Type Here to Get Search Results !

28th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

பாக் நீரிணையை பத்தரை மணி நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை! - 10 வயதுச் சிறுவன் அசத்தல்
  • உலகின் பல்வேறு பகுதிகளில் கடல்களுக்கு இடையே நீந்திக் கடந்து சாதனை படைப்பவர்களின் சாதனைக் களமாக தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான பாக் நீரிணை பகுதியும் ஒன்று. கோடைக்காலமான மார்ச் முதல் மே வரையிலான காலங்களில் இக்கடல் பகுதியில் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். 
  • கடந்த ஆண்டு வரை பல்வேறு நீச்சல் வீரர்கள் இந்தக் கடல் பகுதியை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளனர். இதில் கடந்த 1994-ம் ஆண்டு தனது 12 வயதில் பாக் நீரிணையை 16 மணி நேரத்தில் நீந்திக் கடந்த நீச்சல் வீரனாக குற்றாலீஸ்வரன் சாதனை படைத்துள்ளார்.
  • இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் தேனியைச் சேர்ந்த ரவிக்குமார்-தாரணி தம்பதியின் மகன் ஜெய் ஐஸ்வந்த். 10 வயதுச் சிறுவனான ஜஸ்வந்த் தேனியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். 
  • இதைத்தொடர்ந்து கடலில் நீந்துவதற்கான பயிற்சியில் ஈடுபட்ட சிறுவன் ஜஸ்வந்த், தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான 30 கி.மீ தூரத்தை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்தினார்.
  • தலைமன்னார் தனுஷ்கோடி இடையிலான 30 கி.மீ தூரத்தை சுமார் 10.30 மணி நேரத்தில் நீந்திக் கடந்ததன் மூலம் கடந்த 25 ஆண்டுக்கால சாதனையை முறியடித்துச் சிறப்பு பெற்றான் தேனியைச் சேர்ந்த சிறுவன் ஜெய் ஜஸ்வந்த்.

அமமுகவுக்கு பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு
  • தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், வி.கே.சசிகலா ஆகியோர் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.
  • எனினும், பொதுச் சின்னத்தில் ஏதாவது ஒன்றை டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணிக்கு அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 
  • இந்நிலையில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வுக்கு பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 



சீன இறக்குமதி டயர்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி: மத்திய வர்த்தக அமைச்சகம் பரிந்துரை
  • சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லாரி, பேருந்துகளுக்கான டயர்கள் மீது மிகை இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்துக்கு, வர்த்தகத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
  • இந்தியாவில் லாரி, பேருந்து டயர் உற்பத்தியாளர்களின் நலன்களைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வர்த்தகத் துறை அமைச்சகம் தனது பரிந்துரையில் கூறியுள்ளது.
பங்கு மாற்றத்திற்கு, 'டீமேட்' கட்டாயமாகிறது; ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது
  • 'பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்களின் காகித ஆவண பங்குகளை மாற்றுவது, 'டீமேட்' எனப்படும் மின்னணு ஆவண நடைமுறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்' என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, 'செபி' அறிவித்து உள்ளது.
  • வங்கி சேமிப்பு கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படுவது போல, நிறுவன பங்குகள், டீமேட் கணக்கில் சேமிக்கப்படுகின்றன.
  • இதையடுத்து, ஏப்., 1 முதல், காகித வடிவிலான பங்குகளை, டீமேட் கணக்கு மூலமாக மாற்றும் நடைமுறை அமலுக்கு வருகிறது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு
  • தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளுக்கு வரும் 1ந் தேதி முதல் கண்டனம் உயருகிறது. சுங்கக்கட்டணங்கள் அவ்வப்போது உயர்ந்து மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றது. 
  • அந்த வகையில் தற்போது திண்டிவனம், சூரப்பட்டு, வானகரம், பரனூர் உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளின் கட்டணம் 3 முதல் 5 சதவீதம் வரை உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel