- ஜம்மு காஷ்மீருக்கான ஆயுஷ்மான் பிரதான் மந்திரி பாரத் ஜெய் செஹத் (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana SEHAT scheme for Jammu and Kashmir) திட்டத்தை 26-12-2020 அன்று காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
- ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டை இத்திட்டம் வழங்குகிறது. ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையில் காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது. கூடுதலாக சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்படுகிறது. பிரதமர்-ஜெய்யுடன் இணைந்து செயல்பட உள்ள இத்திட்டத்தின் பலன்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறலாம்.
- அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் இத்திட்டம் வழங்குவதோடு, நிதி ஆபத்தில் இருந்து மக்களைக் காத்து, அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது.
Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana SEHAT scheme for Jammu and Kashmir ஜம்மு காஷ்மீருக்கான ஆயுஷ்மான் பிரதான் மந்திரி பாரத் ஜெய் செஹத்
December 28, 2020
0
Tags