Type Here to Get Search Results !

TNPSC 30th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

டொரண்டோவில் தமிழ் இருக்கை கனடா நாட்டின் பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

  • எண்ணிலடங்கா சிறப்புகளைக் கொண்ட தமிழ் மொழியின் ஈர்ப்பும் இலக்கிய வளமும் உலக அரங்குக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்; 
  • அதற்கு உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழிக்கு இருக்கை அமைக்கப்பட வேண்டும் என்கிற உரிய நோக்கத்துடன், அமெரிக்காவில் தொடங்கப்பட்டது தமிழ் இருக்கை அமைப்பு (TamilChair Inc). 
  • அதில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைப்பதை முதல் இலக்காகக் கைகொண்டது. அதற்கு 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.40 கோடி) ஆதார நிதியாக பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த வேண்டியது அவசியம்.
  • தமிழ் இருக்கை அமைப்பின் முதன்மை இயக்குநர்களான மருத்துவர்கள் விஜய் ஜானகிராமன், சுந்தரேசன் சம்பந்தம் ஆகியோர் தலா அரை மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கி ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
  • ஹார்வர்டு தமிழ் இருக்கை அமையத் தேவையான எஞ்சிய ஆதார நிதியை, உலகம் முழுவதும் வாழும் தமிழ் ஆர்வலர்கள் வாரி வழங்கியதுடன் தமிழக அரசு ரூ.10 கோடியும், திமுக ரூ.1 கோடியும் அளித்து இலக்கை எட்டிட கரம் கொடுத்தன. தற்போது வெற்றிகரமாக ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமையப்பெற்றுள்ளது.
  • இதன் தொடர்ச்சியாக, 5 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் கனடா நாட்டின் புகழ்பெற்ற டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணி, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புதொடங்கப்பட்டது. அதற்கு தேவையான 3 மில்லியன் டாலர்கள் (ரூ.17.1 கோடி) நிதியை திரட்டி தற்போது தன்னுடைய இரண்டாம் இலக்கிலும் வெற்றியடைந்து விட்டது கனடிய தமிழ்ச் சமூகம்.

'104‌GoTN ' புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கிய தமிழக அரசு!

  • தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25% பேர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் சூழலிலும், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
  • இதனால் மூன்றடுக்கு படுக்கைக்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூடுதலாக 2000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டன.
  • இருப்பினும், கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கிடைக்காமல் திண்டாடும் உறவினர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தின் மூலமாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். ஏரளாமான மக்கள் இது போன்ற பதிவை வெளியிடுகின்றனர்.
  • இதற்கு தீர்வு காணும் விதமாக தமிழக அரசு 104‌GoTN ‌‌‌‌என்ற புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்யும் சிறப்பு மையமாக இது செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel