- லண்டனை தலைமையிடமாகக் கொண்ட 'பிராண்டு ஃபைனான்ஸ்' என்கிற கன்சல்டன்சி நிறுவனம், 2021-ம் ஆண்டுக்கான உலகின் மதிப்புமிக்க டாப் 100 இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
- இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எல்.ஐ.சி நிறுவனம் 8,655 மில்லியன் டாலர் மதிப்புடன் 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
- அதே போல ஜெர்மனி நாட்டிலிருந்து ஒரு நிறுவனமும், பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு நிறுவனமும் இடம்பிடித்திருக்கிறது. சீனாவைச் சேர்ந்த 5 இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.
- சீனாவைச் சேர்ந்த `Ping An' என்கிற இன்ஷூரன்ஸ் நிறுவனம் 44,789 மில்லியன் டாலர் மதிப்புடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
- இதன் மதிப்பு 26% சரிந்திருக்கிறது. சீனாவின் `சீனா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் 22,578 மில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் மதிப்பு 4.3% சரிந்திருக்கிறது.
- மூன்றாவது இடத்தில் 20,204 மில்லியன் டாலர் மதிப்புடன் ஜெர்மனியைச் சேர்ந்த அலையன்ஸ் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இருக்கிறது. 4-வது மற்றும் 5-வது இடங்களில் முறையே ஏ.எக்ஸ்.ஏ (பிரான்ஸ்) மற்றும் சீனா பசுஃபிக் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இடம்பிடித்திருக்கின்றன. இவற்றின் மதிப்பு முறையே 17,377 மில்லியன் டாலர் மற்றும் 15,385 மில்லியன் டாலர் ஆகும்.
- இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து சீனாவின் ஏ.ஐ.ஏ, அமெரிக்காவின் ஜி.இ.ஐ.சி, அமெரிக்காவின் புராக்ரசிவ் கார்ப்பரேஷன், சீனாவின் பீப்பிள்ஸ் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஆஃப் சீனா ஆகிய நிறுவனங்கள் 6, 7, 8 மற்றும் 9-வது இடத்தைப் பிடித்திருக்கின்றன. இதன் மதிப்புகள் முறையே 14,130 மில்லியன் டாலர், 11,118 மில்லியன் டாலர், 8,966 மில்லியன் டாலர், 8,803 மில்லியன் டாலர் ஆகும்.