Type Here to Get Search Results !

TNPSC 18th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பு அமெரிக்கா - சீனா ஒப்புதல்

  • அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் சா்வதேசத் தலைவா்களின் காணொலி மாநாடு தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாற்றத்துக்குக் காரணமாக கரியமில வாயுவை உலகிலேயே மிக அதிக அளவில் காற்றில் கலக்கும் இவ்விரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
  • கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சா்வதேச முயற்சியில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிக்க அமெரிக்கா மற்றும் சீனா ஒப்புக்கொண்டுள்ளன.
  • சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் சிறப்புத் தூதா் ஜான் கெரியும் சீனாவின் சுற்றுச்சூழல் விவகாரத் தூதா் ஜீ ஷென்ஹுவாவும் ஷாங்காய் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு நாள் பேச்சுவாா்த்தையில் இதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டனா்.
  • பருநிலை மாற்றப் பிரச்னை மிகவும் அவசரமாகத் தீா்க்கப்பட வேண்டியது அவசியம்; அதன் முக்கியத்துவத்தை உணா்ந்து, இந்த விவகாரத்தில் ஒத்துழைப்புடன் செயல்பட இரு நாடுகளும் அந்த ஒப்பந்தத்தில் உறுதியளித்துள்ளன என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • புவி குளிரில் உறையாமல் பாதுகாத்து, அதனை அதனை வெப்பமாக வைத்திருக்கும் கரியமில வாயுவின் விகிதம், தொழில்புரட்சி காரணமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகிறது.
  • இதன் காரணமாக புவியின் வெப்பம் அதிகரித்து, பாலை நிலங்களில் பரப்பு அதிகரித்து வருகிறது. அனல் காற்று, காட்டுத் தீ சம்பவங்கள், பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்தல், வளிமண்டலப் போக்கு மாறுவதால் அதீத மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன.
  • 'பருவநிலை மாற்றம்' என்றழைக்கப்படும் இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்காக சா்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன. அதில், இந்தப் பிரச்னைக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உலக நாடுகள் ஒப்புக் கொண்டன.
  • இதுதொடா்பான தொடா் சா்வேதச முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் சுமாா் 40 நாடுகள் பங்கேற்கும் சா்வதேச பருவநிலை மாநாடு வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவிருக்கிறது.
  • அதற்கு முன்னதாக, வளிமண்டலத்தில் கலக்கப்படும் கரியமில வாயுவில் சுமாா் 50 சதவீதத்தை வெளியிடும் அமெரிக்காவும் சீனாவும், இந்த விவகாரத்தில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்ய மத்திய அரசு தடை

  • கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 12 மாநிலங்களின் பிரதிநிதிகளுடன், ஆக்சிஜன் விநியோகம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவசர ஆலோசனை நடத்தினார். 
  • இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 6177 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மாநில அரசுகளுக்கு விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, மகாராஷ்டிராவுக்கு 1500 மெட்ரிக் டன், டெல்லிக்கு 350, உத்தரப்பிரதேசத்துக்கு 800 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட உள்ளது.
  • கொரோனாவுக்கு முன் 1000 முதல் 2000 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் தேவை இருந்ததாக கூறியுள்ள பியூஷ் கோயல், கடந்த 15ம் தேதி நிலவரப்படி, ஆக்சிஜனுக்கான தேவை 4,795 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
  • இதையடுத்து, 9 வகை தொழிற்சாலைகளைத் தவிற மற்ற அனைத்து தொழிற்சாலை பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் விநியோகத்தை வரும் 22ம் தேதி முதல் மருத்துவமனைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
  • ஆக்சிஜன் விநியோகத்தை விரைவுபடுத்தும் வகையில், ரயில் பசுமை வழித்தடம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், ரயில்களில் டேங்கர் மூலம் ஆக்சிஜன் எடுத்துச் செல்ல உள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 
அதிக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-ஆம் இடம்
  • உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை "ஃபோர்ப்ஸ்" இதழ் (Forbes’ 35th Annual World’s Billionaires List) வெளியிட்டது. அதில் அமேஸான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெஸோஸ் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
  • ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனர் எலான் மஸ்க் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 151 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி, இந்தப் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 84.5 பில்லியன் டாலர். (1 பில்லியன் டாலர் = ரூ.7,456 கோடி)
  • அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் (The Countries With The Most Billionaires 2021) அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதில் சீனா இரண்டாவது இடத்தையும், இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவில் 140 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
2010களின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் கோலி
  • 2010-களின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய கேப்டன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளது விஸ்டன் இதழ். 
  • "கிரிக்கெட்டின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் வருடாந்திர இதழானது ஆண்டுதோறும் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய பதிப்பை வெளியிட்டு வருகிறது. 
  • இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 1971 முதல் 2021 வரையிலான காலங்களில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்களாக திகழ்ந்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
  • 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, இதுவரை 254 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,169 ரன்கள் குவித்துள்ளார்.
  • உலகின் தற்போதைய முன்னணி கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் "பென் ஸ்டோக்ஸை" தேர்வு செய்துள்ளது விஸ்டன் இதழ். இவர் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த விருதைப் பெற்றுள்ளார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel