Type Here to Get Search Results !

24th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

விளம்பர தூதராக இந்தியாவின் மூத்த வாக்காளர் நியமனம்
  • நாட்டின், மிக மூத்த வாக்காளரான, ஷியாம் சரண் நேகி, 102, ஹிமாச்சல பிரதேச மாநில தேர்தல் ஆணையத்தின் விளம்பர துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 'மொபைல் ஆப்' அறிமுகம்
  • மஹாராஷ்டிர மாநிலத்தில், லோக்சபா தேர்தலின்போது, மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், ஓட்டுச் சாவடிக்குச் சென்று எளிதாக ஓட்டு போடுவதற்கான வசதிகளை பெறுவதற்கு, 'மொபைல் ஆப்' எனப்படும், செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிக்கு சென்று, எளிதாக ஓட்டளிப்பதற்கு உதவும் வகையில், பி.டபிள்யு.டி., என்ற, 'மொபைல் ஆப்'பை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்த, 'ஆப்' மூலம், அருகில் உள்ள ஓட்டுச்சாவடி விபரங்களையும், ஓட்டுச்சாவடிகளில், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளையும் பெற முடியும்.



மக்களவைத் தேர்தல்: ரூ.33 கோடிக்கு அழியாத மை கொள்முதல்
  • நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பயன்படுத்த ரூ.33 கோடிக்கு அழியாத மை தேர்தல் ஆணையம் வாங்குகிறது. 26 லட்சம் பாட்டில் அழியாத மை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 2014 மக்களவைத் தேர்தலுக்கு வாங்கிய 21.5 லட்சம் பாட்டில் மை உடன் ஒப்பிட்டால் தற்போது 4.5 லட்சம் அதிகமாக உள்ளது. 
அதிக கட்டண வசூலில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதலிடம்
  • சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு நாளைக்கு ரூ.2.63 லட்சம் கட்டணம் வருவாயுடன் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதலிடத்தில் இருக்கிறது. 
  • திருமங்கலம் ரயில் நிலையம் ரூ.2.50 லட்சத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை கடந்த மாதம் 10ஆம் தேதி முழுமையாக நிறைவடைந்து . 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel