Type Here to Get Search Results !

26th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

இயன்முறை மருத்துவக் கவுன்சில்: புதிய தலைவர் நியமனம்
  • இயன்முறை மருத்துவ கவுன்சிலுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் வகையில், மருத்துவக் கல்வி இயக்ககம், தமிழக மருத்துவ கவுன்சில், ஊரக மருத்துவ சேவைகள் இயக்ககம் ஆகியவற்றின் சார்பில் முன்மொழியப்பட்டிருந்த சிலரது பெயர்கள் கூர்ந்து பரிசீலிக்கப்பட்டன. 
  • அதன் அடிப்படையில், இயன்முறை மருத்துவக் கவுன்சிலுக்கு புதிய தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
  • பி.முருகன் கவுன்சிலின் தலைவராகவும், எஸ்.கிருஷ்ணமூர்த்தி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, டாக்டர்கள் விஜயகுமார், சபிதா, ராமகிருஷ்ணன் ஆகியோரும், அருணா, கார்த்திகேயன், செந்தில் செல்வம், தேசிகாமணி, செந்தில்குமார் ஆகிய 9 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.2 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி
  • பணப்பரிவர்த்தனை தொடர்பான ஸ்விப்ட் விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறிய பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு (பிஎன்பி) ரூ.2 கோடி அபராதம் விதிப்பதாக ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்தது. 
  • நிதித் துறை நிறுவனங்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் தொடர்பான சர்வதேச தகவல் பரிமாற்றத்துக்கு ஸ்விப்ட் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் வாங்கிய நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்ஸி ஆகியோர் ஸ்விப்ட் மென்பொருளை தவறாக பயன்படுத்தி மோசடி ஈடுபட்டனர்.
  • இந்த நிலையில், ஸ்விப்ட் மென்பொருள் செயல்பாடு தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.2 கோடி அபராதம் விதித்துள்ளது. 
  • குறிப்பாக, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்எஸ்பிசி, பேங்க் ஆப் பரோடா, சிட்டி பேங்க், கனரா வங்கி, யெஸ் வங்கி ஆகியவை அபராத பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏப்ரல் 1 முதல் வருமான வரித்துறை புதிய நடவடிக்கை
  • வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், ஏப்ரல் 1 முதல் வருமான வரி விவரங்களை தெரிவிக்க புதிய வழிமுறைகளை வருமான வரித்துறை கையாளவுள்ளது.
  • வரி செலுத்துவோர் குறித்த விவரம், சொத்து விவரத்தை இவற்றின் வாயிலாக வருமான வரித்துறை பெறும்.
  • பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தவறுதலாக பலர் வரி செலுத்துவோராக கணக்கிடப்பட்டனர். தற்போது தெரிவிக்கும் விவரங்கள் அடிப்படையில், அந்த தவறு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • முதலாவது வகையில், முகவரி,கையெழுத்து, மற்றும் வரி செலுத்தும் விவரம் இருக்கும். இரண்டாவது வகையில், வரிசெலுத்தவதற்கான அளவுகோல் இடம்பெற்றிருக்கும்.
  • பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பெரும் தொகை டெபாஸிட் செய்தது குறித்தும் அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.



ஊடக சமநிலையில் இந்தியா முதலிடம் : ஆய்வு நிறுவனம் தகவல்
  • ஊடகங்களில் அரசியல் பாரபட்சம் கொண்ட நாடுகள் பட்டியலை PEW என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கவே முடியாத அளவு பாரபட்சம் காட்டுவதில் லெபனான் ஊடகங்கள் முதலிடம் வகிக்கின்றன. அங்கு செய்திகளை ஏற்க முடியாத அளவு 84 சதவிகிதமாகவும், ஏற்குமளவு 16 சதவிகிதமாகவும் உள்ளது.
  • கனடாவில் இது 82 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம். ஏற்க முடியாத பாரபட்ச செய்திகளில் அமெரிக்க ஊடகங்கள் 79 சதவிகிதமாகவும், ஏற்கத்தக்க அளவு 21 சதவிகிதமாகவும் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் முறையே, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், தென் கொரியா, ரஷ்யா ஆகி‌யவை உள்ளன. பாரபட்ச செய்திகள் வழங்கும் ஊடகங்கள் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியா கடைசி இடத்தில் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.
  • இந்தியாவில் ஏற்கத்தக்க செய்தி அளிப்பது 40 சதவிகிதமாகவும், ஏற்க முடியாத அளவாக 23 சதவிகிதமும் உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 37 சதவிகித தகவல்கள் நடுநிலையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், பிரேசில், தென்ஆப்ரிக்கா ஆகிய 4 நாடுகள் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றன.
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு
  • தஞ்சை மக்களவை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று தமாகாவின் இடைக்கால கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel