வட மத்திய ஆப்பிரிக்க நாடான சாடின் அதிபா் இட்ரிஸ் டெபி பலி
- வட மத்திய ஆப்பிரிக்க நாடான சாடின் அதிபா் இட்ரிஸ் டெபி இட்னோ (68), கிளா்ச்சியிளா்களுக்கு எதிரான போரில் உயிரிழந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.
- அதிபரின இறப்பைத் தொடா்ந்து தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் இட்ரிஸ் டெபியின் 37 வயது மகன் மஹாமத் இட்ரிஸ் டெபி இன்ட்னோவின் தலைமையிலான ராணுவ கவுன்சில் இடைக்கால ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் தலைநகா் இன்ஜமீனாவிலிருந்து வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெட்ரோ ரயில் விரிவாக்கம் மத்திய அரசு ஒப்புதல்
- பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தில், ரயில்வே பணிகள், பல கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்டமாக, 2011ல் பணிகள் துவக்கப்பட்டன. தொடர்ந்து விரிவாக்கப்பணிகள் நடந்தன. இரண்டு கட்டங்களாக பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
- இதில், 2ஏ மற்றும் 2பி கட்டங்களில், மைசூரு சாலை - கெங்கேரி வரை; பையப்பனஹள்ளி - ஒயிட்பீல்டு; நாகசந்தரா - மாதவரா வரை, மற்றும் ஆர்.வி. சாலை - பொம்மசந்தரா வரை.
- காலேனா அக்ரஹாரா - நாகவரா; மத்திய சில்க் போர்டு - கே.ஆர்.புரம் வரை, கே.ஆர்.புரம் - கெம்பகவுடா விமான நிலையம் வரை, 124.57 கி.மீ., ரயில்வே பாதையும், 86 நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.
- இப்பணிகளில் தற்போது, 2ஏ கட்ட பிரிவில், சில்க் போர்டு - கே.ஆர்.,புரம் பகுதி வரை மற்றும் 2பி கட்ட பிரிவில், கே.ஆர்.புரம் - கெம்பகவுடா விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை துவக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- இந்த தகவலை, ரயில்வே அமைச்சர், பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும், இப்பணிகள், 58.19 கி.மீ.,க்கு, 14 ஆயிரத்து, 788 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக பத்திரிகை சுதந்திர குறியீடு 2021
- 'எல்லைகளற்ற நிருபர்கள்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலக பத்திரிகை சுதந்திர குறியீடு அட்டவனையில், இந்தியா 142-வது இடத்தை இந்தாண்டும் தக்க வைத்து மோசமான நிலையில் தொடர்வதாக கூறியுள்ளது.
- 180 நாடுகள் பட்டியல்பத்திரிகை சுதந்திரம் பற்றி வெளியிடப்பட்ட 180 நாடுகள் கொண்ட பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பின்லாந்து, டென்மார்க் ஆகியவை 2 மற்றும் 3-ம் இடங்கள் பிடித்துள்ளன.
- கிழக்கு ஆப்ரிக்க நாடான எரித்ரியா பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நமது அண்டை நாடுகளான சீனா 177-வது இடத்திலும், பாகிஸ்தான் 145, நேபாள் 106, இலங்கை 127, வங்கதேசம் 152-ம் இடமும் பெற்றுள்ளன.
- இந்தியாவானது பத்திரிகை சுதந்திரத்தில் பிரேசில், மெக்சிகோ மற்றும் ரஷ்யாவுடன் மோசமான வகைப்பாட்டை பகிர்ந்து கொள்கிறது என அந்த அமைப்பின் அறிக்கையில் கூறியுள்ளனர்.
உலகின் 10-வது உயரமான மலையான அன்னபூர்ணாவில் ஏறிய முதல் இந்திய பெண் பிரியங்கா மங்கேஷ்
- மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா மங்கேஷ் மோஹிட் உலகின் 10வது உயரமான மலையான அன்னபூர்ணாவில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற சாதனைப்படைத்துள்ளார்.
- பிரியங்கா மங்கேஷ் மோஹிட் சிறுவயதிலிருந்தே மலையேறுவதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி நேபாள நாட்டில் உள்ள 8,091 மீட்டர் உயரம் கொண்ட அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிய முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
- பிரியங்கா தன்னுடைய 21வயதிலேயே இமயமலையில் ஏறிய சாதனைப் படைத்துள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் இமயமலை சிகரத்தில் ஏறிய 3வது நபர் என பாராட்டப் பெற்றவர்.