Friday, 30 April 2021

TNPSC 29th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய தொழில்நுட்பத்துடன் கனெக்டிவிட்டி மீட்டர்

 • கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், (IGCAR), ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தில் 'பல்சேட்டிங் உணர்திறன் சாதனம் அடிப்படையிலான மின் கடத்துத்திறன் மீட்டர்' எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. 
 • இதன் பயன்பாடு பகுப்பாய்வு மற்றும் தர கட்டுப்பாட்டுக்கான வேதியியல் ஆய்வகங்களில் மட்டுமின்றி, நீர்நிலை கரைசலின் மின் கடத்துத்திறனின் நிகழ்நேர கண்காணிப்புக்கு தொழில்துறை மற்றும் கள பயன்பாடுகளில் பொருத்தமானது. 
 • இதை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் நேற்று பெங்களூருவில் உள்ள சர்வ் எக்ஸ்எல் என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு பகிர்ந்தது.

சொந்த விண்வெளி நிலையத்துகான கலத்தை வெற்றிகரமாக ஏவியது சீனா

 • சீனாவின் விண்வெளி நிலையத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த நிலையத்தின் முக்கிய பகுதியாக அமையவிருக்கும் கலத்தை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.
 • 'தியான்ஹே' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளி ஆய்வுக் கலம், சீனாவின் 'லாங் மாா்ச்-5பி ஒய்2' ரக ராக்கெட் மூலம் ஹைனான் மாகாணத்திலுள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
 • ஏற்கெனவே, சிறிய அளவிலான, குறைந்த நேரமே செயல்படும் இரு விண்வெளி நிலையக் கலங்களை சீனா சோதனை முறையில் விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த நிலையில், முதல் முறையாக மிகப் பெரிய அளவிலான ஆய்வு நிலையக் கலத்தை சீனா முதல் முறையாக விண்ணில் செலுத்தியுள்து.
 • இந்த விண்வெளி நிலையக் கலம், 16.6 மீட்டா் நீளமும் 4.2 மீட்டா் அகலமும் கொண்டது. விண்வெளி நிலையத்துக்கு வரும் வீரா்கள் தங்கியிருப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இதில் உள்ளது.
 • இந்தக் கலத்தைப் போலவே, 'தியான்காங்' என்று பெயரிடப்பட்டுள்ள தனது எதிா்கால விண்வெளி நிலையத்துக்கான மேலும் 10 தொகுதிகளை விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது. அவற்றைக் கொண்டு உருவாக்கப்டும் சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் 10 ஆண்டுகளுக்குச் செயல்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா இந்தியாவுக்கு ரூ.740 கோடிநிவாரணப் பொருள்களை அனுப்பியது அமெரிக்கா

 • கலிஃபோா்னியா மாகாணத்தில் இருந்து இந்தியாவுக்கு 400 ஆக்சிஜன் சிலிண்டா்கள், 9.60 லட்சம் விரைவு பரிசோதனை உபகரணங்கள், ஒரு லட்சம் என்-95 ரக முகக் கவசங்கள் முதல் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
 • ஆக்சிஜன் செறிவூட்டல் இயந்திரங்கள், ஆக்சிஜன் தயாரிப்பு அலகுகள், தனிநபா் பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 • இவற்றை அமெரிக்க மாகாண அரசுகள், தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வ அமைப்புகள் ஆகியவை நாடு முழுவதும் திரட்டி அனுப்பி வைக்கின்றன.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரலாறு படைத்த கமலா ஹாரிஸ், நான்சி பெலோசி

 • அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற முதல் கூட்டுக் கூட்டத்தின் அவைத் தலைவா்கள் இருக்கைகளில் அமா்ந்து, துணை அதிபரும் நாடாளுமன்ற மேலவையான செனட் சபைத் தலைவருமான கமலா ஹாரிஸ் மற்றும் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி சாதனை படைத்தனா்.
 • அந்த நாட்டு வரலாற்றில், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதிபா் உரையின்போது அவருக்குப் பின் உள்ள இருக்கைகள் இரண்டிலும் பெண்கள் அமா்ந்தது இதுவே முதல்முறையாகும்.

பசுமை தீர்ப்பாயத்திற்கு சத்யகோபால் நியமனம்

 • சென்னையில் உள்ள, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், தென் மண்டல அமர்வின் தொழில்நுட்ப நிபுணராக, சத்யகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு, தமிழகத்தை சேர்ந்த கிரிஜா வைத்தியநாதன், சத்யகோபால், சத்திய நாராயணன் ஆகிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
 • இதில், கிரிஜா வைத்தியநாதன், சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வுக்கு மாற்றப்பட்டார்.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால், சத்யகோபால், தற்காலிகமாக சென்னைக்கு மாற்றப்பட்டார்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் அரண்மனை சுவர்கள் கண்டுபிடிப்பு

 • அரியலுார் மாவட்டத்தில் உள்ள இந்த ஊரில், தமிழக தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வு நடந்தது. அதில், சோழர் மாளிகையின் அடித்தளப் பகுதிகள் கண்டறியப்பட்டன. 
 • இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி முதல், மீண்டும் தமிழக தொல்லியல் துறை சார்பில், அப்பகுதியில் அகழாய்வு துவங்கப்பட்டது. இதுவரை, மூன்று அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. அதில், மூன்றரை அடி ஆழத்தில், செங்கல் சுவர் வெளிப்பட்டது.
 • இந்த சுவர், 10 மீட்டர் வரை நீளமாகச் செல்கிறது. இதே குழிகளில், மேற்கூரையின் ஓடுகள், உடைந்த செங்கற்கள், வட்ட வடிவமான செம்பு நாணயம், இரும்பு ஆணிகள், சீன மண்பாண்டங்கள் உள்ளிட்ட தொல்பொருட்களும் கிடைத்துள்ளன.

Thursday, 29 April 2021

TNPSC 28th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

2020-ல் உலக நாடுகளின் ராணுவ செலவினம் தொடர்பான அறிக்கை

 • ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 'ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்' உள்ளது. உலகளாவிய ராணுவ செலவினம் மற்றும் ஆயுத வர்த்தகத்தை இந்த நிறுவனம் கண்காணித்து வருகிறது. உலக நாடுகளின் ராணுவ செலவினம் தொடர்பான இதன் சமீபத்திய அறிக்கை வெளியானது.
 • இதன்படி கடந்த 2020-ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த ராணுவ செலவில் அமெரிக்காவின் பங்கு 39 சதவீதமாக உள்ளது.
 • இதையடுத்து சீனாவின் பங்கு 13 சதவீதமாகவும் இந்தியாவின் பங்கு 3.7 சதவீதமாகவும் உள்ளது. அமெரிக்கா தனது ராணுவத்துக்கு கடந்த 2020-ல் 77,800 கோடிடாலர் செலவிட்டுள்ளது. சீனா 25,200 கோடி டாலரும் இந்தியா 7,290 கோடி டாலரும் செலவிட்டுள்ளன. 
 • கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா வைரஸ் பரவல் இருந்தாலும் இந்த 3 நாடுகளும் முந்தையை ஆண்டை விட கூடுதலாக ராணுவத்துக்கு செலவிட்டுள்ளன. அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.7 சதவீதத்தை ராணுவத்துக்கு செலவிட்டுள்ளது. சீனா 1.7 சதவீதமும் இந்தியா 2.9 சதவீதமும் செலவிட்டுள்ளன.
 • 2011 முதல் 2020 வரை அமெரிக்க ராணுவ செலவு 10 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் சீனாவின் ராணுவ செலவு 76 சதவீதமும் இந்தியாவின் ராணுவ செலவு 34 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.
 • உலகில் ராணுவத்துக்கு அதிகம்செலவிட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியாவை தொடர்ந்து, ரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. 
 • 2020-ல் உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவு முந்தைய ஆண்டை விட 2.6 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் 5 நாடுகளின் ராணுவ செலவு, மொத்த ராணுவ செலவில் 62 சதவீதமாக உள்ளது.

பிரிட்டனுடனான வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்

 • பிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரிட்டனுடன் மேற்கொள்ளபடவிருக்கும் வா்த்த மற்றும் பாதுகாப்பு உறவு குறித்து அந்த நாட்டுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம், பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸிலுள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
 • அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 660 எம்.பி.க்கள் வாக்களித்தனா். ஒப்பந்தத்தை எதிா்த்து 5 போ வாக்களித்திருந்தனா்; 32 போ வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
 • இதன் மூலம், வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
 • தற்போது ஐரோப்பிய நாடாளுமன்ற ஒப்புதலையும் பெற்றதைத் தொடா்ந்து, பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஐரோப்பிய யூனியன் - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்தியாவுக்கு கனடா ரூ. 74 கோடி உதவி

 • கனடாவின் செஞ்சிலுவை சங்கம் மூலம் இந்திய செஞ்சிலுவை சங்கத்துக்கு கனடா அரசு ரூ. 74 கோடியை வழங்கத் தயாராக உள்ளது. இதன்மூலம் ஆம்புலன்ஸ் வாகனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கலாம். இந்தியாவுக்கு பலா் நிதி உதவி அளிக்க விரும்பினால் செஞ்சிலுவை மூலமாக அளிக்கலாம்.
 • இதேபோல், நியூஸிலாந்தும் இந்தியாவுக்கு ரூ. 53 கோடியை செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவாக்கிகள் வாங்கவும், மேலும் 500 ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கவும் முடிவு: பிரதமர் மோடி உத்தரவு

 • ''நாட்டில் தேவைப்படும் இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள அமைக்கவும், போர்ட்டபிள் ஆக்சிஜன் செறிவாக்கிகள் (Portable Oxygen Concentrator) வாங்கவும் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 • ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவாக்கிகளை விரைவாகக் கொள்முதல் செய்து, கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 
 • ஏற்கெனவே பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து 713 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். இப்போது மேலும் 500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்

ஐபிஓ மூலம் 8250 கோடி ரூபாய் திரட்டிய சொமேட்டோ நிறுவனம்

 • ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவினை டெலிவரை செய்து வருகிறது சொமேட்டோ நிறுவனம். கடந்த 2008இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது 24 நாடுகளில் இயங்கி வருகிறது. 
 • சுமார் 5000 ஊழியர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மக்களிடம் அறிவிப்பு வெளியிட்டு தொழிலுக்கு திரட்டப்படும் நிதியான IPO மூலம் 8250 கோடி ரூபாய் திரட்டியதாக சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி: மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்

 • மகாராஷ்டிர மாநிலத்தின் அமைச்சர்வைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்று பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 • மேலும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்துவது குறித்த மாநில அரசின் முடிவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • முன்னதாக கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், தில்லி, உத்தரகண்ட் உள்ளிட்ட 20 மாநில அரசுகள் இலவச கரோனா தடுப்பூசியை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தேஜஸ் போர் விமானத்தில் 'பைத்தான்-5' ஏவுகணை இணைப்பு
 • உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போா் விமானத்தில் ஏற்கெனவே 'டொபி' ஏவுகணை இணைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், பாா்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்கையும் மிக வேகமாகச் சென்று துல்லியமாகத் தாக்கியது. 
 • அதனைத் தொடா்ந்து ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பைத்தான்-5 ஏவுகணையும் அதில் இணைக்கப்பட்டு கோவாவில் பரிசோதிக்கப்பட்டது. 
 • மிகவும் கடினமான சூழல்களை எதிா்கொள்ளக் கூடிய வகையில் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், தேஜஸ் போா் விமானம் வானிலிருந்தபடி அனைத்து இலக்குகளையும் 100 சதவீதம் துல்லியமாக வான் இலக்கை தாக்கி அழித்தது. அதனடிப்படையில், பைத்தான்-5 ஏவுகணையும் தேஜஸ் விமானத்தில் இணைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 • கோவாவில் நடத்தப்பட்ட இந்தப் பரிசோதனைக்கு முன்பாக, போா் விமானம் பைத்தான்-5 ஏவுகணையை தாங்கிச் செல்லும் திறன்குறித்து பெங்களூரில் சோதனை செய்யப்பட்டது.
முதுமக்கள் தாழிகளிலிருந்து பானைகள் கண்டெடுப்பு
 • கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கிய இந்த அகழாய்வுப் பணிகள் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
 • அப்போது கொந்தகையில் 3 குழிகள் தோண்டப்பட்டு 7 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் 3 மற்றும் 4 ஆம் எண் கொண்ட முதுமக்கள் தாழிகளில் இருந்த பொருள்கள் ஆய்வுக்காக வெளியே எடுக்கப்பட்டன.
 • 3 ஆம் எண் கொண்ட தாழி முழுமையாக கிடைத்ததால் அதற்குள் மனித எலும்புகள், பானைகள் மற்றும் இரும்பு ஆயுதம் உள்ளிட்டவை இருந்தன.
 • இதில் சிறிய வடிவிலான பானைகளில் ஒரே மாதிரியான குறியீடுகள் காணப்படுகின்றன. இது உணவுப் பாத்திரம் அல்லது குவளையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 
 • 19 செ.மீ. விட்டமுள்ள ஒரு உணவுப் பாத்திரத்தின் உயரம் 4.5 செ. மீட்டர் உள்ளது. மற்றொரு பாத்திரம் 14 செ.மீ. விட்டமும், 16 செ.மீ. உயரமும் உள்ளது. மற்றொரு பாத்திரம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
 • மூன்று குறியீடுகளும் எதனைக் குறிக்கிறது என்பது குறித்து அடுத்த கட்ட ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும். 

Wednesday, 28 April 2021

பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) / University Grants Commission - India

TNPSCSHOUTERS
 • இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
 • 1956 ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசால் நிறுவப்பட்ட சட்டரிதியான அமைப்பாகும். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
 • தில்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இதற்கு புனே, போபால், கொல்கத்தா, ஐதராபாத்து, கௌகாத்தி, பெங்களூரு ஆகிய நகரங்களில் துணை அலுவலகங்கள் உள்ளன.
 • கல்விக்கான மத்திய ஆலோசனைக்குழு இந்தியாவில் போருக்கு பின்னர் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியைப் பற்றி 1944 ல் அளித்த அறிக்கை (சார்ஜியன்ட் அறிக்கை) பல்கலைக் கழக மான்ய குழு அமைக்க பரிந்துரை செய்தது.
 • முதன் முதலில் 1945 ஆம் ஆண்டு அலிகார்க், பனாரஸ் மற்றும் டெல்லி மத்திய பல்கலைக்கழகங்களை மேற்பார்வையிட பல்கலைக்கழக மான்யக் குழு அமைக்கப்பட்டது.
 • 1947 ஆம் ஆண்டு முதல் அப்போது இருந்த அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் அவர்களை தலைவராக நியமித்து 1948 ஆம் ஆண்டு பல்கலைக் கழக கல்விக்குழு அமைக்கப்பட்டது.
 • அக்குழு இங்கிலாந்து பல்கலைக்கழக மான்யக் குழு மாதிரி வடிவில் ஒரு முழு நேர தலைவராகவும் மற்றும் சிறந்த கல்வியாளர்களை உறுப்பினராகவும் கொண்டு அமைக்கலாம் என பரிந்துரை செய்தது.
 • 1952 ஆம் ஆண்டு மத்திய அரசாங்கம் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான பொது நிதி உதவிகளை இனிமேல் பல்கலைக் கழக மான்யக் குழுவின் முலம் தான் கொடுக்கப்பட வேண்டும் என முடிவெடுத்தது.
 • அதன் தொடர்ச்சியாக அப்போதயை மத்திய கல்வி, இயற்கை வளங்கள் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி அமைச்சர் மொலானா அபுல் காலம் அசாத் அவர்களால் டிசம்பர் 28 1953 அன்று முறையாக தொடங்கி வைக்கப்பட்டது.
 • 1956 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் பராளுமன்றத்தில் பல்கலைக்கழக மான்யக்குழு சட்டம், 1956 இயற்றி முறைப்படுத்தியது.
யுஜிசி ஆணை
 • யு.ஜி.சிக்கு நாட்டின் ஒரே மானியம் வழங்கும் நிறுவனம் என்ற தனித்துவமான வேறுபாடு உள்ளது, இது இரண்டு பொறுப்புகளைக் கொண்டுள்ளது:
 • நிதி வழங்குதல் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் தரங்களை ஒருங்கிணைத்தல், தீர்மானித்தல் மற்றும் பராமரித்தல்.
 • பல்கலைக்கழக கல்வியை மேம்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
 • பல்கலைக்கழகங்களில் கற்பித்தல், தேர்வு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் தரங்களை தீர்மானித்தல் மற்றும் பராமரித்தல்.
 • கல்வியின் குறைந்தபட்ச தரநிலைகள் குறித்த விதிமுறைகளை உருவாக்குதல்.
 • கல்லூரி மற்றும் பல்கலைக்கழக கல்வித் துறையில் முன்னேற்றங்களைக் கண்காணித்தல்; பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு மானியங்களை வழங்குதல்.
 • யூனியன் மற்றும் மாநில அரசுகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையில் ஒரு முக்கிய இணைப்பாக சேவை செய்கிறது.
 • பல்கலைக்கழக கல்வியை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்குதல்.
தீக்ஷரம்ப் - மாணவர் தூண்டல் திட்டத்திற்கான வழிகாட்டி
 • ஜூலை 2019 இல், மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு தீக்ஷரம்பைக் கொண்டுவந்தது,
 • இது சமீபத்தில் நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாகும்.
தீட்சரம்பின் நோக்கங்கள்
 • புதிய சூழலில் புதிய மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும்
 • யுஜிசி நிறுவனத்தின் நெறிமுறைகள் மற்றும் கலாச்சாரத்தை மாணவர்களிடையே கற்பிக்க,
 • பிற யுஜிசி மாணவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களுடன் பத்திரங்களை உருவாக்குவதற்கு அவர்களுக்கு உதவ,
 • பெரிய நோக்கம் மற்றும் சுய ஆய்வு ஆகியவற்றின் உணர்வுக்கு அவற்றை வெளிப்படுத்துவது
 • போட்டி உலகத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஆர்வமுள்ள கற்றவர்களுக்கு அதிகாரம் அளித்தல்
 • உண்மை, நீதியான நடத்தை, அன்பு, அகிம்சை, அமைதி போன்ற உலகளாவிய மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட பாத்திரத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் வாழ்க்கையின் புதிய எல்லைகளைத் திறந்து சுய விழிப்புணர்வு, இரக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை வளர்ப்பதில் உதவுதல்.
ஸ்ட்ரைட் - இந்தியாவின் வளரும் பொருளாதாரத்திற்கான டிரான்ஸ்-டிசிப்ளினரி ஆராய்ச்சிக்கான திட்டம்
 • ஸ்ட்ரைட் என்பது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த, சமூக ரீதியாக பொருத்தமான மற்றும் உள்ளூர் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட மற்றும் உலக அளவில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி திட்டங்களை ஆதரிக்கும் ஒரு முன்முயற்சி ஆகும்.
STRIDE இன் பிற அம்சங்கள்
 • இது மாணவர் தூண்டல் திட்டத்திற்கான வழிகாட்டியாகும்,
 • இது பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் (யுஜிசி) தயாரிக்கப்படுகிறது.
 • இந்த திட்டம் புதிய மாணவர்கள் புதிய சூழலில் வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு தூண்டல் திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
திட்டத்தின் நோக்கங்கள்
 • புதிய மாணவர்களை சரிசெய்ய உதவுதல் மற்றும் புதிய சூழலில் அவர்களுக்கு வசதியாக இருக்கும்.
 • குறிப்பிட்ட நிறுவனத்தின் நெறிமுறைகளையும் கலாச்சாரத்தையும் கற்பித்தல்.
 • சக மாணவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களுடன் பிணைப்புக்கு அவர்களுக்கு உதவுதல்.
 • பெரிய நோக்கம் மற்றும் சுய ஆய்வு ஆகியவற்றின் வெளிப்பாட்டை அவர்களுக்கு வழங்குதல்.

TNPSC 27th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

ஜவ்வாதுமலை அருகே பழமையான குத்துக்கல் கண்டெடுப்பு

 • ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் அடுத்த சாளுர் கிராமம் மாரியம்மன் கோயில் எதிரே குத்துக்கல் உள்ளது. இது, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். 10 அடி உயரமும், 5 அடி அகலம் கொண்டது.
 • முற்காலத்தில் உயிரிழந்தவர் களை புதைக்க, பல வடிவ கற்களை அடுக்கி கல்லறை அமைத்தனர். மேலும், குழுத் தலைவர் அல்லது சிற்றரசன் உயிரிழந்தால், அவர்களை புதைத்த குழியின் மீது குத்துக்கல் நடும் வழக்கம் இருந்துள்ளது. 
 • இந்த குத்துக்கல்லை யானைக் கட்டி கல் என கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. அந்த பகுதியில் சிற்றரசன் இருந்ததாகவும், குத்துக்கல்லில் யானை கட்டி வைத்திருந்ததாகவும் கூறுகின்றனர்.
 • இதேபோல், அத்திப்பட்டு எனும் கிராமத்தில் 3 குத்துக்கல் அருகருகே உள்ளன. ஜவ்வாது மலையில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் காணப்படும் நிலையில், குத்துக்கல்லும் அதிகளவில் காணப்படுவது ஜவ்வாதுமலையின் தொன்மைக்கு வலு சேர்க்கிறது.
 • இந்த மலையில் கல்திட்டைகள், கற்கோடாரிகள், தொழில் கூடங்கள் என வரலாற்று தடயங்கள் உள்ளன. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வரலாற்று சிறப்புகளை வெளிக்கொண்டு வர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் மத்திய அரசிடம் ஒப்படைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

 • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் தமிழகத்துக்கு அளித்து உபரியை மற்ற மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஆக்சிஜனை முழுமையாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்பதற்காக 4 மாதங்களுக்கு செயல்பட அனுமதிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 
இந்தியப் பெண் விஞ்ஞானிக்கு சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு விருது
 • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக சா்வதேச விஞ்ஞானிகளுடன் இணைந்து 'வைல்ட் எலமண்ட்ஸ் ஃபவுண்டேஷன்' அமைப்பு செயல்பட்டு வருகிறது. 
 • மனித உலகம், தாவர உலகம், விலங்குகள் உலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பாதுகாப்பதற்கு இந்த அமைப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
 • அந்த அமைப்பு கிரிதி கரந்துக்கு 'வன புத்தாக்க விஞ்ஞானி' விருதை வழங்கியுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியப் பெண் கிரிதி கரந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
 • பெங்களூரைச் சோந்த உயிரியல் விஞ்ஞானியான கிரிதி கரந்த், வனப் பாதுகாப்பு ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானியாகவும் உள்ளாா்.
 • அமெரிக்கா, பிரிட்டன், கென்யா, கொலம்பியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சோந்த விஞ்ஞானிகள் சிலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறுபவா்களுக்கு ஆராய்ச்சிப் பணிகளுக்காக 2 ஆண்டுகளுக்கு ரூ.75 லட்சத்தை அந்த அமைப்பு வழங்கவுள்ளது.

Tuesday, 27 April 2021

TNPSC 26th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

வில்வித்தையில் தங்கம் வென்றது இந்திய ஜோடி

 • கவுதமாலாவில் நடைபெற்ற உலகக் கோப்பை முதற்கட்ட தொடரில் மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பாரி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 27-26 என்ற புள்ளிகள் கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்த பிரிவில் இந்திய அணி 7 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தங்கம் வென்றுள்ளது.
 • கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அட்டானு தாஸ், அங்கிதா பகத் ஜோடி 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது.
 • மகளிருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் மெக்கன்ஸிஸி பிரவுனை எதிர்த்து விளையாடினார். இதில் தீபிகா குமாரி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். உலகக் கோப்பை போட்டியில் தீபிகா குமாரி தங்கம் வெல்வது இது 3-வது முறையாகும்.
 • ஆடவருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் தீபிகா குமாரியின் கணவரான அட்டானு தாஸ் இறுதிச் சுற்றில் 6-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் டேனியல் காஸ்ட்ரோவை வீழ்த்தி தங்கம் வென்றார். உலகக் கோப்பை தொடரில் அட்டானு தாஸ் வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். 
 • மேலும் ரீகர்வ் ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியா 2009ம் ஆண்டுக்குப்பிறகு தற்போதுதான் பதக்கம் வென்றுள்ளது. அதேவேளையில் உலகக் கோப்பை தொடரில் தனிநபர் பிரிவில் 2 தங்கம் மற்றும் அணிகள் பிரிவில் ஒரு தங்கம் இந்தியா வெல்வதும் இதுவே முதன்முறையாகும்.
 • உலக கோப்பை வில்வித்தையில் இந்தியா 3 தங்கம், 1 வெண்கலம் என 4 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவுக்கு கூகுள் 135 கோடி நிதியுதவி

 • கொரோனா 2வது அலையால் பாதித்துள்ள இந்தியாவுக்கு பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதியுதவி அறிவிக்க தொடங்கி உள்ளன. கூகுள் நிறுவனம் நேற்று ரூ.135 கோடி நிதியுதவியை அறிவித்தது. 
 • 'கிவ் இந்தியா அமைப்பும், யுனிசெப் நிறுவனமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெருக்கடியால் சிக்கி தவிக்கும் குடும்பங்களுக்கு, கூகுள் நிறுவனத்தின் நிதியுதவியை பயன்படுத்தி உதவிகள் வழங்கும். 
 • மேலும், கொரோனா பரிசோதனை உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வாங்கித் தரவும் இதை பயன்படுத்தும்.
4 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது ஸ்பேஸ்-எக்ஸ்
 • அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு அமைப்புடன் இணைந்து, 4 வீரர்களை தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளிக்கு அனுப்பியது. 
 • ஏப்ரல் 23 அன்று 3வது முறையாக பூமிக்கு சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நான்கு பேரை அனுப்புகிறது ஸ்பேஸ்-எக்ஸ். அவர்களில் 2 பேர் அமெரிக்காவையும், ஒருவர் ஜப்பானையும், மற்றொருவர் பிரான்ஸ் நாட்டையும் சேர்ந்தவர்கள். 
 • ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட விண்வெளி ஓடத்தை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி, அதில் மனிதர்கள் மீண்டும் விண்வெளிக்கு அனுப்பப்படுவது இதுவே முதல்முறையாகும். 

ஆஸ்கர் விருது 2021 / OSCAR AWARD 2021

TNPSCSHOUTERS

 • உலகமே பெரிதும் எதிர்பார்க்கும் மிகப்பெரிய சினிமா விருதுகளில் ஆஸ்கர் விருது முக்கியமானது. 93வது ஆஸ்கர் விருது விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள யூனியன் ஸ்டேஷன் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்தது. 
 • கொரோனா பெருந்தொற்று காரணமாக விழாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வழக்கமாக பிரமாண்டமான முறையில் நடைபெறும் இவ்விழா, கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் எளியமுறையில் நடந்தது. 
 • இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய விழாவில், பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் முதலில் ரெட் கார்பெட் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரிவு கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
 • கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடந்தது. பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு, உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 
 • வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும் இவ்விழா, இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. 
 • விழாவில், சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் இயக்கிய 'நோமேட்லேண்ட்' என்ற திரைப்படம் 3 ஆஸ்கர் விருதுகள் வென்றது. 
 • சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் 'நோமேட்லேண்ட்' படம் விருதுகள் வென்றது. 
 • சிறந்த நடிகருக்கான விருதை 'தி பாதர்' என்ற படத்தில் நடித்த ஆண்டனி ஹாப்கின்ஸ், சிறந்த நடிகைக்கான விருதை 'நோமேட்லேண்ட்' படத்தில் நடித்த பிரான்சஸ் மெக்டார்மண்ட் பெற்றனர். 
 • சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை டென்மார்க்கின் 'அனதர் ரவுண்ட்' பெற்றது.
 • ஆஸ்கர் வரலாற்றில், சிறந்த பெண் இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெறும் 2வது பெண் க்ளோயி சாவ் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, கடந்த 2010ல் கேத்ரின் பிக்லோ என்பவர், 'தி ஹர்ட் லாக்கர்' என்ற படத்துக்காக வென்றார்.
 • 5 படங்களுக்கு 2 ஆஸ்கர் விருதுகள்: 'சோல்', 'மங்க்', 'சவுண்ட் ஆப் மெட்டல்', 'மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம்', 'நோமேட்லேண்ட்' ஆகிய 5 படங்கள் தலா 2 ஆஸ்கர் விருதுகள் வென்றது. 
 • சிறந்த பின்னணி இசை, சிறந்த அனிமேஷன் திரைப்படம் ஆகிய விருதுகள் 'சோல்' படத்துக்கு கிடைத்தது. 
 • சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி அமைப்பு ஆகிய விருதுகளை 'சவுண்ட் ஆப் மெட்டல்' திரைப்படம் வென்றது. 
 • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் 'மங்க்' திரைப்படம் விருது வென்றது. 
 • சிறந்த ஒப்பனை, ஆடை வடிவமைப்பு ஆகிய விருதுகள் 'மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம்' படத்துக்கு கிடைத்தது. 
 • சிறந்த படம், சிறந்த இயக்குனருக்கான விருதுகள் 'நோமேட்லேண்ட்' படத்துக்கு கிடைத்தது.
 • சிறந்த மூல திரைக்கதை - எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்), 
 • சிறந்த துணை நடிகர் - டேனியல் கல்லுயா (ஜூடாஸ் அன்ட் பிளாக் மெசியா), 
 • சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - செர்ஜியோ லோபஸ் நிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம்), 
 • சிறந்த ஆவண குறும்படம் - கோலெட், 
 • சிறந்த ஒளிப்பதிவாளர் - எரிக் மெசர்ச்மிட் (மங்க்), 
 • மனிதாபிமான விருது - டைலர் பெர்ரி, 
 • சிறந்த ஆவணப்படம் - மை ஆக்டோபஸ் டீச்சர், 
 • சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ, 
 • சிறந்த படத்தொகுப்பாளர் - மைக்கேல் நெல்சன் (சவுண்ட் ஆப் மெட்டல்), 
 • தழுவல் திரைக்கதை - கிறிஸ்டோபர் புளோரியன் (தி பாதர்). 
 • சிறந்த பின்னணி இசை - டிரென்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்), 
 • சிறந்த பாடல் - பைட் ஃபார் யூ (ஜூடாஸ் அன்ட் பிளாக் மெசியா), 
 • சிறந்த துணை நடிகை - யூ ஜங் யூன் (மினாரி), 
 • சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்,
 • சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் - ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்), 
 • ஆடை வடிவமைப்பு - அன் ரோத் (மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம்), 
 • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்), 
 • சிறந்த ஒலி அமைப்பு - நிகோலஸ் பெகர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆப் மெட்டல்). 
 • இர்பான் கானுக்கு அஞ்சலி: 93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், கடந்த ஆண்டு உயிரிழந்த பிரபல நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 • புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பாலிவுட் நடிகர் இர்பான் கானுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய படங்களில் மட்டுமின்றி, ஹாலிவுட் படங்களான 'லைப் ஆப் பை' , 'ஸ்பைடர்மேன்', 'ஜூராசிக் வேர்ல்டு' ஆகிய படங்களிலும் இர்பான் கான் நடித்துள்ளார். தவிர, இந்திய ஆடை வடிவமைப்பாளர் பானு அதயாவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Monday, 26 April 2021

TNPSC 25th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

பிஎம் கேர்ஸ் நிதியில் அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க உத்தரவு

 • கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அவதியுறும் நிலையில் அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
 • இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கல் பாதிக்கப்படுகிறார்கள். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர்.
 • இதையடுத்து ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யவும் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் பிஎம் கேர்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளில் புதிதாக 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
 • இதற்காக பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து கணிசமான நிதியை ஒதுக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
அமெரிக்க நீதித் துறை முக்கிய பொறுப்பில் இந்திய அமெரிக்கர் 
 • துணை அட்டர்னி ஜெனரலாக, இந்திய அமெரிக்காவின் வம்சாவளியைச் சேர்ந்த, "மனித உரிமை வழக்குரைஞராக'' பணியாற்றி வரும் வனிதா குப்தா நியமிக்கப்பட்டதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. 
 • அமெரிக்க நீதித் துறையின் மூன்றாவது பெரிய பதவியான அது, வெள்ளையரல்லாத ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். 
 • இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வனிதா குப்தாவுக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் பதிவாகின.

Sunday, 25 April 2021

திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சில் / National Council for Transgender People

TNPSCSHOUTERS
 • திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.பி) என்பது இந்திய அரசாங்கத்தின் சட்டரீதியான அமைப்பாகும். இது பொதுவாக திருநங்கைகளை பாதிக்கும் அனைத்து கொள்கை விஷயங்களிலும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதில் அக்கறை கொண்டுள்ளது.
 • திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 இன் விதிகளின் கீழ் இது 2020 இல் நிறுவப்பட்டது. அக்டோபர் 2020 நிலவரப்படி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தவார் சந்த் கெஹ்லோட் என்பவரால் என்.சி.டி.பி. சபை திருநங்கைகளின் ஐந்து பிரதிநிதிகளைக் கொண்டது.
 • தலா ஐந்து வெவ்வேறு பிராந்தியங்களில் இருந்து ஒன்று: வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு. கூடுதலாக, பல்வேறு அரசு அமைச்சகங்களைச் சேர்ந்த பல இணைச் செயலாளர் மட்ட முன்னாள் அலுவலர்கள் சபையிலும், அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து நிபுணர் உறுப்பினர்களிலும் பணியாற்றுகின்றனர்.
நோக்கம்
 • திருநங்கைகளின் சமூகத்தின் கவலைகளை பிரதானமாகக் கொண்டு, வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதோடு, டிரான்ஸ் சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதனால் குடும்பங்களுக்குள்ளும் பெரிய சமூகத்திலும் டிரான்ஸ்பர்சன்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
 • திருநங்கைகளின் நல வாரியங்கள் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கும், திருநங்கைகளின் அத்தியாவசிய தேவைகளான வீட்டுவசதி, உணவு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவையும் பூர்த்தி செய்யப்படுகின்றன.
செயல்பாடுகள்
 • திருநங்கைகள் தொடர்பாக கொள்கைகள், திட்டங்கள், சட்டம் மற்றும் திட்டங்கள் வகுத்தல் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குதல்.
 • திருநங்கைகளின் சமத்துவம் மற்றும் முழு பங்களிப்பை அடைய வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தாக்கத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
 • அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும் மதிப்பாய்வு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
 • திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்தல்.
 • மையத்தால் பரிந்துரைக்கப்பட்ட பிற செயல்பாடுகளைச் செய்தல்.
கலவை
 • அதன் தலைவர் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சின் மத்திய அமைச்சராக இருப்பார்.
 • சுழற்சி அடிப்படையில் ஐந்து மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருந்து தலா ஒன்று).
 • திருநங்கை சமூகத்தின் ஐந்து உறுப்பினர்கள் (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருந்து தலா ஒருவர்).
 • சமூக உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
 • 10 மத்திய துறைகளின் பிரதிநிதிகள். இந்த சபையில் சுகாதாரம், உள்துறை, சிறுபான்மை விவகாரங்கள், கல்வி, ஊரக வளர்ச்சி, தொழிலாளர் மற்றும் சட்ட அமைச்சகங்களின் கூட்டுச் செயலாளர் நிலை உறுப்பினர்கள் இருப்பார்கள்.
 • கூடுதலாக, ஓய்வூதியத் துறை (பணியாளர்கள், பொது குறைகளை மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்), என்ஐடிஐ ஆயோக், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் ஆகியவற்றில் இருந்து ஒரு உறுப்பினர் இருப்பார்.
திருநங்கைகள் சட்டம், 2019
 • திருநங்கைகளுக்கான நேட்டோனல் கவுன்சில் நிறுவ முற்படுகிறது.
 • ஒரு திருநங்கை நபரின் வரையறை: ஒரு திருநங்கை ஒரு நபரை பாலினம் பிறப்பிலேயே ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் பொருந்தாத ஒருவராக வரையறுக்கிறது.
 • இதில் டிரான்ஸ்மென் மற்றும் டிரான்ஸ் பெண்கள், இன்டர்செக்ஸ் மாறுபாடுகள் உள்ளவர்கள், பாலின-வினோதகர்கள் மற்றும் கின்னார் மற்றும் ஹிஜ்ரா போன்ற சமூக-கலாச்சார அடையாளங்களைக் கொண்ட நபர்கள் உள்ளனர்.
 • அடையாளச் சான்றிதழ்: ஒரு திருநங்கைக்கு சுயமாக உணரப்பட்ட பாலின அடையாளத்திற்கான உரிமை இருக்கும் என்று சட்டம் கூறுகிறது.
 • அடையாள சான்றிதழை மாவட்ட நீதவான் அலுவலகத்தில் பெறலாம் மற்றும் பாலினம் மாற்றப்பட்டால் திருத்தப்பட்ட சான்றிதழ் பெறப்பட வேண்டும்.
 • இந்தச் சட்டம் திருநங்கைகளுக்கு பெற்றோர் மற்றும் உடனடி குடும்ப உறுப்பினர்களுடன் வசிக்கும் உரிமையை வழங்குகிறது.
 • பாகுபாடுகளுக்கு எதிரான தடை: கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் ஒரு திருநங்கைக்கு எதிரான பாகுபாட்டை இந்த சட்டம் தடை செய்கிறது.
 • தண்டனை: திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்கள் அபராதத்துடன் கூடுதலாக ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC 24th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக ரமணா பதவியேற்பு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

 • தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.ஏ,பாப்டே, மூத்த நீதிபதியாக இருந்த என்.வி.ரமணாவின் பெயரை தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்தார்.
 • அதற்கு கடந்த 6ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 48வது புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதிவியேற்று கொண்டார். இதற்கான நிகழ்ச்சி, ஜனாதிபதி மாளளிகையில் நடந்தது. இதில், ரமணாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
 • இவ்விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 • என்.வி.ரமணா கடந்த 1957ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி ஆந்திராவில் பிறந்தார். இவரது முழு பெயர் நூதலபதி வெங்கட ரமணா. ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், 1983ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். 
 • இவர், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 2000, ஜூனில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர். டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கடந்த 2014ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். ஆந்திராவை சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்று இருப்பது இதுவே முதல்முறை.

சொத்துக்களுக்கான மின்னணு அட்டைகள் விநியோகம் பிரதமர் மோடி  தொடங்கி வைத்தார்

 • தேசிய பஞ்சாயத்து தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது இதனையொட்டி நடந்த விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் எட்டு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றனர். 
 • மேலும் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகளும் விழாவில் இணைந்திருந்தனர். தொடர்ந்து சுவாமித்வா திட்டத்தின் கீழ் சொத்துக்களுக்கான மின்னணு அட்டைகளின் விநியோகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
 • மேலும் விழாவில் 4.09 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு அவர்களது சொத்துக்களுக்கான மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தேசிய பஞ்சாயத்து தினத்தையொட்டி தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2021ஐயும் பிரதமர் மோடி அறிவித்தார். 
 • இதனுடன் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பரிசு பணம் மானிய உதவியாக வழங்கப்படும். இந்த பரிசுத்தொகையானது பஞ்சாயத்துக்களின் வங்கி கணக்குகளுக்கு உடனடியாக நேரடியாக பரிவர்த்தனை செய்யப்படும்.
 • தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2021-ஐயும் பிரதமர் வழங்கவிருக்கிறார். பின்வரும் பிரிவுகளில் தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2021 வழங்கப்படவிருக்கின்றன:
 • தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத் சஷாக்திகரன் புரஸ்கார் (224 பஞ்சாயத்துகளுக்கு), நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ் கிராம் புரஸ்கார் (30 கிராம பஞ்சாயத்துகளுக்கு), கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்ட விருது (23 கிராம பஞ்சாயத்துகளுக்கு), குழந்தைகளுக்கு தோழமையான கிராம பஞ்சாயத்து விருது (30 கிராம பஞ்சாயத்துகளுக்கு) மற்றும் மின்னணு-பஞ்சாயத்து விருது (12 மாநிலங்களுக்கு).ரூபாய் 5 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான பரிசுப் பணத்தை (மானிய உதவியாக) பிரதமர் வழங்குவார்.
 • பஞ்சாயத்துக்களின் வங்கி கணக்குகளுக்கு பரிசுப் பணம் உடனடியாக நேரடியாக பரிவர்த்தனை செய்யப்படும். இவ்வாறு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
 • சுவாமித்வா திட்டம் குறித்து கிராமங்களின் ஆய்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு கிராமப்பகுதிகளை விவரணையாக்கம் எனும் சுவாமித்வா திட்டம், சமூக பொருளாதார அளவில் அதிகாரமளிக்கப்பட்ட, தற்சார்பு மிக்க கிராமப்புற இந்தியாவை ஊக்குவிப்பதற்காக 2020 ஏப்ரல் 24 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது.
 • விவரணையாக்கம் மற்றும் ஆய்வுக்காக நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி ஊரக இந்தியாவை மாற்றியமைக்கும் திறன் இந்த திட்டத்திற்கு உள்ளது. கடன்கள் மற்றும் இதர நிதி பலன்களை பெறுவதற்காக சொத்தை நிதி வளமாக கிராமத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு இது வழிவகுக்கிறது.
 • நாடு முழுவதிலும் உள்ள 6.62 லட்சம் கிராமங்களில் 2021 முதல் 2025 வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன் ஆரம்ப கட்டம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 2020-2021-ல் செயல்படுத்தப்பட்டது.

குஜராத்தில் நிமிஷத்துக்கு 280 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையைத் தொடக்கி வைத்தாா் அமித் ஷா

 • கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. பல மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 
 • அவா்களுக்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. தில்லி, பஞ்சாபில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பட்டால் கரோனா நோயாளிகள் உயிரிழந்தனா்.
 • ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்குமாறும் முழு கொள்ளளவுக்கு உற்பத்தி செய்யுமாறும் நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். 
 • இந்நிலையில், குஜராத் தலைநகா் காந்திநகரின் கொளவாடா பகுதியில் உள்ள ஆயுா்வேத மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அமைச்சரும் காந்திநகா் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான அமித் ஷா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கரோனா தடுப்பூசி, ஆக்சிஜனுக்கு சுங்க வரி விலக்கு

 • நாட்டில் ஆக்சிஜன் கையிருப்பை அதிகரிப்பது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 • அதிகரித்து வரும் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடா்பான உபகரணங்களுக்கு 3 மாத காலத்துக்கு அடிப்படை சுங்க வரி மற்றும் சுகாதார வரியிலிருந்து முழு விலக்கு அளிப்பது என பிரதமா் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 • அதுபோல, இறக்குமதி செய்யப்படும் கரோனா தடுப்பூசிக்கான சுங்க வரியையும் மூன்று மாத காலத்துக்கு ரத்து செய்வது என்று முடிவெடுக்கப்பட்டு, அந்த நடைமுறையும் உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
 • இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மீட்டருடன் கூடிய ஆக்சிஜன் செலுத்தும் கருவி, டியூப் மற்றும் இணைப்பு உபகரணங்கள், ஆக்சிஜன் குப்பி, வாயு நிரப்பும் உபகரணம், சேமிப்பு டேங்குகள், சிலிண்டா்கள், கிரையோஜெனிக் சிலிண்டா் மற்றும் டேங்குகள் உள்பட ஆக்சிஜன் தொடா்பான 16 உபகரணங்களுக்கு சுங்க வரி மற்றும் சுகாதார வரி விதிப்பிலிருந்து 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 • செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டா்) மற்றும் அதனுடன் தொடா்புடைய பிற உபகரணங்களுக்கு இறக்குமதி வரி மற்றும் சுகாதார வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 • வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் தடுப்பூசிகளுக்கு இப்போது 10 சதவீத சுங்க வரி அல்லது இறக்குமதி வரியை மத்திய அரசு விதித்து வருகிறது. 

இந்தியா ஸ்வீடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்தது அமெரிக்கா

 • சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் 'தொழில்துறை மாற்றத்துக்கான தலைமைத்துவ குழு' (லீட் இட்) என்ற திட்டத்தை இந்தியாவும் ஸ்வீடனும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.
 • அண்மையில் அமெரிக்கா சாா்பில் நடைபெற்ற பருவகால மாற்ற மாநாட்டில், லீட் இட் திட்டத்தில் இணைவதற்கு அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் விருப்பம் தெரிவித்திருந்தாா். இத்திட்டத்தின் வாயிலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அவா் தெரிவித்தாா்.
 • தொழிற்சாலைகளில் இருந்து கரியமில வாயு (காா்பன் டை ஆக்சைடு) வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 • இதன் வாயிலாக, வெளியேற்றப்படும் கரியமில வாயுவும் சுற்றுச்சூழலில் இருந்து நீக்கப்படும் கரியமில வாயுவும் நிகர அளவில் இருப்பது உறுதி செய்யப்படும். 
 • இத்திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்து செயல்படுவது, பருவநிலை மாற்றத்தைத் திறம்பட எதிா்கொள்வதற்கு உதவும். தொழில் வளா்ச்சியை ஏற்படுத்தும் அதே வேளையில், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Saturday, 24 April 2021

உலக கால்நடை மருத்துவத் தினம் / World Veterinary Day

TNPSCSHOUTERS
உலக கால்நடை தினத்தின் தீம் மற்றும் தேதி 2021
 • இந்த ஆண்டு (2021), உலக கால்நடை தினம் ஏப்ரல் 24 சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த ஆண்டின் தீம் கோவிட் -19 நெருக்கடிக்கு கால்நடை மருத்துவர் பதில். தொற்றுநோயைச் சமாளிக்கும்போது கால்நடை வல்லுநர்கள் உண்மையில் தீயில் வீசப்பட்டனர்.
 • நிச்சயமாக, பயமுறுத்தும் கொரோனா வைரஸ் அனுபவமுள்ள கால்நடை நிபுணர்களுக்கு ஒரு புதிய சொல் அல்ல, ஆனால் COVID-19 என்பது யாரும் எதிர்பார்க்காத ஒரு சூறாவளி. மனித செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பொதுமக்களின் மற்றும் தங்களின் மன மற்றும் உடல் நலனைக் கடைப்பிடிப்பது சாத்தியமற்ற சவாலை எதிர்கொண்டனர்.
 • நாங்கள் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம், அவர்களின் கடனில் என்றென்றும் இருக்கிறோம். கால்நடை உலகில் மீண்டும் டைவிங் செய்வதற்கு முன்பு நாங்கள் அவர்களுக்கு மிகவும் தகுதியான கூச்சலைக் குறிப்பிட வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம்.
 • கால்நடை மருத்துவர்களும் மிகவும் புதிய மற்றும் கோரக்கூடிய சவாலை எதிர்கொண்டனர் - பொது மக்கள் தங்கள் ஃபர் குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து பாதுகாப்பாக இருக்க முயற்சிக்கும்போது அவர்களுடன் பழகுவதற்கான சவால்.
உலக கால்நடை தின விருது
 • 2008 ஆம் ஆண்டில் உலக கால்நடை தின விருது உருவாக்கப்பட்டது, இது நடப்பு ஆண்டுகளின் கருப்பொருளுக்கு நட்சத்திர விழிப்புணர்வையும் பங்களிப்பையும் செய்த ஒரு சிறந்த அமைப்பை அங்கீகரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. 
 • WVA இன் எந்தவொரு உறுப்பினரும் நுழைந்து பங்கேற்கலாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் வென்றவர்கள், கருப்பொருள் மற்றும் விருதை அடைய அவர்கள் எடுத்த முயற்சிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
 • 2020: வெற்றியாளர்- இந்திய கால்நடை சங்கம்- கேரளா.
 • விலங்கு மற்றும் மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான தீம்-சுற்றுச்சூழல் பாதுகாப்பு.
 • தொற்றுநோயின் தொடக்கத்திற்கு இடையில், இந்திய கால்நடை மருத்துவ சங்கம் கால்நடை நிபுணர்களுடன் கூட்டு மற்றும் ஈடுபாட்டின் மூலம் மெய்நிகர் பாதுகாப்பான விழிப்புணர்வுக்கான தனது முயற்சிகளை மாற்றியது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆண்டுகளின் கருப்பொருளை ஆதரிப்பதற்கும் 75 WVD நடவடிக்கைகளை அவர்கள் ஏற்பாடு செய்தனர்.
 • 2019: வெற்றியாளர்- உகாண்டா கால்நடை சங்கம் (யு.வி.ஏ).
உலக கால்நடை தினத்தின் வரலாறு
 • இந்த கடந்த ஆண்டு ஒரு உலக தேசத்திற்கு என்ன நோய் செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு, ரைண்டர்பெஸ்ட் என்ற கொடிய வைரஸ் கால்நடைகளை தடுப்பூசி மூலம் 2011 இல் ஒழிப்பதாக அறிவிக்கப்படும் வரை தாக்கியது. இன்று இது ஒழிக்கப்பட்ட ஒரே விலங்கு நோய்.
 • ரைண்டர்பெஸ்ட் கால்நடைகளுக்கு இடையில் நீர்த்துளிகள் வழியாக பரவியது. இந்த துளிகளை மூச்சு, சுரப்பு அல்லது வெளியேற்றங்கள் மூலம் சுவாசிப்பதன் மூலம் கால்நடைகள் பாதிக்கப்படும். ரிண்டர்பெஸ்ட் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், அது பஞ்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை பாதித்தது, இது நிறைய மரணங்களை ஏற்படுத்தியது.
 • 1863 ஏப்ரலில் ஜெர்மனியின் ஹாம்பர்க்கில், ரிண்டர்பெஸ்ட் பற்றி விவாதிக்க மருத்துவர்கள் மத்தியில் ஒரு பொதுக் கூட்டம் நிகழ்ந்தது. 
 • பேராசிரியர் ஜான் காம்கி ஐரோப்பா முழுவதிலுமிருந்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவ பேராசிரியர்களுக்கு அழைப்பை வழங்கினார். 
 • இந்த சந்திப்பின் முக்கிய குறிக்கோள் எபிசூட்டிக் நோய்களைப் பற்றி விவாதிப்பதும், ஐரோப்பா முழுவதும் பின்பற்றக்கூடிய கால்நடை வர்த்தகத்திற்கான நிலையான விதிகளைக் கொண்டு வருவதும் ஆகும்.
 • இந்த சந்திப்பு முதல் சர்வதேச கால்நடை காங்கிரஸ் (WVC) ஆனது. ஸ்பெயினில் 1959 இல், 16 வது WVC இல், உலக கால்நடை சங்கம் நிறுவப்பட்டது. WVA இன் நோக்கம் "கால்நடைத் தொழிலுக்கு உலகளாவிய தலைமையை வழங்குவதும், வக்காலத்து, கல்வி மற்றும் கூட்டாண்மை மூலம் விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் நலன்புரி மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதும் ஆகும்."

TNPSC 23rd APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்

 • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து தயாரித்த ஃபால்கன்-9 ராக்கெட், புளோரிடாவின் கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
 • இந்த ராக்கெட்டில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், நாசா விஞ்ஞானிகள் இரண்டு பேர், ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர் என 4 விண்வெளி வீரர்கள் சென்றனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று இவர்கள், தங்களது பணியை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • விண்வெளிக்குச் சென்ற வீரர்கள் தங்களது ஆய்வை முடித்த பின்னர், அவர்கள் சென்ற அதே ராக்கெட்டில் உள்ள கேப்சூலில் பூமிக்கு திரும்பி வரவுள்ளனர்.  இது வெற்றிகரமாக அமைந்தால், விண்வெளிப்பயண வரலாற்றில் புதிய சாதனையாக இருக்கும் என கூறப்படுகிறது.

நாட்டில் உள்ள 80 கோடி ஏழைகளுக்கு மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசம்

 • கரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, நாட்டில் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கும் மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூ.26 ஆயிரம் கோடியில் இத்திட்டம் செயல்படுத்த பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
 • இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவல் தீவிரமடைந்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து பதிவாகி வருகிறது. 
 • வைரஸ் பரவலை தடுப்பதற்காக சில மாநிலங்களில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும், பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தீவிர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து பல்வேறு மாநிலங்கள் பரிசீலித்து வருகின்றன.

'இந்தியா ரேட்டிங்ஸ்' கணிப்பு வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும்

 • நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 10.1 சதவீதமாக இருக்கும் என, திருத்தி அறிவித்து உள்ளது, இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனம். இந்நிறுவனம், இதற்கு முன், வளர்ச்சி, 10.4 சதவீதமாக இருக்கும் என, கணித்திருந்தது.
 • அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் குறைந்த வேகத்தில் போடப்படும் தடுப்பூசி ஆகியவை வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 • நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள் ஒரே சமயத்தில் பெரும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது என்றும், இரண்டாவது அலை, மே மாதத்தின் நடுப்பகுதியில் குறைய துவங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
 • இந்த மாத துவக்கத்தில், ரிசர்வ் வங்கி, வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. ஆனாலும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், அதிகரித்து வரும் நோய் தொற்று, பொருளாதார மீட்சிக்கு தடையாக இருக்கக்கூடும்.
கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் 'விராஃபின்' மருந்தை பயன்படுத்த ஒப்புதல்
 • ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் 'விராஃபின்', பெகிலேட்டட் இன்டர்ஃபெரான் ஆல்பா -2 பி, மருந்துகளை மிதமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல் அளித்துள்ளது.
 • முன்னதாக, கொரொனா நோய் தொற்று தடுக்கும் வகையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 • இதில் கோவிஷீல்டை இங்கிலாந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் சீரம் நிறுவனம் அதன் விலையை அரசுக்கு 400 ரூபாயாகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாயாகவும் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 பதக்கங்கள் வென்று சாதனை
 • போலாந்து நாட்டின் கீல்ஸ் மாநகரில் நடப்பாண்டிற்கான AIBA யூத் மென் அண்டு விமென் வேர்ல்டு பாக்ஸிங் சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியினர் 5 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 • தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியில் ரஷ்யா, பிரான்ஸ் போன்ற அணிகளுடன் மோதிய இந்திய குத்துச்சண்டை பெண்கள் அணியினர் 7 தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தினர்.
 • அதில் கீதிகா (48 கிலோ), நோரம் பேபிரோஜிசனா சானு (51 கிலோ), பூனம் (57 கிலோ), விங்கா (60 கிலோ), அருந்ததி (69 கிலோ), சனமச்சா சானு (75 கிலோ), மற்றும் அல்ஃபியா பதன் (+81 கிலோ) உள்ளிட்ட வீராங்கனைகள் வெவ்வேறு எடை பிரிவின் கீழ் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளனர்.

Friday, 23 April 2021

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்த நாசா / NASA produces oxygen on Mars

TNPSCSHOUTERS

 • உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியா முழுவதும் தற்போது உச்சரிக்கப்படும் வார்த்தை ஆக்சிஜன். உயிர் காக்கும் ஆக்சிஜனுக்காக நாம் பூமியில் ஓடிக் கொண்டிருக்கையில் செவ்வாய்கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது நாசா.
 • செவ்வாய்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் கனவுத் திட்டம் எட்டி விடும் தூரத்தில் தான் இருக்கிறது என்பதற்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வு நடந்திருக்கிறது. 
 • செவ்வாய்கிரகத்தில் ஆக்சிஜன் இல்லை. 96 சதவிகிதம் கார்பன் டை ஆக்சைடுதான் இருக்கிறது. இந்த சூழலில் மனிதன் அங்கு சென்றால் ஆக்சிஜனை உருவாக்கி சுவாசிக்க வைக்க இயலுமா என்ற கேள்வி எழும்? இதற்கு ஆம் என பதில் அளித்திருக்கிறது நாசா.
 • மனிதர்களை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யமுடியுமா? என்ற கேள்விக்கு விடை காண நாசா அனுப்பிய Perseverance ரோவர் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாயில் தரையிறங்கியது.
 • அன்று முதல் தனது பணியை செவ்வனே செய்து வரும் இந்த 6 சக்கர ரோபோ, செவ்வாயின் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்து ஆக்சிஜனாக மாற்றி இருக்கிறது. இதற்காக MOXIE என பெயரிடப்பட்ட கருவியை ரோவருடன் இணைத்து அனுப்பியுள்ளனர். 
 • கார் பேட்டரி அளவுள்ள இந்த பெட்டி ரோவரின் முன்பகுதியில் அமைந்துள்ளது. இது கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகளை பிரித்து ஆக்சிஜனை உருவாக்கும் திறன் கொண்டது. முதல்கட்ட சோதனையில் 5 கிராம் ஆக்சிஜனை இது உற்பத்தி செய்துள்ளது. 
 • இதன் மூலம் ஒரு விண்வெளி வீரர் சுமார் 10 நிமிடங்களுக்கு சுவாசிக்க முடியும். ஒரு மணி நேரத்திற்கு 10 கிராம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில் MOXIE வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • இதில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை விண்வெளி வீரர்கள் பயன்படுத்த முடியும் என்பதோடு ரோவர் பூமிக்கு திரும்பும் போது உந்துசக்தியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் சத்தமில்லாமல் முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கிறது நாசா.

TNPSC 22nd APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

திருப்பத்தூர் அருகே பல்லவர் காலத்து நடுகற்கள் கண்டெடுப்பு

 • திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் சொல்லாட்சி கொண்ட சில நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கற்கள் அனைத்தும் கி.பி.7-ம் நூற்றாண்டு அதாவது 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் காலத்தைச் சேர்ந்த பழமை வாய்ந்த நடுகற் களாகும். 
 • ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புங்கம்பட்டு நாடு, சின்ன வட்டானூர் கிராமத்தில் வடகிழக்கு திசையில் 2 கி.மீ., தொலைவில் இலவமரத்து ஆற்று ஓடையின் மேல் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த 2 எழுத்துடைய நடுகற்கள் கண்டெடுத்தோம். 
 • அதன் அருகே, உடைந்த நிலையில் ஒரு கல்லும், மண்ணில் புதைந்த நிலையில் ஒரு கல் என மொத்தம் 4 வரலாற்று சிறப்புடைய கற்களை கண்டெடுத்துள்ளோம்.
 • முதல் நடுகல்லானது 137 செ.மீ.,நீளமும், 70 செ.மீ., அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் உள்ள உருவம் வாரிமுடிக்கப் பட்ட கொண்டையும், கழுத்தில் ஆபரணமும், காதுகளில் குண்ட லங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 • அதன் வலது கையில் குறுவாள் ஒன்றும், இடது கையில் வில் ஒன்றும் உள்ளது. இடைக்கச்சும், அதில் குறுவாள் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உருவத்தின் இடது கால் ஓரத்தில் 2 மாடுகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கல்லில் சில வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
 • இக்கல்லில் உள்ள எழுத்து வடிவம் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். பல்லவர் காலத்தில் ஜவ்வாதுமலை பகுதி பங்கள நாட்டில் அமைந்திருந்தது என்பதை இக்கல்வெட்டு சான்றுகளுடன் விளக்குகிறது.
 • அதேபோல, 2-வது நடுகல் 151 செ.மீ., நீளமும், 100 செ.மீ., அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் உள்ள வீரனின் இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளும் உள்ளன. வயிற்றுப்பகுதியில் அம்பு ஒன்று புதைந்தது போல் காணப்படுகிறது. இதை பார்க்கும்போது பகைவர்கள் விட்ட அம்பால் இந்த வீரன் உயிரிழந்த செய்தியை அறிய முடிகிறது.
 • இக்கல்லில் உள்ள எழுத்து களும் பல்லவர் காலத்தைச் சேர்ந்தவையாகும். பல்லவர் ஆண்ட பகுதி தொண்டை மண்டலம் என்பது பெரிய நிலப்பரப்பாகும். அதற்கு உட்பட்ட பகுதியே பங்கள நாடாகும். அந்த பங்களநாட்டில் தான் ஜவ்வாதுமலைப்பகுதியும் இருந்துள்ளது என்பதை இக்கல் மூலம் அறிய முடிகிறது.

பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

 • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் பருவநிலை குறித்த உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இன்று தொடங்கிய இந்த மாநாடு நாளையும் நடைபெறுகிறது.
 • 2030 ஆம் ஆண்டுக்கு நமது ஒட்டுமொத்த வேகம் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலக தலைவர்களின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
 • இந்த முன்முயற்சிக்காக அமெரிக்க அதிபர் பிடனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிராக மனிதகுலம் தற்போது போராடிக் கொண்டிருக்கிறது.
 • பருவநிலை மாற்றத்தின் பெரும் அச்சுறுத்தல் இன்னும் மறையவில்லை என்பதை சரியான நேரத்தில் நினைவூட்டும் விதத்தில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
 • உண்மையில், பருவநிலை மாற்றம் என்பது உலகில் உள்ள பல லட்சக்கணக்கானோர் எதிர்கொண்டு வரும் உண்மையாகும். அவர்களது வாழ்க்கையும், வாழ்வாதாரமும் எதிர்மறை விளைவுகளை ஏற்கனவே சந்தித்து வருகின்றன.
 • பருவநிலை மாற்றத்தை மனிதகுலம் எதிர்கொள்வதற்கு வலுவான நடவடிக்கை தேவைப்படுகிறது. மிகவும் வேகமாக, பெரிய மற்றும் சர்வதேச அளவில் அத்தகைய நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும். இந்தியாவில் இருக்கும் நாங்கள் எங்களது பங்களிப்பை செய்து வருகிறோம்.
 • 2030-க்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனும் எங்களது இலக்கு எங்களின் உறுதியை காட்டுகிறது. வளர்ச்சி சவால்களுக்கு இடையில், தூய்மை எரிசக்தி, எரிசக்தி சிக்கனம், காடு வளர்ப்பு மற்றும் பல்லுயிர்களின் பாதுகாப்புக்கு பல்வேறு வலுவான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். 
 • இவற்றின் காரணமாக தேசிய முடிவெடுக்கப்பட்ட பங்களிப்பு 2-டிகிரி-செல்சியசுக்கு இணக்கமாக உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
 • சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, லீட் ஐடி மற்றும் பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்பு ஆகிய சர்வதேச முன்முயற்சிகளுக்கும் நாங்கள் ஆதரவளித்துள்ளோம்.
 • பருவநிலையில் அக்கறையுள்ள வளரும் நாடான இந்தியா, எங்கள் நாட்டில் நீடித்த வளர்ச்சிக்கான மாதிரிகளை உருவாக்குவதற்காக பங்குதாரர்களை வரவேற்கிறது. பசுமை நிதி மற்றும் தூய்மை தொழில்நுட்பங்கள் குறைந்த விலையில் தேவைப்படும் இதர வளரும் நாடுகளுக்கும் இது உதவும்.
 • இதன் காரணமாகத் தான், 'இந்திய-அமெரிக்க பருவநிலை மற்றும் தூய்மை எரிசக்தி லட்சியம் 2030 கூட்டணி"-ஐ அதிபர் பிடனும் நானும் தொடங்குகிறோம். முதலீடுகளை ஈர்க்கவும், தூய்மை தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தவும், பசுமை கூட்டணிகளை உருவாக்கவும் நாங்கள் இணைந்து உதவுவோம்.
 • இன்றைக்கு, சர்வதேச பருவநிலை நடவடிக்கையை நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், உங்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள நான் விரும்புகிறேன். இந்தியாவில் தனி மனித கரியமில தடம் சர்வதேச சராசரியை விட 60 சதவீதம் குறைவாகும். நீடித்த பாரம்பரிய செயல்பாடுகளில் எங்களது வாழ்க்கைமுறையின் வேர்கள் இன்னும் உள்ளதால் இது சாத்தியமாகியுள்ளது.
 • எனவே, பருவநிலை மாற்ற நடவடிக்கையில் வாழ்க்கைமுறை மாற்றத்தின் முக்கியத்துவதை வலியுறுத்த இன்றைக்கு நான் விரும்புகிறேன். நீடித்த வாழ்க்கைமுறை மற்றும் 'மறுபடியும் அடிப்படைகளை நோக்கி' எனும் வழிகாட்டும் தத்துவம் கொவிட்டுக்கு பிந்தைய நமது பொருளாதார யுக்தியின் முக்கிய தூணாக இருத்தல் வேண்டும்.
 • மிகப்பெரிய இந்திய துறவியான சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை நான் நினைவுபடுத்துகிறேன். "எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்!" என்று பருவநிலை மாற்றத்திற்கு எதிராக அவர் நமக்கு அழைப்பு விடுத்தார்.

தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது பெற்ற நடிகர் தாமு

 • தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறியப்படும் தாமு மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் சினிமா கற்றவர். திரைப்படத் துறையைத் தாண்டி கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றிய சேவைகளுக்காக நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ( CEGR National Council) 'ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021' தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது. 

கங்கைகொண்ட சோழபுரத்தில் பானை ஓடுகள், ஆணிகள் மற்றும் செப்புக் காசுகள் கண்டெடுப்பு

 • தமிழகத்தில் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக, தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
 • அதன்படி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம், கடந்த ஜனவரி மாதம் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பொன்னேரி, கல்குளம், ஆயுதக்களம், மண்மலை, மாளிகைமேடு உள்ளிட்ட 6 இடங்களில் ஆய்வு செய்வதற்காக சுற்றியுள்ள 18 கிலோ மீட்டர் சுற்றளவில் சென்று தொழில்நுட்ப கருவிகள் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 • இதில், பத்துக்கு பத்து என்ற அளவில் குழிகள் தோண்டப்பட்டு, அந்த இடத்தில் பணி நடைபெறுகிறது. இப்பணியை மேலும் தீவிரப்படுத்தி அலுவலர்கள் செய்து வருகின்றனர். 
 • மேலும், அந்த இடத்தில் கிடைக்கப்பட்ட பானை ஓடு வில்லைகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள் மேலும் செப்புக்காசு போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இந்தியாவுக்கு பிரிட்டன் அழைப்பு
 • ஜி7 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு (G7 Foreign and Development Ministers' meeting), லண்டனில் வரும் மே மாதம் 03-ஆம் தேதி முதல் 05-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 • அமைச்சர்கள் நேரில் பங்கேற்கும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கும், ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகள்) அமைப்பின் பொதுச் செயலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா சொந்த விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்க திட்டம்
 • அமெரிக்கா, ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் கடந்த 1998-ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுகிறது.
 • இதுதொடர்பாக பிற நாடுகளுடன் ரஷ்யா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் ஆண்டுடன் காலாவதியாகிறது. அதற்குப் பிறகு அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல், தனி ஆய்வு நிலையம் அமைக்க ரஷ்யா 2024-ஆம் திட்டமிட்டு வருகிறது.

Thursday, 22 April 2021

தேசிய அறிவுசார் ஆணையம் / National Knowledge Commission

TNPSCSHOUTERS
 • இந்திய நாட்டை அறிவுசார்ந்த நாடாக மாற்றும் குறிக்கோளோடு பிரதமரின் உயர்மட்ட ஆலோசனைக் குழு தேசிய அறிவுசார் ஆணையத்தை (National Knowledge Commission) அமைத்தது.
 • இதில் ஐந்து முக்கியப் பகுதிகள் உள்ளன. கல்வி முதல் மின் நிர்வாகம் வரை அடங்கும்.
 • தேசிய அறிவு ஆணையம் என்பது ஒரு இந்திய சிந்தனைக் குழுவாகும், இது அறிவு-தீவிர சேவைத் துறைகளில் இந்தியாவின் ஒப்பீட்டு நன்மையை கூர்மைப்படுத்தக்கூடிய சாத்தியமான கொள்கைகளை கருத்தில் கொண்டது.
 • இது 13 ஜூன் 2005 அன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் அமைக்கப்பட்டது.
 • குறிப்பாக, அறிவு பொருளாதாரத்தில் இந்தியாவை போட்டித்தன்மையடையச் செய்ய தேவையான கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான கொள்கை குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு ஆணையம் அறிவுறுத்தியது.
 • கமிஷன் கல்வித் துறை, ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் அறிவுசார் சொத்துச் சட்டங்களை சீர்திருத்த பரிந்துரைத்தது;
 • அத்துடன், அதன் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படையானதாக மாற்றுவதற்கான சமீபத்திய நுட்பங்களைப் பயன்படுத்துவதை அரசாங்கத்தால் மேம்படுத்த முடியுமா என்பதைக் கவனியுங்கள்.
 • NKC வலைத்தளம் பிப்ரவரி 2006 இல் தொடங்கப்பட்டது.
 • ஜூலை, 2014 நிலவரப்படி, 2014 ஆம் ஆண்டு கோடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் உள்வரும் அரசாங்கம் அதை நிறுத்தியதால் தேசிய அறிவு ஆணையம் செயலிழந்துள்ளது.

TNPSC 21st APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

2020-21 நிதியாண்டில் புதிய பாலிசிகள் மூலம் எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.1.84 லட்சம் கோடி வருவாய்

 • எல்ஐசி நிறுவனம் 2020-21 நிதியாண்டில், முதல் ஆண்டு பிரீமியமாக, இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.56,406 கோடி ஈட்டியுள்ளது. இது 10.11 சதவீத வளர்ச்சியாகும். அத்துடன் 2.10 கோடி பாலிசிகளை பெற்றுள்ளது. இதில், 46.72 லட்சம் பாலிசிகள் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் பெறப்பட்டுள்ளன.
 • மேலும், ஓய்வூதியம் மற்றும் குழு காப்பீட்டுத் திட்ட பாலிசிகள் மூலமும் எல்ஐசி நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் ரூ.1 லட்சத்து 27,768 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
 • இதற்கு முந்தைய ஆண்டில் இது ரூ.1 லட்சத்து 26,749 கோடியாக இருந்தது. இதேபோல், எல்ஐசி அறிமுகப்படுத்திய எஸ்ஐஐபி மற்றும் நிவேஷ் பிளஸ் ஆகிய இரு யூலிப் திட்டங்களில், 90 ஆயிரம்பாலிசிகளை விற்பனை செய்து, ரூ.800 கோடி பிரீமியத் தொகையாக ஈட்டியுள்ளது.
 • கரோனா தொற்று பரவலுக்குமத்தியிலும், எல்ஐசி 2.19 கோடிமுதிர்வு அடைந்த பாலிசிகள், மணிபேக் உள்ளிட்ட பாலிசிகளுக்கு முதிர்வுத் தொகையாக ரூ.1.16 லட்சம் கோடியும் 9.59 லட்சம் இறந்த பாலிசிதாரர்களுக்கு இழப்பீடாக ரூ.18,137 கோடியும் வழங்கியுள்ளது.
 • மொத்தத்தில், எல்ஐசி நிறுவனம் ரூ.1.84 லட்சம் கோடி புதிய பிரீமியத் தொகை ஈட்டியுள்ளது. அதேபோல், இறந்தவர்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடி க்ளெய்ம் வழங்கி உள்ளது.

பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 55% குறைக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

 • வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் காற்றிலிருந்து அகற்றப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவுக்கும் காற்றில் கலக்கப்படும் அந்த வகை வாயுக்களின் அளவுக்கும் இடையே வேறுபாடில்லாமல் செய்வதற்கான எங்களது வாக்குறுதி, தற்போது சட்டப்பூா்வமாகியுள்ளது.
 • இந்த இலக்கை எட்டுவதற்கு ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளன.
 • வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் காற்றில் பசுமைக்குடில் வாயுக்களின் அளவை கடந்த 1990ஆம் ஆண்டில் இருந்ததைவிட 55 சதவீதம் குறைப்பதற்கும் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்றாா் அவா்.
 • பூமி கடும் குளிரில் உறைந்து போகாமல், அதில் பசுமைத் தாவரங்களும் பிற உயிரினங்களும் வாழ்வதற்கேற்ற வெப்பத்தை ஏற்படுத்தித் தரும் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் வாயு ஆகியவை பசுமைக்குடில் வாயுக்கள் என்றழைக்கப்படுகின்றன.
 • இந்த வாயுக்களின் விகிதம், தொழில்புரட்சி காரணமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புவியின் வெப்பம் அதிகரித்து, வளிமண்டலத்தின் சுழற்சிப் போக்கில் மாற்றம் ஏற்பட்டு வறட்சி, அனல் காற்று, காட்டுத் தீ, பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்தல், அதீத மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன.
 • 'பருவநிலை மாற்றம்' என்றழைக்கப்படும் இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்காக சா்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன. 
 • அதில், இந்தப் பிரச்னைக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உலக நாடுகள் ஒப்புக் கொண்டன.
ஐ.நா. சமூக, பொருளாதார அமைப்புகளில் உறுப்பினராக இந்தியா தேர்வு
 • ஆஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், பல்கேரியா, கனடா, பிரான்ஸ், கானா, லிபியா, பாகிஸ்தான், கத்தாா், தாய்லாந்து, டோகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளும் அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளன.
 • இரண்டாவதாக, ஐ.நா.வின் பாலின சமத்துவம் - பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடா்பான ஆணையத்தின் உறுப்பினராகவும் இந்தியா தோவாகியுள்ளது. 
 • ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், கேமரூன், கொலம்பியா, டோமினிக் குடியரசு, எகிப்து, காம்பியா, கயானா, கென்யா, மொனாக்கோ, போலந்து, தென்ஆப்பிரிக்கா, தாய்லாந்து, துா்க்மேனிஸ்தான், உக்ரைன் ஆகிய நாடுகளும் உறுப்பினராகத் தோந்தெடுக்கப்பட்டுள்ளன.
 • மூன்றாவதாக, ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட வாரியத்தின் உறுப்பினராகவும் இந்தியா தோந்தெடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், கானா, தென்கொரியா, ரஷியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளும் உறுப்பினராகத் தோந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த 3 அமைப்புகளிலும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி 3 ஆண்டுகளுக்கு உறுப்பினராக இந்தியா அங்கம் வகிக்கும்.
வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 16.88 சதவீதம் அதிகரிப்பு
 • கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் ரூ. 2.74 லட்சம் கோடி மதிப்பிலான வேளாண் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 
 • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 2.31 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதாவது, வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி 16.88 சதவீதம் அதிகரித்துள்ளது.
 • இதேபோன்று, அதே காலகட்டத்தில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் இறக்குமதி 3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.1,37,014 கோடி மதிப்பிலான வேளாண் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் ரூ.1,41,034 கோடியாக அதிகரித்துள்ளது.
 • கரோனா தொற்றுப் பரவலால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்ட போதிலும், வேளாண் துறை வா்த்தகம் ரூ.93,097.76 கோடியில் இருந்து ரூ.1,32,579.69 கோடியாக அதிகரித்துள்ளது.

Wednesday, 21 April 2021

இந்தியக் கடற்படை அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம் / Naval Science and Technological Laboratory

TNPSCSHOUTERS
 • இந்தியக் கடற்படை அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம் (Naval Science and Technological Laboratory)) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி. ஆர். டீ. ஓ) கீழ் செயல்படும் ஒரு ஆய்வகமாகும். 
 • இந்த ஆய்வகம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விசாகப் பட்டினத்தில் அமைந்துள்ளது. 
 • இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளைக் கணக்கில் கொண்டு இந்த ஆராய்ச்சி ஆய்வகம் இந்தியக் கப்பற்படையின் தேவைகளுக்கு ஏற்றவாறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, தண்ணீருக்கு அடியில் இருந்து செயல்படும் ஆயுதங்களையும் இது போன்ற இதர போர்க்கருவிகளையும் தயாரித்து, அதன் தரத்திற்கு உத்தரவாதமளிப்பதுடன், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற வாகனங்களுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி வருகிறது. 
 • இந்தியக் அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கீழ் அமைந்துள்ள கப்பற்படை ஆராய்ச்சி மேம்பாட்டு இயக்குநரகத்தின் கீழ் செயல்படுகிறது. தற்பொழுது இதன் இயக்குனராக டாக்டர் ஜே. புஜங்க ராவ் செயல்படுகிறார்.
வரலாறு
 • 1960 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 20 அன்று இந்தியக் கப்பற்படையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியக் இந்தியக் கடற்படை அறிவியல் தொழில்நுட்பவியல் ஆய்வகம் நிறுவப்பெற்றது. 
 • இந்த ஆய்வகம் இந்தியக் கடற்படைக்குத் தேவையான நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இயக்கும் கருவிகளையும் ஆயுதங்களையும் தயாரித்து வழங்கி வருகிறது. 
 • இது போன்ற தொழில் நுட்பங்களில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கு ஏதுவாக இந்த ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.
ஆராய்ச்சி
 • நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து இயக்கவல்ல ஆயுதங்களையும் கருவிகளையும் வடிவமைப்பது, அதை மேம்படுத்தி பரிசோதனைகள் செய்வது, அதன் செயல்பாட்டை மதிப்பிடுவது, பிறகு அது போன்ற கருவிகளை தயாரித்து வழங்குவது ஆகியவற்றை இந்த ஆய்வகம் மேற்கொண்டு வருகிறது. 
 • மேலும் இந்த ஆயுதங்களை செயல்படுத்துவதுடன் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கும் தேவையான தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதும் இதன் கடமையாகும்.
 • நீர்மூழ்கிக் குண்டுகள் (torpedoes), மிதிவெடிகள் (mines), தூண்டில் பொறிகள் (decoys), இலக்குகளைப் பாதுகாத்தல் (targets), போலி உருவாக்கிகள் (simulators), ஆகியவற்றுடன் தீயணைப்பு முறைமை (Fire Control Systems), ஏவுகணைகளை ஏவுதல் (weapon launchers) ஆகிய செயல்பாடுகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 • தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் நடைமேடைகளையும் (platforms), அவற்றின் மேற்பரப்பின் தரத்தையும் அடிக்கடி உறுதி செய்து கொள்ள வேண்டும். 
 • அவை பாழடைந்து இருந்தால், அவற்றை பழுது பார்த்து சரி செய்ய வேண்டும். புதிய பொருட்களை பயன்படுத்தும் பொழுது அதை வடிவமைப்பதும், அதன் தாங்கும் ஆற்றலை அடிக்கடி பரிசோதனை மூலம் உறுதி செய்வதும் அவர்களுடைய கடமையாகும். 
 • காலத்திர்கேற்ற புதிய போர் முறை யுக்திகள், புதிய வடிவமைப்புடன் கூடிய நிலைத்து நிற்க்கக் கூடிய நடைமேடை மற்றும் இதர பாகங்களை அறிமுகப் படுத்த வேண்டும். 
 • மறைவிடத்தில் இருந்து தாக்குதல், மறைமுகத் தாக்குதல் ஆகிய முறைகளுக்கு ஏற்றவாறு வடிவமைத்து அவற்றின் நம்பகத் தன்மையை அடிக்கடி பரிசோதனை செய்து உறுதிப் படுத்த வேண்டும். 
 • இதற்கு வழிவகுக்கும் புதிய முறைகள், பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தி திறமையாக ஏவுகணைகளை செலுத்துதல், குண்டுகளை எறிதல் ஆகியவற்றிற்கான எளிதான வழிமுறைகளை வகுத்து அதற்கான பயிர்ச்சிகளையும் வழங்க வேண்டும்.

TNPSC 20th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

வட மத்திய ஆப்பிரிக்க நாடான சாடின் அதிபா் இட்ரிஸ் டெபி பலி

 • வட மத்திய ஆப்பிரிக்க நாடான சாடின் அதிபா் இட்ரிஸ் டெபி இட்னோ (68), கிளா்ச்சியிளா்களுக்கு எதிரான போரில் உயிரிழந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.
 • அதிபரின இறப்பைத் தொடா்ந்து தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் இட்ரிஸ் டெபியின் 37 வயது மகன் மஹாமத் இட்ரிஸ் டெபி இன்ட்னோவின் தலைமையிலான ராணுவ கவுன்சில் இடைக்கால ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் தலைநகா் இன்ஜமீனாவிலிருந்து வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெட்ரோ ரயில் விரிவாக்கம்  மத்திய அரசு ஒப்புதல்

 • பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தில், ரயில்வே பணிகள், பல கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்டமாக, 2011ல் பணிகள் துவக்கப்பட்டன. தொடர்ந்து விரிவாக்கப்பணிகள் நடந்தன. இரண்டு கட்டங்களாக பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
 • இதில், 2ஏ மற்றும் 2பி கட்டங்களில், மைசூரு சாலை - கெங்கேரி வரை; பையப்பனஹள்ளி - ஒயிட்பீல்டு; நாகசந்தரா - மாதவரா வரை, மற்றும் ஆர்.வி. சாலை - பொம்மசந்தரா வரை.
 • காலேனா அக்ரஹாரா - நாகவரா; மத்திய சில்க் போர்டு - கே.ஆர்.புரம் வரை, கே.ஆர்.புரம் - கெம்பகவுடா விமான நிலையம் வரை, 124.57 கி.மீ., ரயில்வே பாதையும், 86 நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. 
 • இப்பணிகளில் தற்போது, 2ஏ கட்ட பிரிவில், சில்க் போர்டு - கே.ஆர்.,புரம் பகுதி வரை மற்றும் 2பி கட்ட பிரிவில், கே.ஆர்.புரம் - கெம்பகவுடா விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை துவக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
 • இந்த தகவலை, ரயில்வே அமைச்சர், பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும், இப்பணிகள், 58.19 கி.மீ.,க்கு, 14 ஆயிரத்து, 788 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக பத்திரிகை சுதந்திர குறியீடு 2021

 • 'எல்லைகளற்ற நிருபர்கள்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலக பத்திரிகை சுதந்திர குறியீடு அட்டவனையில், இந்தியா 142-வது இடத்தை இந்தாண்டும் தக்க வைத்து மோசமான நிலையில் தொடர்வதாக கூறியுள்ளது.
 • 180 நாடுகள் பட்டியல்பத்திரிகை சுதந்திரம் பற்றி வெளியிடப்பட்ட 180 நாடுகள் கொண்ட பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பின்லாந்து, டென்மார்க் ஆகியவை 2 மற்றும் 3-ம் இடங்கள் பிடித்துள்ளன. 
 • கிழக்கு ஆப்ரிக்க நாடான எரித்ரியா பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நமது அண்டை நாடுகளான சீனா 177-வது இடத்திலும், பாகிஸ்தான் 145, நேபாள் 106, இலங்கை 127, வங்கதேசம் 152-ம் இடமும் பெற்றுள்ளன.
 • இந்தியாவானது பத்திரிகை சுதந்திரத்தில் பிரேசில், மெக்சிகோ மற்றும் ரஷ்யாவுடன் மோசமான வகைப்பாட்டை பகிர்ந்து கொள்கிறது என அந்த அமைப்பின் அறிக்கையில் கூறியுள்ளனர்.

உலகின் 10-வது உயரமான மலையான அன்னபூர்ணாவில் ஏறிய முதல் இந்திய பெண்  பிரியங்கா மங்கேஷ்

 • மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா மங்கேஷ் மோஹிட் உலகின் 10வது உயரமான மலையான அன்னபூர்ணாவில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற சாதனைப்படைத்துள்ளார்.
 • பிரியங்கா மங்கேஷ் மோஹிட் சிறுவயதிலிருந்தே மலையேறுவதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி நேபாள நாட்டில் உள்ள 8,091 மீட்டர் உயரம் கொண்ட அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிய முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
 • பிரியங்கா தன்னுடைய 21வயதிலேயே இமயமலையில் ஏறிய சாதனைப் படைத்துள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் இமயமலை சிகரத்தில் ஏறிய 3வது நபர் என பாராட்டப் பெற்றவர்.

Tuesday, 20 April 2021

TNPSC 19th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டா்

 • கலிஃபோா்னியாவில் உள்ள நாசா மையத்திலிருந்து இச்செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி வரும் விஞ்ஞானிகள், பொசிவரன்ஸ் விண்கலத்தின் ஆய்வு வாகனம் மூலம் பெற்ற தரவுகளிலிருந்து ஹெலிகாப்டா் மெலெழும்பி சிறிது உயரத்தில் பறந்ததை உறுதிப்படுத்தினா்.
 • செவ்வாய் கிரகத்தில் உயிா்கள் வாழ்வதற்கான சாத்தியகூறு உள்ளதா, அங்கு ஏற்கெனவே உயிா்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காகவும், செவ்வாயிலிருந்து மண், கல் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்காகவும் பொசிவரன்ஸ் (விடாமுயற்சி) என்கிற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது. 
 • கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் ஆய்வு வாகனம் செவ்வாய் கிரகத்தில் ஜெசேரோ என்ற பள்ளப் பகுதியில் கடந்த பிப்ரவரியில் தரையிறங்கியது. இந்த ஆய்வு வாகனத்தின் வயிற்றுப் பகுதியில்தான் 'இன்ஜெனியூட்டி' எனப் பெயரிடப்பட்டுள்ள சிறிய ஹெலிகாப்டா் இணைக்கப்பட்டிருந்தது.
 • 1.6 உடி உயரமும், 1.8 கிலோ எடையும் கொண்ட அந்த ஹெலிகாப்டா் கடந்த ஏப். 3-ஆம் தேதி ஆய்வு வாகனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாயின் தரைப்பரப்பில் இறக்கப்பட்டது. 
 • ஆய்வு வாகனத்திலிருந்து 200 அடி தொலைவில் இருந்த அந்த ஹெலிகாப்டரை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக பறக்கச் செய்தனா்.  ஹெலிகாப்டா் தரைப்பரப்பிலிருந்து 10 அடி உயரத்துக்கு மெலெழும்பி 30 நொடிகள் நிலையாகப் பறந்தது. 
 • பின்னா், புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கியதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த முதல் பயணத்துக்காக ஹெலிகாப்டரின் சுழற்சி இறக்கைகள் நிமிடத்துக்கு 2,500 முறை சுழல வேண்டியிருந்தது. பூமியில் சாதாரணமாக ஒரு ஹெலிகாப்டரின் சுழற்சி இறக்கைகள் சுழலும் வேகத்தைவிட இது 5 மடங்கு அதிகமாகும்.
 • பொசிவரன்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டரை இதேபோல் 5 முறை பறக்கச் செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனா்.

தடுப்பூசி ரூ.4,500 கோடி கடனுதவி

 • மஹாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த, 'சீரம் இன்ஸ்டிடியூட்' நிறுவனம், 'கோவி ஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கிறது.இந்நிறுவனம், மாதம், 10 கோடி, 'டோஸ்' தடுப்பூசி மருந்து தயாரிக்கும் திறன் உடையது. 
 • இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு, 3,000 கோடி ரூபாய் மற்றும் 'கோவாக்சின்' என்ற கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும், 'பாரத் பயோடெக்' நிறுவனத்திற்கு, 1,500 கோடி ரூபாய் கடனுதவி வழங்க, மத்திய நிதிஅமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

 • இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 • இருப்பினும் இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக உள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. 
 • இந்த அபாயகரமான சூழலில் நமக்குள்ள ஒரே பாதுகாப்பு தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே என்பது சமானியர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 • இந்நிலையில், நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில், வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. 
 • சுகாதாரத்துறையினர், முன்கள பணியாளர்கள், 45 வயது மேற்பட்டோர் தொடர்ந்து, 3வது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆக்சிஜன் விநியோக முறை டிஆர்டிஓ சாதனை

 • மிகவும் உயரமான பனிப்பிரதேச இடங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்காக எஸ்பிஓ2 (ரத்த பிராணவாயு செறிவூட்டல்) வை சார்ந்து தானியங்கி துணை ஆக்சிஜன் விநியோக முறையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது.
 • பெங்களூருவில் அமைந்துள்ள டிஆர்டிஓ-வின் ராணுவ உயிரி பொறியியல் & மின் வேதியியல் மருத்துவ ஆய்வகம் உருவாக்கியுள்ள இந்த தானியங்கி ஆக்ஸிஜன் விநியோக அமைப்பு முறை, ரத்த பிராணவாயு செறிவூட்டல் அளவுகளின் அடிப்படையில் ஆக்சிஜனை வழங்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மனிதர்களை காக்கும்.
 • தற்போதைய கோவிட்-19 காலக்கட்டத்தில் இந்த தானியங்கி ஆக்ஸிஜன் விநியோக அமைப்புமுறை ஒரு வரப்பிரசாதமாக அமையும். கள சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயலாற்றும் வகையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த விநியோக அமைப்பு, செயல்திறன் மிக்கதாகவும் விலை குறைவானதாகவும் இருக்கும். 
 • இதன் மொத்த உற்பத்தி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதை யார் வேண்டுமானாலும் எளிதாக இயக்க முடியும் என்பதால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணிச்சுமை குறையும்.

நெகிழிப் பொருட்கள் கடலில் கலப்பதை தடுக்க ஒப்பந்தம் இந்தியா- ஜெர்மனி கையெழுத்து

 • இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் ஜெர்மனி நாட்டின் சுற்றுச்சூழல் இயற்கை மற்றும் அணுசக்தி பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து 'கடல்சார் சுற்றுச்சூழலில் நெகிழி பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நகரங்கள்' என்ற தலைப்பில் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றில் இன்று கையெழுத்திட்டன.
 • நிகழ்ச்சியில் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, '2021 ஆம் ஆண்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான ஆக்கபூர்வ வளர்ச்சி ஒத்துழைப்பின் 63-வது ஆண்டு நிறைவை குறிக்கிறது என்று கூறினார்.
 • நிலையான திடக்கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்தும் நகர்புற தூய்மை இந்தியா திட்டம் மற்றும் 2022-ஆம் ஆண்டுக்குள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழியின் உபயோகத்தை முற்றிலும் தடைசெய்யும் பிரதமரின் தொலைநோக்கு பார்வையையும் இந்தத் திட்டத்தின் பலன்கள், ஒத்து இருக்கிறது.
 • நெகிழிப் பொருட்கள் கடல்சார் சுற்றுச்சூழலில் கலப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் தேசிய அளவில், உத்தரப் பிரதேசம், கேரளா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், கான்பூர், கொச்சின், போர்ட் பிளேயர் ஆகிய நகரங்களிலும் மூன்றரை ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும்.
ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தங்கம் வென்றார் ஜில்லி தலாபெஹரா
 • உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜில்லி தலாபெஹரா தனது பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா்.
 • 45 கிலோ பிரிவில் பங்கேற்ற ஜில்லி தலாபெஹரா, ஸ்னாட்ச் பிரிவில் 69 கிலோ, கிளீன் அன்ட் ஜொக் பிரிவில் 88 கிலோ என மொத்தமாக 157 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா்.
 • இப்போட்டியில் கடந்த 2019-ஆம் ஆண்டில் பங்கேற்றபோது இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த ஜில்லி, தற்போது தங்கப் பதக்கத்துக்கு முன்னேறியுள்ளாா்.
 • அதேபோல், மகளிருக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெண்கலப் பதக்கம் வென்றாா். அவா் ஸ்னாட்ச் பிரிவில் 86 கிலோ, கிளீன் அன்ட் ஜொக் பிரிவில் 119 கிலோ என மொத்தமாக 205 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தாா். 
 • இந்த 205 கிலோ எடையானது புதிய தேசிய சாதனையாகும். அதேபோல் கிளீன் அன்ட் ஜொக் பிரிவில் அவா் தூக்கிய 119 கிலோ எடை புதிய உலக சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 • இவா்கள் தவிர மகளிருக்கான 55 கிலோ பிரிவில் 'குரூப் பி'-இல் பங்கேற்றிருந்த இந்திய வீராங்கனை ஸ்னேகா சோரன் 3-ஆம் இடம் பிடித்தாா். அவா் ஸ்னாட்ச் பிரிவில் 71 கிலோ, கிளீன் அன்ட் ஜொக் பிரிவில் 93 கிலோ என மொத்தமாக 164 கிலோ எடையைத் தூக்கியிருந்தாா். 

Monday, 19 April 2021

TNPSC 18th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

 

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பு அமெரிக்கா - சீனா ஒப்புதல்

 • அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் சா்வதேசத் தலைவா்களின் காணொலி மாநாடு தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாற்றத்துக்குக் காரணமாக கரியமில வாயுவை உலகிலேயே மிக அதிக அளவில் காற்றில் கலக்கும் இவ்விரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
 • கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சா்வதேச முயற்சியில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க அமெரிக்கா மற்றும் சீனா ஒப்புக்கொண்டுள்ளன.
 • சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் சிறப்புத் தூதா் ஜான் கெரியும் சீனாவின் சுற்றுச்சூழல் விவகாரத் தூதா் ஜீ ஷென்ஹுவாவும் ஷாங்காய் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு நாள் பேச்சுவாா்த்தையில் இதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டனா்.
 • பருநிலை மாற்றப் பிரச்னை மிகவும் அவசரமாகத் தீா்க்கப்பட வேண்டியது அவசியம்; அதன் முக்கியத்துவத்தை உணா்ந்து, இந்த விவகாரத்தில் ஒத்துழைப்புடன் செயல்பட இரு நாடுகளும் அந்த ஒப்பந்தத்தில் உறுதியளித்துள்ளன என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • புவி குளிரில் உறையாமல் பாதுகாத்து, அதனை அதனை வெப்பமாக வைத்திருக்கும் கரியமில வாயுவின் விகிதம், தொழில்புரட்சி காரணமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகிறது.
 • இதன் காரணமாக புவியின் வெப்பம் அதிகரித்து, பாலை நிலங்களில் பரப்பு அதிகரித்து வருகிறது. அனல் காற்று, காட்டுத் தீ சம்பவங்கள், பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்தல், வளிமண்டலப் போக்கு மாறுவதால் அதீத மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன.
 • 'பருவநிலை மாற்றம்' என்றழைக்கப்படும் இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்காக சா்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன. அதில், இந்தப் பிரச்னைக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உலக நாடுகள் ஒப்புக் கொண்டன.
 • இதுதொடா்பான தொடா் சா்வேதச முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் சுமாா் 40 நாடுகள் பங்கேற்கும் சா்வதேச பருவநிலை மாநாடு வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவிருக்கிறது.
 • அதற்கு முன்னதாக, வளிமண்டலத்தில் கலக்கப்படும் கரியமில வாயுவில் சுமாா் 50 சதவீதத்தை வெளியிடும் அமெரிக்காவும் சீனாவும், இந்த விவகாரத்தில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்ய மத்திய அரசு தடை

 • கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 12 மாநிலங்களின் பிரதிநிதிகளுடன், ஆக்சிஜன் விநியோகம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவசர ஆலோசனை நடத்தினார். 
 • இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 6177 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மாநில அரசுகளுக்கு விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, மகாராஷ்டிராவுக்கு 1500 மெட்ரிக் டன், டெல்லிக்கு 350, உத்தரப்பிரதேசத்துக்கு 800 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட உள்ளது.
 • கொரோனாவுக்கு முன் 1000 முதல் 2000 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் தேவை இருந்ததாக கூறியுள்ள பியூஷ் கோயல், கடந்த 15ம் தேதி நிலவரப்படி, ஆக்சிஜனுக்கான தேவை 4,795 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
 • இதையடுத்து, 9 வகை தொழிற்சாலைகளைத் தவிற மற்ற அனைத்து தொழிற்சாலை பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் விநியோகத்தை வரும் 22ம் தேதி முதல் மருத்துவமனைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
 • ஆக்சிஜன் விநியோகத்தை விரைவுபடுத்தும் வகையில், ரயில் பசுமை வழித்தடம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், ரயில்களில் டேங்கர் மூலம் ஆக்சிஜன் எடுத்துச் செல்ல உள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 
அதிக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-ஆம் இடம்
 • உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை "ஃபோர்ப்ஸ்" இதழ் (Forbes’ 35th Annual World’s Billionaires List) வெளியிட்டது. அதில் அமேஸான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெஸோஸ் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
 • ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனர் எலான் மஸ்க் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 151 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி, இந்தப் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 84.5 பில்லியன் டாலர். (1 பில்லியன் டாலர் = ரூ.7,456 கோடி)
 • அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் (The Countries With The Most Billionaires 2021) அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதில் சீனா இரண்டாவது இடத்தையும், இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவில் 140 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
2010களின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் கோலி
 • 2010-களின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய கேப்டன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளது விஸ்டன் இதழ். 
 • "கிரிக்கெட்டின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் வருடாந்திர இதழானது ஆண்டுதோறும் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய பதிப்பை வெளியிட்டு வருகிறது. 
 • இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 1971 முதல் 2021 வரையிலான காலங்களில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்களாக திகழ்ந்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 • 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, இதுவரை 254 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,169 ரன்கள் குவித்துள்ளார்.
 • உலகின் தற்போதைய முன்னணி கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் "பென் ஸ்டோக்ஸை" தேர்வு செய்துள்ளது விஸ்டன் இதழ். இவர் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த விருதைப் பெற்றுள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அறிக்கை / United Nations Population Fund Report

TNPSCSHOUTERS

 

 • ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம், தங்களின் கூட்டாளருடன் உடலுறவு வைத்துக் கொள்வதில் பெண்களுக்கு உள்ள உரிமைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 
 • வளர்ந்து வரும் 57 நாடுகளில் 55 சதவீத பெண்கள் தங்களது கணவருடன் உடலுறவு வைத்துக்கொள்வதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். 
 • மேலும் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தலாமா, எப்போது பாலியல் உறவில் ஈடுபடலாம், குழந்தை பெற்றுக் கொள்வது போன்ற சுகாதார பாதுகாப்பை தீர்மானிப்பதற்கான உரிமையை பெற்றுள்ளனர்.
 • மீதமுள்ள 45 சதவீத பெண்கள், தங்களது கணவரிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாமா? கருத்தடை சாதனங்களை பயன்படுத்தலாமா? என்பது பற்றி சொந்தமாக முடிவு எடுக்க முடியாது.
 • இது, அவர்களுக்கான அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். இது, ஏற்றத்தாழ்வுகளை வலுப்படுத்துகிறது. பாலின பாகுபாட்டில் இருந்து உருவாகும் இந்த முரண்பாடு, வன்முறைக்கு வழிவகுப்பதாக இருக்கிறது. 
 • 'எனது உடல் எனது சொந்தம்' என்ற பெண்களின் உரிமை, பிராந்தியத்துக்கு பிராந்தியம் வேறுபடுகிறது. கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் 76 சதவீத இளம்பெண்களும், பெண்களும் பாலியல் உறவு, கருத்தடை, சுகாதார பாதுகாப்பு குறித்த முடிவுகளை தாமாக எடுக்க முடியும்.
 • சஹாரன் ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தெற்கு ஆசிய பிராந்தியங்களில் இது போன்ற முடிவுகளை 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே எடுக்க முடியும். 
 • மாலியில் 77 சதவீத பெண்கள் தனியாகவோ, துணையுடன் இணைந்தோ, கருத்தடை சாதனம் அல்லது மருந்தை பயன்படுத்துவது குறித்து முடிவு எடுக்க முடியும். அதே நேரத்தில் சுகாதார பாதுகாப்பு என வரும் போது 22 சதவீத பெண்களால் மட்டுமே சொந்தமாக முடிவு எடுக்க முடியும். 
 • உலகம் முழுவதும் உள்ள 57 வளரும் நாடுகளில் வசிக்கும் 50 சதவீதத்துக்கும் குறைவான பெண்களுக்கு, தங்கள் துணையிடம் பாலியல் உறவு வேண்டாம் என தவிர்ப்பதற்கான உரிமை இல்லை என ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Sunday, 18 April 2021

புவியியல் தகவல் முறைமை / Geographical Information System (GIS)

TNPSCSHOUTERS
 • புவியியல் தகவல் முறைமை (GIS) என்பது, தகவல்களையும், இடஞ்சார் முறையில் புவியுடன் தொடர்பு குறிக்கத்தக்க வேறு தொடர்பான விடயங்களையும் பெறுதல், சேமித்தல், பகுத்தாய்தல், மேலாண்மை செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முறைமை ஆகும். 
 • உண்மையில், இது, புவியியல் ரீதியில் தொடர்பு குறிக்கத்தக்க தகவல்களை ஒருங்கிணைக்கவும், சேமிக்கவும், தொகுக்கவும், பகுத்தாயவும், பகிர்ந்து கொள்ளவும், காட்சிப்படுத்தவும் வல்லமை கொண்ட ஒரு கணினி முறைமை ஆகும். 
 • பொதுவான நோக்கில், புவியியல் தகவல் முறைமை என்பது, பயனர்கள், தாங்கள் உருவாக்கிய தேடல்கள் போன்றவை மூலம் கணினியுடன் ஊடுதொடர்பாடல்களைப் பேணவும், இடஞ்சார் தகவல்களைப் பகுப்பாய்வு செய்யவும், தரவுகளைத் தொகுக்கவும், இத்தகைய செயற்பாடுகளின் விளைவுகளைச் சமர்ப்பிக்கவும் இடந்தரக்கூடிய ஒரு சாதனமாகப் பயன்படக்கூடியது. 
 • இந்த முறைமைக்கு அடிப்படையாக உள்ளது, புவியியல்சார் தகவல் அறிவியல் (Geographic information science) என்னும் அறிவியல் துறையாகும். இது பல பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்புக்கான ஒரு துறையாக உள்ளது.
பயன்பாடுகள்
 • புவியியல்சார் தகவல் முறைமைத் தொழில்நுட்பத்தைப் பல்வேறு துறைகளிலே பயன்படுத்திக் கொள்ள முடியும். 
 • அறிவியல் ஆராய்ச்சி, வள மேலாண்மை, சொத்து மேலாண்மை, சூழல்சார் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment), நகர்ப்புறத் திட்டமிடல், நிலப்படவரைவியல், குற்றவியல், வரலாறு, விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் கண்ணிவெடி நடவடிக்கை போன்ற துறைகளில் இது பெரிதும் பயன்படக்கூடியது. 
 • எடுத்துக்காட்டாக, இயற்கை அழிவுகளின்போது, அவசரகால உதவிகள் அணுகுவதற்கான கால அவகாசங்களை இலகுவில் கணிப்பதற்கு, அவசரகாலத் திட்டமிடுபவர்களுக்கு இது உதவும். 
 • சூழல் மாசடைதல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான இடங்களைத் தெரிவு செய்வதிலும் புவியியல்சார் தகவல் முறைமைத் தொழில்நுட்பம் பங்காற்ற முடியும். 
 • புதிய வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு, அவற்றின்மூலம் ஏற்படும் சந்தை விரிவாக்கத்தினால் ஏற்படக்கூடிய விற்பனை வளர்ச்சிகளைக் கண்டறிவதற்கும் இம் முறைமையினை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

செய்மதி இடஞ்சுட்டல் / Satellite Navigation

TNPSCSHOUTERS
 • செய்மதி இடஞ்சுட்டல் (Satellite navigation) என்பது புவியத் துழாவுகையுடைய தானியக்க புவி-வெளி இடமாக்கலைத் தரும் செய்மதிகளின் ஓர் அமைப்பு ஆகும். இது சிறிய மின்னணு 
 • அலைவாங்கிகளினால் அதன் (நிலநிரைக்கோடு, நிலநேர்க்கோடு, மற்றும் நிலக்குற்றுக்கோடு) இருப்பிடத்தைத் தீர்மானித்து, செய்மதியிலிருந்து வானொலி அலைகள்மூலம் சில மீட்டர்களுக்கு நேரச் செய்கணங்களை (time signals) பயன்படுத்திப் பார்வைக்கோட்டினூடாக (line-of-sight) செலுத்துகிறது.
 • அலைவாங்கிகள், அறிவியல் சோதனைக்களுக்கு மேற்கோளிடப் பயன்பெறும் துல்லிய நேரத்தையும், இருப்பிடத்தையும் கணக்கிடுகிறது. புவியத் துழாவுகையுடைய செய்மதி நாவாயோட்டத்தைப் புவி இடஞ்சுட்டல் செய்மதிக் கட்டகம் அல்லது புஇசெக என தீர்மச்சொல்லாக்கப்பட்டுள்ளது.