TNPSC 30th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மதரசாக்களுக்கு எதிரான மசோதா அசாம் சட்டசபையில் நிறைவேற்றம்

 • அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில அரசின் நிதியுதவியுடன் முஸ்லிம்களால் நடத்தப்படும் மதரசா சிறப்பு பள்ளிகளை சராசரி பள்ளிகளாக மாற்றுவதற்கான மசோதா மாநில சட்டசபையில் கடந்த 28ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 
 • இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது காங்கிரஸ் மற்றும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'இந்த மசோதாவை ஆய்வு செய்ய தேர்வு குழுவுக்கு அனுப்பிவைக்கவேண்டும்' என அவர்கள் வலியுறுத்தினர்.
 • எனினும் மாநில கல்வித் துறை அமைச்சர் பிஸ்வ சர்மா அதை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் அந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது. 
 • இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.இந்த மசோதா நிறைவேறியுள்ளதால் மாநிலத்திலுள்ள அனைத்து மதரசாக்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் சராசரி பள்ளிகளாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிப்மர் கதிரியக்க துறை ஊழியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
 • இந்திய ரேடியோகிராபர்ஸ் சங்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கிளை சார்பில் 125-வது ஆண்டு உலக கதிர் வீச்சு தின விழா கொண்டாடப்பட்டது.
 • விழாவில் ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் சண்முகத்திற்கு இந்திய ரேடியோகிராபர்ஸ் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 
 • இந்திய ரேடியோலஜி மருத்துவர்கள் சங்கத் தலைவர் அமர்நாத், பேராசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கினர்.கடந்த 34 ஆண்டு களாக ஜிப்மர் கதிரியக்க துறையில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வரும் சண்முகம், மருத்துவ மாணவர்களை ஊக்குவித்து பயிற்சி அளித்தற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
ஐரோப்பிய யூனியன் - சீனா இடையே பொருளாதார ஒப்பந்தம்
 • ஐரோப்பிய யூனியன் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளி. அதே போல் சீனாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஐரோப்பிய யூனியனும் உள்ளது. 
 • ஒரு நாளைக்கு இரு நாட்டு வர்த்தகமானது சராசரியாக 100 கோடி பவுண்ட் அளவிற்கு நடக்கிறது. சீனாவின் சந்தையை தங்கள் நிறுவனங்கள் அணுகுவதை அதிகரிக்க ஐரோப்பா முயன்றது. 
 • ஆனால் சர்வதேச தொழிலாளர்கள் சட்டங்களை சீனா மதிக்காதது அதற்கு தடையாக இருந்தது.சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களை கட்டாய தொழிலாலர்களாக்கி பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யப்படுகிறது.
 • இது பற்றி அறிக்கைகள் இரு வாரங்களுக்கு முன் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியிருந்தன. இதனை கண்டித்து ஐரோப்பிய எம்.பி.,க்கள் கண்டன தீர்மானம் நிறைவேற்றிருந்தனர். 
 • இந்த சூழலில் தான் ஐரோப்பிய யூனியன் மற்றும் சீனா இடையே முக்கிய முதலீட்டு ஒப்பந்தம் உறுதியாகியிருக்கிறது. வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்த அக்கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜிங் பிங். பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மன் சான்ஸ்லர் ஏஞ்சலா மெர்க்கல் பங்கேற்றனர்.
ஹங்கேரி கல்வித் துறை - யுஜிசி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
 • ஹங்கேரி நாட்டுக்கு கல்வி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள கல்வி நிறுவனங்களில் 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கான குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் முறையில் கல்வி பயில விரும்பும் மாணவா்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
 • இதுதொடா்பான முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பம் உள்ளிட்டவற்றை இணையதளங்களில் பாா்வையிடலாம். அதன்படி, விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து யுஜிசியின் முகவரிக்கே நேரடியாக அனுப்பவேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
 • ஹங்கேரி நாட்டின் கல்வி நிறுவனங்களில் பயில விரும்பும் மாணவா்களுக்கு யுஜிசியின் உதவித் தொகை திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • ''தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் ஏவுகணை உற்பத்தி திறனை இந்தியா விரிவுபடுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, ஆகாஷ் ஏவுகணை அமைப்பை ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
 • ஆகாஷ் ஏவுகணை அமைப்பில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் 96 சதவீதம் உள்நாட்டை சேர்ந்தவை. ஆகாஷின் ஏற்றுமதி பதிப்பு தற்போது நமது ஆயுதப்படையில் பயன்படுத்தப்படும் அமைப்பிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.
இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு மத்திய அரசு உத்தரவு
 • இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஜனவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மத்திய அரசு இஸ்ரோ தலைவர் சிவனின் பதிவுக்காலத்தை 2022-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரை, அதாவது ஓராண்டுக்கு நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
நாட்டில் முதல்முறையாக 1½ கி.மீ. நீள சரக்கு ரெயில்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
 • இந்தியாவில் இ.டி.எப்.சி. என்ற பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட கிழக்கு சரக்கு ரெயில்பாதை திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இது 1,839 கி.மீ. நீளம் கொண்டது.
 • இது பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் இருந்து மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா டங்குனி வரை நீள்கிறது. இந்த திட்டத்தின் ஒரு பிரிவாக உத்தரபிரதேச மாநிலத்தின் புதிய பாபூர்-புதிய குர்ஜா வரையில் 351 கி.மீ. தொலைவுக்கு ரூ.5,750 கோடி மதிப்பில் சரக்கு ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 
 • இந்த புதிய ரெயில்பாதையை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வழியாக தொடங்கிவைத்தார். பிரக்யாராஜில் (அலகாபாத்) அமைந்துள்ள இ.டி.எப்.சி. செயல்பாட்டு மையத்தையும் அவர் திறந்துவைத்தார்.
 • அத்துடன் நாட்டில் முதல்முறையாக 1½ கி.மீ. நீளம் கொண்ட சரக்கு ரெயில்களையும் அவர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
எஸ்டோனியா உட்பட 3 நாடுகளில் இந்திய தூதரகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • சென்னை-பெங்களூரு தொழில் பாதை (சிபிஐசி) திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபட்டணம் மற்றும் துமகுருவில் தொழில் பாதை முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • நொய்டாவில் பன்முக மாதிரி தளவாட மையம் மற்றும் பன்முக மாதிரி போக்குவரத்து மையம் அமைக்கவும் ஒப்புதல்.
 • எஸ்டோனியா, பராகுவே மற்றும் டொமினிக் குடியரசு நாடுகளில் இந்திய தூதரகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • உணவு தானியங்களான (அரிசி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் சோளம்), கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து, முதல் தலைமுறை எத்தனால் உற்பத்திக்கான வடி திறனை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • விண்வெளியின் அமைதியான பயன்பாடுகளில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • பாரதீப் துறைமுகத்தில், ரூ.3,004.63 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய கப்பல்களை கையாளும் விதத்தில், மேற்கு கப்பல்துறை உள்பட உள் கட்டமைப்பு வசதிகளை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ஆழப்படுத்தவும், மேம்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • இந்தியாவில் 684 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி திறன் உள்ளது. 2019-20 சர்க்கரை ஆண்டில் எங்கள் எத்தனால் கொள்முதல் 38 கோடி லிட்டரிலிருந்து 173 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel