Type Here to Get Search Results !

TNPSC 21st APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

2020-21 நிதியாண்டில் புதிய பாலிசிகள் மூலம் எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.1.84 லட்சம் கோடி வருவாய்

  • எல்ஐசி நிறுவனம் 2020-21 நிதியாண்டில், முதல் ஆண்டு பிரீமியமாக, இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.56,406 கோடி ஈட்டியுள்ளது. இது 10.11 சதவீத வளர்ச்சியாகும். அத்துடன் 2.10 கோடி பாலிசிகளை பெற்றுள்ளது. இதில், 46.72 லட்சம் பாலிசிகள் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் பெறப்பட்டுள்ளன.
  • மேலும், ஓய்வூதியம் மற்றும் குழு காப்பீட்டுத் திட்ட பாலிசிகள் மூலமும் எல்ஐசி நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் ரூ.1 லட்சத்து 27,768 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
  • இதற்கு முந்தைய ஆண்டில் இது ரூ.1 லட்சத்து 26,749 கோடியாக இருந்தது. இதேபோல், எல்ஐசி அறிமுகப்படுத்திய எஸ்ஐஐபி மற்றும் நிவேஷ் பிளஸ் ஆகிய இரு யூலிப் திட்டங்களில், 90 ஆயிரம்பாலிசிகளை விற்பனை செய்து, ரூ.800 கோடி பிரீமியத் தொகையாக ஈட்டியுள்ளது.
  • கரோனா தொற்று பரவலுக்குமத்தியிலும், எல்ஐசி 2.19 கோடிமுதிர்வு அடைந்த பாலிசிகள், மணிபேக் உள்ளிட்ட பாலிசிகளுக்கு முதிர்வுத் தொகையாக ரூ.1.16 லட்சம் கோடியும் 9.59 லட்சம் இறந்த பாலிசிதாரர்களுக்கு இழப்பீடாக ரூ.18,137 கோடியும் வழங்கியுள்ளது.
  • மொத்தத்தில், எல்ஐசி நிறுவனம் ரூ.1.84 லட்சம் கோடி புதிய பிரீமியத் தொகை ஈட்டியுள்ளது. அதேபோல், இறந்தவர்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடி க்ளெய்ம் வழங்கி உள்ளது.

பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 55% குறைக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

  • வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் காற்றிலிருந்து அகற்றப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவுக்கும் காற்றில் கலக்கப்படும் அந்த வகை வாயுக்களின் அளவுக்கும் இடையே வேறுபாடில்லாமல் செய்வதற்கான எங்களது வாக்குறுதி, தற்போது சட்டப்பூா்வமாகியுள்ளது.
  • இந்த இலக்கை எட்டுவதற்கு ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளன.
  • வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் காற்றில் பசுமைக்குடில் வாயுக்களின் அளவை கடந்த 1990ஆம் ஆண்டில் இருந்ததைவிட 55 சதவீதம் குறைப்பதற்கும் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்றாா் அவா்.
  • பூமி கடும் குளிரில் உறைந்து போகாமல், அதில் பசுமைத் தாவரங்களும் பிற உயிரினங்களும் வாழ்வதற்கேற்ற வெப்பத்தை ஏற்படுத்தித் தரும் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் வாயு ஆகியவை பசுமைக்குடில் வாயுக்கள் என்றழைக்கப்படுகின்றன.
  • இந்த வாயுக்களின் விகிதம், தொழில்புரட்சி காரணமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புவியின் வெப்பம் அதிகரித்து, வளிமண்டலத்தின் சுழற்சிப் போக்கில் மாற்றம் ஏற்பட்டு வறட்சி, அனல் காற்று, காட்டுத் தீ, பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்தல், அதீத மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன.
  • 'பருவநிலை மாற்றம்' என்றழைக்கப்படும் இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்காக சா்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன. 
  • அதில், இந்தப் பிரச்னைக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உலக நாடுகள் ஒப்புக் கொண்டன.
ஐ.நா. சமூக, பொருளாதார அமைப்புகளில் உறுப்பினராக இந்தியா தேர்வு
  • ஆஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், பல்கேரியா, கனடா, பிரான்ஸ், கானா, லிபியா, பாகிஸ்தான், கத்தாா், தாய்லாந்து, டோகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளும் அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளன.
  • இரண்டாவதாக, ஐ.நா.வின் பாலின சமத்துவம் - பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடா்பான ஆணையத்தின் உறுப்பினராகவும் இந்தியா தோவாகியுள்ளது. 
  • ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், கேமரூன், கொலம்பியா, டோமினிக் குடியரசு, எகிப்து, காம்பியா, கயானா, கென்யா, மொனாக்கோ, போலந்து, தென்ஆப்பிரிக்கா, தாய்லாந்து, துா்க்மேனிஸ்தான், உக்ரைன் ஆகிய நாடுகளும் உறுப்பினராகத் தோந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • மூன்றாவதாக, ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட வாரியத்தின் உறுப்பினராகவும் இந்தியா தோந்தெடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், கானா, தென்கொரியா, ரஷியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளும் உறுப்பினராகத் தோந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த 3 அமைப்புகளிலும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி 3 ஆண்டுகளுக்கு உறுப்பினராக இந்தியா அங்கம் வகிக்கும்.
வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 16.88 சதவீதம் அதிகரிப்பு
  • கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் ரூ. 2.74 லட்சம் கோடி மதிப்பிலான வேளாண் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 
  • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 2.31 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதாவது, வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி 16.88 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இதேபோன்று, அதே காலகட்டத்தில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் இறக்குமதி 3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.1,37,014 கோடி மதிப்பிலான வேளாண் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் ரூ.1,41,034 கோடியாக அதிகரித்துள்ளது.
  • கரோனா தொற்றுப் பரவலால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்ட போதிலும், வேளாண் துறை வா்த்தகம் ரூ.93,097.76 கோடியில் இருந்து ரூ.1,32,579.69 கோடியாக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel