Sunday, 31 March 2019

அம்மா திட்டம்

TNPSCSHOUTERS

 • 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் செயல்படுகிறது. 
 • இது அனைத்து கிராமங்களிலும் உள்ள விளிம்புநிலை மனிதர்களுக்கு அதிகபட்ச சேவைகள் வழங்குவதை உறுதி செய்கிறது. 
 • ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் தலைமையிலான குழுக்கள் அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிவார்கள். கிடைக்கப் பெறும் சேவைகள் 
 • பட்டா மாறுதல்கள் 
 • குடும்ப அட்டைகள் – திருத்தங்கள் 
 • பிறப்பு/இறப்புச் சான்றிதழ்கள் 
 • சாதிச் சான்றிதழ்கள் / வருமானச் சான்றிதழ்கள் / இருப்பிடச் சான்றிதழ்கள் / குடியிருப்புச் சான்றிதழ்கள் 
 • வாரிசுரிமைச் சான்றிதழ்கள் 
 • முதல் பட்டதாரி சான்றிதழ் 
 • முதியோர் ஓய்வூதியம் 
 • விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் 

தாய் திட்டம்

TNPSCSHOUTERS

 • இது தமிழ் நாடு கிராம உறைவிட மேம்பாடு என்று அழைக்கப்படுகிது. 
 • இது 2011-12 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. 
 • இது வளங்களை சமமற்ற முறையில் வழங்குதலில் உள்ள குறைபாடுகளைக் களைகிறது. மேலும் இது அனைத்து உறைவிடங்களுக்கும் குறைந்தபட்ச அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது. 
 • உறைவிட வளர்ச்சியின் மீது கவனத்தை செலுத்தும் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். மேலும் இந்தியாவில் உள்ள எந்தவொரு மாநிலமும் இந்த மாதிரியான ஒரு புத்தாக்கத் திட்டத்தைச் செயல்படுத்துவதில்லை. 
குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகள்
 • குடிநீர் விநியோகம் 
 • தெரு விளக்குகள் 
 • சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் 
 • இணைப்புச் சாலைகள் 
 • மயானம்/எரியூட்டு இடங்கள் 
 • எரியூட்டு இடத்திற்குச் செல்லும் வழிகள் 

தொட்டில் குழந்தைத் திட்டம்

TNPSCSHOUTERS

 • இந்த திட்டம் 1992 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
 • 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
 • 2011 ஆம் ஆண்டில் கடலூர், அரியலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
குறிக்கோள்கள்
 • பாலின சமத்துவம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் பெண் சிசுக்கொலையை ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 
 • பெண் குழந்தைகளுக்கு சமூக மேம்பாட்டை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 
பயனாளிகள் 
 • கைவிடப்பட்ட மற்றும் சரணடைந்த பெண் குழந்தைகள் 
தகுதிகள்
 • கைவிடப்பட்ட பெண் குழந்தைகளைப் பெறுவதற்காக வரவேற்பு மையங்கள், மாவட்ட சமூக நல வாரிய அலுவலகங்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் நல இல்லங்களில் இந்த தொட்டில்கள் வைக்கப்படும். 
 • அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்/மையங்களில் வைக்கப்பட்ட கைவிடப்பட்ட குழந்தைகள் தகுதியுள்ள பெற்றோர்களால் தத்தெடுக்கப்படும். 
 • தத்தெடுப்பிற்கு வழங்கப்படாத நிலையில் உள்ள மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள், அவர்களது பராமரிப்புக்காகவும் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு பாதுகாப்பு நல மையங்களுக்கு அளிக்கப்படும். 
 • அரசு சாரா அமைப்புகள்/குடிமக்கள் ஆகியோர் இந்த தொட்டிலில் குழந்தைகளை வைப்பதற்கு ஊக்கப்படுத்தப் படுகிறார்கள். 
 • மாவட்ட சமூக நல அதிகாரிகள் மற்றும் சமூக நல மேம்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் பயனாளிகளுக்குத் தகவல்களை அளிக்கும் அதிகாரிகளாவர். 
 • இந்த தொட்டில் குழந்தை மையங்களை அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.47.45 இலட்சமாகும். ஒவ்வொரு மையமும் ஒரு கண்காணிப்பாளர், ஒரு துணை செவிலியர், ஒரு துணை உதவியாளர், இதர பணியாளர்கள் மற்றும் தேவையான பால் பொடி, மருந்துகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 
முடிவுகள்
 • குழந்தை பாலின விகிதம் 2001 ஆம் ஆண்டில் 942/1000 என்பதிலிருந்து 2011 ஆம் ஆண்டில் 943/1000 ஆக உயர்ந்துள்ளது.

30th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
இந்தியா, வங்கதேசம் இடையே இன்று முதல் கப்பல் சேவை
 • இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இன்று முதல் கப்பல் சேவை துவங்குகிறது. இந்த கப்பல் சேவை சுந்தர்பான்ஸ் வழியாக வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு பயணிகளை ஏற்றிச்செல்லும்.
 • புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய பெருமளவிலான மாநாட்டில் சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்து பேசிய வெளிவிவகார துறையின் இணைச் செயலாளர் விக்ரம் துரைஸ்வாமி இரு நாடுகளுக்கும் இடையே உள்நாட்டு நீர்வழங்கல் பாதைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கப்பல் சேவை துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 • சாலை மற்றும் ரயில் போக்குவரத்துகளை தவிர, இந்திய - வங்கதேச நாடுகள் நீர்வழிகள் மூலம் மிக வலுவான மின் இணைப்புகளை கொண்டுள்ளன என துரைஸ்வாமி தெரிவித்தார்.
 • உள்நாட்டு நீர்வழிகளைப் பயன்படுத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை துவங்குவதால், இந்தியாவிலிருந்து பொருட்கள் வங்கதேசத்தில் நாராயங்கஞ்ச் மற்றும் டாக்கா வரை மலிவான சாத்தியமான கடல்மார்க்கமாக செல்ல முடியும்.
ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் தடை ஐரோப்பிய ஒன்றியம்
 • ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் ஸ்ட்ரா, முள்கரண்டி, கத்தி மற்றும் காதுகுடையும் பருத்தி பட்ஸ் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கும் முடிவை எடுத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.
 • இந்த தடை வரும் 2021ம் ஆண்டில் அமலுக்கு வரும். ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவால், மேற்கண்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், மறுசுழற்சி நடவடிக்கையை தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 • தற்போது, கடற்கரை மற்றும் கடலில் கலக்கும் குப்பைகளில் 85% பிளாஸ்டிக் குப்பைகளாக இருக்கின்றன. இதனால், கடல்வாழ் உயிரினங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதோடு, மிக மோசமான சூழலியல் சீர்கேடுகளும் நிகழ்கின்றன.
 • இறந்துபோன பல திமிங்கலங்களின் வயிற்றுக்குள் பிளாஸ்டிக் கண்டெடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. மேலும், குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணியை செய்வதில்லை என்று சீனா எடுத்திருக்கும் முடிவும், ஐரோப்பிய யூனியனை இந்த நடவடிக்கையை நோக்கி தள்ளியுள்ளது.
 • இந்த முடிவுக்கு ஆதரவாக 560 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பதிவாகின. இதன்படி, மொத்தம் 10 வகையான 'ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள்' தடைசெய்யப்படவுள்ளன.அந்நியச் செலாவணி கையிருப்பு 40,666 கோடி டாலரை தாண்டியது
 • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது மார்ச் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 40,666 கோடி டாலரை (ரூ.28.46 லட்சம் கோடி) தாண்டியுள்ளது.
 • கடந்த மார்ச் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 103 கோடி டாலர் (ரூ. 7,210 கோடி) உயர்ந்து 40,666.7 கோடி டாலராகியுள்ளது. அந்நியச் செலாவணி சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதையடுத்து அந்நியச் செலாவணி கையிருப்பானது தொடர் ஏற்றத்தைக் கண்டு வருகிறது. 
 • இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 360 கோடி டாலர் உயர்ந்து 40, 564 கோடி டாலராக காணப்பட்டது. மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 103 கோடி டாலர் அதிகரித்து 37,880 கோடி டாலரை எட்டியது.இதன்காரணமாகவே, அந்நியச் செலாவணி கையிருப்பானது குறிப்பிடத்தக்க அளவு ஏற்றத்தை சந்தித்துள்ளது. 
 • சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் இருப்பு 7 லட்சம் டாலர் குறைந்து 146 கோடி டாலராகவும், அதேபோன்று நாட்டின் கையிருப்பு மதிப்பு 15 லட்சம் டாலர் சரிந்து 299 கோடி டாலராகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. 
ஆறு பெண் வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்களாக அறிவித்த உச்சநீதிமன்றம்
 • உச்சநீதிமன்றம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் 37 பேரை மூத்த வழக்கறிஞர்களாக பதவி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆறு பேர் பெண் வழக்கறிஞர்கள் ஆவார்கள்.
 • மாதவி கரோடியா திவான் 
 • அனிதா ஷெனாய் 
 • அபராஜிதா சிங் 
 • மேனகா குருசாமி 
 • ஐஸ்வர்யா பாடி 
 • பிரியா ஹிங்க்ரோணி.

Saturday, 30 March 2019

சத்துணவுத் திட்டம்

TNPSCSHOUTERS

 • இது மதிய உணவுத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 
 • இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 
 • இது 1982 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி ஆரம்ப நிலைப் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்காகவும் கிராமப் புறங்களில் உள்ள பள்ளிப் பருவத்திற்கு முந்தைய நிலையிலான 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்காகவும் தொடங்கப்பட்டது. 
 • 09.1982லிருந்து நகர்ப்புறங்களில் உள்ள சத்துணவு மையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 
 • 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 10 வயது முதல் 15 வயது வரை உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 
 • ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆண்டு முழுவதும் சத்துணவைப் பெறுவர் (விடுமுறை நாட்களைத் தவிர). 
 • ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் மதிய உணவைப் பெறுவர். குறிக்கோள்கள்
 • மாநில அளவில் ஆரம்பக் கல்வி நிலையை அடைதல், கல்வி கற்பதை மேலும் ஊக்குவித்தல், பள்ளியில் சேருவதை ஊக்குவித்தல், கல்வி கற்பதைத் தக்க வைத்தல் மற்றும் இடை நிற்றலைக் குறைத்தல். 
 • பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்குச் சத்துணவை கிடைக்கச் செய்வதன் மூலம் குழந்தைகள் இறப்பு, நோயுற்ற தன்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றை குறைக்க முடியும். 
 • ஊட்டச்சத்தின் நிலையை மேம்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் கற்றல் திறனை வளர்ச்சி பெறச் செய்தல். 
 • குறைபாடுகளினால் ஏற்படும் நோய்கள் உட்பட அனைத்து நோய்களையும் எதிர்த்துப் போராடுதல். 
 • கல்வி கற்றலில் உள்ள பாலின இடைவெளியைக் குறைத்தல். 
 • பல்வேறு மதங்கள் மற்றும் சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கூட்டாக உணவு பரிமாறுவதன் மூலம் நேர்மறை சிந்தனைகள் மற்றும் சகோதர உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்த முடியும். 
தினம் மற்றும் உணவுப் பட்டியல்
 • திங்கள் : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்) 
 • செவ்வாய் : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்) மற்றும் வேக வைக்கப்பட்ட 20 கிராம் பச்சைப் பயிறு அல்லது கொண்டைக் கடலை. 
 • புதன் : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்). 
 • வியாழன் : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்). 
 • வெள்ளி : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்) மற்றும் 20 கிராம் வேக வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு. 

குடிமராமத்துத் திட்டம்

TNPSCSHOUTERS

 • இத்திட்டம் உள்ளூர் விவசாயிகளின் உதவியுடன் அணைகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
 • 2018 ஆம் ஆண்டு ஜூலை 04 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி இத்திட்டத்தைக் கண்காணிப்பதற்கு 7 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 • தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 2017 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் கிராமத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 
 • இது கால்வாய்கள், தொட்டிகள், அடைப்புக் கதவுகள் ஆகியவற்றைப் பராமரித்தல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. 
 • இத்திட்டத்தின் முதல் நிலையில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 • இத்திட்டத்தின்படி, பயனாளிகள் அல்லது விவசாயிகள் தமது பங்காக 10 சதவிகித நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 
 • இந்த பங்களிப்பானது நிதி, உழைப்பு அல்லது பொருள் என எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். 
 • மேலும் இத்திட்டமானது உலக வங்கியிடமிருந்தும் நிதியுதவியைப் பெறுகிறது. 
 • நீர் நிலைகளில் உள்ள களைகளை அகற்றுதல் மற்றும் நீர்நிலைகளை வலுப்பெறச் செய்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது. 

29th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
ஆசியாவில் மிகப்பெரிய ஆற்றல் சேமிப்பு மையம் : டெஸ்லா அமைக்கிறது
 • ஜப்பானின் ஒசாகா ரயில் நிலையத்தில் 42 மின்சேமிப்பான்களை டெஸ்லா நிறுவியுள்ளது. இதன் மூலம் ரயில்களுக்கும், அதன் பயணிகளுக்கும் தேவையான மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும்.
 • எப்படிப்பட்ட மின் தடை ஏற்பட்டாலும் ஓசாகாவில் நிறுவப்பட்டுள்ள இந்த மின்சேமிப்பான்கள் உடனடியாக தன்னிடம் இருந்து மின்சாரத்தைக்கொடுத்து ரயிலை அடுத்த நிறுத்தத்திற்கு கொண்டு செல்லும் என்றும் டெஸ்லா டுவிட்டரில்தெரிவித்துள்ளது.
 • 7 மெகாவாட்-ஹவர்ஸ் மின்சேமிப்பை மையம், ஆசியாவில் 4வது மிகப்பெரிய மின்சேமிப்பு மையமாக விளங்கும்.
 • இதை மின்சேமிப்பு மையத்தினை ஜப்பானின் கின்டென்சூ ரயில் நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டுள்ளது.
த.மா.காவுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு
 • 17 வது மக்களவைப் பொதுத்தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெறுவுள்ளது. 
 • இந்நிலையில் தமிழ்நாட்டில் மெகா கூட்டணியான அதிமுகவில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னம் கேட்டிருந்தது. ஆனால் ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடியாது என்று கூறிவிட்டது. 
 • இந்நிலையில் இன்று தஞ்சை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். நடராஜனுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்
பிரெக்ஸிட்: பிரிட்டன் பிரதமரின் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி
 • பிரிட்டன் பிரதமர் தெரீசா மே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தின் மீது பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய மூன்றாவது வாக்களிப்பும் தோல்வியில் முடிந்துள்ளது.
 • ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக இருந்த நாளில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
 • பிரிட்டன் பிரதமர் தெரீசா மே முன் மொழிந்த ஒப்பந்தத்துக்கு 344 பேர் எதிராகவும், 286 பேர் மறுத்தும் வாக்களித்தனர்.
 • இதன்மூலம் மே 22 அன்று ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் வாய்ப்பை பிரிட்டன் இழந்துள்ளது.வாகன காப்பீட்டு பிரிமியத்தில் மாற்றமில்லை; காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு
 • 'அடுத்த நிதியாண்டிற்கான, மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியத்தில் மாற்றம் ஏதும் இல்லை' என, காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்து உள்ளது.
 • இவ்வாணையம், ஒவ்வொரு நிதியாண்டிற்கும், மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரிமியத்தை நிர்ணயிக்கிறது.
வேட்புமனுக்களில் ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திடுவதற்கு தடை இல்லை: தில்லி உயர்நீதிமன்றம்
 • அதிமுக வேட்பாளர்களின் தேர்தல் வேட்பு மனு ஏ, பி படிவங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) ஆகியோர் கையெழுத்திட தடை விதிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஏப்ரல் - ஜூன் காலாண்டு சிறுசேமிப்பு வட்டியில் மாற்றம் கிடையாது
 • பிபிஎப், தேசிய சேமிப்பு பத்திரம் (என்எஸ்சி), கிசான் விகாஸ் பத்திரம் (கேவிபி) உட்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் காலாண்டுக்க ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. 
 • அந்த வகையில், வரும் நிதியாண்டு முதல் காலாண்டுக்கான ஏப்ரல் - ஜூன் மாத வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வட்டி விகிதம் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை. 
 • இதன்படி, ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பிபிஎப், தேசிய சேமிப்பு பத்திரங்கள் ஆகியவற்றுக்கு ஆண்டு வட்டி 8 சதவீதமாக இருக்கும். கிசான் விகாஸ் பத்திரங்களுக்கு வட்டி 7.7 சதவீதம். 112 மாதங்களில் இந்த பத்திரம் முதிர்வடையும். 
 • இதுபோல், 5 ஆண்டுக்கான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8.7 சதவீதம், செல்வமகள் சேமிப்பு திட்ட வட்டி 8.5 சதவீதம், 1 முதல் 5 ஆண்டு டெர்ம் டெபாசிட்களுக்கு 7.7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வட்டி, 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட்களுக்கு 7.3 சதவீத வட்டி வழங்கப்படும்.

Friday, 29 March 2019

அம்மா இரு சக்கர வாகனம்

TNPSCSHOUTERS
 • இத்திட்டம் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தின் போது (2018, பிப்ரவரி 24) தொடங்கி வைக்கப்பட்டது. 
 • பணியில் இருக்கும் பெண்களுக்காக ரூ. 25,000 வரை 50 சதவிகித மானியம் அளிக்கப்படும். 
 • ஓட்டுநர் உரிமம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆண்டு வருமானம் 2.5 இலட்சம் ஆகியன இத்திட்டத்திற்கான தகுதிகள். 
 • வயது வரம்பு 18 வயது முதல் 40 வயதுடைய பெண்கள். 
 • மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரும் இத்திட்டத்தில் உள்ளடங்குவர். 

தமிழக அரசு பொது விநியோக திட்டம்

TNPSCSHOUTERS
நோக்கம்
 • தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் ஆகும். 
 • பொது விநியோக திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது.
 • தமிழ்நாட்டில் உள்ள நீடித்த பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையை நீக்க
 • அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து குடிமக்களை பாதுகாக்க
 • அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் மூலம், நுண் ஊட்டச்சத்து குறைப்பாட்டை குறைக்க
 • உள்நாட்டு எரிபொருள்களை (மண்ணெண்ணை மற்றும் எல்பிஜி) மலிவாக வழங்க
 • பயனாளிகள், நியாய விலைக் கடைகளை எளிதாக அணுக
 • ஏழை மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் வழங்க
 • ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில், அத்தியாவசியமான பொருட்களை வழங்கபொது விநியோக திட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைகள்
 • தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்திற்குறிய கொள்கைகளை, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வகுத்திருக்கிறது. 
 • இந்த கொள்கைகள், மாண்புமிகு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தலைமையின் கீழ் மற்றும் அரசு செயலாளர் தலைமையின் கீழ் உள்ளது. 
 • உணவு வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (CS&CPD)
தமிழ் நாடு உணவு வழங்குதல் கழகம் (TNCSC)
 • பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள அத்தியாவசியமான பொருட்களை கொள்முதல், பரிமாற்றம் மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்புக்களை பெற்றுள்ளது. இக்கழகம் நிர்வாக இயக்குனர் தலைமையின் கீழ் செயல்படுகிறது.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவகம் (RCS)
 • எல்லா மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நியாய விலைக் கடைகளை நடத்த பொறுப்பை பெற்றுள்ளது.
 • இச்சங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கூட்டுப் பதிவாளரின் துணையுடன் உள்ள பதிவாளரின் தலைமையின் கீழ் செயல்படுகிறது.
இந்திய உணவு கழகம்
 • இது ஒரு இந்திய அரசாங்கத்தின் அமைப்பு. இந்த அமைப்பு அரிசி, கோதுமை மற்றும் மற்ற அத்தியாவசியமான பொருட்களை பல்வேறு மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள உணவு ஒதுக்கீடு அமைச்சரகத்தின் ஆணைகள் படி மாநிலங்களுக்கு பரிமாற்றம் செய்கிறது.நியாய விலைக் கடைகள்
 • நிர்ணயிக்கப்பட்ட அட்டை எண்ணிக்கையை விட குறைந்த அளவு அட்டைகள் நியாய விலைக் கடையுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் அந்த கடைகளை பகுதி நேர கடைகளாக மாற்ற கோரிக்கை செய்யப்பட்டால், குறிப்பிட்ட காரணங்கள் (தொலைப் பகுதி, மலைப் பகுதி, நிலப்பகுதி – சட்டம் ஒழுங்கு பிரச்சினை) இருந்தால், அந்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். 
 • வாடகையற்ற இடம் வழங்குதல் மற்றும் ஏதாவது நிதி பொறுப்பை கிராம மக்கள் அரசுக்காக ஏற்றுக்கொண்டால், பகுதி நேர கடைகளை அரசு திறக்க அனுமதி வழங்கும். ஓவ்வொரு நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அட்டை எண்ணிக்கையை குறைத்து, பயனாளிகளுக்கு சிறந்த சேவையை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைகள்
 • தமிழ்நாட்டில், குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான குடும்ப அட்டை வகைகளை தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். குடும்ப அட்டை வகைகள், வருமானம் அடிப்படையில் வழங்கப்படாது. 
AAY குடும்ப அட்டைகள்
 • ஏழைக் குடும்பங்களில் இருந்து மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த குடும்பங்களின் குடும்ப அட்டைகளில் அந்யோதையா அண்ணா யோஜனா முத்திரை இடப்படும்.
 • அந்யோதையா அண்ணா யோஜனா திட்டத்தில் இருந்து, தகுதியற்ற குடும்பங்களை அகற்ற குறிப்பிட்ட காலத்தில் குடும்பங்கள் மாவட்ட ஆட்சியர்களால் ஆய்வு செய்யப்படும். தகுதியற்ற குடும்பங்கள் கண்டறியப்பட்டால், அந்த குடும்ப அட்டைகளில் அந்யோதையா அண்ணா யோஜனா முத்திரை அகற்றப்பட்டு, புதிய தகுதி உள்ள குடும்பங்களுக்கு அந்த முத்திரை வழங்கப்படும். 
 • இந்திய உச்ச நீதி மன்றத்ததால், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மிகவும் ஏழ்மையான மாவட்டங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில், அதிகபடியான ஏழ்மையான பயனாளிகள் உள்ளனர்.
தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம்
 • தமிழ் நாடு அனைவருக்குமான பொது விநியோகத் திட்ட செயல்முறையைப் பின்பற்றுகிறது. அதில் வறுமைக் கோட்டிற்கு கீழ் மற்றும் வறுமைக் கோட்டிற்கு மேல் என்ற பாகுபாடு இல்லை. 
 • இருப்பினும் இம்மாநிலம் அந்தயோதயா அண்ணா யோஜனாவை (AAY) செயல்படுத்துகிறது மற்றும் தற்போது 18,63,185 அந்தயோதயா அண்ணா யோஜனா பயனாளர்கள் உள்ளனர். பிழை இல்லாக் கணக்கெடுப்பு முறை இல்லாததாலும் தற்போதைய குறியீட்டு முறையும் குறைபாட்டுடன் இருப்பதாலும் வறுமையை ஒழிக்க இத்திட்டம் தொடங்கப்பட்டது.

28th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
பாக் நீரிணையை பத்தரை மணி நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை! - 10 வயதுச் சிறுவன் அசத்தல்
 • உலகின் பல்வேறு பகுதிகளில் கடல்களுக்கு இடையே நீந்திக் கடந்து சாதனை படைப்பவர்களின் சாதனைக் களமாக தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான பாக் நீரிணை பகுதியும் ஒன்று. கோடைக்காலமான மார்ச் முதல் மே வரையிலான காலங்களில் இக்கடல் பகுதியில் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். 
 • கடந்த ஆண்டு வரை பல்வேறு நீச்சல் வீரர்கள் இந்தக் கடல் பகுதியை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளனர். இதில் கடந்த 1994-ம் ஆண்டு தனது 12 வயதில் பாக் நீரிணையை 16 மணி நேரத்தில் நீந்திக் கடந்த நீச்சல் வீரனாக குற்றாலீஸ்வரன் சாதனை படைத்துள்ளார்.
 • இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் தேனியைச் சேர்ந்த ரவிக்குமார்-தாரணி தம்பதியின் மகன் ஜெய் ஐஸ்வந்த். 10 வயதுச் சிறுவனான ஜஸ்வந்த் தேனியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். 
 • இதைத்தொடர்ந்து கடலில் நீந்துவதற்கான பயிற்சியில் ஈடுபட்ட சிறுவன் ஜஸ்வந்த், தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான 30 கி.மீ தூரத்தை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்தினார்.
 • தலைமன்னார் தனுஷ்கோடி இடையிலான 30 கி.மீ தூரத்தை சுமார் 10.30 மணி நேரத்தில் நீந்திக் கடந்ததன் மூலம் கடந்த 25 ஆண்டுக்கால சாதனையை முறியடித்துச் சிறப்பு பெற்றான் தேனியைச் சேர்ந்த சிறுவன் ஜெய் ஜஸ்வந்த்.

அமமுகவுக்கு பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு
 • தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், வி.கே.சசிகலா ஆகியோர் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.
 • எனினும், பொதுச் சின்னத்தில் ஏதாவது ஒன்றை டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணிக்கு அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 
 • இந்நிலையில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வுக்கு பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. சீன இறக்குமதி டயர்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி: மத்திய வர்த்தக அமைச்சகம் பரிந்துரை
 • சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லாரி, பேருந்துகளுக்கான டயர்கள் மீது மிகை இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்துக்கு, வர்த்தகத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
 • இந்தியாவில் லாரி, பேருந்து டயர் உற்பத்தியாளர்களின் நலன்களைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வர்த்தகத் துறை அமைச்சகம் தனது பரிந்துரையில் கூறியுள்ளது.
பங்கு மாற்றத்திற்கு, 'டீமேட்' கட்டாயமாகிறது; ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது
 • 'பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்களின் காகித ஆவண பங்குகளை மாற்றுவது, 'டீமேட்' எனப்படும் மின்னணு ஆவண நடைமுறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்' என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, 'செபி' அறிவித்து உள்ளது.
 • வங்கி சேமிப்பு கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படுவது போல, நிறுவன பங்குகள், டீமேட் கணக்கில் சேமிக்கப்படுகின்றன.
 • இதையடுத்து, ஏப்., 1 முதல், காகித வடிவிலான பங்குகளை, டீமேட் கணக்கு மூலமாக மாற்றும் நடைமுறை அமலுக்கு வருகிறது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு
 • தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளுக்கு வரும் 1ந் தேதி முதல் கண்டனம் உயருகிறது. சுங்கக்கட்டணங்கள் அவ்வப்போது உயர்ந்து மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றது. 
 • அந்த வகையில் தற்போது திண்டிவனம், சூரப்பட்டு, வானகரம், பரனூர் உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளின் கட்டணம் 3 முதல் 5 சதவீதம் வரை உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Thursday, 28 March 2019

போக்சோ சட்டம் / The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2018

TNPSCSHOUTERS
 • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வரை வழங்க வழிசெய்வது தான் போக்சோ சட்டம் எனப்படுகிறது. குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமே போக்சோ சட்டம் ஆகும்.
 • குழந்தைகளுக்கு எதிராக செயல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. 
 • இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் முடித்து தண்டனை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் தொடர்பான வழக்கை வெளிப்படையாக விசாரிக்க தேவையில்லை. 
 • மேலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்கால நலன் கருதி வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்படும். குற்றம் தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகு தான் விசாரிக்க வேண்டும் என்பதில்லை, புகார் வந்த உடனையே காவல்துறையினர் விசாரணையை தொடங்கலாம். 
 • பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டிற்கே சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரை வைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் கண்டிப்பாக விசாரிக்க கூடாது. 
 • காவல்நிலைய எல்லைப் பிரச்சனையை காரணம் காட்டி வழக்கு விசாரணையை அதிகாரிகள் தட்டிக்கழிக்கவும் கூடாது. இந்த விதிகளை காவல்துறை அதிகாரிகள் மீறினால் அவர்கள் மீதும் வழக்குபதிவு செய்வதற்கு போக்சோ சட்டம் வழிவகை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவேண்டும். 
 • நீதிபதியின் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்ட வேண்டும். வாக்குமூலமும் உடல் பரிசோதனை அறிக்கையும் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் ஆகும். 2012 முதல் போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் இருந்தபோதும், அண்மைக் காலமாக குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்தே கொண்டு சென்றதால் கடந்த ஏப்ரலில் புதிய சட்ட திருத்தும் கொண்டுவரப்பட்டது. 
 • இதன் மூலம் 12 வயதிற்க்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுப்பவர்களுக்கு போக்சோவின் கீழ் உச்சபட்ச தண்டனையானா தூக்கு தண்டனை விதிக்கவும் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 
 • இது தொடர்பாக அவசர சட்டத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றப்பட்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது
 • குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமே போக்சோ சட்டம் ஆகும். இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 
 • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வரை வழங்க வழி செய்வது போக்சோ சட்டம். 
 • இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் முடித்து தண்டனை கொடுக்க வேண்டும். 
 • இந்த சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்கால நலன் கருதி குறிப்பிட்ட வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்படும். 
 • குற்றம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்த பிறகுதான் விசாரிக்க வேண்டும் என்பதில்லை, புகார் வந்த உடனையே போலீஸார் விசாரணையை துவங்கலாம்.
 • பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டிற்கே சென்று போலீஸார் விசாரணை நடத்தலாம். அதேபோல் காவல்நிலைய எல்லை காரணம் காட்டி விசாரணையை அதிகாரிகள் தட்டிக்கழிக்க கூடாது. 
 • இந்த சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள விதிகளை காவல்துறை மீறினால் அவர்கள் மீதும் வழக்குபதிவு செய்வதற்கு போக்சோ சட்டம் இடம் அளித்துள்ளது.

27th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி சாதித்த இந்தியா
 • பூமிக்கு 300 கி.மீ. உயரத்தில் ஒரு செயற்கைக் கோளை 3 நிமிடங்களில் சுட்டு வீழ்த்தியுள்ளது இந்தியா. நமது சொந்த குறைந்த புவி சுற்றுப் பாதை (low earth) செயற்கைக்கோளையே ஏ-சாட் ஏவுகணை மூலமாக, நாம் சுட்டு வீழ்த்தியுள்ளோம்.
 • இன்றைய தினம் தன்னை ஒரு விண்வெளி சக்தி நாடாக இந்தியா பதிவு செய்துள்ளது. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள்தான், இந்த சாதனையை செய்துள்ளன. இந்த சாதனை படைத்த 4 வது நாடு இந்தியாவாகும்.
 • A-SAT ஏவுகணை இந்தியாவின் விண்வெளி திட்டங்களுக்கு, புதிய பலத்தை கொடுக்கும். நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, மிஷன் சக்தி மைல் கல்லாக இருக்கும். இந்த திட்டத்திற்கு உதவிகரமாக இருந்த விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த திட்டத்திற்கு மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. 
திப்பு சுல்தான் துப்பாக்கி ஏலம்
 • பிரிட்டனின் பெர்க் ஷையர் மாகாணத்தில், ஒரு வீட்டிலிருந்து, இந்தியாவின் மைசூரை ஆண்ட, திப்பு சுல்தான் பயன்படுத்திய, வாள்கள், கைத்துப்பாக்கி உள்ளிட்ட எட்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 
 • இவை, நேற்று ஏலம் விடப்பட்டன. திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள், 98 லட்சம் ரூபாய்க்கும்; வெள்ளியால் ஆன கைத்துப்பாக்கி, 55 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டன.தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் திருத்தம்: தமிழகத்தில் நாளொன்றுக்கு ரூ.229 ஊதியம்
 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில் (2005) மத்திய அரசு மேற்கொண்ட திருத்தம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 
 • இதன்படி தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கான ஊதியம் நாளொன்றுக்கு தலா ரூ.229 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது.
Vivo IPL 2019 தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்றது YuppTV
 • தெற்காசிய நிகழ்ச்சிகளை ஆன்லைனில் ஒளிபரப்பிவரும் உலகின் தலைசிறந்த OTT பிளாட்ஃபார்ம்களில் ஒன்றான YuppTV தற்போது Vivo IPL 2019 தொடரை இந்தியா தவிர்த்த பிற உலக நாடுகளுக்கு டிஜிட்டலில் ஒளிபரப்புவதற்கான உரிமையைப் பெற்றுள்ளது. 
 • இதனால் இந்தியர்கள் மட்டுமல்லாது இனி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் 12-வது ஐ.பி.எல் சீசனை உடனுக்குடன் கண்டுகளிக்க முடியும்.
 • ஆஸ்திரேலியா, காண்டிநெண்டல் யூரோப், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தெற்கு & மத்திய அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியா & மத்திய ஆசிய நாடுகளில் உள்ள YuppTV வாடிக்கையாளர்கள் இதன் மூலம் ஐ.பி.எல் தொடரைக் கண்டுகளிக்க முடியும்.
ஏப்ரல் 18-ஆம் தேதி அரசு பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
 • மக்களவை மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி அரசு பொதுவிடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 • மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 2-ஆம் கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனுடன், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
லசித் மாலிங்கவிற்கு ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற அனுமதி
 • இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான அனுமதியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வழங்கியுள்ளது.
 • இதற்கிடையில், லசித் மாலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், இந்த முறையில் இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.

Wednesday, 27 March 2019

26th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
இயன்முறை மருத்துவக் கவுன்சில்: புதிய தலைவர் நியமனம்
 • இயன்முறை மருத்துவ கவுன்சிலுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் வகையில், மருத்துவக் கல்வி இயக்ககம், தமிழக மருத்துவ கவுன்சில், ஊரக மருத்துவ சேவைகள் இயக்ககம் ஆகியவற்றின் சார்பில் முன்மொழியப்பட்டிருந்த சிலரது பெயர்கள் கூர்ந்து பரிசீலிக்கப்பட்டன. 
 • அதன் அடிப்படையில், இயன்முறை மருத்துவக் கவுன்சிலுக்கு புதிய தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 • பி.முருகன் கவுன்சிலின் தலைவராகவும், எஸ்.கிருஷ்ணமூர்த்தி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, டாக்டர்கள் விஜயகுமார், சபிதா, ராமகிருஷ்ணன் ஆகியோரும், அருணா, கார்த்திகேயன், செந்தில் செல்வம், தேசிகாமணி, செந்தில்குமார் ஆகிய 9 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.2 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி
 • பணப்பரிவர்த்தனை தொடர்பான ஸ்விப்ட் விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறிய பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு (பிஎன்பி) ரூ.2 கோடி அபராதம் விதிப்பதாக ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்தது. 
 • நிதித் துறை நிறுவனங்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் தொடர்பான சர்வதேச தகவல் பரிமாற்றத்துக்கு ஸ்விப்ட் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கிய நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்ஸி ஆகியோர் ஸ்விப்ட் மென்பொருளை தவறாக பயன்படுத்தி மோசடி ஈடுபட்டனர்.
 • இந்த நிலையில், ஸ்விப்ட் மென்பொருள் செயல்பாடு தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.2 கோடி அபராதம் விதித்துள்ளது. 
 • குறிப்பாக, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்எஸ்பிசி, பேங்க் ஆப் பரோடா, சிட்டி பேங்க், கனரா வங்கி, யெஸ் வங்கி ஆகியவை அபராத பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏப்ரல் 1 முதல் வருமான வரித்துறை புதிய நடவடிக்கை
 • வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், ஏப்ரல் 1 முதல் வருமான வரி விவரங்களை தெரிவிக்க புதிய வழிமுறைகளை வருமான வரித்துறை கையாளவுள்ளது.
 • வரி செலுத்துவோர் குறித்த விவரம், சொத்து விவரத்தை இவற்றின் வாயிலாக வருமான வரித்துறை பெறும்.
 • பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தவறுதலாக பலர் வரி செலுத்துவோராக கணக்கிடப்பட்டனர். தற்போது தெரிவிக்கும் விவரங்கள் அடிப்படையில், அந்த தவறு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 • முதலாவது வகையில், முகவரி,கையெழுத்து, மற்றும் வரி செலுத்தும் விவரம் இருக்கும். இரண்டாவது வகையில், வரிசெலுத்தவதற்கான அளவுகோல் இடம்பெற்றிருக்கும்.
 • பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பெரும் தொகை டெபாஸிட் செய்தது குறித்தும் அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.ஊடக சமநிலையில் இந்தியா முதலிடம் : ஆய்வு நிறுவனம் தகவல்
 • ஊடகங்களில் அரசியல் பாரபட்சம் கொண்ட நாடுகள் பட்டியலை PEW என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கவே முடியாத அளவு பாரபட்சம் காட்டுவதில் லெபனான் ஊடகங்கள் முதலிடம் வகிக்கின்றன. அங்கு செய்திகளை ஏற்க முடியாத அளவு 84 சதவிகிதமாகவும், ஏற்குமளவு 16 சதவிகிதமாகவும் உள்ளது.
 • கனடாவில் இது 82 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம். ஏற்க முடியாத பாரபட்ச செய்திகளில் அமெரிக்க ஊடகங்கள் 79 சதவிகிதமாகவும், ஏற்கத்தக்க அளவு 21 சதவிகிதமாகவும் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் முறையே, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், தென் கொரியா, ரஷ்யா ஆகி‌யவை உள்ளன. பாரபட்ச செய்திகள் வழங்கும் ஊடகங்கள் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியா கடைசி இடத்தில் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.
 • இந்தியாவில் ஏற்கத்தக்க செய்தி அளிப்பது 40 சதவிகிதமாகவும், ஏற்க முடியாத அளவாக 23 சதவிகிதமும் உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 37 சதவிகித தகவல்கள் நடுநிலையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், பிரேசில், தென்ஆப்ரிக்கா ஆகிய 4 நாடுகள் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றன.
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு
 • தஞ்சை மக்களவை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று தமாகாவின் இடைக்கால கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

Tuesday, 26 March 2019

25th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
கென்யாவை சேர்ந்தவருக்கு கிடைத்தது சர்வதேச சிறந்த ஆசிரியர் விருது
 • துபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 5வது முறையாக வருடாந்திர சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா துபாயில் நடைபெற்றது.
 • இதனை ஹாலிவுட் நடிகர் ஹோக் ஜாக்மேன் தொகுத்து வழங்கினார். சிறந்த ஆசிரியரின் தேர்விற்கு கடின உழைப்பு, மாணவர்களின் திறன் மீது நம்பிக்கை, மற்றும் ஆசிரியர் பணியில் மிகுந்த ஆர்வம் உள்ளிட்டவற்றை காரணிகளாக கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.
 • அவ்வகையில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை கென்யாவைச் சேர்ந்த பீட்டர் தபசி (36) வென்றார். இவர் கென்யாவின் வானி கிராமத்தில் உள்ள கெரிக்கோ மிக்ஸ்ட் டே பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஆவார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் விலகல்
 • ஜெட் ஏர்வேஸ் நிறுவனரும் அதன் தலைவருமான நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் இயக்குநர் குழுவிலிருந்து திங்கள்கிழமை விலகினர்.
 • ஜெட் ஏர்வேஸில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் பதவியில் இருந்த நரேஷ் கோயல் தனது பதவியை ராஜிநாமா செய்வார் என செபியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16-வது இலகு ரக போர் விமானத்தை தயாரித்து இலக்கை எட்டிய இந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனம்
 • குறிப்பிட்ட காலத்துக்குள் 16-வது இலகுரக போர் விமானத்தை தயாரித்து இந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
 • இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 16-வது இலகு ரக போர் விமானத்தை மார்ச் இறுதிக்குள் தயாரிப்பதன் மூலம் இலக்கை இந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனம் எட்டியுள்ளது.
 • 40 இலகு ரக போர் விமானங்களுக்கு இந்திய விமானப் படையிடமிருந்து ஆர்டர் வந்துள்ளது.
 • ஆண்டுக்கு 8 இலகு ரக போர் விமானங்கள் என்ற அடிப்படையில் தயாரிப்பை 2014-ம் ஆண்டு தொடங்கினோம்.
 • 2 இலகு ரக போர் விமானங்கள் மலேசியாவில் நடக்கும் விமான கண்காட்சியில் பறக்கவிடப்படும். இந்த கண்காட்சிக்கு இந்துஸ்தான் ஏரோநேட்டிக்கல்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மலைகள், சாலைகளில் அரசியல் விளம்பர பேனர்கள் வைக்க தடை - உச்சநீதிமன்றம்
 • சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் தேர்தல் விளம்பரங்களை செய்ய தடை கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 • யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், "சாலைகளின் ஓரங்களிலும் விளம்ப பதாகைகள் நிறையவே காணமுடியும். மலைகளில் பெயிண்ட் அடித்து அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை எழுதி இருப்பார்கள். அதேபோல், மரங்களில் ஆனி அடித்து விளம்பர அட்டைகள் வைத்திருப்பதை பார்க்க முடியும். 
 • நெடுஞ்சாலைகளில் இத்தகைய பேனர்களை வைப்பதன் மூலம் நிறையவே விபத்துக்கள் ஏற்படுகின்றது. மலைகள் மற்றும் காடுகளில் இத்தகைய விளம்பர பேனர்களை வைப்பதால் விலங்குகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் நிறைய பிரச்னைகள் ஏற்படுகிறது" என்று கூறியிருந்தார்.
 • தமிழகத்தில் மலைகள், காடுகள், சாலைகளில் பேனர்கள் மற்றும் விளம்பரத்திற்கு தடை விதித்தனர். அதோடு, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்திய விமானப்படையின் சினூக் கனரக லிப்ட் அறிமுகமானது
 • இந்தியா விமானப்படை வாங்கியுள்ள 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களில் முதல் 4 ஹெலிகாப்டர்களை மக்களின் பார்வைக்கு இன்று அறிமுகம் செய்தது.
 • சண்டிகரில் இன்று இந்திய விமானப்படை (IAF) அதன் 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களில் முதல் நான்கு ஹெலிகாப்டர்களை மக்களின் பார்வைக்கு இன்று அறிமுகம் செய்தது. பன்முக திறமை கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள் சீனா மற்றும் பாக்கிஸ்தானுடனான எல்லை பிரச்சனைகளின் போடு இந்திய விமான படைகளின் பலத்தை அதிகரிக்க பயன்படும் என கூறப்படுகிறது.
 • சண்டிகரின் விமானப்படை நிலையம் விங் 12 விமான நிலையத்தில் இன்று இந்த முதல் நான்கு ஹெலிகொப்டர்களை விமானப்படைத் தளபதி மார்சல் பி.எஸ். தானோ அறிமுகம் செய்தார்.

Monday, 25 March 2019

லோக்பால் / LOKPAL IN TAMI PDF

TNPSCSHOUTERS
லோக்பால் அமைப்பு என்றால் என்ன?
 • ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்க உருவாக்கப்பட்டது லோக்பால் அமைப்பு. இந்த அமைப்பு 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
 • இதன் தலைவராக ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றுகொண்டார். அவருடன் மற்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
லோக்பால் அமைப்பு யார் மீதுள்ள புகார்களை விசாரிக்கலாம்?
 • பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்
 • மத்திய அமைச்சர்கள்
 • நாடாளுமன்ற உறுப்பினர்கள்
 • மத்திய அரசின் குரூப் ஏ,பி,சி,டி பிரிவு அதிகாரிகள்
 • அரசிற்கு தொடர்புடைய ஆணையங்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகளிலுள்ள தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
 • 10 லட்சத்திற்கு மேல் அன்னிய நாட்டிலிருந்து நிதியுதவி பெரும் அமைப்புகள்
புகார்கள் எவ்வாறு அளிக்கலாம்?
 • லோக்பால் அமைப்பில் ஊழல் புகார்களை யார் வேண்டுமானலும் அளிக்கலாம். இந்தப் புகார்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுடன் அளிக்கவேண்டும்.
புகார்கள் விசாரிக்கப்படும் முறை?
 • லோக்பால் அமைப்பில் புகார்கள் அளிக்கப்பட்டவுடன் அந்த அமைப்பு புகாரில் தொடர்புடைய நபரிடம் விளக்கம் கேட்கும். அத்துடன் இந்தப் புகாரில் முகாந்திரம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகு முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடும். 
 • மேலும் இந்தப் புகார்கள் அரசு அதிகாரிகள் மீது இருந்தால் அவை மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.
முதற்கட்ட விசாரணை:
 • புகார்களின் முகாந்திரம் குறித்து ஆராய்ந்த பிறகு லோக்பால் அமைப்பு முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடும். இதனை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பு 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். 
 • முதற்கட்ட விசாரணை நடத்தும் அமைப்பு சம்பந்தப்பட்ட நபர் மற்றும் அவரின் உயர் அதிகாரியிடமும் புகார் குறித்து கேட்கவேண்டும். உதராணமாக புகாருக்குள்ளான நபர் பிரதமராக இருந்தால் மக்களவையிடம் கேட்கவேண்டும். அதுவே அவர் அமைச்சராக இருந்தால் பிரதமரிடம் கேட்கவேண்டும். 
 • மற்ற துறை அரசு அதிகாரிகளாக இருந்தால் அந்தந்த துறையின் அமைச்சர்களிடம் கேட்கவேண்டும். இவற்றை எல்லாம் முடித்து பின்பு அறிக்கையை லோக்பால் அமைப்பிற்கு தாக்கல் செய்யவேண்டும்.
 • இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் லோக்பால் உறுப்பினர்களில் மூன்று பேர் கொண்ட அமர்வு இதனை ஆராய வேண்டும். அத்துடன் புகாருக்குள்ளான நபரின் கருத்தையும் கேட்டப் பின்னர் முழு விசாரணைக்கு இந்த அமர்வு உத்தரவிடும். இந்த நடைமுறைகள் அனைத்தையும் புகார் அளித்த 90 நாட்களுக்குள் முடிக்கவேண்டும்.
முதற்கட்ட விசாரணைக்கு பின்?
 • லோக்பால் அமைப்பு முழு விசாரணைக்கு உத்தரவிட்ட பின்பு, லோக்பால் அமைப்பில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும். இந்தக் குற்றப்பத்திரிகையை மூன்று பேர் கொண்ட லோக்பால் அமர்வு ஆராய்ந்து அதனை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்காக பதிவு செய்ய உத்தரவிடலாம். அல்லது அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் இந்த அமர்வு உத்தரவிடலாம்.
பிரதமர் மீது புகார் வந்தால்?
 • பிரதமர் மீது வெளிநாட்டு உறவு, உள்நாட்டு பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி துறைகள் தொடர்பாக ஊழல் புகார் வந்தால் லோக்பால் அமைப்பின் மொத்த உறுப்பினர்களும் விசாரணைக்கு உத்தரவிட அனுமதிக்கவேண்டும். 
 • அத்துடன் லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும். அப்போது தான் பிரதமர் மீதான புகாரை லோக்பால் விசாரிக்க முடியும். 
 • இந்த விசாரணை வீடியோவாகவும் பதிவு செய்யப்படவேண்டும். இந்தப் புகாரில் உண்மையில்லை என்று தெரிய வந்தால் இந்த வீடியோ பதிவை வெளிவராமல் லோக்பால் அமைப்பு பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா ஆரோக்கிய திட்டம்

TNPSCSHOUTERS
 • பொது சுகாதாரமும், நோய்த்தடுப்பும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக அம்மா ஆரோக்கிய திட்டம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சிகிச்சைப் பிரிவுகள்
 • ரத்த அழுத்தம்
 • பொது மருத்துவம்
 • மகளிர் நலம்
 • மகப்பேறு மருத்துவம்
 • இலவச கண் அறுவைச் சிகிச்சை
 • விழிலென்ஸ் பொருத்துதல்
 • தோல் நோய்
 • பல் மருத்துவம்
 • சித்த வைத்தியம்
 • ஸ்கேன் வசதி
 • ஆய்வக வசதி
 • இசிஜி வசதி
 • எய்ட்ஸ் எச்.ஐ.வி பரிசோதனை
 • ஆலோசனை மையம்
 • சர்க்கரை நோய் பிரிவு
 • சாதாரண ஏழை, எளிய மக்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால், அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள பெருந்தொகையை செலவழிக்க வேண்டியுள்ளது. 
 • சாதாரண மக்களின் வாழ்வில் பொருளாதார பாதிப்பு ஏற்படாதிருக்கவும், மக்கள் நோயில்லா பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 • இதய நோய், நீரழிவு நோய், புற்று நோய் போன்ற தொற்றா நோய்களின் பரிசோதனைக்கும் இந்த திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், முழு உடல் பரிசோதனையும் செய்துகொள்ளலாம்.
செயல்படும் நாட்கள்
 • இந்தத் திட்டம் மருத்துவமனையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படுத்தப்படும்.எதிர்கால திட்டங்கள்
 • கண்ணொளி காப்போம் திட்டம்,
 • டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்,
 • டெங்கு, சிக்குன்குனியா தடுப்பு திட்டம்,
 • கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு உணவு வழங்கும் திட்டம்,
 • முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்

தமிழக அரசு இலவச 104 மருத்துவ ஆலோசனை சேவை திட்டம்

TNPSCSHOUTERS
நோக்கம்
 • 104 தொலைபேசி மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் புதிய சேவையை இதன்மூலம் 104 என்ற எண்ணுக்கு கட்டணமின்றி போன்செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.
மருத்து சேவைகள்
 • பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள்
 • மருத்துவ ஆலோசனைகள்
 • தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள்
 • ரத்த தானம்
 • கண்தானம் பற்றிய தகவல்கள்,
 • தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள்,
 • ஊட்டச்சத்து குறித்த தகவல்கள்,
 • முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை இனி இலவசமாக பெறலாம்.
 • குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற முடியும்.திட்டங்கள்
 • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்று வதிலும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களைக் கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தினைக் குறைத்திடும் வகையிலும், அவர்கள் பணி மேம்பாடு அடையும் வகையிலும் செயல்படுகிறது.

மீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்

TNPSCSHOUTERS
 • இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு என இரண்டு அரசுகளும் இணைந்து தமிழ்நாட்டில் மீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. 
 • இத்திட்டத்திற்கான காப்புறுதி பிரிமியத் தொகையாக ஒரு மீனவருக்கு (தலா ரூ.7/- வீதம்) ஆண்டுக்கு ரூ.14/-வீதம் செலுத்துகிறது. 
 • இத்திட்டத்தின் கீழ், மீனவர் விபத்தில் இறந்தால் அல்லது முழுவதும் நிவர்த்தி செய்ய இயலாத முழு ஊனமடைந்தால் ரூ.50,000/-ம், பகுதி ஊனமடைந்தால் ரூ.25,000/-ம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.
தகுதிகள்
 • தமிழ்நாட்டிலுள்ள மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்கவேண்டும்.
 • முழுநேர கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கவேண்டும்.
விண்ணப்பப் படிவம்
 • இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட மீன்துறை உதவி இயக்குனர் (கடல் வளம்), மாவட்ட மீன்துறை உதவி இயக்குனர் (உள்நாட்டு வளம்), மீன்துறை உதவி இயக்குனர் (நீர் வாழ் உயிரின வளர்ப்பு), மாவட்ட மீன்துறை உதவி இயக்குனர் (விரிவாக்கம் மற்றும் பயிற்சி)ஆகிய ஏதாவதொரு அலுவலகத்தில் பெற்று அதை முழுமையாக நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

இலவச சானிடரி நாப்கின் திட்டம்

TNPSCSHOUTERS
 • தாய்-சேய் நலனை மேம்படுத்த வளர் இளம் பெண்களிடையே சுகாதாரம் மற்றும் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியம் என்றும், இது போன்ற சுகாதார விழிப்புணர்வு எதிர்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள் மற்றும் கருவுறுதல் தடைபடுவதை குறைக்க வழி வகுக்கும் என்று அரசு கருதுகிறது.
 • இதனைச் செயல்படுத்தும் விதமாக, அனைத்து கிராமங்களில் உள்ள 10 முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் ஆகியோர் நலனுக்காக இலவசமாக மாதவிடாய் பஞ்சுகள் (Sanitary Napkins).
வழங்கும் முறைகள்
 • கிராமத்தில் வாழும் இளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு மாதவிடாய் பஞ்சுகள் (Sanitary Napkins) கொண்ட ஒரு பை வீதம், மூன்று பைகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 18 பைகள் ஒவ்வொரு வளர் இளம் பெண்ணுக்கும் வழங்கப்படும்.
 • இந்த மாதவிடாய் பஞ்சுகள், அரசு பள்ளிகளில் பயிலும் வளர் இளம் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவும், மற்ற வளர் இளம் பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும் வழங்கப்படும்.
 • மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராம சுகாதார துணை நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு ஆறு மாதவிடாய் பஞ்சுகள் கொண்ட ஏழு பைகள் வழங்கப்படும்.
 • இதுவன்றி சிறைச்சாலைகளிலுள்ள பெண் கைதிகளுக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆறு மாதவிடாய் பஞ்சுகள் கொண்ட மூன்று பைகள் வழங்கப்படும்.
 • பயன்படுத்தப்பட்ட மாதவிடாய் பஞ்சுகளை தூக்கி குப்பையில் எரிந்து சுற்றுப்புற சுகாதாரம் மாசு அடைவதை தடுக்க அந்தந்த கிராமப்பகுதிகளில் குழிகள் தோண்டி புதைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் இளம் பெண்களால் பயன்படுத்தப்பட்ட பஞ்சுகளை சுகாதார முறையில் அழிக்க சூளை அடுப்பு நிறுவியுள்ளது.
 • மேலும், இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பெண்ணிற்கும் வளர் இளம் பெண்கள் நலக் குறிப்பேடு வழங்கப்பட உள்ளது. வளர் இளம் பெண்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு எடை, உயரம், ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு ஆகியவை இந்தக் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டு அவர்களின் நலன் கண்காணிக்கப்படும். வளர் இளம் பெண்களின் ரத்த சோகை தடுப்புத் திட்டமாக ஒவ்வொரு பெண்ணிற்கும் வாரந்தோறும் ஒரு இரும்பு சத்து மற்றும் போலிக் அமில மாத்திரை வழங்கப்படும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல்புழு நீக்க மாத்திரையும் வழங்கப்படும்.
 • இந்த புதிய திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் சுகாதாரத்துறை, சமூக நலத் துறை, பள்ளிக் கல்வித்துறைகளின் அலுவலர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு ஒன்றினை அமைத்துள்ளது.
 • இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து ஊரகப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் இந்தப் புதிய திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 44 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவாகும்,
வழங்கப்படும் இடங்கள்
 • இந்த சானிடரி நாப்கின்கள் அரசு பள்ளிகளில் பயிலும் வளர் இளம் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவும், மற்ற வளர் இளம் பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும் வழங்கப்படும்.
 • அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராம சுகாதார துணை நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 6 சானிடரி நாப்கின்கள் கொண்ட ஏழு பைகள் வழங்கப்படும். இதுவன்றி சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகளுக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆறு சானிடரி நாப்கின்கள் கொண்ட மூன்று பைகள் வழங்கப்படும்.
 • இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும், சுமார் 40 லட்சம் வளர் இளம் பெண்கள், 7 லட்சம் பிரசவித்த தாய்மார்கள், 700 பெண் கைதிகள் மற்றும் மனநல மருத்துவமனைகளில் உள்ள 500 பெண் நோயாளிகள் பயன் அடைவார்கள்.

24th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
விளம்பர தூதராக இந்தியாவின் மூத்த வாக்காளர் நியமனம்
 • நாட்டின், மிக மூத்த வாக்காளரான, ஷியாம் சரண் நேகி, 102, ஹிமாச்சல பிரதேச மாநில தேர்தல் ஆணையத்தின் விளம்பர துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 'மொபைல் ஆப்' அறிமுகம்
 • மஹாராஷ்டிர மாநிலத்தில், லோக்சபா தேர்தலின்போது, மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், ஓட்டுச் சாவடிக்குச் சென்று எளிதாக ஓட்டு போடுவதற்கான வசதிகளை பெறுவதற்கு, 'மொபைல் ஆப்' எனப்படும், செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
 • மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிக்கு சென்று, எளிதாக ஓட்டளிப்பதற்கு உதவும் வகையில், பி.டபிள்யு.டி., என்ற, 'மொபைல் ஆப்'பை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்த, 'ஆப்' மூலம், அருகில் உள்ள ஓட்டுச்சாவடி விபரங்களையும், ஓட்டுச்சாவடிகளில், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளையும் பெற முடியும்.மக்களவைத் தேர்தல்: ரூ.33 கோடிக்கு அழியாத மை கொள்முதல்
 • நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பயன்படுத்த ரூ.33 கோடிக்கு அழியாத மை தேர்தல் ஆணையம் வாங்குகிறது. 26 லட்சம் பாட்டில் அழியாத மை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 2014 மக்களவைத் தேர்தலுக்கு வாங்கிய 21.5 லட்சம் பாட்டில் மை உடன் ஒப்பிட்டால் தற்போது 4.5 லட்சம் அதிகமாக உள்ளது. 
அதிக கட்டண வசூலில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதலிடம்
 • சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு நாளைக்கு ரூ.2.63 லட்சம் கட்டணம் வருவாயுடன் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதலிடத்தில் இருக்கிறது. 
 • திருமங்கலம் ரயில் நிலையம் ரூ.2.50 லட்சத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை கடந்த மாதம் 10ஆம் தேதி முழுமையாக நிறைவடைந்து . 

Sunday, 24 March 2019

புது வாழ்வு திட்டம்

TNPSCSHOUTERS
 • புது வாழ்வு திட்டமானது தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையால் செயல்படுத்தப்படும் ஆற்றல் வளர்ப்பு மற்றும் வறுமை ஒழிப்பு திட்டமாகும்.
 • இத்திட்டமானது சுமார் 6 ஆண்டுகளில் ரூபாய் 717 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். தமிழகத்தின் 16 மாவட்டங்களில் (புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் உட்பட) உள்ள 70 பின்தங்கிய நிலையில் உள்ள ஒன்றியங்களுக்குட்பட்ட 2509 ஊராட்சிகளை இத்திட்டம் பயன்பெறச் செய்கிறது. 2005-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் துவக்கப்பட்ட போதிலும் திட்டத்தின் முழு அளவிலான செயல்பாடுகள் 2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
 • இத்திட்டத்தின் இலக்கு மக்கள் தொகை எனப்படுவது மிகவும் ஏழைக் குடும்பங்கள், நலிவுற்றோர், ஊனமுற்றோர் மற்றும் பட்டியலிடப்பட்ட சமூகங்களை உள்ளடக்கியுள்ளது.
 • இத்திட்டமானது தளர்த்தப்பட முடியாத திட்டக் கோட்பாடுகளைக் கொண்டு மக்களாலேயே செயல்படுத்தும் முறையின் மூலம் (ஊனுனு யயீயீசடியஉh) மக்கள், அவர்களின் தேவையை அவர்களே கண்டறிந்து திட்டமிடுதல், செயல்படுத்துதல், கால அளவை நிர்ணயித்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றைப் பின்பற்றச் செய்கிறது.

ஆளுமை மற்றும் பொறுப்புணர்வு செயல் திட்டம் (GAAP)

TNPSCSHOUTERS
1. வெளிப்படைத்தன்மை
திட்டத்தின் அனைத்து செயல்பாடுகளையும் மக்களுக்கு எளிதில் புரியும்படி, மக்கள் அறிந்து கொள்ளும்படி பல்வேறு முறைகளில் தெரியப்படுத்துவது வெளிப்படைத் தன்மையாகும். அவ்வாறு செய்யும்போது சிறந்த ஆளுமையினை உறுதிசெய்யலாம்.
வெளிப்படைத் தன்மையினை ஆளுமை குறைவின் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கான காரணிகள், அதனால் ஏற்படும் விளைவுகள், அதற்கான தீர்வுகள் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வ. எண்
காரணிகள்
விளைவுகள்
தீர்வுகள்
1
தகவல் தொடர்பு
அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டம் பற்றிய விழிப்புணர்வு முழுமையாக இருக்காது.
 • ஒவ்வொரு குக்கிராமம் வாரியாக நேரிடையாக சென்று கூட்டம் நடத்த வேண்டும் மற்றும் தகவல் பலகையில் எழுத வேண்டும்.
 • குடியிருப்பு பிரதிநிதிகள் மக்களை நேரிடையாக சென்று சந்தித்து தகவல் தெரிவித்தல் வேண்டும்.
 • சுய உதவி குழு கூட்டங்கள் மற்றும் கூட்டமைப்பின் மூலம் தகவல் தெரிவித்தல் ஆட்டோ மற்றும் தண்டோரா மூலம் விளம்பரம் செய்தல் வேண்டும்.
2
இலக்கு மக்கள் தேர்வு
மக்கள் பங்கேற்பு இல்லாததால் சரியான இலக்கு மக்களை தேர்ந்தெடுக்க இயலாது.
மக்கள் பங்கேற்புடன் மக்கள் நிலை ஆய்வு நடத்தி இலக்கு மக்களை தேர்வு செய்ய வேண்டும்.
3
மக்கள் அமைப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்வு
 • மக்கள் பங்கேற்புடன் குடியிருப்பு பிரதிநிதி, நிர்வாகிகள் தேர்வு செய்யப்படமாட்டார்கள்.
 • அதிகாரம் படைத்தவர்கள் தனக்கு சாதகமான நபர்களை நிர்வாகிகளாக நியமிப்பர்.
 • ஆதிக்க உணர்வு உடையவர்களை நிர்வாகியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
 • குடியிருப்பு பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் பற்றி மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
 • மக்கள் பங்கேற்புடன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு தேவையான விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.
 • பாரபட்சமின்றி தகுதியான நபர்களை தேர்வு செய்ய மக்களை தயார்படுத்த வேண்டும்.
4
பயனாளிகள் தேர்வு
 • சரியான பயனாளிகளை தேர்வு செய்ய முடியாது.
 • பயனாளிகளை முன்னுரிமைப்படுத்தி அதன்படி பயன்களை வழங்கமுடியாது.
 • சரியான பயனாளிகளை தேர்வு செய்யாமல் தவறான பயனாளிகளை தேர்வு செய்யப்படுவர்.
 • பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று பரிசீலனை செய்து முன்னுரிமைப்படுத்தி குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் பயனை வழங்குதல் வேண்டும்.
 • பயனாளிகள் தேர்வினை தகவல் பலகையின் மூலம் தெரிவிக்க வேண்டும்.
 • இலக்கு மக்கள் பட்டியலில் விடுபட்ட குடும்பங்கள் சேர்க்க வேண்டுமெனில், அவர்களிடம் மனுக்களைப் பெற்று முறையாக (மற்ற குடியிருப்பு பிரதிநிதிகள் அல்லது மற்றொரு VPRC, SAC மூலம்) நேரிடையாக ஆய்வு செய்து அறிக்கை அளித்து கிராம சபையில் பரிந்துரை செய்து ஒப்புதல் பெறலாம்.

 


2. ஆதிக்கம்:
 • ஆதிக்கம் என்பது சில குறிப்பிட்ட நபர்கள் அல்லது சில அமைப்புகள் மக்கள் அமைப்புகளை கையகப்படுத்தி அவற்றின் நிர்வாகத்தில் தலையிட்டு சுதந்திரமாக செயல்படவிடாமல் அதன் ஆளுமையை பாதிக்க வைக்கும் நிகழ்வாகும். கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் செயல்பாடுகள் சரியாக செயல்படாமல் இருப்பதற்கு சிலரின் ஆதிக்கம் தான் காரணம்.
அ. தலைவர் (ஊராட்சி மன்ற தலைவர்) (தன் உள்ளுணர்வு பேசுதல்)
 • எனக்கு வேண்டியர்களை இலக்கு மக்கள் பட்டியலில் சேர்த்து விட வேண்டும்.
 • எனக்கு வேண்டியவர்கள் பொறுப்புகளில் வந்து நான் சொல்வதை கேட்க வேண்டும்.
 • நான் சொல்லும் நபர்களுக்கு தான் தனி நபர்கடன் கொடுக்க வேண்டும்.
 • நான் வந்த பிறகுதான் VPRC கூட்டம் நடத்த வேண்டும்.
 • இப்படி VPRC என் ஆதிக்கத்தில் இருந்தால் தான் அடுத்த முறையும் நான் தலைவராக வரமுடியும்.
 • தலைவர்ன்னா சும்மாவா?
ஆ. VPRC நிர்வாகிகள் (செயலாளர் / பொருளாளர்) (தனியாக வந்து தன் அடிமனதில் உள்ள உணர்வுகள் பேசுதல்)
 • €€ நான் கையெழுத்து இட்டால் தான் எல்லா வேலையும் நடக்கும், “செக் பவர்” நமக்கு தான் கொடுத்திருக்கிறார்கள்.
 • €€ நாங்கள் இன்றி எதுவும் நடக்காது. அதனால் எனது உறவினர்களுக்கு முதலில் உதவிகள் செய்யவேண்டும்.
 • €€ எனக்கு தேவையான உதவிகளை முதலில் எடுத்து கொண்டு மீதமுள்ளதை தான் மக்களுக்கு கொடுக்க முடியும்.
இ. PLF செயலாளர் (நிர்வாகிகள்) (தன் மன உணர்வுகள் பேசுதல்)
 • €€ காலம் காலமாய் PLF செயலாளராய் இருக்கேன் எனக்கு தான் எல்லாம் தெரியும். அதிகாரிகள் வந்தால் நான் தான் நல்லா பேசுவேன்.
 • €€ நான் சொல்வதை தான் எல்லா குழுவும் கேட்க வேண்டும். என்னை யாரும் எதிர்த்து கேள்வி கேட்க கூடாது.
 • €€ நான் சொல்லும் குழுவுக்கு தான் கடன் உதவி கொடுக்க வேண்டும்.
 • €€ இலக்கு மக்கள் இல்லாத குழுக்களுக்கு அமுதசுரபி நிதி வழங்கி அவர்களிடம் உதவி பெறுவேன்.
ஈ. கணக்காளர் (தனியாக பேசுதல்)
 • €€ இந்த சங்கத்தில் நான் தான் அதிகம் படித்தவர்.
 • €€ எல்லா வரவு செலவு கணக்குகளையும் நான் தான் எழுதுகிறேன். ரூ.200 என்று எழுதும் போது ஒரு ஜீரோ (0) சேர்த்து 2000 என்று எழுதினால் இவர்களுக்கு என்ன புரியவா போகின்றது.
 • €€ இவர்கள் எல்லோரையும் விட அதிக நேரம் நான்தான் VPRCயில் இருக்கிறேன். எல்லா விவரமும் எனக்குதான் தெரியும்.
 • €€ நான் சொல்வதை தான் இவர்கள் கேட்க வேண்டும்.
 • €€ எனக்கு வேண்டிய பட்டவர்கள் முதலில் உதவி பெற வேண்டும்.
 • €€ எந்த ஒரு நிதி வந்தாலும் சரியான முறையில் செலவு செய்தார்கள் என்று நான் சொன்னால் தான் அடுத்த தவணை நிதி வரும், இல்லை என்றால் வராது.
 • €€ எனக்கு மட்டும் தான் கேள்விக்கேட்கும் அதிகாரம் உண்டு.
 • €€ சகல மரியாதையையும் எனக்கு தான் எல்லோரும் தரவேண்டும்.
 • €€ எனக்கு வேண்டியவர்களுக்கு முதலில் உதவிகள் தரவேண்டும்.
உ. அரசியல்வாதி (துண்டுகாரர் உள் உணர்வு பேசுதல்)
 • €€ என் கட்சிக்காரரை இந்த சங்கத்தில் சேர்க்க வேண்டும்.
 • €€ என் கட்சிக்காரர்களுக்கு முதலில் உதவிகள் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இதில் சதி நடப்பதாக போராட்டம் நடத்துவேன்.
 • €€ என் பகுதியில் நடக்கின்ற VPRC – PLF நிகழ்ச்சிகளுக்கு எனக்கு தான் முதல் மரியாதை செய்ய வேண்டும்.
 • €€ இப்படி நாலு பேருக்கு உதவி வாங்கி கொடுத்தால்தான் அதில் கொஞ்சம் தேத்தி வீடு வாசல் வாங்கலாமுல்ல.
ஊ. சாதிய அமைப்புகள்
 • €€ என் சாதிக்காரங்க தான் பொறுப்புகளில் வரவேண்டும்.
 • €€ என் சாதி தான் பழம்பெருமையானது. அதனால் எங்க சாதிக்காரர்களுக்கு தான் முதலில் உதவிகள் கிடைக்க வேண்டும்.
 • €€ அப்படி இவங்க செய்யலின்னா நம் ஊரில் இந்த சங்கம் இருந்திடுமா, கொளித்திட மாட்டோம்.
இப்படிப்பட்ட எண்ணங்கள் VPECயில் இருக்கின்ற வரை நல்ல சங்கமாக இது இருக்காது.
ஆளுமை குறைவினால் ஏற்படும் விளைவுகளும் அதன் தீர்வுகளும்
வ.எண்
காரணிகள்
விளைவுகள்
தீர்வுகள்
1
 • VPRC கையகப்படுத்துதல்:
 • ஊராட்சி மன்ற தலைவர். VPRCயில் உள்ள உறுப்பினர்கள்
 • கணக்காளர்
 • சமூக தணிக்கை குழு
 • குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள்
 • PLF செயலாளர்
 • ஜனநாயகம் பாதிக்கப்படும்
 • தவறான முடிவுகள் எடுக்கப்படும்
 • தன்னை சார்ந்தவர்களுக்கு பொறுப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும்
 • நிதி தவறாக பயன்படுத்தப்படும்
 • தனக்கு வேண்டியவர்களை பயனாளிகளாக தேர்வு செய்யப்படும்
 • பாரபட்சமான முடிவுகள் எடுக்கப்படும்
 • திட்ட செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்
 • தவறான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்
 • பங்கேற்பின்றி முடிவுகள் எடுக்கப்படும்
 • நிதி கையாடல் செய்யப்படும்
 • உரிய நபர்களுக்கு பயன்கள் சென்றடையாது
 • குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் திட்டப் பயனை பெறுவதிலிருந்து புறக்கணிக்கப்படுவார்கள்
 • உயிர் மூச்சு கோட்பாடுகள் மீறப்படும்
 • பதிவேடுகள் பராமரிப்பதில் குறைபாடுகள் ஏற்படும்
 • திட்ட விதிகளின் படி வெளிப்படையாக VPRC உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
 • முறையான பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
 • சிறந்த VPRC-க்கு களப்பயணம் செல்ல வேண்டும்.
 • பொறுப்புகளையும், கடமைகளையும் உணரச் செய்ய வேண்டும்.
 • SAC, PFT மூலம் தொடர் கண்காணிப்பு மேற்க்கொள்ள வேண்டும்.
2
 • PLF கையகப்படுத்துதல்
 • முன்னாள் PLF நிர்வாகிகள்
 • சில குடியிருப்பு அளவிலான அமைப்புகள்
 • சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஊக்குனர்கள் பிரதிநிதிகள்
 • வெளிநபர்கள் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள்
 • இலக்கு மக்களுக்கு முழுமையாக கடன் சென்றடையாது
 • தவறான முடிவுகள் மேற்கொள்ளப்படும்
 • தனக்கு வேண்டிய குழுவில் உள்ளவர்களுக்கு கடன் கொடுக்கப்படும்
 • தனிப்பட்ட முறையில் முடிவுகள் ஏற்படும்
 • தவறான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்
 • பதிவேடுகள் பராமரித்தலில் குறைபாடு ஏற்படும்
 • மக்கள் பங்கேற்புடன் நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும்.
 • முறையான பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும்.
 • சிறப்பாக செயல்படும் PLF க்கு களப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.
 • PLF நிர்வாகிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
 • பதிவேடுகள் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி அறிக்கைகளை உரிய நேரத்தில் தர வேண்டும்.
3
 • தலையீடு
 • இலக்கு மக்கள் இல்லாதவர்கள் VPRC செயல்பாடுகளில் தலையீடு
 • SHG அமைத்தலில் NGO தலையீடு
 • அரசியல் பிரமுகர்களின் தலையீடு
 • VPRC நிர்வாகிகள் தேர்வில் அதிகாரம் படைத்தவர்களின் தலையீடு
 • VPRC செயல்பாடுகள் தடைபடுதல்
 • நிதி தவறான முறையில் கையாளப்படுதல்
 • தவறான நிர்வாகிகள் தேர்வினால் அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பு கிடைப்பதில்லை
 • குழு செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்

 • திட்டம் பற்றிய விழிப்புணர்வு அனைத்து மக்களும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் விளக்குதல்
 • திட்ட செயல்பாடுகளை வெளிப்படையாக செய்தல்

 


                            

             3. நிதி நிர்வாகம்
நிதி நிர்வாகம் என்பது மக்கள் அமைப்புகளாகிய கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு போன்றவற்றிற்கு வழங்கப்பட்ட நிதியை அந்த அமைப்புகள் உயிர் மூச்சு விதிகளை பின்பற்றி இலக்கு மக்கள் முழுமையாக பயனடைய செய்வதே சிறந்த நிதி நிர்வாகம் ஆகும்.
நிதி நிர்வாகத்தில் குறைபாடுகளோ, தவறுகளோ நடைபெறும் பொழுது பின் வரும் விளைவுகள் ஏற்படும்.
காரணிகள்
விளைவுகள்
தீர்வுகள்
 • நிதி நிர்வாகம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை.
 • நிதியை தவறாக பயன்படுத்துதல்.
 • நிதியை அபகரித்தல்.
 • நிதி பராமரிப்பை முழுமையாக கண்காணிப்பது இல்லை.
 • முறையான பதிவேடுகள் பராமரிப்பு இல்லை.
 • திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நிதியை பயன்படுத்தாமலிருத்தல்.
 • பயிற்சி நிறுவனங்களுக்கு பணம் கொடுப்பதில் காலதாமதம்.
 • தவறான அறிக்கை சமர்ப்பித்தல்.
 • திட்ட அளவில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு நிதியை விடுவிப்பதில் கால தாமதம்.
 • ஒப்பந்தகாரர்களுக்கு பணம் செலுத்துவதில் / தருவதில் கால தாமதம்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தவணை நிதியை பெறுவதற்கான முறையான வழிகாட்டுதல் இல்லை.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திடமிருந்து நிதி அறிக்கை பெறுவதில் உள்ள குறைபாடு மற்றும் கால தாமதம்.

 • வங்கி கணக்கு குறித்த தெளிவு இருக்காது.
 • VPRC யின் தீர்மானம் இன்றி பணம் எடுப்பது மற்றும் கொடுப்பது.
 • கணக்காளர், PLF செயலாளர், மற்றும் VPRC நிர்வாகிகள் போன்றவர்களால், பிற உறுப்பினர்கள் ஏமாற்றப்படுவார்கள்.
 • நிதி நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தகவல் பலகையில் தெரிவிக்காமலிருத்தல்.
 • தனக்கு சாதகமான நபர்களுக்கு நிதி உதவி செய்தல்.
 • நடப்பு தேதியில் உள்ள கையிருப்பு மற்றும் வங்கி இருப்பை அறிய முடியாது.
 • புதிய செயல்பாடுகளை செய்வது கடினமாகிறது.
 • நிதி சார்ந்த செயல்பாடுகளை கணக்கில் கொண்டுவர மாட்டார்கள்.
 • குறைவாக செலவு செய்து கணக்கில் அதிகமாக செலவை எழுதுவது.
 • செலவின சீட்டுகளை திருத்துவது.
 • உரிய நேரத்தில் தேவையான உதவியினை பெற இயலாது.
 • VPRC திட்டத்தின் அடிப்படையில் செயல்படாததால் அடுத்த தவணைகளை பெறுவதில் காலதாமதம்.
 • பெரும்பாலான வேலைகள்/ சேவைக்கு காசோலையாக வழங்காமல் பணமாக வழங்குவது, அதன் மூலம் கையூட்டு பெறுவது.
 • முறையாக தொடர் கண்காணிப்பு இல்லாததால் நிதி நடவடிக்கைகளில் தவறுகள் ஏற்படுவது.
 • தவறான அறிக்கையால் VPRC-ன் நிதி நடவடிக்கைகளை பற்றிய உண்மை நிலையை அறிய முடியாது.
 • தவறான அறிக்கையால் எதிர்காலம் திட்டமிடுதலில் குளறுபடி / தாமதம் ஏற்படுகிறது.
 • லஞ்சம், ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
 • உரிய நேரத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு நிதி சென்றடையாததால் இலக்கு மக்களுக்கு பயன்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை.
 • ஒப்பந்தகாரர்களிடமிருந்து சேவையை / வேலையை குறித்த நேரத்தில் பெற இயலாது.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் இலக்குகள் அடைவதில் கால தாமதம் / செயல்பாட்டில் தொய்வு ஏற்படும்.
 • வறுமை ஒழிப்பு சங்கத்தின் உண்மையான நிதி விபரங்களை, நிதி நிலையினை அறிய முடிவதில்லை.
1. நிதி நிர்வாகம் குறித்த பயிற்சிகளை முறையாக, முழுமையாக மற்றும் தொடச்சியாக அளிப்பது.
2. களப்பயணம் மேற்கொள்வது.
3. கணக்காளருக்கு, VPRC செயலாளருக்கு, பொருளாருக்கு பதிவேடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சி தருவது.
4. தகவல் பலகையில் நிதி செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு நிலையிலும் தெரிவிப்பது.
5. VPRC ஒப்புதலின்றி, தீர்மானமின்றி எந்த நிதி நடவடிக்கையும் செய்யாமலிருப்பது.
6. குடியிருப்பு வாரியாக பயனாளிகள் பயனடைந்த விவரத்தினை தகவல் பலகையில் தொடர்ந்து எழுதுவது.
7. அனைத்து செலவுகளையும் காசோலைகளின் மூலம் மட்டுமே மேற்கொள்வது.
8. அறிக்கைகள் தயாரிப்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிப்பது, மேலும் உரிய நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க செய்வது.
9. சமூக தணிக்கை குழுவிற்கு தணிக்கை குறித்த பயிற்சி, பதிவேடுகள் பராமரிப்பு பயிற்சி மற்றும் நிதி நிர்வாகம் குறித்த பயிற்சி தருவது.
10. ஆண்டிற்கொரு முறை தணிக்கை செய்வது, தணிக்கையாளரின் அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுப்பது.
11. ஒவ்வொரு கிராம சபையிலும், நிதி அறிக்கையை சமர்பித்து ஒப்புதல் பெறுவது.
12. நிதி திட்டத்தின் அடிப்படையில் செலவுகளை மேற்கொண்டு இலக்குகளை அடைந்து, அடுத்தடுத்த தவணை நிதியை பெறுவது. நிதி நிர்வாகத்தில் குறைபாடுகளோ, தவறுகளோ நடைபெறும் பொழுது பின் வரும் விளைவுகள் ஏற்படும்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் இலக்குகளை அடைந்து விட்டதை சரிபார்த்து ஆவணங்களை பெற்றவுடன் நிதியை வழங்கிட வேண்டும்.
 • ஒப்பந்தப்படி ஆவணங்களை பெற்று உடனடியாக காசோலையை விடுவிக்க வேண்டும்.
 • குறித்த நேரத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்க இலக்குகளை அடைய வழி காட்ட வேண்டும்.
 • திட்ட அளவில் ஒரு தேதியை நிர்ணயித்து அறிக்கையை பெற வேண்டும். 

                       
4. சமுதாய கொள்முதல்
கொள்முதல் என்பது நமக்கு தேவையான பொருட்கள், சேவைகள் மற்றும் வேலைகளை பெறுதல் ஆகும். நமது புதுவாழ்வு திட்டத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மாவட்ட திட்ட அலுவலகம் ஆகியவற்றில் கொள்முதல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் சமுதாய கொள்முதல் என்பது மக்களுக்கு புதிய செயல்பாடாகும். இதுவரை அரசு அலுவலகங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட சில விதிமுறைகளை இங்கு பயன்படுத்தும் போது மக்களால் எளிதில் புரிந்து கொள்ள சிரமம் உள்ளது.
நமது திட்டத்தில் சமுதாய கொள்முதல் விதிமுறைகளை முறையாக பின்பற்றி ஆளுமை மற்றும் பொறுப்புணர்வுடன் கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் செய்ய தவறினால் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் அல்லது ஆபத்துகளை சந்திக்க நேரிடலாம்.
சமுதாய கொள்முதலில் உள்ள ஆளுமை குறைவினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதற்கான தீர்வுகள்.
காரணிகள்
விளைவுகள்
தீர்வுகள்
கிராம அளவில் கொள்முதல் பற்றி போதிய தெளிவின்மை
 • கொள்முதல் விதிமுறைகள் மீறப்படுதல்.
 • விலைபுள்ளி பெறுதலில் பிரச்சினை.
 • தரமான பொருட்கள் உரிய விலை கொடுத்து வாங்குவதில்லை.
 • இடைதரகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
 • தரமற்ற பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.
 • கொள்முதல் செய்வதில் ஊழல் ஏற்படுகிறது.
 • கொள்முதல் வகைகளையும் விதிமுறைகளை மக்களுக்கு உணர்த்துதல்.
 • தேவையான, முறையான பயிற்சி அளித்தல்.
 • களப்பயணத்தின் மூலம் அனுபவத்தினை பெற வைத்தல்.
 • கொள்முதல் பற்றிய விழிப்புணர்வினை படங்கள், சுவர் விளம்பரங்கள் மூலம் ஏற்படுத்துதல்.
கொள்முதல் குறித்த சரியான திட்டமிடாமல் இருத்தல்
 • உரிய காலகட்டங்களில் தேவையான கொள்முதல் செய்வதில் பாதிப்பு.
 • விலை ஏற்ற தாடிநவு.
 • பயனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
 • முன்கூட்டியே திட்டமிட்டு உரிய காலங்களில் கொள்முதல் செய்ய VPRCக்கு, கொள்முதல் குழுவிற்கு பயிற்சியினை அளித்தல்.
தவறான சமுதாய கொள்முதல்
 • விலைபுள்ளியினை திருத்தம் செய்ய வாய்ப்பு உண்டாகும்.
 • விலைபுள்ளியில் தரம், அளவு, தேதி குறிப்பிடாமல் இருக்கும்.
 • தரமற்ற பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.
 • இடைத்தரகர்களால், பணம் கையாடல் நடைபேற வாய்ப்பு ஏற்படும்.
 • சமுதாய கொள்முதலின் விதிமுறைகள் மீறப்படும்.
 • கொள்முதல் விவரங்கள் முறையாக பதிவேட்டில் எழுதப்படாமல் இருத்தல்.
 • விலை வங்கி பட்டியலை ஒப்பிடும் முறையை உணர்த்துதல்.
 • கொள்முதல் விதிமுறைகளின் அவசியத்தினை துணைக்குழு உறுப்பினர்களுக்கு உணர்த்துதல்.
 • விலை வங்கியினை மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதுப்பித்தல்.
 • நேரடிக் கொள்முதலின் அவசியத்தினை உணர்த்துதல்.
 • சமூக தணிக்கை குழு, திட்டப் பணியாளர்களால் முறையான தொடர்ச்சியான கண்காணிப்பினை அளித்தல்
கொள்முதல் குழு செயல்பாடுகளில் குறைபாடு
 • சரியான கொள்முதல் நடைபெறாது
 • தேவையற்ற பொருட்களை வாங்குவதால் வீண் செலவு ஏற்படும்.
 • தகுதியான, நேர்மையான மற்றும் விவரம் தெரிந்த உறுப்பினர்களை கொள்முதல் குழுவில் சேர்த்தல்.
 • தேவையான சிக்கன வழிமுறைகளை உணர்த்துதல்.
 • போதிய பயிற்சிகளை அவ்வப்போது அளித்தல்.
 • பொருள் வாங்கும் பொழுது அந்த பொருள் குறித்த அனுபவம் வாய்ந்த உறுப்பினரை கொள்முதலில் சேர்த்தல்.
சரியான சேவை நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படாமை
 • தரமற்ற நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும்
 • தரமான சேவை (பயிற்சி) கிடைக்காது.
 • அடிப்படை வசதிகள் இருக்காது.
 • பயிற்சிக்கு பின் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் கிடைக்காது.
 • பயனாளிகளின் திறமைகள் பாதிக்கப்படும்.
 • உற்பத்தி பொருட்களுக்கு விற்பனை செய்ய சந்தை வாய்ப்பு கிடைக்காது.
 • அப்பகுதியில் உள்ள சேவை அளிக்கும் நிறுவனங்களின் விவரங்களை சேகரித்தல்.
 • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமா என்று ஆய்வு செய்தல்.
 • நிறுவனத்தின் கடந்த கால சாதனைகளை ஆய்வு செய்தல்.
 • சேவை அளிக்கும் நிறுவனத்தின் அடிப்படை வசதிகள், பயிற்சியாளர் எண்ணிக்கை போன்றவற்றினை நேரடியாக ஆய்வு செய்தல்.
 • சேவைக் கொள்முதலில் சரியான வல்லுநர் இணைக்கப்படுதலை உறுதி செய்தல்.
 • குறைந்தபட்சம் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்கான உத்திரவாதத்தினை பெறுதல்.
 • மக்களின் தேவைக்கேற்ப பயிற்சி அளித்தல்.
திட்ட அளவில் ஏலம் விடுவதில் பிரச்சனை. சேவை அளிக்கும் நிறுவனங்கள் தேர்வு, சரியான வல்லுநர்களை தேர்வு செய்வதில் குறைபாடு.
 • சரியான நிறுவனங்கள், நபர்கள், வல்லுநர்கள் தேர்வு செய்யப்படாமை.
 • தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்தல்.
 • ஊழல் ஏற்பட பிரச்சனை.
 • விலைப்புள்ளி பெறுதலில் பிரச்சினை.
 • ஏலத்தினை அடிக்கடி ரத்து செய்ய வேண்டிய நிலை.
 • நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் பொருட்கள் கிடைக்காது.
 • உரிய காலகட்டத்தில் கொள்முதல் செய்வதில்லை.
 • போட்டியுடன் கூடிய ஏலமுறையினை பின்பற்ற வேண்டும்.
 • வெளிப்படையான கொள்முதல் உறுதி செய்தல்.
 • விலைபுள்ளிகளை சரிபார்த்தப்பின் சேவை அளிப்போரை தேர்வு செய்ய வேண்டும்.
 • பட்டய கணக்காளரால் வருடத்திற்கு ஒரு முறை தணிக்கை செய்தல்.
 • தொடர்ச்சியான கண்காணிப்பு இருந்ததை உறுதி செய்தல்.
5. பிரச்சினைகளுக்கான தீர்வு
நமது திட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் எல்லா செயல்பாடுகளிலும் திட்ட உயிர் மூச்சின்படி செயல்படுத்தும் போது ஏற்படுகின்ற இடர்பாடுகளும், தடைகளும் பிரச்சினைகளாகும். இந்த பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது, அதற்கான தீர்வுகள் மற்றும் கால நிர்ணயங்கள் பற்றி இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
வ. எண்
காரணிகள்
விளைவுகள்
தீர்வுகள்
1
கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகம் அமைப்பதில் உள்ள பிரச்சினை
 • சிறிய பிரச்சினைகளும் பெரிய அளவில் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
 • அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய இடமாக இருத்தல் வேண்டும்.
 • மனு சம்பந்தமான கோப்புகள் பராமரிக்க வேண்டும்.
2
குக்கிராமங்களிடையே உள்ள தூரம் அதிகமாக இருத்தல்.
 • பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி தெரியாது இருத்தல்.
 • அவரவர் பொறுப்பு பற்றி பயிற்சி அளித்தல்.
3
உறுப்பினர்களுக்கு அவர்கள் பொறுப்பு பற்றி தெரிவதில்லை.
 • VPRC கூட்டங்கள் முறையாக நடைபெறாது.
 • தகவல் தொடர்பு படி நிலை உறுதி செய்தல் (குடியிருப்புகளில்).
4
பயனாளிகளை முன்னுரிமைபடுத்துவதில் பிரச்சினை.
 • அனைவருக்கும் பயன் சென்று சேராது.
 • சரியான நேரத்தில் உள் கற்றல் நிகடிநவு நடத்துதல்.
5
பிற துறைகளின் பயன்களை இலக்கு மக்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம்.
 • அனைத்து மக்களுக்கும் பயன்களும், தகவல்களும் கிடைக்காது.
 • தேவையான தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தபட்டதை உறுதி செய்தல்.
6
பிரச்சினைகள் மீது எடுக்கப்பட்ட தீர்வுகள் பற்றி பராமரிக்கபடாமல் இருப்பது மற்றும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது.
 • VPRC மூலம் எந்தவிதமான பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்பட்டது என தெரிய வாய்ப்பில்லை.
 • பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய பதிவேடுகள் பராமரித்தல் (உள் கற்றல்).
7
கிராம சபையில் குறைவான மக்கள் பங்கேற்பு.
 • தொடர்சியாக திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
 • கிராம சபையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, இலக்கு மக்களின் பங்கேற்பை உறுதி செய்தல்.
வழிகாட்டுதலில் உள்ள பிரச்சினைகள் (திட்ட அளவில்)
காரணிகள்
விளைவுகள்
தீர்வுகள்
 • வழி நடத்துநர்களுக்கு போதிய வழி நடத்தும் திறமை இல்லை.
 • உரிய நேரத்தில் வழிகாட்டுதல் செய்யாமை.
 • வழி நடத்துநர்களுக்கு போதிய தகவல் தெளிவின்மை. (Knowledge Updation).
 • சரியான தகவல் உரிய நேரத்தில் போய் சேராது.
 • திட்ட பணியாளர்கள் வழிகாட்டுதலை விட அறிவுறுத்துதல் (instructions) செய்வர்.
 • ஒருங்கிணைப்பாளர்களுக்கு தொடர் பயிற்சி அளித்தல்.
 • திட்ட செயல்பாடுகளை குறிப்பிட்ட காலகெடுவிற்குள் செய்ய நிர்பந்தித்தல்.
 • ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வதால் கால விரயம் ஏற்படும்.
 • உரிய நேரத்தில் சரியான தகவலை கொண்டு செல்லுதல்.
 • ஒருங்கிணைப்பாளர்களிடையே அவரவர் துறைகளில் (Specialisation) ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை.
 • ஒருங்கிணைப்பாளர்களிடையே, ஒருங்கிணைப்பு இல்லாததால் வறுமை ஒழிப்பு சங்கத்தினரிடையே தெளிவின்மை.
 • ஒருங்கிணைப்பாளர்களிடையே குழுவாக (Team) இணைந்து செயல்பட ஆர்வத்தை தூண்டுதல்.
 • திட்ட செயல்பாடுகளை குறைவான காலத்திற்குள் செய்து முடிக்க அவசரம் காட்டுதல்.
 • திட்ட செயல்பாட்டின் தரம் குறையும்.
 • திட்ட செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்துதல்.