ளது.
 • நாடு முழுவதும் நீர் சேமிப்பை மேம்படுத்துவதற்காக 'மழையைப் பிடியுங்கள்' என்னும் சிறப்புப் பிரச்சாரம் தேசிய தண்ணீர் இயக்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் ஜெய் செஹத் திட்டம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

 • ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
 • ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டை வழங்கும் திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் உருவாக்கப்படுகிறது. 
 • இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையில் காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது. கூடுதலாக சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்படுகிறது. 
 • பிரதமர்-ஜெய்யுடன் இணைந்து செயல்பட உள்ள இத்திட்டத்தின் பலன்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறலாம். பிரதமர்-ஜெய்யுடன் இணைந்துள்ள அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் சிகிச்சை பெறலாம்.

கட்டாயமாக மதம் மாற்றினால் 10 ஆண்டு சிறை: ம.பி., அமைச்சரவை ஒப்புதல்

 • திருமணம் அல்லது ஏமாற்றி, கட்டாயமாக மதம் மாற்றுவோரை தண்டிக்க மத சுதந்திர சட்டம் 2020க்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • குற்றவாளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும். நாட்டிலேயே, இந்த சட்டம் அமலுக்கு வந்த பின்னர், திருமணம், மோசடி செய்து அல்லது ஏமாற்றுவோருக்கு கடும் தண்டனை வழங்குவதாக இருக்கும். 
 • 1968 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மத சுதந்திர சட்டத்திற்கு மாற்றாக இருக்கும். புதிய சட்டத்தின்படி, மதம் மாற்றுவதற்காக மட்டும் செய்யப்பட்ட திருமணம் செல்லுபடியாகாது. 
 • மதம் மாற விரும்புவோர், முன்னதாகவே மாவட்ட நிர்வாகத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

'களரிபயட்டு' தேசிய விளையாட்டாக அறிவிப்பு

 • மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் கட்கா, களறிப்பயட்டு, தங்-டா, மல்லர்கம்பம் ஆகிய 4 விளையாட்டுகள் தேசிய விளையாட்டு போட்டிகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
 •  மேலும், 'யோகாசனா' அறிமுக விளையாட்டாகவும் இடம்பெற உள்ளது. இப்போட்டிகள் அடுத்தாண்டு ஹரியானாவில் நடத்தப்படும் எனவும் கேலோ இந்தியா தெரிவித்துள்ளது.
 • களரிப்பயட்டு - ரத்தத்தை துள்ளச்செய்யும் மண்சார்ந்த விளையாட்டு. 

0 Comments