Type Here to Get Search Results !

TNPSC 29th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய தொழில்நுட்பத்துடன் கனெக்டிவிட்டி மீட்டர்

  • கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், (IGCAR), ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தில் 'பல்சேட்டிங் உணர்திறன் சாதனம் அடிப்படையிலான மின் கடத்துத்திறன் மீட்டர்' எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இதன் பயன்பாடு பகுப்பாய்வு மற்றும் தர கட்டுப்பாட்டுக்கான வேதியியல் ஆய்வகங்களில் மட்டுமின்றி, நீர்நிலை கரைசலின் மின் கடத்துத்திறனின் நிகழ்நேர கண்காணிப்புக்கு தொழில்துறை மற்றும் கள பயன்பாடுகளில் பொருத்தமானது. 
  • இதை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் நேற்று பெங்களூருவில் உள்ள சர்வ் எக்ஸ்எல் என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு பகிர்ந்தது.

சொந்த விண்வெளி நிலையத்துகான கலத்தை வெற்றிகரமாக ஏவியது சீனா

  • சீனாவின் விண்வெளி நிலையத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த நிலையத்தின் முக்கிய பகுதியாக அமையவிருக்கும் கலத்தை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.
  • 'தியான்ஹே' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளி ஆய்வுக் கலம், சீனாவின் 'லாங் மாா்ச்-5பி ஒய்2' ரக ராக்கெட் மூலம் ஹைனான் மாகாணத்திலுள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
  • ஏற்கெனவே, சிறிய அளவிலான, குறைந்த நேரமே செயல்படும் இரு விண்வெளி நிலையக் கலங்களை சீனா சோதனை முறையில் விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த நிலையில், முதல் முறையாக மிகப் பெரிய அளவிலான ஆய்வு நிலையக் கலத்தை சீனா முதல் முறையாக விண்ணில் செலுத்தியுள்து.
  • இந்த விண்வெளி நிலையக் கலம், 16.6 மீட்டா் நீளமும் 4.2 மீட்டா் அகலமும் கொண்டது. விண்வெளி நிலையத்துக்கு வரும் வீரா்கள் தங்கியிருப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இதில் உள்ளது.
  • இந்தக் கலத்தைப் போலவே, 'தியான்காங்' என்று பெயரிடப்பட்டுள்ள தனது எதிா்கால விண்வெளி நிலையத்துக்கான மேலும் 10 தொகுதிகளை விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது. அவற்றைக் கொண்டு உருவாக்கப்டும் சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் 10 ஆண்டுகளுக்குச் செயல்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா இந்தியாவுக்கு ரூ.740 கோடிநிவாரணப் பொருள்களை அனுப்பியது அமெரிக்கா

  • கலிஃபோா்னியா மாகாணத்தில் இருந்து இந்தியாவுக்கு 400 ஆக்சிஜன் சிலிண்டா்கள், 9.60 லட்சம் விரைவு பரிசோதனை உபகரணங்கள், ஒரு லட்சம் என்-95 ரக முகக் கவசங்கள் முதல் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
  • ஆக்சிஜன் செறிவூட்டல் இயந்திரங்கள், ஆக்சிஜன் தயாரிப்பு அலகுகள், தனிநபா் பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  • இவற்றை அமெரிக்க மாகாண அரசுகள், தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வ அமைப்புகள் ஆகியவை நாடு முழுவதும் திரட்டி அனுப்பி வைக்கின்றன.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரலாறு படைத்த கமலா ஹாரிஸ், நான்சி பெலோசி

  • அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற முதல் கூட்டுக் கூட்டத்தின் அவைத் தலைவா்கள் இருக்கைகளில் அமா்ந்து, துணை அதிபரும் நாடாளுமன்ற மேலவையான செனட் சபைத் தலைவருமான கமலா ஹாரிஸ் மற்றும் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி சாதனை படைத்தனா்.
  • அந்த நாட்டு வரலாற்றில், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதிபா் உரையின்போது அவருக்குப் பின் உள்ள இருக்கைகள் இரண்டிலும் பெண்கள் அமா்ந்தது இதுவே முதல்முறையாகும்.

பசுமை தீர்ப்பாயத்திற்கு சத்யகோபால் நியமனம்

  • சென்னையில் உள்ள, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், தென் மண்டல அமர்வின் தொழில்நுட்ப நிபுணராக, சத்யகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு, தமிழகத்தை சேர்ந்த கிரிஜா வைத்தியநாதன், சத்யகோபால், சத்திய நாராயணன் ஆகிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
  • இதில், கிரிஜா வைத்தியநாதன், சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வுக்கு மாற்றப்பட்டார்.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால், சத்யகோபால், தற்காலிகமாக சென்னைக்கு மாற்றப்பட்டார்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் அரண்மனை சுவர்கள் கண்டுபிடிப்பு

  • அரியலுார் மாவட்டத்தில் உள்ள இந்த ஊரில், தமிழக தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வு நடந்தது. அதில், சோழர் மாளிகையின் அடித்தளப் பகுதிகள் கண்டறியப்பட்டன. 
  • இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி முதல், மீண்டும் தமிழக தொல்லியல் துறை சார்பில், அப்பகுதியில் அகழாய்வு துவங்கப்பட்டது. இதுவரை, மூன்று அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. அதில், மூன்றரை அடி ஆழத்தில், செங்கல் சுவர் வெளிப்பட்டது.
  • இந்த சுவர், 10 மீட்டர் வரை நீளமாகச் செல்கிறது. இதே குழிகளில், மேற்கூரையின் ஓடுகள், உடைந்த செங்கற்கள், வட்ட வடிவமான செம்பு நாணயம், இரும்பு ஆணிகள், சீன மண்பாண்டங்கள் உள்ளிட்ட தொல்பொருட்களும் கிடைத்துள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel